search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96569"

    இந்திய அணி வீரர்களுக்கு டோனி வழிகாட்டியாக இருக்கிறார் என்றும், உலக கோப்பை போட்டியில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். #RohitSharma #Dhoni #GuidingLight
    சிட்னி:

    டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்த இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது.

    டோனி, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் உள்ளிட்ட ஒரு நாள் போட்டி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    களத்திலும், ஓய்வறையிலும் டோனி இருக்கும் போது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதை பல ஆண்டுகளாக நாங்கள் பார்த்து வருகிறோம். அவர் உடன் இருக்கும்போது, அணியில் உள்ள வீரர்களுக்கும் அமைதி வந்து விடும். அது மிகவும் முக்கியமானதாகும். இதே போல் விக்கெட் கீப்பிங் பணியை செய்வதால், யுக்திகளை வகுப்பதில் கேப்டனுக்கும் ஓரளவு உதவிகரமாக இருக்கிறார்.

    டோனி பல ஆண்டுகள் அணியை வழிநடத்தியதுடன், வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர். அதனால் அவர் அணியில் அங்கம் வகிக்கும் போது, எப்போதும் உதவியாக இருக்கிறார். சொல்லப்போனால் வீரர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறார். பேட்டிங்கில் பின்வரிசையில் ஆடும் போது, ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது மிகவும் முக்கியம். இந்த வகையில் நிறைய ஆட்டங்களில் வெற்றியை தேடித்தந்துள்ளார். ஆட்டத்தின் போக்கு குறித்து அவரது தெளிவான சிந்தனையும், அறிவுரைகளும் அணிக்கு மிகவும் தேவையாகும்.

    மேலும் இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கும் டோனி பக்கபலமாக இருக்கிறார். அதாவது விக்கெட் கீப்பராக இருப்பதால் பேட்ஸ்மேன் எந்த மாதிரி ஆட முயற்சிக்கிறார் என்பதை முன்கூட்டியே கணித்து பவுலர்களுக்கு தெரியப்படுத்தி, அதற்கு ஏற்ப பந்து வீச வைக்கிறார்.

    குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் 2017-ம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்கள். வெளிநாட்டிலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். அவர்களது அபார பந்து வீச்சுக்கு, டோனியின் வழிகாட்டுதலும் முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் கூட அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை டோனி அளிக்கிறார். உலக கோப்பை போட்டியிலும் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று நம்புகிறேன்.

    இந்த ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய அணி சவால் மிக்க அணியாகவே காணப்படுகிறது. இந்த பவுலர்கள் அதிகமான ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதில்லை. கடந்த முறை ஒரு நாள் போட்டித் தொடரில் இங்கு விளையாடிய போது இதே பவுலர்கள் ஆடவில்லை. அப்படி இருந்தும் அவர்கள் எங்களை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்தனர்.

    ஆஸ்திரேலிய அணியில் இன்னும் தரமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதனால் அவர்களுக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாட வேண்டியது அவசியமாகும்.

    அணியின் நம்பிக்கை இப்போது உயர்ந்த நிலையில் உள்ளது. அதே உத்வேகத்தை ஒரு நாள் தொடரிலும் தொடர வேண்டும்.

    இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (மே 30-ந்தேதி தொடங்குகிறது) இந்திய ஆடும் லெவன் அணியில் யார்-யார் இடம் பெறுவார்கள் என்று கேட்கிறீர்கள். அது பற்றி இப்போதே சொல்வது கடினம். உலக கோப்பைக்கு முன்பாக இன்னும் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறோம். ஏறக்குறைய இதே அணிதான் உலக கோப்பையிலும் விளையாடும். அனேகமாக காயம் மற்றும் ஆட்டத்திறன் பாதிப்பு காரணமாக ஒரு சில மாற்றங்கள் இருக்கும். இப்போது ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதால் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனால் அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று நான் கருதவில்லை. என்றாலும் ஒவ்வொரு வீரரின் ஆட்டத்திறன் அடிப்படையிலேயே அணியில் இடம் உறுதியாகும். அத்துடன் உலக கோப்பை அணியில் நிச்சயம் இடம் உண்டு என்று எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    இதற்கிடையே இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வயிற்று கிருமி தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கடைசி இரு ஒரு நாள் போட்டிகளிலும் ஆடுவது சந்தேகம் தான். இதை கருத்தில் கொண்டு அந்த அணிக்கு ஆஷ்டன் டர்னர் கூடுதலாக அழைக்கப்பட்டு உள்ளார். பிக்பாஷ் கிரிக்கெட்டில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக பங்கேற்ற ஆஷ்டன் டர்னர் தனது கடைசி 3 ஆட்டங்களில் முறையே 43, 47, 60 ரன்கள் வீதம் எடுத்தார். #RohitSharma #Dhoni 
    ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ரூ.4.80 கோடிக்கு விலை போன பஞ்சாப்பை சேர்ந்த விக்கெட் கீப்பர் சிம்ரன்சிங், டோனியை எதிர்த்து விளையாட ஆர்வமுடன் இருப்பதாக கூறியுள்ளார். #PrabhSimranSingh #MSDhoni
    மும்பை:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 60 வீரர்கள் ரூ.106 கோடியே 80 லட்சத்திற்கு ஏலம் போனார்கள். பிரபலமில்லாத இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய ‘ஜாக்பாட்’ அடித்தது தான் இந்த ஏலத்தின் சிறப்பம்சமாகும்.

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங் முதல்தர கிரிக்கெட் போட்டியிலோ அல்லது எந்த ஒரு அதிகாரபூர்வ 20 ஓவர் போட்டியிலேயோ இதுவரை ஆடியது இல்லை. ஜூனியர் மட்டத்தில் விளையாடி வருகிறார். ஆச்சரியப்படும் வகையில் அவரை ரூ.4.80 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வசப்படுத்தியது.

    ஜூன் மாதம் உள்ளூரில் நடந்த மாவட்டங்களுக்கு இடையிலான (23 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் போட்டியில் சிம்ரன் சிங் 301 பந்துகளில் 298 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். இதை கவனத்தில் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம், கடந்த செப்டம்பர் மாதம் அவரை பயிற்சி முகாமுக்கு அழைத்திருந்தது. அப்போது 10 ஓவர்களில் 100 ரன்கள், 8 ஓவர்களில் 75 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இரண்டு வகையான சவால் கொடுக்கப்பட்டது. இந்த போட்டிகளில் முறையே 19 மற்றும் 29 பந்துகளில் சிம்ரன்சிங் அரைசதம் விளாசினார். அப்போதே அவரை பஞ்சாப் அணி குறி வைத்து விட்டது.

    பிரப்சிம்ரன்சிங்கும் அவரது  உறவினரான அன்மோல்பிரீத்சிங் (20) இருவரும் எப்போதும் இணைந்தே பயிற்சி மேற்கொள்வார்கள். ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக ஆடும் அன்மோல்பிரீத்சிங்கை ரூ.80 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இருவரும் மூன்று மணி நேர பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய போது, உறவினர்கள் திரண்டு விட்டனர். அவர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    18 வயதான பிரப்சிம்ரன் சிங் கூறுகையில், ‘எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. 10 வயது இருக்கும்போது முதல் முறையாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை டி.வி.யில் பார்த்தேன். டோனி, கில்கிறிஸ்ட் ஆட்டத்தை பார்த்தேன். அவர்களை போல் நானும் வர வேண்டும் என்று கனவு கண்டேன். ஐ.பி.எல். போட்டியில் டோனிக்கு (சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்) எதிராக விளையாட ஆர்வமுடன் உள்ளேன். அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவரை ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன். அப்போது அவர் விக்கெட் கீப்பிங் தொடர்பாக சில யோசனைகளை வழங்கினார். அவரை எதிர்த்து ஆட இருப்பது வித்தியாசமான உணர்வை தரும்’ என்றார்.

    சென்னையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணி சொந்தமாக்கியது. சர்வதேச கிரிக்கெட் பக்கமே போகாத வருண் சக்ரவர்த்தியின் தொடக்க விலை ரூ.20 லட்சம் தான். ஏலத்தில் மெகா தொகைக்கு விற்கப்பட்டதும், அதாவது நேற்று முன்தினம் மாலையில் இருந்து அவரது செல்போன் ஓய்வே இல்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    வருண் சக்ரவர்த்தி பஞ்சாப் அணிக்கு தேர்வானதும், அந்த அணியின் கேப்டனான ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். வருண் சக்ரவர்த்தி, நிருபரிடம் பேசும் போது, ‘எல்லையில்லா சந்தோஷத்தில் திளைக்கிறேன். டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தான் இந்த அளவுக்கு முன்னேறியதற்கு முக்கிய காரணம். சுழற்பந்து வீச்சில் கும்பிளேவை முன்மாதிரியாக கொண்டுள்ளேன். பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இருப்பது, எனக்கு பயனுள்ளதாக இருக்கும். பெரிய தொகைக்கு விலை போனதால், எதிர்பார்ப்பும், நெருக்கடியும் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அதை திறம்பட சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்திய அணியில் இடம் பிடித்து ஆட வேண்டும் என்பதே எனது லட்சியமாகும்’ என்றார்.

    மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் பிரையாஸ் ராய் பர்மனை பெங்களூரு ராயல சேலஞ்சர்ஸ் அணி ரூ.1½ கோடிக்கு இழுத்தது. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக அதிக விக்கெட்டுகள் (11 விக்கெட்) வீழ்த்தியவரான ராய் பர்மனின் தற்போதைய வயது 16 ஆண்டு 56 நாட்கள். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடங்கும் போது அவர் 17 வயதை கூட நிறைவு செய்திருக்கமாட்டார். அதனால் 2019-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் அவர் விளையாடினால் குறைந்த வயதில் ஐ.பி.எல். போட்டியில் ஆடியவர் என்ற பெருமையை பெறுவார்.  #PrabhSimranSingh #MSDhoni
    இந்திய வீரர்களில் ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் வரிசையில் முன்னாள் கீப்பர் டோனியுடன் ரிஷப் பந்த் இணைந்துள்ளார். #AUSvIND #MSDhoni #RishabhPant
    அடிலெய்டு:

    இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தது.

    பேட்டிங்கில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் சோபிக்காத நிலையில், அதனை பந்துவீச்சாளர்கள் ஈடுசெய்தனர். இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் துல்லியமான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். அதேபோல் பீல்டிங்கும் சிறப்பாக அமைந்தது. குறிப்பாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நெருக்கடியான தருணங்களில் கேட்ச் பிடித்து பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.



    இந்த இன்னிங்கில் கவாஜா, ஹேண்ட்ஸ்காம்ப், டிராவிஸ் ஹெட், டிம் பெயின், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகிய 6 பேரை கேட்ச் மூலம் அவுட் ஆக்கினார் ரிஷப் பந்த். இதன்மூலம் இந்திய கீப்பர்களில் ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச் (6) பிடித்து முதலிடத்தில் உள்ள டோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். 2009ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டோனி ஒரு இன்னிங்சில் 6 கேட்ச் பிடித்தது குறிப்பிடத்தக்கது. #AUSvIND #MSDhoni #RishabhPant
    20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாதது ஏன்? என்பதற்கு பதில் அளித்த கேப்டன் கோலி, ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு அளிக்கவே அவர் ஒதுங்கினார் என்று கூறியுள்ளார். #ViratKohli #T20Cricket #Dhoni
    திருவனந்தபுரம்:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று அளித்த பேட்டி வருமாறு:-

    இன்றைய ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் முதலில் பேட் செய்வதாக அறிவித்தபோது, ஆச்சரியம் அடைந்தேன். நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம். அதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு தானாகவே கிடைத்தது. முந்தைய ஆட்டத்தில் அவர்கள் 2-வது பேட்டிங் செய்து குறைந்த ரன்களில் வீழ்ந்தனர். அதனால் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து, கணிசமாக ரன்கள் குவித்து நெருக்கடி கொடுக்கலாம் என்ற நினைப்பில் முதலில் பேட்டிங் முடிவுக்கு வந்திருக்கலாம். எங்களுக்கு இது ஒரு திருப்திகரமான ஆட்டமாக அமைந்தது. எல்லா சிறப்பும் பவுலர்களையே சாரும்.

    20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறாதது ஏன் என்பது குறித்து தேர்வு குழுவினர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டதாக நினைக்கிறேன். நீக்கம் முடிவு எடுப்பதற்கு முன்பாக தேர்வாளர்கள் முதலில் அவரிடம் தான் பேசியிருக்கிறார்கள். எனவே அது குறித்து நான் இங்கு உட்கார்ந்து பேசுவதற்கு அவசியம் இருப்பதாக தெரியவில்லை. டோனி சம்பந்தமாக தேர்வாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. இந்த விஷயத்தில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை உண்மை அல்ல என்று உறுதி அளிக்கிறேன்.



    டோனி இன்னும் இந்த அணியில் முக்கியமான வீரராகத் தான் இருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரிஷாப் பான்ட் போன்ற இளம் வீரர்கள் அதிக வாய்ப்பு பெற்றால் நன்றாக இருக்கும் என்று டோனி கருதுகிறார்.

    ஒரு நாள் போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த கோணத்தில் பார்த்தால் அவர், இளம் வீரர்களுக்கு உதவுவதற்கு முயற்சிக்கிறார் என்றே தோன்றுகிறது. மற்றவர்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை.

    இவ்வாறு கோலி கூறினார். #ViratKohli #T20Cricket   #Dhoni

    ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் மகேந்திர சிங் டோனி சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. #INDvWI #ViratKohli #MsDhoni
    புனே:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 323 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி ‘டை’ ஆனது. வெஸ்ட் இண்டீஸ் 321 ரன்னை எடுத்து ‘டை’ செய்து பாராட்டை பெற்றது.

    இதனால் இரு அணிகளும் இன்றைய 3-வது போட்டியில் சமபலத்துடன் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னிலை பெறும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் அதே வேட்கையுடன் இருக்கிறது.

    ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் டோனி 4-வது இடத்தில் உள்ளார். அவரை 5-வது இடத்தில் உள்ள இந்திய அணி கேப்டன் விராட்கோலி முந்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டோனி 273 இன்னிங்ஸ் விளையாடி 10,143 ரன் எடுத்து உள்ளார். கோலி 205 இன்னிங்சில் 10,076 ரன் எடுத்துள்ளார். டோனியை முந்த அவருக்கு இன்னும் 66 ரன் தேவை. தொடரின் 2 ஆட்டத்தில் சதம் அடித்துள்ள கோலி இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடினால் டோனியை முந்துவார்.

    அதே நேரத்தில் டோனியும் தனது திறமையை வெளிப்படுத்தினால் தனது இடத்தை இப்போதைக்கு தக்க வைத்துக் கொள்ளலாம். தெண்டுல்கர் 18,426 ரன்னுடன் முதல் இடத்திலும், கங்குலி 11,363 ரன்னுடன் 2-வது இடத்திலும், டிராவிட் 10,405 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். #INDvWI #ViratKohli #MsDhoni
    பாராளுமன்ற தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி மற்றும் காம்பீரை களம் இறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #Dhoni #Gambhir #BJP

    புதுடெல்லி:

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.

    இதேபோல அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் வெற்றியை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறது.

    ஆனால் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல்- டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பா.ஜனதா அரசு மீது அதிருப்தி நிலவுகிறது.


    இந்த அதிருப்தியை சமாளிக்க பா.ஜனதா புதிய வியூகத்தை அமைத்து வருகிறது. அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, காம்பீர் ஆகிய 2 பேரையும் நட்சத்திர பிரச்சாரகர்களாக நியமிக்க பா.ஜனதா தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    அதேநேரம் இந்த 2 பேரையும் பா.ஜனதா சார்பில் அவர்களுடைய சொந்த மாநிலத்தில் வேட்பாளர்களாக களம் இறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆனால் தேர்தலில் போட்டியிட டோனி தயங்கி வருவதால் பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருப்பதால் தமிழ் நாட்டில் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். எனவே டோனியை பிரசாரத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் தமிழ் நாடு மட்டுமின்றி தென் இந்தியாவில் பா.ஜனதாவுக்கு கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் என்று அந்த கட்சி மேலிடம் கருதுகிறது. #Dhoni #Gambhir #BJP

    தெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுளாக இருந்தாலும் டோனி தான் கிரிக்கெட்டின் அரசர் என ஹாங்காங் வீரர் இஷான்கான் புகழாரம் சூட்டியுள்ளார். #Dhoni #EhsanKhan
    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் டோனி ரன் எதுவும் எடுக்காமல் ‘டக்‘ அவுட் ஆனார். அவர் இஷான்கான் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    பாகிஸ்தானை சேர்ந்த இஷான் கான் ஹாங்காங் அணிக்காக ஆடி வருகிறார். அவர் டோனியை கிரிக்கெட் கிங் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக இஷான்கான் கூறியதாவது:-

    தெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுளாக இருந்தாலும் டோனி தான் கிரிக்கெட்டின் அரசர் (கிங்). நான் சுயசரிதை எழுத திட்டமிட்டுள்ளேன். அதில் டோனி தான் முக்கிய பங்காக இருப்பார்.

    தெண்டுல்கர், டோனியை அவுட் செய்வது எனது கனவாக இருந்தது. தெண்டுல்கர் ஓய்வு பெற்றுவிட்டதால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. டோனியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் எனது கனவு நனவானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    33 வயதான இஷான்கான் 15 ஒருநாள் போட்டியில் விளையாடி 29 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.  #Dhoni #EhsanKhan #SachinTendulkar #MSDhoni
    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் அம்பயரின் மோசமான முடிவு குறித்து எம்எஸ் டோனி கருத்து தெரிவித்துள்ளார். #AsianCup2018 #INDvAFG #MSDhoni
    துபாய்:

    ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதிய பரபரப்பான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

    முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்தது. தொடக்க வீரர் முகமது ‌ஷசாத் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, தீபக் சாஹர், கேதர் ஜாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 253 ரன் இலக்குடன் இந்தியா விளையாடியது.

    தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். ராகுல் 60 ரன்னும், அம்பதி ராயுடு 57 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 44 ரன் எடுத்தார். விக்கெட்டுகள் சரிந்ததால் இந்தியா மோசமான நிலைக்கு சென்றது. 205 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது. ஜடேஜா அணியை காப்பாற்ற போராடினார். 49-வது ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டை பறிகொடுத்தது.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. ரஷீத்கான் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் ரன் எடுக்காத ஜடேஜா 2-வது பந்தில் பவுண்டரி அடித்தார். 3-வது மற்றும் 4-வது பந்தில் தலா 1 ரன் கிடைத்தது.

    இதனால் ஸ்கோர் சமநிலை ஏற்பட்டது. வெற்றிக்கு 1 ரன் தேவை. 2 பந்து எஞ்சி இருந்தது. 5-வது பந்தில் ஜடேஜா ஆட்டம் இழந்தார். இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.



    இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. ஜடேஜா 25 ரன் எடுத்தார். அப்தாப் ஆலம், ரஷீத்கான், முகமது நபி தலா 2 விக்கெட்டும், ஜாவித், அகமது தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தானுடன் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்தது குறித்து டோனி கூறியதாவது:-

    நாங்கள் தோல்வியின் நிலையில் இருந்ததால் ஆட்டம் ‘டை’ ஆனது மோசமில்லை. 5 முதல் 6 ஓவர்களில் எங்களது பேட்டிங் நுணுக்கம் சரியில்லாமல் போனது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சு மெய்சிலிர்க்க வைத்தது. ரன்அவுட்டும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    ஆடுகளத்தில் நடந்த சில சம்பவங்களை நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால் நான் அபராதத்தை சந்திக்க விருப்பமில்லை.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    இந்த ஆட்டத்தில் நடுவரின் தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. டோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரிவியூ தீர்ந்துவிட்டதால் டி.ஆர்.எஸ். முறையை நாட முடியாமல் போனது. #AsianCup2018 #INDvAFG #MSDhoni
    பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் டிஆர்எஸ் முறையை துல்லியமாக கணிக்கும் டோனியின் அறிவாற்றலை டுவிட்டர்வாசிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர். #Dhoni #DRS
    கிரிக்கெட் போட்டியில் மைதான நடுவர்கள் அவுட் கொடுப்பதில் சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும். ஒரு வெற்றியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும்போது நடுவரின் தவறான முடிவால் அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியாகி விடும். இதனால் நடுவர் தீர்பை எதிர்த்து அப்பீல் செய்யும் நோக்கி நடுவர் முடிவை எதிர்த்து முறையிடும் டிஆர்எஸ் (Decision Review System).

    நடுவர் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதித்து பேட்ஸ்மேன் அல்லது பீல்டிங் அணி கேப்டன் ரிவியூ கேட்கலாம். பந்து வீச்சு அணி ரிவியூ ஆப்சன் கேட்கும்போது, பந்து வீச்சாளரும், விக்கெட் கீப்பரும்தான் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களுக்குத்தான் பந்து லைனில் பிட்ச் ஆனதா? பந்து பேட்டில் பட்டதா? ஸ்டம்பை தாக்குமா? ஸ்டம்பிற்கு மேல் செல்லுமா? என்பதை இவர்கள்தான் சரியாக கணிக்க வேண்டும்.

    இதில் இந்திய அணி விக்கெட் கீப்பர் டோனி வல்லவர். இவர் ரிவியூ ஆப்சனை கேட்க சொன்னால், கட்டாயம் அது அவுட்டாகத்தான் இருக்கும். ஒருமுறை ஜடேஜா டோனி பேச்சை கேட்காமல் ரிவியூ கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், டிஆர்எஸ் வெற்றி பெறவில்லை. இதனால் டோனி ஜடேஜா மீது கடும் கோபம் கொண்டார்.

    பெரும்பாலும் டிஆர்எஸ் என்பது டோனி ரிவியூ சிஸ்டம் என்று அவரது ரசிகர்கள் அழைப்பதுண்டு. நேற்று இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ‘சூப்பர் 4’ ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. முதல் 7 ஓவரில் பாகிஸ்தான் விக்கெட்டை இழக்கவில்லை.

    8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை இமாம் உல் ஹக் முன்னாள் வந்து தடுத்து ஆட முயன்றார். அப்போது பந்து பேடை தாக்கியது. மிக அதிக தூரம் முன்னாள் வந்து ஆடியதால் பந்து ஸ்டம்பிற்கு மேல் சென்று விடுமோ? என்ற சந்தேகம் சாஹலுக்கும் ரோகித் சர்மாவிற்கும் இருந்தது.

    ஆனால் டோனி எதையும் பற்றி யோசிக்காமல் டிஆர்எஸ் கேட்க ரோகித் சர்மாவிற்கு சிக்னல் கொடுத்தார். முக்கியமான நபரிடம் இருந்து சிக்னல் வந்ததும் யோசிக்காமல் ரோகித் சர்மா ரிவியூ கேட்டார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லாம் இமாம் உல் ஹக் அவுட் என்பது தெரியவந்தது.

    இதனால் டிஆர்எஸ் முறையில் டோனியின் அறிவாற்றல் குறித்து டுவிட்டர்வாசிகள் புகழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலானோர் டிஆர்எஸ் என்றாலே டோனி ரிவியூ சி்ஸ்டம்தான் என்று பாராட்டியுள்ளனர்.
    டோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை டிக்கெட் வடிவில் வடிவமைத்து அசத்தியுள்ளார். #MSDhoni #CSK
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அப்போது இந்திய அணி கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனிக்கும் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் உலகளவில் அதிக ரசிர்கள் உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் எந்தவொரு இடத்தில் விளையாடினாலும் இதுபோன்ற தீவிர ரசிகர்கள் அங்கு சென்று போட்டியை ரசிப்பது வழக்கம். இதுபோன்ற தீவிர ரசிகர் ஒருவர்தான் வினோத். இவருக்கு இன்று திருமணம். திருமணத்திற்கான அழைப்பிதழை சிஎஸ்கே அணியின் டிக்கெட் வடிவில் வடிவமைத்து அசத்தியுள்ளார்.

    இவரது அழைப்பிதழை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அத்துடன் வித்தியாசமான முறையில் அழைப்பிதழை அச்சிட்ட சூப்பர்ஃபேன் ரசிகருக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.



    இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் வினோத் கூறுகையில் ‘‘டோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகரான நான், எனது திருமண அழைப்பிதழை வித்தியாசமான முறையில் அச்சிட விரும்பினேன். இதுகுறித்து கிராபிக் டிசைனரான எனது நண்பரிடம் பேசினேன். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்தான். இருவரும் இந்த அழைப்பிதழை வடிவமைத்தோம்’’ என்றார்.

    மேலும், 2015-ம் ஆண்டு சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் அதிகாரிகள் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் எனது பெயரை சொல்லி அழைத்தார். அப்போது டோனி கையெழுத்திட்ட பேட் எனக்கு பரிசாக வழங்கப்பட்டது’’ என்றார்.


    இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி இன்று தொடக்க உள்ள நிலையில் டோனி சாதிக்க முடியாததை விராட்கோலி சாதித்து காட்டுவாரா? என்ற எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND #INDvENG
    பர்மிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இதன் 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் பர்மிங்காமில் இன்று தொடங்கியது.

    டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி முத்திரை பதிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானதே.

    இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை 3 முறை மட்டுமே டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. அஜீத் வடேகர், கபில்தேவ், ராகுல் டிராவிட் ஆகியோரது தலைமையில் மட்டுமே தொடரை வென்றுள்ளது.

    கடைசியாக இங்கிலாந்தில் ஆடிய 2 டெஸ்ட் தொடரிலும் தோல்வியே ஏற்பட்டது. டோனி தலைமையிலான அணி 2011-ல் 0-4 என்ற கணக்கில் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. 2014-ல் 1-3 என்ற கணக்கில் இழந்தது.

    டோனி சாதிக்க முடியாததை விராட்கோலி முத்திரை பதித்து காட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரது ரன் குவிப்பை பொறுத்தே அணியின் நிலை இருக்கிறது.

    இங்கிலாந்து அணி கடைசியாக பாகிஸ்தானுடன் மோதிய டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது. சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் உள்ளது. இந்திய அணி கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது. ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்கா மண்ணில் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்து இருந்தது. #ENGvIND #INDvENG
    பீகார்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தியவர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். #MSDhoni #Incometax
    ராஞ்சி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி.

    கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து இரண்டு உலக கோப்பையை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இந்த நிலையில் பீகார்- ஜார்க்கெட் மாநிலத்தில் அதிக வருமான வரி செலுத்தியவர்களில் டோனி முதல் இடத்தை பிடித்தார். 2017-18ம் நிதியாண்டில் அவர் ரூ.12 கோடியே 17 லட்சம் கட்டியுள்ளார். இதை பீகார்- ஜார்க்கண்ட் மாநில வருமான வரித்துறை இணை கமி‌ஷனர் நிஷாஒரான் தெரிவித்துள்ளார்.

    கடந்த நிதியாண்டை விட ரூ.1.24 கோடி கூடுதலாக டோனி வருமானவரி கட்டியுள்ளார். 2016-17ல் அவர் ரூ.10 கோடியே 93 லட்சம் வரி செலுத்தி இருந்தார்.



    டோனி 2013-14ம் ஆண்டில் இருந்து அதிக வருமான வரி செலுத்துபவராக இருக்கிறார். தொடர்ந்து 6-வது ஆண்டாக அவர் பீகார்- ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளார்.

    பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்டை சேர்ந்த 37 வயதான டோனி போர்பஸ் வெளியிட்ட அதிக வருமானத்தை ஈட்டும் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #MSDhoni #Incometax
    ×