search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96693"

    இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபாளோவர்களை நீக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram



    இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இரண்டு அம்சம்ங்களை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய இரண்டடுக்கு ஆத்தென்டிகேஷன் மற்றும் பொது அக்கவுன்ட்கள் அவர்களின் ஃபாளோவர்களை நீக்கும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.

    நீண்ட காலமாக பிரைவேட் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பப்ளிக் அக்கவுன்ட் பயன்படுத்துவோருக்கு இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.



    புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது, எனினும் இதன் முழுமையான வெளியீடு குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. மேலும் ஃபாளோவர்களை நீக்கும் போது அவர்களுக்கு எவ்வித நோட்டிஃபிகேஷனும் அனுப்பப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    முன்னதாக மே மாதத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு ஒருவரை பின்தொடரும் போது அவர்களது போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை முழுமையாக தவிர்க்க முடியும். புதிய அம்சம் மூலம் இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்வோரை முழுமையாக இயக்க முடியும்.

    இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை தெரிந்து கொள்ள, உங்களது ஃபாளோவர்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்தால், குறிப்பிட்ட நபரை நீக்குவதற்கான அம்சம் இடம்பெற்றிருக்கும். #instagram #Apps
    90-ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த மெசன்ஜர் செயலி 20 ஆண்டுகளுக்கு பின் மூடுவிழா கண்டது. இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #YahooMessenger



    தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற மெசன்ஜர் சேவைகள் இன்று புகழின் உச்சியில் இருக்கும் நிலையில், 90-ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்த யாஹூ மெசன்ஜர் 20 ஆண்டு சேவையை நிறுத்தியது.

    இன்றைய மெசன்ஜர் செயலிகளுக்கு சீனியராக இருக்கும் யாஹூ மெசன்ஜர் ஆப் பயனர்கள் தங்களது சாட் ஹிஸ்ட்ரியை டவுன்லோடு செய்ய ஆறுமாத கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. வெரிசான் எனும் டெலிகாம் குழுமத்தின் அங்கமாக இருக்கும் ஓத் நிறுவனம் யாஹூவை நிர்வகிக்கிறது.



    யாஹூ மெசன்ஜருக்கு மாற்றாக அந்நிறுவனம் ஸ்கூரில் (Squirrel) எனும் செயலியை உருவாக்கி வருகிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளின் வரவுக்கு பின் யாஹூ மெசன்ஜர் பயன்பாடு குறைய ஆரம்பித்தது. 

    மார்ச் 9, 1998-ம் ஆண்டு யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவை 1999-ம் ஆண்டு யாஹூ மெசன்ஜர் என பெயர் மாற்றப்பட்டது. யாஹூ மெசன்ஜர் சேவையை 12.26 கோடி பேர் பயன்படுத்தினர். சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ட்விட்டரில் யாஹூ மெசன்ஜர் நினைவலைகளில் 90-ஸ் கிட்ஸ் மூழ்கினர்.
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் குறுந்தகவல்களை நோட்டிஃபிகேஷன் சென்டரிலேயே மியூட் செய்யும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் அந்நிறுவனம் புதிய அம்சத்தை சோதனை செய்வது சில தினங்களுக்கு முன் தெரியவந்த நிலையில், இந்த அம்சம் பீட்டா செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியின் நோட்டிஃபிகேஷன் சென்டரில் மார்க் ஆஸ் ரீட் (mark as read) என்ற ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு மெசேஜ் வரும் போது, நோட்டிஃபிகேஷன் சென்டரில் இருந்த படியே அதனை நீங்கள் படித்ததாக மார்க் செய்ய முடியும்.

    முன்னதாக குறுந்தகவல்கள் வரும் போது நோட்டிஃபிகேஷன் சென்டரில் ரிப்ளை (Reply) ஆப்ஷன் மட்டுமே காணப்பட்டது, பீட்டா அல்லத பயனர்களுக்கு தற்சமயம் வரை இவ்வாறே காணப்படுகிறது. வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.216 பதிப்பில் இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டும் தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.214 பதிப்பில் காணப்பட்டது.



    நோட்டிஃபிகேஷன் சென்டரில் ஒரே சாட்-இல் இருந்து அதிகபட்சம் 51-க்கும் அதிகமான குறுந்தகவல்களை நேரடியாக மியூட் செய்ய முடியும். இந்த அப்டேட் மார்க் ஆஸ் ரீட் அம்சத்தை நோட்டிஃபிகேஷன் சென்டரில் இதுவரை வழங்கவில்லை.

    இத்துடன் 2.18.218 பதிப்பில் ஸ்டிக்கர் பிரீவியூ எனும் அம்சம் ஸ்டோர் மற்றும் அப்டேட் பட்டனில் காணப்படுகிறது. எனினும் ஸ்டிக்கர்கள் உருவாக்கப்படுவதால், இன்னும் வழங்கப்படவில்லை. #WhatsApp #Apps

    புகைப்படம்: நன்றி WABetaInfo
    மொபைல் போன் பயன்படுத்துவோரை அதிகம் பாதிக்கும் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்கச் செய்யும் கூகுள் ஆப் அம்சம் அறிமுகமாகியுள்ளது. #Google #phone



    மொபைல் போன் பயன்படுத்துவோரை கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பாதிக்கும் விஷயமாக தேவையற்ற மற்றும் விளம்பர அழைப்புகள் (ஸ்பேம்) இருக்கின்றன. இவற்றை தவிர்க்க பல்வேறு மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கும் நிலையில், இவை அத்தகைய சிறப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டை பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர்.

    ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க செய்ய கூகுள் புதிய அம்சத்தை வழங்குகிறது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் கூகுள் போன் ஆப் பீட்டா பதிப்பில் ஸ்பேம் அழைப்புகளை கண்டறியும் அம்சம் சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் போன் ஆப் சப்போர்ட் பக்கத்தில் பயனர்கள் ஸ்பேம் அழைப்புகளை தவிர்க்க செய்யும் மாற்றங்களை அப்டேட் செய்திருக்கிறது.

    காலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் என அழைக்கப்படும் இந்த அம்சம் தானாகவே ஸ்பேம் அழைப்புகளை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போன் ஆப் தானாகவே ஸ்பேம் அழைப்புகளை வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பிவிடும்.



    “கூகுள் போன் செயலியில் காலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடெக்ஷன் ஆன் செய்யப்பட்டு இருந்தால், உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களின் விவரங்களை பார்க்க முடியும். இதில் அழைப்புகளை மேற்கொள்வோர் உங்களது கான்டாக்ட் இல் இல்லாத வியாபார மையங்கள் மற்றும் ஸ்பேம் அழைப்புகள் குறித்து எச்சரிக்கை செய்யும்” என கூகுள் சப்போர்ட் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த அம்சத்தை ஆனஅ செய்ய செட்டிங்ஸ் சென்று Caller ID & spam ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். ஒருவேளை ஸ்பேம் அழைப்புகளால் உங்களது போன் ரிங் ஆக வேண்டம் எனில் Filter suspected spam calls ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அம்சத்தை தேர்வு செய்வது ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.

    மொபைலுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை தற்சமயம் போன் ஆப் சிவப்பு நிற ஸ்கிரீன் மூலம் எச்சரிக்கை செய்கிறது. புதிய அம்சம் எந்தளவு சிறப்பானதாக இருக்கும் என்றும் இது எவ்வாறு இயங்கும் என்பது குறித்த விவரங்கள் அறியப்படவில்லை. #Google #phone #Apps
    வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக இந்தியாவில் உருவான கிம்போ ஆப் 24 மணி நேரத்தில் நீக்கப்பட்ட நிலையில், புதிய பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. #BOLO



    பதாஞ்சலியின் இந்தியாவில் உருவாக்கப்பட்ட குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப்-க்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது. கிம்போ என்ற பெயரில் வெளியிடப்பட்ட செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில், செயலி வெளியான 24 மணி நேரத்தில் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

    இந்தியாவில் மே 28-ம் தேதி முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட கிம்போ ஆப் மேம்படுத்தப்பட்டு போலோ மெசன்ஜர் ஆப் என்ற பெயரில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 13-ம் தேதி கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி வெளியாகியிருக்கிறது.

    கிம்போ செயலிக்கு எதிர்பார்த்ததை விட அதிகளவு வரவேற்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து சர்வெர் பற்றாகுறை காரணமாக செயலி நீக்கப்படுவதாக பதாஞ்சலி செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். எனினும் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை டெவலப்பர்கள் ஏற்றுக் கொண்டு, கிம்போ செயலி பிழைகளை சரி செய்து மீண்டும் வெளியிடுவதாக பதாஞ்சலி அறிவித்திருந்தது.



    வாட்ஸ்அப் ஐகான் போன்றே காட்சியளிக்கும் கிம்போ ஆப் ஐகான் புதிய செயலியில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் கிம்போ ஆப் மீண்டும் புதிய பெயரில் வெளியிடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டர் பதிவுகளில் இந்த செயலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான போலோ ஆப்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய போலோ ஆப் பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்க செயலியின் டெவலப்பரான அதித்தி கமல் ட்விட்டரில் ஆராய்ச்சியளர் எலியட் ஆல்டெர்சனுக்கு செயலியை ஹேக் செய்யுமாறு சவால் விடுத்திருந்தார். சவாலை ஏற்றுக் கொண்ட ஆராய்ச்சியாளர் எலியட் சில மணி நேரங்களில் செயலியில் உள்ள பிழைகளை கண்டறிந்து, தெரிவித்திருக்கிறார். #BOLO #Apps
    இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான் அம்சம் ஒருவழியாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram



    இன்ஸ்டாகிராம் சேவையை உலகம் முழுக்க சுமார் 80 கோடி பயனர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய சமூக வலைத்தளமாக இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 270 கோடி பயனர்களுடன் ஃபேஸ்புக் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

    சீரான இடைவெளியில் புதுப்புது அம்சங்களை வழங்கி வரும் இன்ஸ்டாகிராம் சமீபத்தில் ஸ்டிக்கர் மூலம் கேள்விகளை ஸ்டோரியில் கேட்கும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய அப்டேட் இல் அந்நிறுவனம் அடாப்டிவ் ஐகான் அம்சத்தை சேர்த்து இருக்கிறது. 

    இத்துடன் இன்ஸ்டா அக்கவுன்ட்களை மிக எளிமையாக வெரிஃபை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் வெரிஃபிகேஷன் செய்வதற்கான விண்ணப்பம் செயலியிலேயே வழங்கி இருக்கிறது.

    ஆல்ஃபா ஆன்ட்ராய்டு அப்டேட் 55.0.0.0.33 மூலம் இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உங்களது சாதனம் வழங்கும் சப்போர்ட்-க்கு ஏற்ப ஐகான் வடிவம் மாறும். முன்னதாக இன்ஸ்டாகிராம் ஐகான் சாதனம் எவ்வித சப்போர்ட் வழங்கினாலும் சதுரங்க வடிவிலேயே இருந்தது. தற்சமயம் அடாப்டிவ் ஐகான் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்ப இன்ஸ்டா ஐகான் வடிவம் மாறும்.



    அனைத்து சாதனங்களிலும் புதிய அப்டேட் கிடைக்க சில காலம் ஆகும், எனினும் பயனர்கள் ஏ.பி.கே. மிரர் (APK Mirror) மூலம் முன்கூட்டியே டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பொது மக்களும் வெரிஃபிகேஷன் பேட்ஜ் பெற விண்ணப்பிக்க எளிமையான வழிமுறையை இன்ஸ்டாகிராம் உருவாக்கி வருவாதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய அம்சம் உருவாக்கப்படுவதை இன்ஸ்டாகிராம் உறுதி செய்திருப்பதாகவும், "இந்த அம்சம் மூலம் இன்ஸ்டா வாசிகள் தங்களுக்கான வெரிஃபிகேஷனை அவர்களாகவே விண்ணப்பிக்க முடியும் என்றும், இன்ஸ்டாவில் வெரிஃபைடு பெறும் வழிமுறையை புரிந்து கொள்ள முடியும். பொது மக்களுக்கு வெரிஃபிகேஷன் வழங்குவதன் மூலம் இன்ஸ்டாவாசிகளை பாதுகாக்க முடியும்." என இன்ஸ்டா செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது

    இன்ஸ்டாகிராம் செட்டிங்ஸ் ஆப்ஷனில் வெரிஃபிகேஷன் பெற விண்ணப்பிக்கும் படிவம் சேர்க்கப்படுவதாகவும், இந்த படிவம் ஆஸ்திரேலியாவில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கும், மேலும் சில பெயர் தெரிவிக்கப்படாத நாடுகளில் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அம்சம் வரும் வாரங்களில் மற்ற பகுதிகளில் உள்ள ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #instagram #InstaStories

    புகைப்படம்: நன்றி Android Police
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் வழங்க புதிய அம்சம் உருவாக்கப்படுவது இணையத்தில் லீக் ஆகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீடடா செயலியில் அந்நிறுவனம் புதிய அம்சத்தை சோதனை செய்வது தெரியவந்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியின் நோட்டிஃபிகேஷன் சென்டரில் மார்க் ஆஸ் ரீட் (mark as read) என்ற ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது.

    தற்சமயம் உருவாக்கப்படும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு மெசேஜ் வரும் போது, நோட்டிஃபிகேஷன் சென்டரில் அதற்கு பதில் அளிக்க கோரும் ரிப்ளை (Reply) ஆப்ஷன் மட்டுமே தற்சமயம் காணப்படுகிறது. 



    புதிய அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் உங்களுக்கு வரும் வாட்ஸ்அப் மெசேஜ் நோட்டிஃபிகேஷன்களில் ரிப்ளை ஆப்ஷனுடன் மார்க் ஆஸ் ரீட் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு குறுந்தகவலை நோட்டிஃபிகேஷன் சென்டரிலேயே படித்ததாக மார்க் செய்ய முடியும்.

    இதுவரை இந்த அம்சம் வழங்கப்படாத நிலையில், நோட்டிஃபிகேஷன் சென்டரில் புதிய மியூட் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதை கொண்டு நோட்டிஃபிகேஷன் சென்டரில் இருந்தபடியே சாட்களை மியூட் செய்ய முடியும். எனினும் புதிய ஆப்ஷன்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும், படமும் இல்லை.  #WhatsApp #Apps

    புகைப்படம்: நன்றி WABetaInfo
    ஃபேஸ்புக் மெசன்ஜரில் பயனர்களுக்கு வரும் மெசேஜ் போலி கணக்கில் இருந்து அனுப்பப்பட்டதா என்பதை தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #Facebook
     


    ஃபேஸ்புக்-இன் மெசன்ஜர் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பதை தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செயய்ப்படுவது தெரியவந்துள்ளது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய அம்சம் ஃபேஸ்புக் மெசன்ஜர் இன்பாக்ஸ்-இல் வரும் குறுந்தகவல்களில் அறிமுகமில்லாத கான்டாக்ட், சமீபத்தில் உருவாக்கப்பட்ட அக்கவுன்ட், ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறாரா அல்லது போன் நம்பர் மூலம் மெசன்ஜரை பயன்படுத்துகிறாரா, வசிக்கும் நாடு அல்லது பகுதி என்பது போன்ற கூடுதல் தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த அம்சம் மூலம் பயனர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு உடனடியாக பதில் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வழி செய்கிறது. இதுகுறித்து மதர்போர்டு சார்பில் வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்ட குறுந்தகவலை அனுப்பியவர் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருக்கவில்லை என்ற தகவலை வெளிப்படுத்தி இருந்தது.

    இத்துடன் கூடுதல் விவரங்களில் குறுந்தகவலை அனுப்பியவர் மெசன்ஜர் செயலியை தனது மொபைல் எண் ரஷ்யாவில் இருந்து உருவாக்கியிருப்பதாகவும், இந்த அக்கவுன்ட் சமீபத்தில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.

    தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாகவும், ஆள்மாறாட்டத்தை எதிர்த்து ஃபேஸ்புக் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.  #Facebook #socialmedia
    ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் சாதனத்தில் ஃபேஸ்புக் செயலியை தொடர்ந்து கூகுள் மேப்ஸ் செயலி புதிய அப்டேட் மூலம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. #jiophone #GoogleMaps



    ஜியோபோனில் ஃபேஸ்புக் செயலி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் யூடியூப், வாட்ஸ்அப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் செயலிகள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

    ஆகஸ்டு 15-ம் தேதி முதல் இந்த செயலிகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய மென்பொருள் அப்டேட் மூலம் கூகுள் மேப்ஸ் செயலி ஜியோபோனில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலி கை ஓ.எஸ். தளத்துக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    ஜியோபோன் பயனர்களுக்கு சீரான அனுபவத்தை வழங்கும் நோக்கில் செயலி உருவாக்கப்படுகின்றன. ஜியோபோன் 2 மாடல் வெளியாகும் போதே இந்த செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோபோனினை அப்டேட் செய்ததும், ஜியோஸ்டோர் சென்று கூகுள் மேப்ஸ் செயலியை ஹோம் பேஜில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். 



    முதற்கட்டமாக கூகுள் மேப்ஸ் செயலியில் அடிப்படை அம்சங்களை பயன்படுத்த முடியும். அந்த வகையில் பயனர் தங்களுக்கு தெரியாத இடங்களுக்கு மேப் மூலம் சென்றடைய முடியும். இத்துடன் பைக் ரூட் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். 

    கூகுள் மேப்ஸ் தகவல்களை லேயர்கள் அல்லது பிரத்யேக மேப் வியூக்கள் மூலம் பார்க்க முடியும். குறிப்பிட்ட இடங்களை தேடவோ அல்லது நீங்கள் இருக்குமிடத்தை மேப்-இல் பார்க்க முடியும்.

    கை ஓ.எஸ். இயங்குதளத்துக்கான கூகுள் மேப்ஸ் செயலி வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், நோக்கியா 8110 4ஜி மொபைலிலும் இந்த செயலி விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இன்டராக்டிவ் ஸ்டிக்கர் சேர்க்கும் புதிய வசதி ஸ்டோரிக்களில் அறிமுகம் செய்துள்ளது.



    இன்ஸ்டாகிராம் செயலியில் கேள்விகளை புதுவிதமாக ஸ்டிக்கர் வடிவில் கேட்கச் செய்யும் அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு இன்ஸ்டா ஸ்டோரிக்களில் ஸ்டிக்கர் வடிவில் கேள்விகளை கேட்க முடியும்.

    புதிய அம்சம் கொண்டு இன்ஸ்டா வாசிகள் தங்களை பின்தொடர்வோரிடம் மிக எளிமையாக உரையாட முடியும். முன்னதாக மே மாதத்தில் இன்டராக்டிவ் எமோஜி ஸ்லைடரை ஸ்டிக்கரில் கருத்து கணிப்பு வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

    இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டோ அல்லது வீடியோவை எடுத்ததும் ஸ்டிக்கரில் உங்களது கேள்வியை சேர்க்க வேண்டும். இனி கேள்வியை புகைப்படம் அல்லது வீடியோவின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். 

    அடுத்து உங்களை பின்தொடர்வோர், நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்கள் உங்களது ஸ்டோரியை பார்த்து அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். ஒரு கேள்விக்கு அவர்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் பதில் அனுப்ப முடியும். 



    பின்தொடர்வோர் உங்களுக்கு அனுப்பும் பதில்களை ஸ்டோரி வியூவரில் பார்க்க முடியும். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அனுப்ப, குறிப்பிட்ட கேள்வியை க்ளிக் செய்ய வேண்டும். பதில் அனுப்பும் பட்சத்தில் உங்களது பதில் ஸ்டோரி பகுதியில் இடம்பெறும். 

    உங்களின் பதில்களை கேள்வி கேட்டிருப்போரின் வியூவர் பட்டியலில் அனுப்ப முடியும் என்றாலும், இதனை ஸ்டோரியில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஸ்டோரியில் பகிர்ந்து கொள்ளப்படும் போது உங்களது நண்பரின் புகைப்படம் மற்றும் யூசர்நேம் தெரியாது.

    இன்ஸ்டாகிராம் புதிய அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது செயலியை அப்டேட் செய்து புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்.
    வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அப்டேட் மெசேஜ் ஃபார்வேர்டு செய்யப்படுவதை சுட்டிக்காண்பிக்கிறது. இதனால் உங்களுக்கு வரும் குறுந்தகவல்கள் உண்மையாக டைப் செய்யப்படுகின்றதா அல்லது மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

    கடந்த மாதம் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் காணப்பட்ட இந்த அம்சம் உங்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் வரும் ஃபார்வேர்டு செய்யப்பட்ட மெசேஜ்களில் ஃபார்வேர்டெட் (forwarded) என்ற குறியீடு இடம்பெறும். தற்சமயம் இந்த அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது.



    புதிய அம்சம் மூலம் செயலியில் பரப்பப்படும் போலி செய்திகளை குறைக்க இது காரணமாக இருக்கும். கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் சஸ்பீஷியஸ் லின்க் டிடெக்ஷன் (suspicious link detection) அம்சம் சோதனை செய்யப்படுவது தெரியவந்தது.

    இந்த அம்சம் மூலம் வாட்ஸ்அப்-இல் பரப்பப்படும் இணைய முகவரிகள் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும். இதை கொண்டு போலி தளங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் வலைதளங்களை பயனர்கள் மிக எளிமையாக கண்டறிந்து கொள்ள முடியும்.

    புதிய ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சத்தை பெற உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். #WhatsApp
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

    வாட்ஸ்அப் சோதனை செய்யும் புதிய அம்சம் அதன் பயனர்களை போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை செய்யும். வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிகம் பரப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யும்.

    மேலும் வாட்ஸ்அப்-இல் அனுப்பப்படும் குறுந்தகவல்களில் வலைத்தள முகவரி கொண்டு வலைத்தளம் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சஸ்பீஷியஸ் லின்க் (Suspicious Link) என அழைக்கப்படுகிறது.



    சஸ்பீஷியஸ் லின்க் அம்சம் எப்படி உதவும்?

    இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப்-இல் மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் வலைத்தள முகவரியை வாட்ஸ்அப் பின்னணியில் சோதனை செய்யும். சோதனையில் ஏதேனும் கோளாறு இருக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயனருக்கு எச்சரிக்கை செய்யும். “வாட்ஸ்அப் ஏதேனும் போலி வலைத்தள லின்க்-களை கண்டறிந்தால், குறிப்பிட்ட குறுந்தகவல் சிவப்பு நிறத்தில் குறியிடப்படும்,” என WaBetaInfo தெரிவித்து இருக்கிறது.

    சிவப்பு நிற குறியீடு கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட வலைத்தளம் போலியானதா, அதில் இருந்து மற்ற போலி வலைத்தளங்களுக்கு ரீடைரக்ட் செய்யப்படும் என்பதை பயனர்கள் புரிந்து கொள்ள முடியும். சில சமயங்களில் மூன்றாம் தரப்பு லின்க்-களும் மால்வேர் நிறைந்த வலைத்தளத்துக்கான முகவரியை (லின்க்) அனுப்பலாம்.

    வாட்ஸ்அப் பீட்டா 2.18.204 வெர்ஷனில் காணப்பட்டு இருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் போலி செய்திகளை முடக்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வந்தது குறி்ப்பிடத்தக்கது.



    இதுவரை போலி செய்திகளை முடக்க வாட்ஸ்அப் மேற்கொண்ட நடவடிக்கைகள்:

    - வாட்ஸ்அப் செயலியில் பயனர்களை பிளாக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனருக்கு அறிமுகம் இல்லாதவர்களை வாட்ஸ்அப்-இல் பிளாக் செய்ய முடியும்.

    - க்ரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் க்ரூப்களில் சேர்க்கச் செய்யும் வசதி முடக்கப்பட்டுள்ளது.

    - குறிப்பிட்ட க்ரூப்களில் யார் யார் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்களே முடிவு செய்ய முடியும்.

    - க்ரூப் அட்மின்களை டீமோட் (Demote) செய்யும் வசதி. இந்த வசதியை கொண்டு ஏற்கனவே க்ரூப் அட்மினாக இருக்கும் ஒருவரை க்ரூப் உறுப்பினராக மாற்ற முடியும்.

    - ஃபார்வேர்டெட் (Forwarded) லேபல் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

    புகைப்படம்: நன்றி WABetaInfo
    ×