search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96694"

    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து சுமார் 200 செயலிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து சுமார் 200 செயலிகள் அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேட்டா மற்றும் தினியுரிமை விதிகளை மீறியதால் இந்த செயலிகள் நீக்கப்படுவதாக ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செயலிகள் அதிகளவு டேட்டாவை பயன்படுத்துவதை தவிர்க்க செய்யும் நோக்கில் 2014-ம் ஆண்டு விதிமுறைகளை மாற்றுவதற்கு முன் அதிகளவு டேட்டாவை இயக்க அனுமதி வைத்திருந்த செயலிகளை ஃபேஸ்புக் ஆய்வு செய்தது. ஏற்கனவே ஃபேஸ்புக் அறிவித்த படி ஆய்வுக்கு அனுமதியளிக்காத செயலிகள் ஃபேஸ்புக்கில் இருந்து முடக்கப்படும். 

    ஃபேஸ்புக்கில் இருக்கும் செயலிகள் தற்சமயம் இருவிதங்களில் ஆய்வு செய்யப்படுகின்றன. ஒன்று அதிகளவு டேட்டா பயன்படுத்துபவை மற்றொன்று பிரச்சனைகள் இருப்பதாக தெரிந்தால், நேர்முக தேர்வு முறை அல்லது ஆன்-சைட் ஆய்வுகளின் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

    செயலிகளை ஆய்வு செய்ய பிரத்யேக குழு நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை சுமார் 1000-க்கும் அதிகமான செயலிகள் ஆய்வு செய்யப்பட்டு 200 செயலிகள் இதுவரை நீக்கப்பட்டு இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களை தவறாக பயன்படுத்தும் செயலிகள் நீக்கப்பட்டு, இதுகுறித்த தகவல் பயனர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2015-ம் ஆண்டுக்கு முன் பயனர்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் செயலிகள் டேட்டாக்களை தவறாக பயன்படுத்தி இருப்பந்தால் பயனர்களுக்கு தெரிவிக்கப்படும். தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவதாகவும், இதுகுறித்த அப்டேட் தொடர்ந்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவத்தை வழங்குகிறது.
    புதுடெல்லி:

    கூகுள் I/O 2018 நிகழ்வில் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் விவரிக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய அம்சங்கள் புதிய அப்டேட் மூலம் செயலியில் சேர்க்கப்பட இருக்கின்றன. 

    அந்த வகையில் கூகுள் மேப்ஸ் செயலியில் விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் எனும் உதவியோடு இயங்கும் சுவாரஸ்ய அம்சம் விவரிக்கப்பட்டது. விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் உங்களது ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கூகுள் மேப்ஸ் செயலியில் இணைந்து நீங்கள் முகவரி தெரியாத இடங்களில் பயணிக்கும் போது துல்லியமாக வழிகாட்டும்.



    இத்துடன் கூகுள் மேப்ஸ் இன்டர்ஃபேஸ் கேமராவுடன் இணைந்து வேலை செய்யும் படி உருவாக்கப்படுகிறது. இதனால் திசை தெரியாத இடங்களில் கேமராவை காண்பித்தால் அம்பு குறி மூலம் நீங்கள் செல்ல வேண்டிய திசையை உங்களுக்கு காண்பிக்கும். 

    இந்த அம்சம் நீங்கள் செல்லும் தெருக்களில் உள்ள கடைகளின் விளம்பர பலகைகளை கேமரா மூலம் அறிந்து கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய வழியை காண்பிக்கும். இத்துடன் அனிமேஷன் பொம்மைகளையும் மேப்ஸ் செயலியில் சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூகுள் அதிகாரி தெரிவித்துள்ளார். 



    இந்த பொம்மை நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். வழக்கமாக நீல நிற அம்பு குறி உங்களுக்கு இதுவரை வழிகாட்டிய நிலையில், இனி கம்ப்யூட்டரில் உருவான வித்தியாசமான பொம்மைகள் வழிகாட்டும். இது புதுவித அனுபவத்தை வழங்குவதோடு முகவரி தெரியாத இடங்களில் டிஜிட்டல் துணையாக விளங்கும். 

    இதுமட்டுமின்றி கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. இவை மேப்ஸ் பயன்பாட்டை முற்றிலும் மாற்றுவதோடு, புதிய அனுபவத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் மேப்ஸ் சேவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சங்கள் வரும் மாதங்களில் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டு இதற்கான அப்டேட்கள் வெளியிடப்படுகின்றன.
    புதுடெல்லி:

    கூகுள் I/O 2018 நிகழ்வில் பொது மக்கள் தொழில்நுட்பத்துடன் அளவுக்கு அதிகமாக ஒன்றிவிடுவதை தவிர்க்க செய்யும் வெல்பீயிங் எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுளின் வீடியோ ஸ்ட்ரீமிங் வலைத்தளமான யூடியூப் இந்த திட்டத்தின் கீழ் வருகிறது. 

    அந்த வகையில் யூடியூப் செயலியை பயன்படுத்துவோர் முன்கூட்டியே இடைவெளி காலத்தை நிர்ணயித்து யூடியூபிடம் தெரிவிக்கலாம். இதன் மூலம் நீண்ட நேரம் யூடியூப் பயன்படுத்தும் போது குறிப்பிட்ட கால அளவில் இடைவெளி எடுக்க முடியும். யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் டேக் எ பிரேக் (Take a Break) அம்சம் இந்த வசதியை வழங்குகிறது.

    ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் யூடியூப் செயலியை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு இதற்கான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் யூடியூப் செட்டிங்ஸ் ஆப்ஷனில் இடைவெளி காலத்தை ஒவ்வொரு 15, 30, 60, 90 அல்லது 180 நிமிடங்களுக்கு தேர்வு செய்ய முடியும். வாடிக்கையாளர் இந்த கால அளவை தேர்வு செய்ததும், குறிப்பிட்ட நேரத்தில் யூடியூப் வீடியோ தானாக பாஸ் (Pause) ஆகி விடும். 



    இனி வாடிக்கையாளர்கள் விரும்பினால் இடைவெளி எடுக்கவோ அல்லது தொடர்ந்து வீடியோக்களை பார்க்கவோ முடியும். விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் கிடைக்கும் இந்த ஆப்ஷனை ஸ்விட்ச் ஆஃப் செய்யவும் முடியும். இத்துடன் இரண்டு புதிய அம்சங்கள் யூடியூப் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் டிசேபிள் சவுன்ட்ஸ் & வைப்ரேஷன்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை தேர்வு செய்ததும் வாடிக்கையாளர் விரும்பும் நேரத்திற்கு யூடியூப் ஆன்ட்ராய்டு செயலியில் இருந்து நோட்டிஃபிகேஷன்கள் எதுவும் வராது. ஷெட்யூல்டு டைஜஸ்ட் எனும் மற்றொரு அம்சம் வாடிக்கையாளர்கள் விரும்பும் நேரத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் அனுப்பும்.

    ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான யூடியூப் (13.17.55) பதிப்பில் டேக் எ பிரேக் அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சத்தை யூடியூப் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- டேக் எ பிரேக் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். இதேபோன்று நோட்டிஃபிகேஷன் அம்சம் செட்டிங்ஸ் -- நோட்டிஃபிகேஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம்.

    புதிய அப்டேட் கொண்டிருக்கும் அம்சங்கள் அனைத்தும் புதியவை, இவை வாடிக்கையாளர்கள் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகாமல் இருக்க உதவுகிறது. ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தில் கூகுளின் டிஜிட்டல் வெல்பீயிங் திட்டம் சார்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.
    ×