search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96553"

    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கடவுள் ராமரை கற்பனை வடிவம் என்று கூறியவர்கள் எனது மத பக்தியை விமர்சிப்பதா? என கேள்வி எழுப்பினார். #RajasthanAssemblyElections #BJP #Modi #LordRam #Congress
    ஜோத்பூர்:

    ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:



    மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டுக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.  அதில், கடவுள் ராமர் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என தெரிவித்திருந்தேன்.

    அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என பதிலளித்தனர். அன்று அப்படி கூறியவர்கள், இப்போது மோடிக்கு இந்து மதத்தை பற்றி ஏதும் தெரியாது என விமர்சிக்கின்றனர்.

    ஆனால், எனக்கு இந்து மதம் தெரியுமா என்பதை ராஜஸ்தான் வாக்காளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என தெரிவித்தார்.  #RajasthanAssemblyElections #BJP #Modi #LordRam #Congress
    ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேர்தல் காலங்களில் மட்டுமே காங்கிரசார் கோவிலுக்கு வழிபாடு செய்ய செல்கிறார்கள் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #RajnathSingh
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பன்சுர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் நேரங்களில் மட்டுமே கோவில்களுக்கு சென்று வருகின்றனர். அதுவரை அவர்கள் கோவில்களுக்கு செல்வதில்லை. 



    தேர்தல் காலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியினர் கோவில்கள் மற்றும் பசுக்களை வணங்கி வருகின்றனர். ஆனால் பாஜகவினருக்கு அப்படி அல்ல.

    பசுக்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று வணங்குவது அவர்களது வாழ்க்க்கையின் ஓர் அங்கமாகும் என தெரிவித்தார்.

    முன்னதாக, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியா உதவ தயாராக இருக்கிறது என தெரிவித்தார். #RajasthanAssemblyElections #RajnathSingh
    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, உங்களைப் போலவே நானும் வாழ்ந்தவன் என நெகிழ்ச்சியாக கூறினார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக சார்பில் வசுந்தர ராஜே சிந்தியா முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, டிசம்பர் மாதம் 7-ம் தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சிக்கட்டிலில் அமர காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகவுரா பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர்நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ராகுல் காந்தி குடும்பத்தினர் போன்று நான் சில்வர் ஸ்பூனுடன் பிறக்கவில்லை. எனது பெற்றோரும், தாத்தா - பாட்டியும் ஆட்சியாளர்கள் இல்லை.  நான் உங்களில் ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். உங்களைப் போன்ற வாழ்க்கையை தான் நானும் வாழ்கிறேன்.



    நான் எனது குடும்பத்திற்காக ஓட்டு கேட்கவில்லை. காங்கிரஸ் பரம்பரை அரசியலை உருவாக்க நினைக்கிறது.
    நீங்கள் உங்களின் ஓட்டின் வலிமையை உணர வேண்டும்.

    பாஜக அரசு சாதாரண மக்களுக்கானது. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் எல்லா வளங்களும் பெறவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    அனைவரும் வளம் பெறவேண்டும் என்பதே பாஜக அரசின் ஒரே மந்திரம். நான்கு தலைமுறைகளாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை. மக்களின் வலியை புரிந்து கொள்ளவும் இல்லை என தெரிவித்தார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress
    ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பத்தே நாட்களில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி இன்று அறிவித்துள்ளார். #Rahulpromises #Rajasthanfarmers #farmersloanwaiver
    ஜெய்ப்பூர்:

    200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் இந்த தேர்தலில் முனைப்பு காட்டி வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று இம்மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக வந்துள்ளார். முன்னதாக, அஜ்மீரி நகரில் உள்ள காஜா மொய்னுதீன் சிஷ்தி தர்காவுக்கு சென்று மலர்போர்வை சமர்ப்பித்த அவர் ஜெய்சால்மர் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி உரையாற்றினார்.



    அப்போது அவர் கூறியதாவது:-

    மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டிலுள்ள 15 தொழிலதிபர்களுக்கு மட்டும் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் வேலையில்லாமல் இருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள் சுயதொல்ழிகளை தொடங்கவும், அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் வங்கிக் கடன்களை அளிப்போம்.

    வாக்களர்களாகிய நீங்கள் எங்களை இங்கே ஆட்சியில் அமர வைக்கப் போகிறீர்கள். ஆட்சி அமைந்த பத்தே நாட்களில் விவசாயிகளின் வங்கிக்கடன்களை எங்கள் அரசு தள்ளுபடி செய்யும். இதற்கு முன்பு இதே வாக்குறுதியை கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அளித்திருந்தது. கொடுத்த வாக்குறுதியின்படி கடன்களை நாங்கள் தள்ளுபடி செய்திருக்கிறோம்.

    நான் தவறான வாக்குறுதிகளை தர மாட்டேன். இந்த மேடையில் இருந்து நானோ, சச்சின் பைலட், அசோக் கேலாட் போன்றவர்கள் தரும் வாக்குறுதிகள் எதுவானாலும் அதை நிறைவேற்றியே தீருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rahulpromises #Rajasthanfarmers #farmersloanwaiver
    ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், ராகுலும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். #PMModi #Rahul

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு ஆட்சியைக் கைப்பற்ற பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளும் அம்மாநிலத்தில் கடும் சவாலுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளன.

    ராஜஸ்தானில் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் செய்யவில்லை என்ற ஆதங்கமும், கோபமும் மக்கள் மத்தியில் உள்ளது. எனவே பா.ஜ.க. அங்கு மீண்டும் வெற்றி பெற இயலாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கருத்துக் கணிப்பு முடிவுகளும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்து உள்ளன.

    இதனால் கணிசமான அளவு எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு கொடுக்க வில்லை. அவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுக்கு போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். இது ராஜஸ்தானில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தானில் பா.ஜ.க. தத்தளித்தப்படி திணறிக் கொண்டிருப்பதை அறிந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், அதற்கு ஏற்ப அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் அவர் 5 தடவை ராஜஸ்தானுக்கு சென்று ஆதரவு திரட்டினார்.

    இந்த நிலையில் இன்று அவர் மீண்டும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அஜ்மரில் உள்ள ‌ஷரிப் மற்றும் புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு ராகுல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

    அஜ்மர், ஜெய்சல்மார், பொக்ரான், ஜலூர், ஜோத்பூர் ஆகிய ஊர்களில் நடக்கும் பிரமாண்ட கூட்டங்களில் ராகுல் பேச உள்ளார்.

    இதற்கிடையே பிரதமர் மோடியும் இன்று தேர்தல் பிரசாரம் செய்ய ராஜஸ்தான் சென்றுள்ளார். இதனால் ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், ராகுலும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    பிரதமர் மோடி பில் வாரா, துங்கர்பூர், கொடா ஆகிய ஊர்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். ராஜஸ்தானில் வரும் 5-ந் தேதி தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது.

    பிரசாரத்துக்கு இன்னும் 9 நாட்களே அவகாசம் உள்ளதால் அங்கு உச்சகட்ட பிரசாரம் நடந்து வருகிறது. #PMModi #Rahul

    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் நீதித்துறையையே மிரட்டி வருகின்றனர் என குற்றம் சாட்டினார். #RajasthanAsemblyElections #BJP #PMModi #Congress
    அல்வார்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி வசுந்தர ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் 7ம் தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. அவர்கள் மரியாதை என்பதையே மறந்துவிட்டனர். பின்தங்கிய சமுதாயத்தினரை காங்கிரஸ் வாக்கு வங்கியாக பயன்படுத்தி வந்தது. டாக்டர் அம்பேத்கருக்கு அக்கட்சி பாரத ரத்னா வழங்கி கவுரவிக்கவில்லை.



    காங்கிரஸ் நீதித்துறையை அரசியலில் இழுக்கிறது. நீதித்துறைக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அக்கட்சி தலைவர் ஒருவர், 2019 தேர்தல் வருவதால், அயோத்தி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்கிறார். அந்த கோரிக்கை நீதிபதி ஏற்காதபோது, கண்டன தீர்மானம் கொண்டுவரப்படும் என நீதித்துறையை மிரட்டுகின்றனர். எந்த பயமும் இல்லாமல், நீதியின் பாதையில் நடக்க வேண்டும் என நீதித்துறையை கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார். #RajasthanAsemblyElections #BJP #PMModi #Congress
    ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. டவுசா ஹரிஸ் சந்திர மீனா, நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். #BJPMLA #HarishChandraMeena #Congress
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பா.ஜனதா கட்சி தனது வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

    இதில், தங்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த பொது சுகாதாரத்துறை மந்திரி சுரேந்திர கோயல் மற்றும் நாகவூர் தொகுதி எம்.எல்.ஏ. ஹபிபூர் ரஹ்மான் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்து விலகினர்.

    இந்தநிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. டவுசா ஹரிஸ் சந்திர மீனா, நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

    ராஜஸ்தானின் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில தலைவர் சச்சின் பைலட் மற்றும் மாநில பொறுப்பாளர் அவினேஷ் பாண்டே ஆகியோர் முன்னிலையில் டவுசா ஹரிஸ் சந்திர மீனா தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். 
    5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. #AssemblyElections #Congress #BJP
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு வருகிற 12-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதிக்குள் தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால் கருத்து கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு எடுத்து வருகின்றன.

    இந்த வார தொடக்கத்தில் வாக்காளர்களிடம் சி.ஓட்டர் எடுத்த கருத்து கணிப்பின்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் 150, பா.ஜனதா 45 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. மொத்த தொகுதிகள் 200.

    230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 116 தொகுதிகளையும், பா.ஜனதா 107 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தெலுங்கானாவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 64 தொகுதிகளும், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு 50-க்கும் குறைவான தொகுதிகளுமே கிடைக்கும் எனவும் சி-ஓட்டர் கூறுகிறது. மொத்த தொகுதிகள் 119.

    சத்தீஷ்காரில் பா.ஜனதா 43 தொகுதிகளையும், காங்கிரஸ் 41 இடங்களையும், இதர கட்சிகள் 6 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது. மொத்த இடங்கள் 90.

    இதேபோல் 40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரமில், மிசோ தேசிய முன்னணிக்கு 17, காங்கிரசுக்கு 12, சோரம் மக்கள் இயக்கத்துக்கு 9 இடங்கள் கிடைக்கும் என சி-ஓட்டர் கூறுகிறது.

    அதேநேரம் சி.என்.எக்ஸ். நிறுவனம் டைம்ஸ் நவ் டி.வி.க்காக எடுத்த கருத்து கணிப்பில் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு 115 இடங்களும், பா.ஜனதாவுக்கு 75 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

    இதே நிறுவனம் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா 122 இடங்களையும், காங்கிரஸ் 95 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளது.

    சத்தீஷ்காரில் பா.ஜனதாவுக்கு 50 இடங்களும், காங்கிரசுக்கு 30 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 10 இடங்களும் கிடைக்கும் என்று சி.என்.எக்ஸ். கருத்து கணிப்பு கூறுகிறது.
    ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தர ராஜே தனது சொந்த ஊரான ஜல்ராபதானில் போட்டியிடுகிறார். #Rajasthan #AssemblyElection #Jhalrapatan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 7-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜல்ராபதான் தொகுதியில் முதல் மந்திரி வசுந்தர ராஜே சிந்தியா போட்டியிட முடிவு செய்துள்ளார்.  இதுதொடர்பாக, இன்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
     
    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜலாவர் மாவட்டத்தில் உள்ள மக்களுடன் கடந்த 30 ஆண்டுகளாக நான் தொடர்பில் இருந்து வந்துள்ளேன். அவர்கள் என் மீது மிகுந்த அன்பும், உறுதியான பற்றும் கொண்டுள்ளனர்.  ஜலாவர் மற்றும் பாரன் மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவேன் என தெரிவித்துள்ளார்.

    வசுந்தர ராஜே கடந்த 2003, 2008 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜல்ராபதான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    ராஜஸ்தான் முதல் மந்திரி வசுந்தர ராஜேவை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி மனைவி முகுல் சவுத்ரி போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Rajasthan #AssemblyElection #Jhalrapatan
    ராஜஸ்தான் மாநிலத்தில் 61 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். #Zikavirus
    ஜெய்பூர் :

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்பூர் மாவட்டத்தில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது  மருத்துவமனை பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரை சேர்ந்தவர்கள். அந்த பகுதியில் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 61 - ஆக உள்ளதென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 11 கர்ப்பிணி பெண்களும் அடக்கம் என்பது நினைவு கூறத்தக்கது.

    டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் உருவாகும் புதிய கிருமி தொற்றான ஜிகா வைரஸ் பாதிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உணரப்பட்டது.

    இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த வைரஸ் கிருமி பற்றி தெரிய வந்தது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ஜிகா வைரஸ் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. #Zikavirus
    ராஜஸ்தானில் சுற்றுலா சென்ற பள்ளிக்கூட கார் லாரியுடன் மோதிய விபத்தில் மாணவிகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சலும்பர் நகரை சேர்ந்தவர்கள் ஒரு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

    கைராட் பகுதியில் சென்றபோது அந்த கார் முன்னால் சென்ற லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 3 மாணவிகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், ஆசிரியர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற போது விபத்து ஏற்பட்டு 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident
    காங்கிரஸ் கட்சி தேர்தலுக்காக மட்டுமே அம்பேத்கரை நினைவில் வைத்துள்ளது என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #Ambedkar
    ஜெய்ப்பூர்:

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பிகானீரில் நேற்று நடைபெற்ற எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பொதுக் கூட்டத்தில் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியாதாவது:

    குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக செயல்படும் கட்சி பா.ஜ.க. அல்ல. இந்த மாநிலத்தில் ஆளும் வசுந்தரா ராஜே சிந்தியா அரசு தாழ்த்தப்பட்டவரர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது.

    ஆனால், எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வரும் போதுதான் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பற்றியும், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பற்றியும் நினைவுக்கு வரும். ஆட்சியில் அமர்ந்ததும் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என குற்றம் சாட்டினார். #AmitShah #Ambedkar
    ×