search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர்"

    100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் மிகவும் தூய்மையான மாநிலம் என்ற பெருமையை சத்தீஸ்கர் பெற்றுள்ளது.
    புதுடெல்லி:

    தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தூய்மையான நகரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது.  4,320 நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று விருதுகளை வழங்கினார்.

    இதில், நாட்டின் மிக தூய்மையான நகரம் என்ற பெருமையை மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் பெற்றுள்ளது. அதற்கான விருதை ஜனாதிபதி வழங்கினார். இதன்மூலம் ஐந்தாவது முறையாக தூய்மைக்கான விருதை பெற்றுள்ளது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், ஆந்திராவின் விஜயவாடா மூன்றவாது இடத்தையும் பிடித்தது.

    சத்தீஸ்கர் மாநிலத்திற்கு விருது

    100 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் சத்தீஸ்கர் முதலிடத்தையும், மஹாராஷ்டிரா 2வது இடத்தையும் மத்திய பிரதேசம் 3வது இடத்தையும் பிடித்தன. இதேபோல் கங்கை கரையோர நகரங்களில் தூய்மையான நகரமாக வாரணாசி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதுகளையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். #LoksabhaElections2019 #BJP #AmitShah
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் கடந்த 9ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, ராஜ்நந்தகாவ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா,  சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் நடைபெற்ற நக்சலைட்கள் தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி கொல்லப்பட்டார்.

    பீமா மாண்டவி கொல்லப்பட்டது அரசியல் சதி.  எனவே, பாஜக எம்எல்ஏ கொல்லப்பட்ட சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.  #LoksabhaElections2019 #BJP #AmitShah
    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு நக்சலைட்டை சுட்டுக் கொன்றனர். #Encounter
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்தும் ஆர்ச்சா காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலில் ஒரு நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டான் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். #Encounter
    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். #NaxalAttack #BJP #BHimaMandavi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க. தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். எம் எல் ஏவுடன் சென்ற பாதுகாப்பு படையினர் நக்சலைட்கலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.



    இந்த தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
    #NaxalAttack #BJP #BHimaMandavi
    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இன்னமும் உள்ளது.



    இந்நிலையில், சுக்மா மாவட்டம் பீமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter

    சத்தீஸ்கரில் நேற்றிரவு காரும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். #ChattishgarAccident
    கொண்டகன்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொண்டகன் பகுதியின் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, எதிரே வந்துக் கொண்டிருந்த காரின் மீது திடீரென மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் சிலர் படுகாயமுற்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து தொடர்பாக அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25000 வழங்குவதாகவும், மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் கொண்டகன் பகுதியின் மாவட்ட ஆட்சியர் தெகாம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ChattishgarAccident
    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Naxalskilled #ChhattisgarhNaxalskilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜாப்பூர் மாவட்டத்தில் பாய்ராம்கார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் மறைந்து இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.



    இதுதொடர்பாக, பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட நக்சலைட்களின் சடலங்கள் மற்றும் அங்கிருந்து 11 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன. தொடர்ந்து, அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர். #Naxalskilled #ChhattisgarhNaxalskilled
    சத்தீஸ்கரில் கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார். #Chhattisgarhcaraccident
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதிக்குட்பட்ட அட்டல் நகரில் நேற்றிரவு அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

    ஓட்டுனர் மது அருந்திவிட்டு காரை ஓட்டியிருக்கலாம்  என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Chhattisgarhcaraccident
    சத்தீஸ்கரில் பூபேஷ் பாகெல் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு, 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். #Chhattisgarh #ChhattisgarhCabinet
    ராய்ப்பூர்:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினம் டிஎஸ் சிங் தேவ், தம்ரத்வாஜ் சாகு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், பூபேஷ் பாகல் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். ஒரு பெண் எம்எல்ஏ உள்ளிட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    ராய்ப்பூரில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் இந்தியில் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.

    சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி, 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #ChhattisgarhCabinet

    சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேஷ் பாகெல் பதவி ஏற்றதும் குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். #ChhattisgarhCM

    ராய்ப்பூர்:

    பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

    ராஜஸ்தான் முதல்- மந்திரியாக அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் ஆகியோர் நேற்று அந்தந்த மாநில தலைநகர்களில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இந்த மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல் மந்திரிகள் பதவி ஏற்ற 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன்படி மத்திய பிரதேசத்தில் நேற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் முதன் முதலில் விவசாய கடன்களை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார். அதன் படி கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேஷ் பாகெல்லும் பதவி ஏற்றதும் குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

    மேலும் நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.1700-ல் இருந்து ரூ.2500ஆக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

    “சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னணி தலைவரான நந்தகுமார் படேல் உள்பட 29 காங்கிரஸ் நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டனர். இது போன்ற சம்பவம் வரலாற்றில் நடந்தது இல்லை. இதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும்” என்றும் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் உறுதி அளித்தார். #ChhattisgarhCM

    சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் பதவியேற்கும் இடம் மழை காரணமாக மாற்றப்பட்டு உள்ளது. #Chhattisgarh #BhupeshBaghel
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 68 இடங்களில் வெற்றி பெற்றனர். 15 இடங்களை மட்டுமே பா.ஜ.க.வால் பிடிக்க முடிந்தது.

    தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அசுர பலத்தை பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராய்ப்பூரில் நடந்தது. டெல்லியில் இருந்துவந்த அக்கட்சியின் மேலிட பார்வையாளர் டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டார்.

    இதன் மூலம் அம்மாநிலத்தின் மூன்றாவது முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டாவது முதல் மந்திரியாகவும் பூபேஷ் பாகேல் பதவியேற்க உள்ளார்.



    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் பதவியேற்கும் இடம் மழை காரணமாக மாற்றப்பட்டு உள்ளது.

    முதல்மந்திரி பதவியேற்பு விழா அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பெய்ட்டி புயல் காரணமாக பெய்து வரும் மழையால் முதல் மந்திரி பதவியேற்கும் இடம் புதாதலாப் பகுதியில் உள்ள பல்பீர் சிங் ஜுனேஜா உள் விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #BhupeshBaghel #Chhattisgarh
    சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ChhattisgarhCM
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. கடுமையான தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 68 இடங்களில் வெற்றி பெற்றனர். 15 இடங்களை மட்டுமே பா.ஜ.க.வால் பிடிக்க முடிந்தது.



    தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அசுர பலத்தை பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ராய்ப்பூர் நகரில் நடந்தது. 

    டெல்லியில் இருந்துவந்த அக்கட்சியின் மேலிட பார்வையாளர் டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதன் மூலம் அம்மாநிலத்தின் மூன்றாவது முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டாவது முதல் மந்திரியாகவும் பூபேஷ் பாகேல் நாளை மாலை 5 மணியளவில் பதவி ஏற்கிறார். #bhupeshbaghel #Chattisgarh
    ×