search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப்ஜி"

    காரம் அதிகம் விரும்புபவர்களுக்கு இந்த மிளகாய் சப்ஜி பிடிக்கும். மேலும் சப்பாத்தி, நாண், தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
    தேவையான பொருட்கள்

    பச்சை மிளகாய் - 10
    வெங்காயம் - 10
    புளி - நெல்லிக்காய் அளவு

    வறுத்து அரைக்க

    வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
    எள்ளு - ஒரு தேக்கரண்டி
    கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 5

    செய்முறை

    வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும்.

    வெங்காயம், மிளகாயை (விதையை நீக்கிவிட்டு) பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

    மிளகாய் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு புளித் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்..

    கலவை கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

    சுவையான மிளகாய் சப்ஜி தயார்.

    இதையும் படிக்கலாம்...பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட்
    நாண், பரோட்டா, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த பைங்கன் பர்த்தா பஞ்சாபி சப்ஜி அருமையாக இருக்கும் இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பெரிய கத்தரிக்காய் - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    சீரகம் - தாளிக்க
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    காய்ந்த வெந்தயக்கீரை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கத்தரிக்காயில் நிறைய எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு எடுத்து தோலுரித்து கொள்ளுங்கள்.

    தோலுரித்த கத்தரிக்காயை லேசாக மசித்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் துருவிய இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, சேர்த்து சுருள வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து கொள்ளுங்கள்.

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

    கெட்டியாக வந்ததும் இறக்கி விடலாம்.

    தனியாக ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கரம் மசாலா பொடி சேர்த்து சப்ஜியின் மேலே கொட்டி கொள்ளுங்கள்.

    காய்ந்த வெந்தயக்கீரை நன்றாக கசக்கி அதன் மேல் தூவி சப்பாத்திக்கு சைடிஷ்ஷாக பரிமாறலாம்.

    நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் - பன்னீர் சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு
    வேகவைத்த பச்சைப்பட்டாணி - 1 கப்
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
    பன்னீர் - 100 கிராம்
    வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    வெங்காயம், தக்காளி பெரியது - தலா 1
    முழு முந்திரிப்பருப்பு - 6
    கரம் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    சீரகம், எண்ணெய், வெண்ணெய் - தாளிக்க



    செய்முறை :

    முந்திரியை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

    பாலக்கீரையை சூடு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்த பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    பன்னீரையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், வெண்ணெய் போட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் பொடித்த சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த் தூள், வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த முந்திரி விழுது, பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பன்னீரை சேர்த்து கொதி வந்ததும் இறக்கி விடவும்.

    சூப்பரான பாலக் - பன்னீர் சப்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    பன்னீர் குடைமிளகாய் சப்ஜி ரெசிபியை வீட்டிலேயே எளிதாக விரைவிலேயே செய்ய முடியும். சப்ஜி கிரேவியுடன் அல்லது கிரேவி இல்லாமலும் செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - 1
    வெங்காயம் - 1
    தக்காளி - 3
    தண்ணீர் - 11/2 கப்
    பூண்டு (தோலுரித்து) - 4 பல்
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    பன்னீர் துண்டுகள் - 1 கப்
    கஸ்தூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :


    குடைமிளகாயை 2 அங்குலம் அளவிற்கு நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

    பெரிய வெங்காயத்தை நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பிரஷ்ஷர் குக்கரில் தக்காளியை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வேக விடவும்.

    வேக வைத்த தக்காளியை ஆறவைத்து தோல் நீக்கி மிக்சியில் போட்டு அதனுடன் பூண்டையும் சேர்த்து நன்றாக வழுவழுவென அரைத்து கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் உப்பு, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    இப்பொழுது பன்னீர் துண்டுகளை சேர்க்க வேண்டும்.

    அடுத்து கஸ்தூரி மெத்தி சேர்த்து நன்றாக கிளறி மூடி போட்டு 5 நிமிடம் வரை வேக விடவும்.

    கடைசியாக அதன் மேல் கஸ்தூரி மெத்தியை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான பன்னீர் குடைமிளகாய் சப்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து சப்ஜி செய்தால் அருமையாக இருக்கும். இந்த சப்ஜி சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    பன்னீர் - 200 கிராம்
    தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
    வெங்காயம் - 2
    சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    தக்காளி - 3
    ஏலக்காய் - 3
    சீரகம் - அரை தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கொத்தமல்லித்தழை - சிறிது
    கரம்மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    பன்னீரை சிறுத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சை மிளகாயை கீறி வைக்கவேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட்டு பன்னீர், உருளைக்கிழங்கு, உப்பு, அரை கப் தண்ணீர் சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவேண்டும்.

    உருளைக்கிழங்கு வெந்ததும் கரம்மசாலா தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

    சுவையான ஆலு பன்னீர் சப்ஜி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், புலாவ், தோசை, சாதம், பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    காலிஃபிளவர் - 1 பூ
    பட்டாணி - 1/4 கிலோ
    தக்காளி - 1/4 கிலோ
    கடுகு - தேவையான அளவு

    பொடி செய்ய தேவையான பொருட்கள்:

    கடலை பருப்பு - 100 கிராம்
    உளுந்தம் பருப்பு - 100 கிராம்
    தனியா (மல்லி) - 150 கிராம்
    சீரகம் - 150 கிராம்
    வர மிளகாய் - தேவையான அளவு
    பட்டை - 25 கிராம்
    இலவங்கம் (கிராம்பு) - 25 கிராம்
    ஏலக்காய் - சிறிதளவு



    செய்முறை :

    பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    காலிஃபிளவர் பூவை சுடுதண்ணீரில் கழுவி எடுத்த பின்னர் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    தக்காளியையும் பொடியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு தாளித்த பின்னர் காலிஃபிளவர், தக்காளி மற்றும் பச்சை பட்டாணி போட்டு வதக்க வேண்டும்.

    பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

    காய்கள் வெந்தவுடன் பொடியாக்கப்பட்ட பொருட்களை போட்டு இளம் சூட்டில் சிறிது நேரம் கிளறி விட்டால் மண மணக்கும் கர்நாடகா வெஜிடபிள் சப்ஜி ரெடி.

    இந்த சப்ஜியை சப்பாத்தி, பூரி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த வெண்டைக்காய் சப்ஜி தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்டைக்காய் - கால் கிலோ,
    பெரிய வெங்காயம் - 4,
    தக்காளி - 2,
    பூண்டு - 4 அல்லது 5 பல்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    சமையல் எண்ணெய் - 4 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெண்டைக்காய் சிறியதாக இருந்தால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.

    மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வாசனை போகும் வரை சுருள வதக்கிக் கொள்ளவும்.

    பிறகு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்.

    அதில், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த கிரேவி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சூப்பரான வெண்டைக்காய் சப்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ராஜ்மா சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 100 கிராம்,
    வெங்காயம் - 2,
    தக்காளி - 2,
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    பட்டை - 2 துண்டு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை தனித்தனியா விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை போட்ட தாளித்த பின்னர் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    வெங்காய விழுது நன்றாக வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    மசாலா பொருட்கள் பச்சை வாசனை போனவுடன் ஊறிய ராஜ்மாவை சேர்த்து 7 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

    சூப்பரான ராஜ்மா சப்ஜி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×