search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96604"

    கும்மிடிப்பூண்டி அருகே செல்போனில் படம் எடுத்தபோது மின்னல் தாக்கி சென்னையை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கும்மிடிப்பூண்டி:

    சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). மஸ்கட்டில் (வெளிநாடு) உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்த ரமேஷ், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து சென்னை வந்தார். பின்னர் தனது நண்பர்கள் கோடம்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (45) மற்றும் மயிலாப்பூரை சேர்ந்த பிரபாகரன் (44) ஆகியோருடன் சேர்ந்து பழைய கார்களை வாங்கி விற்பது உள்பட பல்வேறு தொழில்களில் பங்குதாரராக இருந்து வந்தார்.

    இவர்களது நண்பரான பார்த்திபன் (45) கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தில் இறால் பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையை பார்ப்பதற்காக ரமேஷ் மற்றும் அவரது 2 நண்பர்களும் நேற்று மதியம் காரில் சுண்ணாம்புகுளம் கிராமத்திற்கு வந்தனர்.

    இறால் பண்ணையை பார்த்திபனுடன் அவரது நண்பர்களும் பார்வையிட்டனர். ரமேஷ் முன்னால் செல்ல அவருக்கு பின்னால் பார்த்திபன் உள்ளிட்டோர் சென்றனர்.

    இறால் பண்ணை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை தனது செல்போனில் படம் பிடித்தவாறு ரமேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது இடியுடன் லேசான மழை பெய்தது.

    அப்போது மின்னல் தாக்கியதில் ரமேஷ் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தனர். ஆனால் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

    உயிரிழந்த ரமேசுக்கு உமா (38) என்ற மனைவியும், தியா (9) என்ற மகளும் உள்ளனர். ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    செல்போன் மூலம் டிக்கெட் எடுத்தால் ரெயில் கட்டணத்தில் சலுகை கிடைக்கும் வகையில், மதுரை கோட்டம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. #train

    மதுரை:

    மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விரைவு ரெயில் மற்றும் பாசஞ்சர் ரெயிலில் பயணிப்போர் செல்போனில் “utsஷீஸீனீஷீதீவீறீமீ” ஆப் வாயிலாக டிக்கெட் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

    இதன்வாயிலாக 3 சதவீதம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து பயன்பெற்று வருகின்றனர்.

    இதற்கான பணத்தை அவர்கள் ஆர் வாலேட், கிரெடிட்-டெபிட் கார்டுகள் வாயிலாகவோ, அல்லது பயணசீட்டு அலுவலகத்திலோ செலுத்தி வருகின்றனர். இதற்காக மத்தியஅரசு கூடுதல் சேவை கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை.

    இந்தநிலையில் ‘ஆர் வாலெட்’ மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ஆர் வாலெட்டில் பணம் செலுத்தும்போது, பயனாளிகளின் கணக்கில் 5 சதவீதம் போனஸ் தொகை வரவு வைக்கப்படும்.

    உதாரணமாக பயணி ஒருவர் ஆர் வாலெட்டில் 1000 ரூபாய் பணம் செலுத்தினால், அவரின் கணக்கில் ரூ.1050 வரவு வைக்கப்படும்.

    செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், இத்தகைய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. #train

    மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொன்று வீட்டில் புதைத்த வாலிபர், 5 மாதத்துக்கு பிறகு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பொன்னேரி:

    வேலூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 20). இவர் பொன்னேரியை அடுத்த மாதவரம் பகுதியில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    அதே பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து உடன் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் கவுத் என்பவருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 15-ந் தேதி விஜய் திடீரென மாயமானார். இதுபற்றி அவரது தாய் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதேபோல் விஜய்யுடன் தங்கி இருந்து சுரேஷ் கவுத்தும் தலைமறைவாகி விட்டார். இதனால் விஜய் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. விஜய் பயன்படுத்திய செல்போனின் ஐ.எம்.இ. நம்பரை வைத்து ஆய்வு செய்து வந்தனர்.
    இதற்கிடையே விஜயின் செல்போன் எண்ணூர் அருகே பயன்படுத்துவது தெரிந்தது. இதனை வைத்து  அப்பகுதியில் தங்கி இருந்த சுரேஷ் கவுத்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் டிசம்பர் 15-ந் தேதி மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் விஜயை அடித்து கொலை செய்துவிட்டதாகவும், உடலை வீட்டிலேயே புதைத்ததாகவும் சுரேஷ் கவுத் தெரிவித்தார்.

    இதையடுத்து நேற்று இரவு  அவர்கள் ஏற்கனவே தங்கி இருந்த தாசில்தார் சுமதி முன்னிலையில் போலீசார் தோண்டியினர். அப்போது விஜயின் எலும்புக்கூடுகள் கிடைத்தது. அதனை பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரேஷ் கவுத்திடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? யாரேனும் உதவினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கொலை நடந்த 5 மாதத்துக்கு பின்னர் செல்போனால் குற்றவாளி சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    திண்டுக்கல் சிறையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்ட சிறை தாலுகா அலுவலக சாலையில் அமைந்துள்ளது. இதில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கைதிகளுக்கு செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் சோதனை பிரிவு குழுவினர் திண்டுக்கல் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 4 கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மற்றொரு கைதியிடம் சுமார் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உதவி சிறை அலுவலர் ராஜசேகர் அஜாக்கிரதையாக இருந்ததால் அவரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் கைதிகளையும் எச்சரித்தனர்.

    வேலூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன், திண்டுக்கல் சிறை துணை அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் சிறையில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் விதி மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் கைதிகள் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்கள் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    ×