search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி"

    ஒப்போவின் துணை பிராண்டான ரியல்மி இந்தியாவில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. #Relame #smartphone



    ஒப்போவின் துணை பிராண்டான ரியல்மி இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதத்தில் ரியல்மி 1 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. 

    இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து பிரபலமாகி வரும் ரியல்மி இந்தியாவில் ஏழே மாதங்களில் 40 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ரியல்மியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. 



    ரியல்மி பிராண்டு இந்தியாவில் 2018 தீபாவளி கால பண்டிகை விற்பனையில் மூன்றாவது இடம் பிடித்ததாக கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. ரியல்மியை தொடர்ந்து ஹானர், ஹூவாய், எல்.ஜி., ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    இந்தியாவில் 40 லட்சம் ஸ்மார்ட்போன் விற்பனை கொண்டாடும் வகையில் ரியல்மி சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்தியாவில் ரியல்மி சிறப்பு விற்பனை ஜனவரி 7 ஆம் தேதி துவங்கி ஜனவரி 9 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ரியல்மி சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.



    ஏற்கனவே ரியல்மி விற்பனை செய்து வரும் ஸ்மார்ட்போன்கள் தவிர ரியல்மி புதிய ஸ்மார்ட்போனினை ரூ.10,000 பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் மற்றும் விற்பனை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி ஏ1 என அழைக்கப்படலாம் என்றும் இதில் குவால்காம் நிறுவனத்தின் 600 சீரிஸ் பிராசஸர் அல்லது மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி யு1 மாடலை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.

    ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர், 3 ஜி.பி. / 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி, 6.3 இன்ச் ஐ.பி.எஸ். பேனல், 2340x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் துணை பிரான்டான ரியல்மி தனது புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Realme #smartphone



    ஒப்போவின் துணை பிரான்டான ரியல்மி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்தியாவில் அறிமுகமான ஆறு மாதங்களில் ரியல்மி பிரான்டு இதுவரை ஐந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமும் செய்துள்ளது. 

    அந்த வரிசையில் ரியல்மி பிரான்டின் புதிய ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மி ஏ1 இருக்கும் என தெரிகிறது. ரியல்மி சி1 மற்றும் ரியல்மி 2 வரிசையில் புதிய ரியல்மி ஏ1 ஸ்மார்ட்போனும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ரியல்மி பிரான்டு தெற்காசிய நாடுகளில் தனது வியாபாரத்தை நீட்டிக்க முயற்சித்து வருகிறது.

    ரியல்மி ஏ1 ஸ்மார்ட்போன் ரியல்மி யு1 மாடலை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரியல்மி ஏ1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.



    சிறப்பம்சங்களை பொருத்த வரை ரியல்மி 2 மாடலை விட ரியல்மி ஏ1 அம்சங்கள் மேம்பட்டு இருக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் எல்லோ என இருவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் வழங்கப்பட்டு இருந்த நிலையில், ரியல்மி ஏ1 ஸ்மார்ட்போனிலும் இதேபோன்ற வடிவமைப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P70 சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இருந்தது. அதன் அறிமுக நிகழ்வில் ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் கூறும் போது, மீடியாடெக் பிராசஸர் கொண்ட புதிய சாதனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்வோம் என தெரிவித்திருந்தார்.
    ரியல்மி பிரான்டு இந்தியாவில் தனது புதிய யு1 ஸ்மார்ட்போன் மாடலுடன் ரியல்மி ப்ட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. #RealmeBuds



    ரியல்மி பிரான்டு தனது புதிய யு1 ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனத்தின் முதல் இயர்போன்களை அறிமுகம் செய்தது. புதிய இயர்போன் மாடல்களில் 11 எம்.எம். ஆடியோ டிரைவர்கள், 160% வரை அதிக பேஸ் வெளிப்பாடு இருக்கும்.

    மேக்னெடிக் லாக்கிங் வசதி கொண்ட இந்தியாவின் முதல் வயர்டு இயர்போன் மாடலாக ரியல்மி பட்ஸ் இருக்கிறது. இதன் மூலம் புதிய இயர்போன்களை எளிமையாக பயன்படுத்த முடியும். கெவ்லர் ஃபைபர் கார்டு வழங்கப்பட்டு இருப்பதால் வையரிங் கிழியாமல் இருக்கச் செய்வோதோடு பார்க்கவும், பயன்படுத்தவும் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.

    நீண்ட நேரம் பயன்படுத்தினாலும், காதுகளில் வலி ஏற்படாமல் இருக்க ஏதுவாக இயர் டிப்கள் 45 டிகிரி வரை வளைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பட்டன் கொண்ட இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டுள்ளது.



    ரியல்மி பட்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 11 எம்.எம். டிரைவர்கள்
    - இம்பென்டென்ஸ்: 32Ω
    - ஒலி அழுத்த அளவு: 106dB
    - ஹார்மோனிக் டிஸ்டார்ஷன்: <1% (1KHz, 1mW)
    - ஃபிரீக்வன்சி ரேட்: 20-20,000Hz
    - ரேட்டெட் பவர்: 3mW
    - இன்-இயர் ஹெட்போன்
    - இன்-லைன் ரிமோட்
    - 1.25 எம் கேபிள்
    - எடை: 13.5 கிராம்

    ரியல்மி பட்ஸ் தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி பட்ஸ் விலை ரூ.499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த மாதம் முதல் துவங்க இருக்கிறது.
    ஒப்போவின் ரியல்மி பிரான்டு இந்தியாவில் தனது யு1 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #RealmeU1



    ரியல்மி பிரான்டு ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய யு1 மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். சிப்செட், ஏ.ஐ. என்ஜின், ஜி.பி.யு. அக்செலரேஷன் மற்றும் கேமிங் மோட் கொண்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2, 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 25 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சம், போர்டிரெயிட் லைட்டிங் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி யு1 ஸ்மாரட்போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    ரியல்மி யு1 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2350x1080 பிக்சல் 19.5:9 ஃபுல் ஹெச்.டி. + ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
    - 900MHz ARM மாலி-G72 MP3 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் பிரேவ் புளு, ஆம்பிஷியஸ் பிளாக் மற்றும் ஃபியரி கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.14,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் டிசம்பர் 5ம் தேதி அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதே தளத்தில் புதிய ஸ்மார்ட்போனுக்கான அழகிய கேஸ்களும் ரூ.499 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    அறிமுக சலுகைகள்:

    ரியல்மி யு1 ஸ்மார்ட்போனினை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பார்க்கும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.5,750 மதிப்புள்ள சலுகைகள் மற்றும் 4200 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
    ரியல்மி விரைவில் வெளியிட இருக்கும் யு1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #RealmeU1
    ஒப்போ துணை பிராண்டான ரியல்மி இந்தியாவில் அடுத்த வாரம் யு1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. நவம்பர் 28ம் தேதி புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    அதன்படி புதிய ரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சென்சார், 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.



    ரியல்மி யு1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2350x1080 பிக்சல் 19.5:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
    - 900MHz ARM மாலி-G72 MP3 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரிய கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்டவை சில தினங்களில் தெரியவரும். முன்னதாக ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. #RealmeU1
    ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், அதன் ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #RealmeU1



    ஒப்போ துணை பிரான்டான ரியல்மி இந்தியாவில் அடுத்த வாரம் யு1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. நவம்பர் 28ம் தேதி புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் ரீடெயில் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    புதிய புகைப்படங்களின் படி ரீடெயில் பெட்டின் மேல் யு1 பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது. பெட்டியின் பக்கவாட்டில் ஸ்மார்ட்போனின் முழு பெயர் இடம்பெற்றிருக்கிறது. ரீடெயில் பாக்ஸ் கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. ரியல்மி மற்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் வெள்ளை நிற பெட்டியில் வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் தலைசிறந்த செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது. இதில் ரியல்மி 2 ப்ரோ மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என்றும், அதிகபட்சமான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: SlashLeaks

    மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸரில் 12 நானோமீட்டர் ஃபின்ஃபெட் தொழில்நுட்பத்தைச் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பிராசஸரில் வேகமான ஏ.ஐ. பிராசஸிங் செய்ய ஏதுவாக 525 மெகாஹெர்ட்ஸ் மல்டி-கோர் ஏ.பி.யு. ஆப்பரேட்டிங் கொண்டிருக்கிறது. 

    இந்த ஏ.ஐ. என்ஜின் ஹீலியோ P60 பிராசஸரை விட ஏ.ஐ. பிராசஸிங்கை 10 முதல் 30 சதவிகிதம் வரை மேம்படுத்துகிறது. இதனுடன் ARM மாலி-G72 MP3 GPU அதிகபட்சம் 900 மெகாஹெர்ட்ஸ் ஆப்பரேட்டிங் கொண்டுள்ளது. இது முந்தைய ஹீலியோ P60 பிராசஸரில் வழங்கப்பட்டு இருந்ததை விட 13 சதவிகிதம் வேகமான செயல்திறன் கொண்டிருக்கிறது.

    அதிக செயல்திறன் எடுத்துக்கொள்ளும் அதிநவீன கேம்களை விளையாடும் போதும் P70 பிராசஸர் முந்தைய ஹீலியோ பிராசஸரை விட 7 சதவிகிதம் சிறப்பாக செயல்படுவதோடு 35 சதவிகிதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்துகிறது. இந்த பிராசஸர் 20:9 ரக டிஸ்ப்ளேக்களை முழுமையான ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷனில் சப்போர்ட் செய்யும்.
    ஒப்போவின் ரியல்மி பிரான்டு புதிய யு சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலின் வெளியீடு, விற்பனை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #RealmeU1 #smartphone



    ரியல்மி பிரான்டு மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை யு சீரிஸ் மூலம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய ஸமார்ட்போன் ரியல்மி யு1 என அழைக்கப்படும் என்றும், இது நவம்பர் 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு அமேசான் தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனில் தலைசிறந்த செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது. இதில் ரியல்மி 2 ப்ரோ மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என்றும், அதிகபட்சமான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.



    மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸரில் 12 நானோமீட்டர் ஃபின்ஃபெட் தொழில்நுட்பத்தைச் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பிராசஸரில் வேகமான ஏ.ஐ. பிராசஸிங் செய்ய ஏதுவாக 525 மெகாஹெர்ட்ஸ் மல்டி-கோர் ஏ.பி.யு. ஆப்பரேட்டிங் கொண்டிருக்கிறது. 

    இந்த ஏ.ஐ. என்ஜின் ஹீலியோ P60 பிராசஸரை விட ஏ.ஐ. பிராசஸிங்கை 10 முதல் 30 சதவிகிதம் வரை மேம்படுத்துகிறது. இதனுடன் ARM மாலி-G72 MP3 GPU அதிகபட்சம் 900 மெகாஹெர்ட்ஸ் ஆப்பரேட்டிங் கொண்டுள்ளது. இது முந்தைய ஹீலியோ P60 பிராசஸரில் வழங்கப்பட்டு இருந்ததை விட 13 சதவிகிதம் வேகமான செயல்திறன் கொண்டிருக்கிறது.



    அதிக செயல்திறன் எடுத்துக்கொள்ளும் அதிநவீன கேம்களை விளையாடும் போதும் P70 பிராசஸர் முந்தைய ஹீலியோ பிராசஸரை விட 7 சதவிகிதம் சிறப்பாக செயல்படுவதோடு 35 சதவிகிதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்துகிறது. இந்த பிராசஸர் 20:9 ரக டிஸ்ப்ளேக்களை முழுமையான ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷனில் சப்போர்ட் செய்யும்.
    சீன ஸ்மார்ட்போன் பிரான்டு ரியல்மி ஹீலியோ P70 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #Realme



    ரியல்மி நிறுவனம் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை யு சீரிஸ் மாடலாக வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. 

    முன்னதாக மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் இந்தியா மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்களை ரியல்மி வெளியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸரில் 12 நானோமீட்டர் ஃபின்ஃபெட் தொழில்நுட்பத்தைச் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பிராசஸரில் வேகமான ஏ.ஐ. பிராசஸிங் செய்ய ஏதுவாக 525 மெகாஹெர்ட்ஸ் மல்டி-கோர் ஏ.பி.யு. ஆப்பரேட்டிங் கொண்டிருக்கிறது. 




    இந்த ஏ.ஐ. என்ஜின் ஹீலியோ P60 பிராசஸரை விட ஏ.ஐ. பிராசஸிங்கை 10 முதல் 30 சதவிகிதம் வரை மேம்படுத்துகிறது. இதனுடன் ARM மாலி-G72 MP3 GPU அதிகபட்சம் 900 மெகாஹெர்ட்ஸ் ஆப்பரேட்டிங் கொண்டுள்ளது. இது முந்தைய ஹீலியோ P60 பிராசஸரில் வழங்கப்பட்டு இருந்ததை விட 13 சதவிகிதம் வேகமான செயல்திறன் கொண்டிருக்கிறது.

    அதிக செயல்திறன் எடுத்துக்கொள்ளும் அதிநவீன கேம்களை விளையாடும் போதும் P70 பிராசஸர் முந்தைய ஹீலியோ பிராசஸரை விட 7 சதவிகிதம் சிறப்பாக செயல்படுவதோடு 35 சதவிகிதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்துகிறது. இந்த பிராசஸர் 20:9 ரக டிஸ்ப்ளேக்களை முழுமையான ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷனில் சப்போர்ட் செய்யும்.

    ஹீலியோ P70 ரக பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த மாதம் முதல் கிடைக்கும் என மீடியாடெக் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வகையில் ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் நான்கு நாட்களில் சுமார் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. #Realme



    ஒப்போ நிறுவனத்தின் துணை பிரான்டு ஆன ரியல்மி இந்தியாவில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்னையில் சுமார் பத்து லட்சம் ஸ்மார்ட்போன் யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.

    ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் இரண்டாவது விற்பனையில் சுமார் 1,10,000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் நான்கு நாட்களில் 10 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. சமீபத்திய பிளிப்கார்ட் விற்பனையின் மூலம் ரியல்மி பிரான்டு இந்திய சந்தையில் சியோமி அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

    ரியல்மி ஸ்மார்ட்போன்களின் அடுத்த விற்பனை அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் மூலம் பிளிப்கார்ட் தளத்தில் மற்றொரு சிறப்பு விற்பனை நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



    ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரியல்மி சி1 ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்து பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட்டன. இதில் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1, மோட்டோரோலா ஒன் பவர், நோக்கியா 6.1 பிளஸ், சாம்சங் கேலக்ஸி ஜெ6, Mi ஏ2 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ், 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அட்ரினோ 512 GPU, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 16 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.7, 2 எம்.பி. டெப்த் சென்சார் கேமரா வழங்கப்படுகிறது. முன்பக்கம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, F/2.0  அப்ரேச்சர் கொண்டுள்ளது.

    ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமைகிறது. சி1 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் 720x1520 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி, 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    ஒப்போ துணை பிரான்டு ஆன ரியல்மி இந்தியாவில் சி சீரிஸ்-இல் தனது முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #RealmeC1



    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் புதிய சி1 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ரியல்மி சி1 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக நாட்ச் டிஸ்ப்ளே, 87.8% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ரியல்மி சி1 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார் வழங்கப்படாத நிலையில் ரியல்மி சி1 மாடலில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    ரியல்மி சி1 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - கலர் ஓ.எஸ். 5.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ரியல்மி சி1 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரியல்மி சி1 விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ரியல்மி சி1 அக்டோபர் 11-ம் தேதி முதல் கிடைக்கும்.
    ×