search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96569"

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு நீடித்த நிலையான செயல்பாடுதான் காரணம் என சீனிவாசன் தெரிவித்தார்.
    சென்னை:

    ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவில் அணியின் உரிமையாளர் சீனிவாசன் பேசியதாவது:-

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு நீடித்த நிலையான செயல்பாடுதான் காரணம். டோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    தற்போதுள்ள எந்த வீரரையும் இழக்க சென்னை அணி விரும்பவில்லை. சென்னை அணியில் டோனி தொடர்ந்து நீடிப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, டோனி  சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்றும்,  இன்னும் பல போட்டிகளுக்கு அணியை வழிநடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
    தமிழகம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருப்பதாகவும், தனது முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்தான் தொடங்கியது என்றும் டோனி குறிப்பிட்டார்.
    சென்னை:

    ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் டோனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சென்னை அணியின் கேப்டன் டோனி, வெற்றிக் கோப்பையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். 

    விழாவில் டோனி பேசுகையில், தமிழகம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருப்பதாகவும், தனது முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்தான் தொடங்கியது என்றும் குறிப்பிட்டார்.

    டோனி

    சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின்போதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அளப்பரியது என்று கூறிய டோனி,  சென்னை அணியின் ரசிகர்கள் பலம் தமிழ்நாட்டைக் கடந்தது என்றார். 5 ஆணடுகள் கடந்தாலும்கூட நான் விளையாடும் கடைசி போட்டி சென்னையில்தான் என்றும் டோனி தெரிவித்தார்.
    தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
    சென்னை:

    ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி முதல்-அமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    சென்னை அணிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை என்றாலே சூப்பர்தான். முதல்வராக அல்ல, டோனியின் ரசிகராக பாராட்டு விழாவிற்கு வந்திருக்கிறேன். எனது  குடும்பமே டோனியின் ரசிகர்தான். எனது தந்தை, மகன்,பேரன் என அனைவருமே டோனியின் ரசிகர்கள்தான். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் நான்.

    டோனி சென்னை ரசிகர்களின் செல்லப்பிள்ளை. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர்.  தங்களில் ஒருவராக டோனியை தமிழர்கள் கருதுகிறார்கள். எந்த நெருக்கடியிலும் ‘கூல்’ ஆக இருப்பவர்கள் கருணாநிதியும், டோனியும். டோனியைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வங்காளதேச அணிக்கு, இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனி பீல்டீங் செட் செய்து கொடுத்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    கார்டிப்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், இந்திய அணி நேற்று பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அபாரமாக விளையடிய இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணியில், பேட்டிங்கில் டோனி, மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் ஜொலித்தனர். இருவரும் சதம் அடித்து இந்திய அணி இமாலய ரன்களை சேர்க்க உதவினர்.

    முன்னதாக, இந்திய அணி பேட் செய்து கொண்டிருந்த போது,  39 ஓவரை சபீர் ரஹ்மான் வீசினார். அப்போது, டோனி பேட்டிங் செய்தார். திடீரென பேட்டிங் செய்வதை நிறுத்திய டோனி, ஆட்ட விதிகளுக்கு மாறாக  பீல்டரை நிறுத்தி இருகிறார்கள்,  பீல்டர்களை மாற்றுங்கள்  என்று பந்துவீச்சாளர்களிடம் கூறினார். ஏனென்றால் நோபாலாகச் சென்றுவிடும் என்று அறிவுறுத்திய டோனி அதை மாற்றும்படி கூறினார்.

    இதைக் கேட்ட சபீர் ரஹ்மான், உடனடியாக  பீல்டரை, ஸ்கொயர் லெக்கிற்கு மாற்றினார். தான் பேட்டிங் செய்தபோதிலும் கூட, எதிரணியினர் பீல்டர்களை சரியாக நிறுத்தாமல் இருந்தபோது அவர்களுக்கு உதவிய டோனியின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி வழக்கம் போல 5-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கள் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி வழக்கம் போல 5-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். டோனியை பொருத்தமான அந்த இடத்தில் இருந்து மாற்றக்கூடாது. ஆடும் லெவன் அணியின் கலவை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவானும், 3-வது வீரராக விராட்கோலியும் களம் இறங்க வேண்டும். 4-வது வீரராக யாரையும் இறக்கலாம், 5-வது வீரராக டோனியை களம் இறக்க வேண்டும். அவருக்கு அடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யாவை களம் காண வைக்கலாம். தரமான பேட்ஸ்மேன் எந்த வரிசைக்கு தகுந்தபடியும் தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

    ஐ.பி.எல்.போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பந்தை நன்கு கணித்து அடித்து ஆடினார். அவர் முறையான கிரிக்கெட் ஷாட்களை அடிக்கிறார். அவர் நல்ல நம்பிக்கையுடன் உலக கோப்பை போட்டிக்கு சென்றுள்ளார். அந்த நம்பிக்கை களத்தில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இடக்கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான், வலது கை பேட்ஸ்மேனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுகையில் பந்து வீச்சாளர்கள் தங்களது பந்து வீச்சு முறையில் மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும். அவர் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் நிலைத்து நின்றால் எதிரணி பவுலர்களுக்கு நெருக்கடி அளிக்கும். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 4-வது அணியாக நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்குள் நுழையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    குவாலிபையர் 2 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 8-வது முறையாக தகுதி பெற்றதால் பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு தெரிவித்துள்ளர்.

    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்னே எடுக்க முடிந்தது.

     ரிஷப் பந்த் அதிகப்பட்சமாக 25 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), காலின் முன்ரோ 24 பந்தில் 27 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்டும், இம்ரான்தாகீர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    148 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சென்னை அணி விளையாடியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் வெற்றி கிடைத்தது.

    வாட்சன் 32 பந்தில் 50 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), டுபெலிசிஸ் 39 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். போல்ட், இஷாந்த்சர்மா, அக்‌ஷர் படேல், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பந்து வீச்சாளர்களின் சிறப்பாக செயல்பட்டதாலும், தொடக்க வீரர்களின் அபாரமான ஆட்டத்தாலும் சூப்பர் கிங்ஸ் 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம், அவர்களால்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம் என்று கேப்டன் டோனி பவுலர்களை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விக்கெட்டுகளை கைப்பற்றுவது முக்கியமானது. பந்து வீச்சாளர்களுக்கே அனைத்து பாராட்டும் சேரும். இந்த சீசனில் பந்து வீச்சு துறையால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பவுலர்கள் மிகவும் அபாரமாக செயல்பட்டு டெல்லி அணியை மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க அனுமதிக்க வில்லை.


    டெல்லி அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டது. ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எங்களது சுழற்பந்து வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி அவர்களுக்கு நெருக்கடியை கொடுத்து விட்டனர்.

    தொடக்க வீரர்கள் (வாட்சன், டுபெலிசிஸ்) சிறப்பாக ஆடினார்கள். அவர்களே ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். எந்த வகையிலும் இந்த வெற்றியை பெற்று இருந்தாலும் மகிழ்ச்சிதான். எங்கள் அணி வீரர்கள் பொறுப்பை உணர்ந்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ‘குவாலிபையர்2’ போட்டி மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதுதான் எங்களது வழக்கமான வழியாகும். கடந்த முறை மட்டும் விதி விலக்கு.

    இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

    முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை டெல்லி அணி இழந்தது. தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

    பவர்பிளேயில் 2 விக்கெட்டை இழந்தது ஏமாற்றம். அதில் இருந்து மீள்வதே கடினமாகி விட்டது. சென்னை அணி சுழற் பந்து வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். சிறந்த பார்ட்னர்ஷிப் அமைய வில்லை.

    ஒட்டு மொத்தத்தில் இந்த சீசனில் சிறப்பாக ஆடினோம். கேப்டன் பதவி வகித்தது பெருமை அளித்தது. சீனியர் வீரர்களான டோனி, வீராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    டோனி ஆடாதது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்தது என்று வெற்றி குறித்து ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். #rohitsharma #dhoni #ipl2019

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையிடம் மீண்டும் சரண்டர் ஆனது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது.

    கேப்டன் ரோகித்சர்மா 48 பந்தில் 67 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), லீவிஸ் 32 ரன்னும் எடுத்தனர். சான்ட்னெர் 2 விக்கெட்டும், தீபக் சாஹர், இம்ரான்தாகீர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    156 ரன் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவர்களில் 109 ரன்னில் சுருண்டு 46 ரன்னில் தோற்றது.

    முரளி விஜய் அதிகபட்சமாக 35 ரன்னும், சான்ட்னெர் 22 ரன்னும் எடுத்தனர். மலிங்கா 4 விக்கெட்டும், பும்ரா, குணால் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, அங்குல் ராய் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையிடம் மீண்டும் வீழ்ந்தது. ஏற்கனவே வான்கடே மைதானத்தில் 37 ரன் வித்தியாசத்தில் தோற்று இருந்தது. ஓட்டு மொத்தத்தில் 4-வது தோல்வி ஏற்பட்டது. கேப்டன் டோனி ஆடாதது அணிக்கு பாதிப்பு என்பது மீண்டும் ஒரு முறை நிருபணமாகி உள்ளது.

    தோல்வி குறித்து சூப்பர் கிங்ஸ் அணியின் தற்காலிக கேப்டன் சுரேஷ்ரெய்னா கூறியதாவது:-


    நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. 156 ரன் எடுக்க கூடிய இலக்குதான். பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஒவ்வொரு 2 முதல் 3 ஓவர்களுக்கு இடையே விக்கெட்டுகளை பறி கொடுத்தோம். இதனால் தோல்விக்கு பேட்ஸ் மேன்களே பொறுப்பு.

    ஆனால் எங்களது பந்து வீச்சு நன்றாகவே இருந்தது. எங்கள் அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களும் அனுபவம் வாய்ந்தவர்களும் இருந்தும் சாதிக்க இயலவில்லை. அனைத்துமே தவறாக அமைந்தது. பேட்டிங் மீண்டும் பலம் பெறுவது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற 7-வது வெற்றியாகும். 3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அந்த அணி இந்த சீசனில் 3 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்சை 2 முறையும் வீழ்த்தியது. ‘பிளே ஆப்’ சுற்றில் இரு அணிகளும் மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

    வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    டாஸ் தோற்றும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் முதல் பேட்டிங் செய்வதா? அல்லது பந்து வீசுவதா? என்பதை அறிந்து இருந்தோம். நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.

    டோனி ஆடாதது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்தது. எந்த ஒரு அணிக்கும் எதிராகவும் அவர் இல்லாமல் இருந்தால் அந்த அணிக்கு சாதகமானதே. சேசிங்கில் அவரை கட்டுப்படுத்துவது சவாலானதே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை மே 1-ந்தேதி சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    மும்பை இந்தியன்ஸ் 12-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை நாளை எதிர் கொள்கிறது. #rohitsharma #dhoni #ipl2019

    பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தின் 19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன் என்பது குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி விளக்கம் அளித்துள்ளார். #MSDhoni #RCBvsCSK
    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 1 ரன்னில் பெங்களூரிடம் தோற்றது.

    பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது.

    பார்த்தீவ் படேல் 37 பந்தில் 53 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), மொய்ன் அலி 16 பந்தில் 26 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். தீபக் சாஹர், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    162 ரன் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது.

    அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் 1 ரன்னில் தோற்றது. பெங்களூர் அணி கடைசி பந்தில் வெற்றியை பெற்றது.

    கேப்டன் டோனியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 48 பந்தில் 84 ரன் (5 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தார். ஸ்டெயின், உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த ஆட்டத்தில் சென்னை அணி ஒரு ஆட்டத்தில் 83 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது. இதனால் மோசமான தோல்வி ஏற்படும் என்று கருதப்பட்டது. 6-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் டோனி தனி ஒருவராக போராடினார். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்டது, உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியும் 2-வது பந்தில் சிக்சரும், 3-வது பந்தில் சிக்சரும் டோனி விளாசினார். 4-வது பந்தில் 2 ரன்னும், 5-வது பந்தில் சிக்சரும் அவர் அடித்தார்.

    ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. டோனி இந்த பந்தில் ரன் எடுக்க தவறினார். ‌ஷர்துல்தாகூர் ரன் அவுட் ஆனார். இதனால் பரபரப்பான ஆட்டத்தில் 1 ரன்னில் சென்னைக்கு தோல்வி ஏற்பட்டது. டோனியின் அதிரடி பலன் இல்லாமல் போனது.

    ஆட்டத்தின் 19-வது ஓவரில் டோனி 3 முறை ஒரு ரன்னுக்கு ஓடாமல் இருந்தார்.

    எதிர் முனையில் பிராவோ இருந்ததால் டோனி ஒரு ரன்னுக்கு ஓடி இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் கடைசி ஓவரில் நெருக்கடியை குறைத்து இருக்கலாம். அந்த ஓவரின் கடைசி பந்தில் பிராவோவும் ஆட்டம் இழந்தார்.

    19-வது ஓவரில் டோனி 3 முறை ஒரு ரன்னுக்கு ஓடாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக டோனி அளித்த விளக்கம் வருமாறு:-

    ஆடுகளம் கொஞ்சம் கணிக்க முடியாதபடி இருந்தது. புதிதாக களம் இறங்கும் பேட்ஸ்மேன் விளையாடுவது கடினமானது. பிராவோ 3 பந்துகளை மட்டுமே சந்தித்து இருந்தார். இதனால்தான் 1 ரன்னுக்கு ஒட நான் மறுத்தேன். மிகப் பெரிய ஷாட்டுக்காக நான் காத்திருந்தேன்.

    பந்துக்கும், ரன்னுக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாக இருந்ததால் அதிரடியாக ஆடுவது அவசியம் ஆனது. இதன் காரணமாகவே நான் அப்படி செய்தேன். நாங்கள் போராடி 1 ரன்னில்தான் தோற்றது.

    இது ஒரு சிறந்த போட்டியாக அமைந்தது. நாங்கள் பெங்களூர் அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தினோம். எங்கள் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மோசமாக ஆடினார்கள். அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் பின் வரிசை பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்ததால் எங்களது கணக்கு தவறாகி விட்டது.

    இவ்வாறு டோனி கூறினார்.

    சென்னை அணி 3-வது தோல்வியை தழுவியது. 11-வது ஆட்டத்தில் அந்த அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை நாளை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. #MSDhoni #RCBvsCSK
    டோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார். #ViratKohli #Dhoni

    புதுடெல்லி:

    இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆங்கில வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    போட்டியின் தன்மையை ஆடுகளத்தின் உள்ளேயும், வெளியேயும் கணிக்க கூடியவர் டோனி. முதல் பந்தில் இருந்து 300-வது பந்துவரை என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ளக் கூடியவர், ஸ்டம்புக்கு பின்னால் டோனி இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்.

    அவரை பலரும் விமர்சனம் செய்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒவ்வொரு போட்டி முடிந்ததும் டோனி மற்றும் ரோகித் சர்மாவுடன் ஆலோசனை நடத்த விரும்புவேன்.

    டெத் ஓவர்களில் எல்லை கோட்டில் இருந்து பீல்டிங் செய்ய விரும்புவேன். அதன் மூலம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்த முடியும் என்று நம்புகிறேன். அந்த நேரத்தில் யாரேனும் ஒருவர் என்னுடைய பொறுப்பை மேற் கொள்ள வேண்டும்.

    30-35 ஓவர்களுக்கு பின்னர் நான் எல்லை கோட்டுக்கு அருகில் பீல்டிங் செய்ய சென்று விடுவேன் என்று டோனிக்கு தெரியும். பின்னர் என்ன நடக்கும் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். இருவருக்கும் இடையில் அதிக அளவில் நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது.

    ஆரம்ப கட்டத்தில் எனக்கு டோனியிடம் இருந்து நிறைய ஆதரவு இருந்தது. 3-வது வரிசையில் விளையாடும் வாய்ப்பு அளித்தவர். நிறைய இளைஞர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். டோனிக்கு நான் பக்கபலமாக செயல்படுவேன். விசுவாசமே எப்போதும் முக்கியத்துவம் பெறும்.

    இவ்வாறு கோலி கூறினார். #ViratKohli #Dhoni

    ஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் வாக்குவாதம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும் என ஷேவாக் சொல்கிறார். #MSDhoni #VirenderSehwag
    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4-வது பந்தை ராஜஸ்தான் வீரர் பென் ஸ்டோக்ஸ் புல்டாசாக வீசினார். அப்போது களத்தில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அது ‘நோ-பால்’ என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் ‘நோ-பால்’ இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் வீரர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த சென்னை அணியின் கேப்டன் டோனி மைதானத்துக்குள் நுழைந்து ‘நோ-பாலை’ ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களுடன் காரசாரமாக வாக்குவாதம் செய்தார்.




    டோனியின் இந்த செயலை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய முன்னாள் வீரர் பி‌‌ஷன்சிங் பெடி உள்பட பலரும் விமர்சனம் செய்து இருந்தனர். இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவிக்கையில், ‘டோனி எளிதான தண்டனையுடன் விடுவிக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகிறேன். அவருக்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆட்டங்களில் விளையாட தடை விதித்து இருக்க வேண்டும். ஏனெனில் அவர் செய்ததை போல் நாளை மற்றொரு கேப்டன் செய்யக்கூடும். அப்படியானால் நடுவருக்கு என்ன மரியாதை இருக்கும். அவர் மைதானத்துக்குள் செல்லாமல் 4-வது நடுவருடன் ‘வாக்கி-டாக்கி’ மூலம் பேசி முறையிட்டு இருக்க வேண்டும். டோனி இந்திய அணிக்கு ஏராளமாக பங்களித்து இருக்கிறார். அது மகிழ்ச்சியான வி‌‌ஷயம் தான். அவர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்த போது கோபப்பட்டதை நான் பார்த்தது இல்லை. சென்னை அணிக்காக அவர் சிறிது உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக நினைக்கிறேன்’ என்றார்.

    இதற்கிடையே டோனிக்கு புகழாரம் சூட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா) அளித்த ஒரு பேட்டியில், ‘டோனி மிகச்சிறந்த கேப்டன். அவர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவக்கூடியவர். இதன் காரணமாகவே நான் டோனி நடத்தும் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டேன். டோனியின் பேச்சும், செயல்பாடும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும்’ என்று தெரிவித்தார்.
    ஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #RRvCSK #MSDhoni
    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

    போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை வீசினார். பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டது. இது நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த டோனி, மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், டோனியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.



    ஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடைசி பந்தில் வெற்றி பெற நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி சென்னை அணிக்கு சாண்ட்னர் வெற்றி தேடி தந்தார். இதன் மூலம் சென்னை அணி 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    இந்தப் போட்டியில் டோனி 43 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #RRvCSK #MSDhoni

    சேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து டோனி மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். #IPL2019 #CSKvKKR #dhoni

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்னே எடுக்க முடிந்தது.

    பந்து வீச்சுக்கு ஏற்ற இந்த மோசமான ஆடு களத்தில் ஆந்த்ரே ரஸ்சல் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 44 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 16 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 109 ரன் இலக்கை எடுத்தது. 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 43 ரன்னும், அம்பதிராயுடு 21 ரன்னும் எடுத்தனர். சுனில் நரீன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 5-வது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

    மிகவும் குறைந்த ரன்னே எடுக்க முடிந்ததால் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பெங்களூர் அணியால் 70 ரன்னே எடுக்க முடிந்தது. இந்த ரன்னை எடுக்க சூப்பர் கிங்சுக்கு 18 ஓவர் வரை தேவைப்பட்டது. நேற்றைய போட்டியிலும் இதே நிலைமைதான்

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, சேப்பாக்கம் ‘பிட்ச்’ குறித்து மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    முதல் போட்டியில் இருந்த ஆடுகளம் போலவே இந்த ஆட்டத்திலும் இருந்தது. பிட்ச் குறித்து புகார் கூறிக் கொண்டே நாங்கள் வெற்றி பெற்று விடுகிறோம். இது போன்ற பிட்சில் விளையாட நாங்கள் விரும்பிவில்லை. ஏனென்றால் மிகவும் குறைந்த ஸ்கோர் தான் எடுக்க முடிகிறது.

    எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது கடினமாக இருக்கிறது. அதுவும் முதலில் பேட்டி செய்தால் மிகவும் கடினமாக உள்ளது. பனி பொழிவினால் 2-வது பகுதி ஆட்டத்துக்கு ஆடுகளம் கொஞ்சம் பரவாயில்லை. இது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்தால் நாங்கள் சரியான அணி சேர்க்கையை சேர்த்தாக வேண்டும். என்னை பொறுத்தவரை திட்டமிடுதல் எதுவுமில்லை.

    பிராவோ காயம் அடைந்த பிறகே அணி சேர்க்கை எங்களுக்கு கடினமாக உள்ளது. ஆல்ரவுண்டர் இல்லை. டேவிட் வில்லேயும் இல்லை

    ஹர்பஜன்சிங், இம்ரான் தாகீர் ஆகியோரை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. இருவரும் முதிர்ச்சி அடைந்தவர்கள். பழைய ஒயின் போன்றவர்கள். இருவரும் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். நான் என்ன விரும்புகிறேனோ அதற்கு ஏற்றவாறு நல்ல திறமையுடன் இம்ரான்தாகீர் வீசுகிறார். ஒட்டு மொத்தத்தில் பந்து வீச்சு துறை நன்றாக இருக்கிறது.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை நாளை மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    கொல்கத்தா நைட்ரை டர்ஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் டெல்லியை வருகிற 12-ந்தேதி எதிர்கொள்கிறது. #IPL2019 #CSKvKKR #dhoni

    ×