search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96569"

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. #MSDhoni #Retirement
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி 2-வது ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 66 பந்துகளில் 42 ரன்னும் எடுத்தார். டோனியின் நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது.



    லீட்சில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. தோல்வி கண்டு வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பிய போது டோனி, நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக போட்டி தொடரை வென்றாலோ? அல்லது சிறப்பாக பந்து வீசினாலோ வீரர்கள் ஸ்டம்ப் அல்லது பந்தை நினைவாக எடுத்து செல்லுவார்கள்.

    தோல்வி அடைந்த ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கி சென்றதால் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போகிறாரோ? என்ற கேள்வி எழும்பி இருக்கிறது. 37 வயதான டோனி 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 
    டோனியின் மகள் 3 வயதான ஸிவா, ‘பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா’ என்ற பாடலை பாடி ‘அப்பா... உங்களுக்கு வயதாகி வருகிறது’ என்ற வரியுடன் முடித்தது அனைவரையும் கவர்ந்தது. #MSDhoni #BirthDay #Ziva
    கார்டிப்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனிக்கு நேற்று 37-வது பிறந்த நாளாகும். இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி நிறைவடைந்ததும் தங்கியிருந்த ஓட்டலில் சக வீரர்களுடன் இணைந்து கேக்வெட்டி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார். கேப்டன் விராட் கோலியுடன் அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவும் டோனியை நேரில் வாழ்த்தினார்.



    டோனியின் மகள் 3 வயதான ஸிவா, ‘பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா’ என்ற பாடலை பாடி ‘அப்பா... உங்களுக்கு வயதாகி வருகிறது’ என்ற வரியுடன் முடித்தது அனைவரையும் கவர்ந்தது. அவரது மனைவி சாக்‌ஷி பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ‘நீங்கள் எப்படிப்பட்ட மனிதநேயம் மிக்கவர் என்பதை கூற என்னிடம் வார்த்தைகள் கூட இல்லை. 10 ஆண்டுகளாக உங்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அது தொடரும். எனது வாழ்க்கையை மிகவும் அழகாக்கியதற்கு அளவில்லாத நன்றியும், அன்பும் உங்களுக்கு’ என்று குறிப்பிட்டுள்ளார். டோனி காலை அகலமாக விரித்து ஸ்டம்பிங்கில் இருந்து தப்பிக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் வீரர் ஷேவாக் அதை குறிப்பிட்டு ‘உங்களது வாழ்க்கை இதை விட நீண்டதாக இருக்கும். மேலும் உங்களது ஸ்டம்பிங்கை விட வேகமாக எல்லாவற்றிலும் மகிழ்ச்சியை காண்பீர்கள்’ என்று கூறியுள்ளார்.

    2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன டோனி, 20 ஓவர் உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளை வென்றுத்தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரியவர் ஆவார். 
    இந்திய ஒருநாள் அணியின் முன்னாள் கேப்டன் டோனி இன்று 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவருக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் உள்பட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். #MSDhoni #HappyBirthdayMSDhoni
    ராஞ்சி :

    இந்திய ஒருநாள் அணி விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவருமான மகேந்திர சிங் டோனி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஜூலை 7, 1981-ல் பிறந்தவர் டோனி. இன்று பிறந்த நாள் காணும் டோனிக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

    இதுவரை இந்தியாவிற்காக டோனி, 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கடந்த டிசம்பரில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 318 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    தற்போது, இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவதால், இங்கிலாந்தில் உள்ள டோனி, அங்கு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

    முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உள்பட பல்வேறு பிரபலங்கள் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், டோனி ரசிகர்கள் #HappyBirthdayMSDhoni என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி அவரின் பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    டோனியுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. அதில், பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜாம்பவான், உங்களை போல் யாருமே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் மூன்று வித தொடர்களான 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர், 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகியவற்றை கைப்பற்றிய ஒரே கேப்டன் டோனி என்பது குறிப்பிடத்தக்கது. #MSDhoni  #HappyBirthdayMSDhoni
    இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பாக கால்பந்து விளையாட கூடியவர் யார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.#YuvrajSingh #FifaWorldCup2018
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த சில உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நான் பிரேசில் அணியை ஆதரித்தேன். ஆனால் இந்த முறை பிரான்ஸ் அணிக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். ஏனெனில் எனக்கு பிடித்த கிளப்பான மான்செஸ்டர் யுனெடெட் வீரர் பால் போக்பா பிரான்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்’ என்று தெரிவித்தார். பயிற்சிக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கால்பந்து விளையாடுவது வழக்கம்.



    இந்த பயிற்சி கால்பந்து ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிறப்பாக செயல்படுவது யார்? என்று யுவராஜ்சிங்கிடம் கேட்ட போது, ‘இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் டோனி தான் சிறப்பாக கால்பந்து ஆடக்கூடியவர்’ என்று பதிலளித்தார். #YuvrajSingh #FifaWorldCup2018
    கிரிக்கெட்டை வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த தன்னை மகள் ஜிவா தான் மனிதனாக மாற்றினார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி கூறியுள்ளார். #MSDhoni #ZivaDhoni

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டோனி பல சாதனைகள் படைத்துள்ளார். அதில் மிக முக்கியமானது அவர் வென்ற மூன்று ஐசிசி கோப்பைகள் ஆகும். இதுதவிர அவர் தனது பேட்டிங், விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்ஷிப் திறமைகளால் பல சாதனைகள் புரிந்துள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. பரிசளிப்பு விழாவின் போது மற்ற வீரர்கள் வெற்றி கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் டோனி தனது மகள் ஜிவாவுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 



    இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டோனி கிரிக்கெட்டை வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த தன்னை மகள் ஜிவா தான் மனிதனாக மாற்றினார் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    என் மகள் ஜிவா என்னை மனிதானாக மாற்றியுள்ளார். ஜிவா பிறப்பதற்கு முன்னர் நான் பெரும்பாலான நாட்களை கிரிக்கெட் விளையாடுவதிலேயே கழித்து வந்தேன். வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் நிலை ஏற்படுவதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடமுடியாமல் இருந்தேன். ஒரு மகள் எப்போதும் தன் தந்தையுடன் மிக நெருக்கமாக இருப்பது இயல்புதான். அதே போன்று தான் என் மகளும் உள்ளார். 



    ஐபிஎல் போட்டி தொடர் முழுவதும் ஜிவா என்னுடன் இருந்தார். போட்டிக்கு முன்னும், பின்னும் மைதானத்தில் புல் தரையில் என்னுடன் விளையாட, மைதான பராமரிப்பாளர்களிடம் அனுமதி கோரினேன். மேலும் எங்கள் அணியில் நிறைய வீரர்கள் குழைந்தைகளுடன் வந்திருந்தனர். அவர்கள் ஒன்றாக விளையாடுவதைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது. 

    இவ்வாறு டோனி கூறியுள்ளார். #MSDhoni #ZivaDhoni
    ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு, கேப்டன் டோனி ராஞ்சியில் உள்ள தியோரி கோவிலில் இன்று காணிக்கை செலுத்தினார். #Dhoni #DeoriTemple
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ளது தியோரி கோவில். இங்குள்ள துர்கா மாதா மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி இந்த கோவிலின் அதிதீவிர பக்தர்.

    சமீபத்தில் நடைபெற்ற 11-வது ஐபிஎல் சீசனில், இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது.



    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் டோனி, இன்று திடீரென தியோரி கோவிலுக்கு சென்றார். அங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்ட அவர், தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்தினார். அதன் பின்னர், சாமி கும்பிட்டு வந்ததும், அங்கு காத்திருந்த தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். #Dhoni #DeoriTemple
    ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் கேப்டன் டோனி தான்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பாராட்டினார்.#CSK #IPL2018 #StephenFleming #Dhoni
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றிய டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மாலை சென்னை திரும்பியது. 2 ஆண்டு தடைக்கு பிறகு களம் திரும்பிய முதல் போட்டி தொடரிலேயே சென்னை அணி கோப்பையை வென்று அசத்தி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு, விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரர்களை வாழ்த்தி ரசிகர்கள் கோஷம் எழுப்பினார்கள். விமான நிலையத்தில் இருந்து வீரர்கள் தனி பஸ் மூலம் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அங்கு வீரர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சென்னை ஓட்டலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னையின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்கள் அணியின் வீரர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன. போட்டி இடம் மாற்றம் என்பது எங்களது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது அல்ல. ஒரு ஆட்டத்துடன் சென்னையில் இருந்து போட்டி புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டது கடினமான முடிவாகும். புனேவின் சூழ்நிலையும் எங்களுக்கு தெரியும். அதற்கு தகுந்தபடி எங்களது ஆட்ட திட்டத்தை மாற்றி செயல்பட்டோம். எங்கள் அணி வீரர்கள் மீது நம்பிக்கை இருந்தது. நம்பிக்கையை நிரூபிக்கும் வகையில் எல்லோரும் சிறப்பாக செயல்பட்டனர்.



    ஷேன் வாட்சன் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தார். பிக்பாஷ் போட்டியில் அவரது ஆட்டத்தை கவனித்து தான் அணிக்கு தேர்வு செய்தோம். அவர் எங்களது நம்பிக்கைக்கு தகுந்தபடி சிறப்பாக செயல்பட்டார். எங்கள் அணியில் இடம் பெற்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றி கொண்டு நன்றாக ஆடினார்கள். சென்னை அணியின் வெற்றியில் கேப்டன் டோனியின் தாக்கம் மிகவும் முக்கியமானது. திறமையான கேப்டனான டோனி வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத் திறனை வெளிக்கொண்டு வரும் சக்தி படைத்தவர். டோனியின் பலத்தையும், அணியின் நல்ல ஆட்ட திட்டத்தையும் நாங்கள் சரியாக செயல்படுத்தினோம்.

    இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

    அப்போது சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உடனிருந்தார். 
    கிரிக்கெட்டில் வயது ஒரு பிரச்சினை கிடையாது எனவும் உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியம் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறியுள்ளார்.#IPL2018 #CSK #Dhoni
    மும்பை:

    2 ஆண்டு தடைக்கு பிறகு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30 வயதை தாண்டிய வீரர்கள் 8 பேர் இடம் பெற்று இருந்தனர்.

    கேப்டன் டோனி (36 வயது), இம்ரான் தாகீர் (39), ஹர்பஜன்சிங் (38), வாட்சன் (36), பிராவோ (34), டுபெலிசிஸ் (33), அம்பதிராயுடு (32), ரெய்னா (31) உள்ளிட்ட வீரர்கள் 30 வயதை தாண்டி இருந்தனர். இதனால் ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்சை “அப்பாக்கள் அணி” என்று விமர்சனம் செய்தனர். இதற்கு அவர்கள் கோப்பையை வென்று கொடுத்து பதிலடி கொடுத்தனர்.

    ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்றபோது டோனி இது தொடர்பாக கூறியதாவது:-

    எங்கள் அணி வீரர்களின் வயது பற்றி அதிகமாக பேசுகிறார்கள். ஆனால் வயது ஒரு பிரச்சினை கிடையாது. உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியம். உதாரணத்திற்கு அம்பதி ராயுடுவை சொல்லலாம். 32 வயதான அவர் நல்ல உடல் தகுதியுடன் இருந்து அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி உள்ளார். எனவே வயதைவிட உடல் தகுதி தான் முக்கியம்.



    இறுதிப்போட்டிக்கு நுழைந்த பிறகு அனைத்து வீரர்களுக்கும் அவர்களது பங்களிப்பு என்ன என்பது தெரியும். எங்கள் அணியின் மிடில் ஆர்டர் மீது நம்பிக்கை வைத்து இருந்தோம். டுபெலிசிசை முதலிலும், அம்பதி ராயுடுவை பின் வரிசையிலும் இறக்கியதில் எந்த திட்டமும் இல்லை.

    இதற்கு முந்தைய கோப்பையை வென்றபோது நடந்ததை நினைவுக்கு கொண்டு வருவது கடினம். புள்ளி விவரங்களை பற்றி பலர் பேசுகிறார்கள். இறுதிப்போட்டி தேதி 27 (நேற்று) எனது ஜெர்சி எண் 7, எங்களுக்கு 7-வது இறுதிப்போட்டி. நாங்கள் கோப்பையை வெல்ல போதுமான காரணம் இருக்கிறது. ஆனாலும் இதெல்லாம் காரணமில்லை. கடைசியில் நாங்கள் சிறப்பாக ஆடி கோப்பையை வென்றுள்ளோம்.

    இவ்வாறு டோனி கூறினார்.#IPL2018 #CSK #Dhoni
    அவர்தான் வெற்றி பெறுவதற்கான திட்டம் எல்லாம் வைத்திருப்பார். நான் அதை செயல்படுத்துவேன் என்று கேப்டன் டோனி கூறியுள்ளார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni
    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக செயல்படுபவர் டோனி. அவர் 10-வது முறையாக மிகப்பெரிய ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் ஆடுகிறார். ஏற்கனவே 6 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடி இருக்கிறார். இதில் 2 முறை பட்டம் பெற்றார். 20 ஓவர் உலக கோப்பையில் 2 முறையும், 50 ஓவர் உலக கோப்பையில் ஒரு முறையும் அவர் இறுதிப்போட்டியில் ஆடினார்.

    இதில் டோனி 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பையையும், 2007-ல் 20 ஓவர் உலககோப்பையும் பெற்று கொடுத்தார்.

    இன்றைய ஐ.பி.எல். இறுதிப்போட்டி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-


    இறுதிப்போட்டியில் வெற்றி பெற என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என கேட்கிறீர்கள். திட்டம் வைத்து இருப்பது எல்லாம் பயிற்சியாளர் பிளமிங் தான். நான் அதை செயல்படுத்துவேன். இதற்காக பிளமிங்குக்கு பெரிய பணத்துக்கான செக் கிடைக்கிறது. ஐதராபாத்துக்கு எதிரான ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஹர்பஜன் சிங்கை பந்துவீச அழைக்காதது ஏன்? என்று கேட்கிறார்கள்.


    எனது வீட்டில் நிறைய கார்களும், பைக்குகளும் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது இல்லை. அது போலத்தான் அணியில் 6 மற்றும் 7 பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது யார் பேட்டிங் செய்கிறார் அந்த நேரத்தில் என்ன தேவை என்பது போன்ற சூழ்நிலையை பொறுத்து தான் பந்துவீச்சாளர்களை அழைக்க முடியும். அப்படித்தான் செயல்படுகிறேன். அந்த ஆட்டத்தில் ஹர்பஜன்சிங் பந்துவீச வேண்டிய தேவை ஏற்படவில்லை.

    ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் சிறந்த இந்திய வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த தொடர் தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர், ஷிவம் மவி, கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    இவ்வாறு டோனி கூறினார். #IPL2018 #CSKvSRH #IPLFinal #Dhoni
    இங்கிலாந்து திட்டமிட்டுள்ள 100 பந்து கிரிக்கெட் தொடரில் டோனி, கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரை விளையாட அனுமதிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #BCCI #ViratKohli #MSDhoni #100ballcricket

    புதுடெல்லி:

    முதலில் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியாக விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டிகள், பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டான 50 ஓவர் போட்டியாக மாறியது. பின்னர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டி20 ஓவராக மாறியது. தற்போது சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்குள் போட்டி முடிந்துவிடும் என்பதால் ரசிகர்களும் அதிக அளவில் மைதானத்திற்கு படையெடுக்கிறார்கள்.

    டெஸ்ட் போட்டி 20 ஓவராக சுருங்கியதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் இருந்து 8 அணிகள் பங்கேற்கும் 100 பந்து போட்டி தொடரை தொடங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. 16-ல் 15 ஓவர்கள், 6 பந்து வீதம் வீசப்படும். கடைசி ஓவரில் 10 பந்துகள் வீசப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால் மற்ற நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. ஐபிஎல் தொடரின் பெருமை மற்றும் மார்க்கெட் மதிப்பை காப்பதற்காக இந்திய வீரர்கள் மற்ற லீக் தொடர்களில் விளையாட பிசிசிஐ அனுமதி மறுத்து வருகிறது. இதனால் இந்த தொடரிலும் இந்திய வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், இந்த 100 பந்து கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களான டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரை விளையாட அனுமதி அளிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு இந்திய வீரர்கள் 100 பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதிப்பட்டால், அந்த தொடர் அதிக வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஏற்கனவே இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள மகளிருக்கான கியா டி20 லீக்கில் இந்திய வீராங்கனைகள் விளையாட பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #BCCI #ViratKohli #MSDhoni #100ballcricket
    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கு காரணமாக இருந்த பின்வரிசை வீரர்களை கேப்டன் டோனி பாராட்டி உள்ளார். #IPL2018 #CSKvSRH
    மும்பை:

    ஐ.பி.எல். தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதியது. முதலில் விளையாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்னே எடுக்க முடிந்தது.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 42 பந்தில் 67 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்), ரெய்னா 13 பந்தில் 22 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

    சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கு டு பிளிஸ்சிஸ் முக்கிய பங்கு வகித்தார். சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்து இருந்தது. இதனால் தோல்வியை தழுவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரராக களம் இறங்கிய டு பிளிஸ்சிஸ் இறுதி வரை களத்தில் நின்று சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

    கடைசி கட்டத்தில் அவருக்கு தீபக் சாஹரும், ‌ஷர்துல் தாக்கூரும் உதவியாக இருந்தனர். சாகர் 6 பந்தில் 10 ரன்னும் (1 சிக்சர்), ‌ஷர்துல் தாக்கூர் 5 பந்தில் 15 ரன்னும் (3 பவுணடரி) எடுத்தனர்.

    இந்த வெற்றி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியதாவது:-


    சி.எஸ்.கே. அணியின் பின்வரிசை வீரர்களுக்கே பாராட்டு எல்லாம் சேரும். நெருக்கடியான கட்டத்தில் அவர்கள் டு பிளிஸ்சுக்கு ஜோடியாக நின்று வெற்றியை தேடி தந்தனர். இந்தப்போட்டிக்கான அனுபவத்தில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொள்வது முக்கியமானது.

    இந்தப்போட்டி தொடரில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம். வீரர்களின் அறை இதற்கு முக்கிய பங்கு வகித்தது. அணியின் நிர்வாகத்துக்கு பாராட்டு எல்லாம் சேரும். வீரர்களின் அறை சுமூகமாக இல்லாவிட்டால் ஆடுவது கடினமாகும். இறுதிப்போட்டிக்கு நுழைந்தது மிகவும் மகிழ்ச்சியானது. இந்த வெற்றி முக்கியமானது.

    இவ்வாறு டோனி கூறினார்.

    தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “இது ஒரு சிறந்த ஆட்டம். நாங்கள் சில ரன்களை குறைவாக எடுத்துவிட்டோம். சென்னை அணியின் பின்வரிசை வீரர்கள் எங்கள் வெற்றியை பறித்துவிட்டனர்” என்றார்.

    ஐதராபாத் அணி ‘குவாலி பையர் 2’ ஆட்டத்தில் கொல்கத்தா அல்லது ராஜஸ்தானை சந்திக்கிறது. #IPL2018 #CSKvSRH
    கிரிக்இன்போ ஐபிஎல் கனவு அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி மற்றும் ராயுடு இடம்பிடித்துள்ளனர். #IPL2018
    11-வது ஐ.பி.எல். போட்டியில் ‘லீக்’ ஆட்டம் முடிந்து ‘பிளேஆப்’ சுற்று இன்று தொடங்குகிறது.

    கிரிக்கெட் இணைய தளமான கிரிக்இன்போ ஐ.பி.எல். கனவு அணியை வெளியிட்டு உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, அம்புதி ராயுடு இடம் பெற்றுள்ளனர். ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கனவு அணிக்கு கேப்டனாக இருக்கிறார். ஆல் ரவுண்டர்களான குர்னல் பாண்ட்யா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இந்த அணியில் இடமில்லை.

    கிரிக்கெட் இன்போவின் ஐ.பி.எல். கனவு அணி வருமாறு:-

    லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), சுனில் நரேன் (கொல்கத்தா), வில்லியம்சன் (கேப்டன், ஐதராபாத்), அம்புதி ராயுடு (சென்னை), ரி‌ஷப்பண்ட் (டெல்லி), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), டோனி (விக்கெட் கீப்பர், சென்னை), ரஹித்கான் (ஐதராபாத்), ஆண்ட்ரூ டை (பஞ்சாப்), உமேஷ் யாதவ் (பெங்களூர்), பும்ரா (மும்பை).#IPL2018
    ×