search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர்"

    சத்தீஸ்கரில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.

    அந்த மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.

    இந்த ஆலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. அப்போது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இரும்பு ஆலை நிர்வாகத்தினர் செயல் தலைமை அதிகாரி (CEO) எம்.ரவி என்பவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆலையின் பொது மேலாளர் பாண்டியராஜா மற்றும் துணை பொது மேலாளர் நவீன்குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

    மேலும், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் நேற்று அறிவித்தார்.

    இந்நிலையில், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்பெனியின் ஊழியர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. #BhilaiSteelPlant  #BhilaiSteelPlantblast
    சத்தீஸ்கரில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #BhilaiSteelPlant #BhilaiSteelPlantblast
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரெயில்வேக்கு தேவையான தரமான தண்டவாளங்களை தயாரிப்பதில் இந்த ஆலை பிரசித்தி பெற்றது. இதுதவிர கட்டிடங்களுக்கு தேவையான முறுக்கு கம்பி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் இந்த ஆலை தயாரித்து வருகிறது.

    அந்த மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார்.

    இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பணிகள் நடைபெற்றபோது, காலை சுமார் 11 மணியளவில் குழாய் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், 19 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

    சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இரும்பு ஆலை நிர்வாகத்தினர் செயல் தலைமை அதிகாரி (CEO) எம்.ரவி என்பவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆலையின் பொது மேலாளர் பாண்டிய ராஜா மற்றும் துணை பொது மேலாளர் நவீன் குமார் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

    இந்நிலையில், பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 30 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.

    மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #BhilaiSteelPlant  #BhilaiSteelPlantblast
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என மாயாவதி தெரிவித்துள்ளார். #ChhattisgarhElections #Mayawati #AjitJogi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சியினரும் சட்டசபை தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த பகுஜன் சமாஜ் கட்சி ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது என அக்கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்தீஸ்கரில் பகுஜன் சமாஜ் கட்சி 35 இடங்களிலும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி 35 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.



    இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் அஜித் ஜோகி முதல் மந்திரியாக பதவி வகிப்பார் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி தலைவர் அஜித் ஜோகி கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில்
    மாயாவதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #ChhattisgarhElections #Mayawati #AjitJogi
    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர். #FuelPrice #Congress
    ராய்ப்பூர்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

    கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடந்த 10ம் தேதி பாரத் பந்த் போராட்டம் நடத்தியது.

    இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சைக்கிள், மாட்டு வண்டிகளில் சட்டசபைக்கு வருகை தந்தனர்.

    ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வந்த சைக்கிள்களை பாதுகாவலர்கள் வாசலில் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து சட்டசபைக்குள் காங்கிரசார் கோஷமிட்டனர். இதனால் சபாநாயகர் சட்டசபையை சிறிது ஒத்திவைத்தார். #FuelPrice #Congress
    பிரதமர் மோடியின் ஆட்சியை பற்றி கேள்வி எழுப்புவதற்கு ராகுல் காந்திக்கு எந்த உரிமையும் கிடையாது என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #RahulGandhi
    ராய்ப்பூர்:

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார். 

    சத்தீஸ்கர் மாநிலத்தின்  குருபத் கிராமத்தில் உள்ள பிரயாககிரி மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    கடந்த 60 ஆண்டு காலமாக காங்கிரசார் இந்தியாவை ஆட்சி செய்து வந்துள்ளனர். அப்பொழுது கிராமங்களுக்கு ஏன் மின்சார வசதி கிடைக்கவில்லை? விவசாயிகளுக்கு பயனளிக்க கூடிய கொள்முதல் விலை ஏன் கிடைக்கவில்லை?

    இந்தியாவை ஆட்சி செய்த 60 ஆண்டுகளின் கணக்குகளை காட்டவேண்டும் என மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கின்றனர். நீங்கள் பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி குறித்து கணக்கு கேட்கிறீர்கள். உங்களுக்கு மோடி ஆட்சி பற்றி கேள்வி கேட்க எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்தார்.

    இந்த ஆண்டு இறுதியில், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. #AmitShah #RahulGandhi
    ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா பகுதியில் நேற்று நள்ளிரவு 11.39 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சிறிது நேரத்தில் நிலைமை சீரடைந்தது. #Earthquake
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா பகுதியில் நேற்று நள்ளிரவு 11.39 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சிறிது நேரத்தில் 
    நிலைமை சீரடைந்தது. #Earthquake
    சத்தீஸ்கர் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதமடைந்ததால், ராய்ப்பூரில் விமான சேவை சிறிது பாதிக்கப்பட்டது.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதால் ராய்ப்பூர் விமான நிலையத்தில் செயல்பட்டு வந்த விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, ராய்ப்பூர் விமான நிலையத்தில் விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், மின்னல் தாக்கியதில் விமான நிலைய கட்டுப்பாட்டு கருவி சேதமடந்தது.
    இதனால் விமானங்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இண்டிகோ மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. கட்டுப்பாட்டு கருவியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து வருகிறோம். விரைவில் விமான சேவை தொடங்கும் என தெரிவித்தனர்.
    சத்தீஸ்கர் மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணமடைந்தார். #Chhattisgarh #GovernorPassedAway #BalramjiDassTandon
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநர் பால்ராம்ஜி தாஸ். திடீர் உடல்நலக்குறைவு காராணமாக 90 வயதான இவர் இன்று காலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்ராம்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவர் பா.ஜ.க.வின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தவர். பஞ்சாப் மாநிலத்தின் துணை முதல்வராகவும், 6 முறை எம்.எல்.ஏ பதவியும் வகித்த மூத்த அரசியல் தலைவரான இவர், கடந்த 2014-ம் ஆண்டு முதல் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #GovernorPassedAway #BalramjiDassTandon
    சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மந்திரி ராமன் சிங், மகாபாரதத்தில் வரும் பீஷ்ம பிதாமகருக்கு நிகரானவர் என மாநில மந்திரி பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. #RamanSingh #AjayChandrakar #BhishmaPitamah
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மந்திரி அஜய் சந்திரகர் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங் மகாபாரதத்தில் வரும் பீஷ்ம பிதாமகன் போன்றவர். சட்டசபை தேர்தலில் தனது செல்வாக்கினால் மட்டுமே மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

    பீஷ்ம பிதாமகருக்கு மட்டுமே தான் எப்போது இறப்போம் என்பது தெரியும். அதுபோல், முதல் மந்திரி ராமன் சிங்குக்கும் அந்த சக்தி உண்டு. 

    சத்தீஸ்கர் மக்களிடம் கொண்டுள்ள அன்பால் அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். தேர்தலில் தோற்பது குறித்து அவர் தான் முடிவுசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    அரசு விழாவில் முதல் மந்திரியை மகாபாரதத்தில் வரும் பீஷ்ம பிதாமகருடன் ஒப்பிட்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. #RamanSingh #AjayChandrakar #BhishmaPitamah
    சத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்து மற்றும் லாரியை எரித்து சேதப்படுத்திய நக்சல்கள், தண்டவாளத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். #NaxalAttack
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் பாதிப்பு அதிகமுள்ள பகுதியாகும். அதனால் இங்கு நக்சல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தின் கமவாடா பகுதியில் சாலையில் சென்ற பேருந்து மற்றும் லாரியை சிறைபிடித்த நக்சல்கள் அவற்றுக்கு தீ வைத்து எரித்தனர்.

    மேலும், தண்டேவாடா பகுதியில் தண்டவாளங்களை சேதப்படுத்தினர். இதனால் அந்த வழியாக சென்ற பயணிகள் ரெயில் தடம் புரண்டது.

    தகவலறிந்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். நக்சல்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    சத்தீஸ்கர் மாநிலத்தில் பசுக்களை பாதுகாக்கும் அரசு கோசாலையில் 18 பசுக்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #CowSafty
    ராய்ப்பூர்:

    இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு வன்முறைகள் நடைபெறுகின்றன. பசுக்களை இறைச்சிக்காக கடத்துவதாக கூறி, பலர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் உலவும் இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

    வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. ஆங்காங்கே இருக்கும் பசுக்களை மீட்டு, மாவட்ட நிர்வாகம் நடத்தி வரும் கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு மட்டுமே பசுக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பசுபாதுகாவலர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ரோஹாசி எனும் கிராமத்தில் இயங்கி வரும் அரசு கோசாலையில் 18 பசுமாடுகள் மூச்சுத்திணறி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக அம்மாவட்ட கலெக்டர் ஜானக் பிரசாத் பதக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோசாலையில் இருந்து இறந்த பசுக்களின் உடல்களை எடுத்துச் செல்வதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது, அங்கு பசுக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், அவற்றுக்கு தேவையான உணவை கிராம மக்களும், கோசாலை நிர்வாகிகளும் வழங்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மிகச்சிறிய அறையில் வைத்து பூட்டப்பட்ட அதிகப்படியான பசுக்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கலெக்டர் ஜானக் பிரசாத் தெரிவித்துள்ளார். #CowSafty
    சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் அறிவித்து, தேடப்பட்டு வந்த நக்சலைட்டை போலீசார் இன்று கைது செய்தனர். #Naxal
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமுள்ளது. இதனால் பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

    இந்நிலையில், தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட் டோர்னபால் பகுதியில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி, மாநில போலீசாரும், சி.ஆர்.பி.எப். வீரர்களும் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டை மடக்கி பிடித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Naxal
    ×