search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    திருப்பூரில் வீடு புகுந்து திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பகுதியில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் நடைபெற்றது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் ஆசாமிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் எஸ்.பள்ளப்பட்டியை அடுத்த சூலங்குறிச்சி பகுதியை சேர்ந்த ரவி (வயது 58) என்பது தெரிய வந்தது.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் சந்திரசேகர் மற்றும் அவினாசியை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் அங்காளஈஸ்வரி ஆகியோரின் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளை திருடியவர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 21 பவுன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவினாசி அருகே பனியன் தொழிலாளி வீட்டில் 25 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அவினாசி:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவர் தனது மனைவி மாதவியுடன் அவினாசி அருகே உள்ள ஏ.வி.டி லே அவுட் எக்ஸ்டன்சன் பகுதியில் தங்கி உள்ளார். அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வெள்ளத்துரை வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மாதவி உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை வீட்டிற்கு திரும்பிய மாதவி நகை-பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவினாசி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலூர் அருகே வீடு புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள வெள்ளலூரைச் சேர்ந்தவர் கணேசன். (வயது 38). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஜெயந்தி தனது குழந்தைகளுடன் புலிமலைப்பட்டி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டார்.

    இதை அறிந்த மர்ம மனிதர்கள் ஜெயந்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவை திறந்தனர். அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இன்று காலை வீடு திரும்பிய ஜெயந்தி வீட்டில் நகை-பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை குறித்து கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆண்டிப்பட்டி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    மதுரை அருகே பனையூரைச் சேர்ந்தவர் நிர்மல்குமார் மனைவி மகேஸ்வரி (வயது 27). இவர் தனது மாமனார் மற்றும் மாமியாருடன் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு விஷேசத்துக்காக 27 பவுன் தங்க நகைகளை கைப்பையில் வைத்துக் கொண்டு பஸ்சில் வந்துள்ளார்.

    மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டி சென்ற மகேஸ்வரி பஸ்நிலையத்தில் இறங்கி தனது கைப்பையை பார்த்த போது நகைகள் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்த மர்ம நபர்கள் அசந்த நேரத்தில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் செய்வதறியாது நின்ற மகேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் நகை மாயமானது குறித்து திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த அமுதா (30), சஞ்சனா (32) ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகளை இவர்கள் கொள்ளையடித்தனரா? இவர்களுக்கு பின்பு கொள்ளை கும்பல் எதுவும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    வளசரவாக்கத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடியத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வளசரவாக்கம், ராஜாஜி அவின்யூவைச் சேர்ந்தவர் ரங்கராஜன். நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நங்க நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் மற்றும் வங்கி பாஸ்புக் கொண்ட பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த நிலையில் இன்று காலை விருகம்பாக்கம் போலீசார் ரெட்டி தெருவில் உள்ள சாலையில் கிடந்த ரங்கராஜனின் வங்கி பாஸ்புக்கை கைப்பற்றினர். கொள்ளையர்கள் ரங்கராஜன் வீட்டில் நகைகளை எடுத்து கொண்டு பாஸ் புக்கை சாலையில் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வெள்ளகோவில் அருகே பழைய கார் விற்பனை கடையில் பணம் திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது 28). இவர் கடந்த 5 ஆண்டுகளாக முத்தூரில் பழைய கார் விற்பனை நடத்தி வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் அலுவலகத்திற்கு வந்தார். மதியம் மின் கட்டணம் செலுத்த சென்றார். மின் கட்டணம் செலுத்திய பின்னர் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கல்லாவில் இருந்த ரூ.64 ஆயிரத்து 500 திருட்டுபோனது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்தார்.

    இந்நிலையில் வெள்ளகோவிலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வந்தனர். போலீசாரை பார்த்ததும் 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். உஷாரான போலீசார் அவர்களை விரட்டிச்சென்றனர். ஆனால் தப்பினர்.

    இது குறித்து முத்தூர் பகுதியில் உள்ள போலீசாருக்கு தெரிவித்தனர். அங்கிருந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 3 பேர் வந்த மோட்டார் சைக்கிளை மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது ரூ.64 ஆயிரத்து 500 மற்றும் 2 லேப்- டாப்புகள் இருந்தது.

    விசாரணையில் முத்தூரில் ராஜேஸ்குமார் நடத்தி வரும் கடையில் புகுந்து திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பணத்தையும், லேப்- டாப்களையும் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஈரோடு லட்சுமி நகர் வெண்டிப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 19), நோயல் எபினேஷ் (18), மகேஸ்வரன் (18) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

    கடை உரிமையாளர் ராஜேஸ்குமார் இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருவள்ளூர் அருகே கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை அடுத்த இருளஞ்சேரி கிராமத்தில் கலிங்க நாதேஸ்வரர் கோவில் உள்ளது. 1,100 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இதுவாகும்.

    இக்கோவிலில் நேற்று பைரவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் முடிந்த பிறகு இரவு கோவிலை பூசாரிகள் பூட்டிச் சென்றனர்.

    இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டு தனியாக கழற்றி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து மப்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். உண்டியலில் இருந்து ரூ.20 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இக்கோவிலில் பஞ்சலோக சிலைகள் இருந்தன. இங்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பஞ்சலோக சிலைகள் திருப்பாச்சூரில் உள்ள வசிஸ்வரர் கோவிலில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சலோக சிலைகள் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியது.

    கடந்த ஆண்டு இக்கோவிலில் கலசம் திருடு போயிருந்தது. தற்போது கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை போயிருப்பது கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்ளை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    மதுரையில் வாலிபரை தாக்கி 3 பவுன் நகை மற்றும் பணத்தை ஷேர்ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது30). பிரசவத்திற்காக இவரது மனைவியை மதுரை நெல்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்.

    நேற்று இரவு ஊரில் இருந்து மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் வந்து இறங்கிய உதயகுமார் ஆஸ்பத்திரி செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினார். நள்ளிரவு என்பதால் அவர் மட்டுமே பயணம் செய்தார்.

    இந்த நிலையில் ஷேர் ஆட்டோ நெல்பேட்டைக்கு செல்லாமல் செல்லூர் பகுதியில் உள்ள மீனாட்சி புரம் விலக்கு சென்றது. அங்கு ஆட்டோ டிரைவர் தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து கொண்டு உதயகுமாரை தாக்கினர்.

    தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போன், 2½ பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து செல்லூர் போலீசில் உதயகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை -பணத்தை பறித்த 3 பேரை தேடி வருகிறார்கள்.

    திருவொற்றியூர் நகை கடையில் 6 பவுன் மதிப்புள்ள 3 தங்க செயின்களை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரில் பந்தாராம் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த மாதம் 30-ந்தேதி வந்த மர்ம ஆசாமி கடை உரிமையாளர் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் மதிப்புள்ள 3 தங்க செயின்களை கொள்ளையடித்து சென்றான்.

    அவன் வந்த மோட்டார் சைக்கிள் கடையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதில் இருந்த ஆவணங்களை வைத்து கொள்ளையன் சிவகங்கை மாவட்டம் நேரு பஜார் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 40) என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் பதுங்கி இருந்த சந்துருவை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ராயபுரம் அருகே செல்போன் கடை ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.70 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ரஷீத்கான். செல்போன் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந் தேதி இவர் வசூலான பணம் ரூ. 70 லட்சத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். ஏழுகிணறு பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் ரஷீத்கானை வழிமறித்து அரிவாளால் வெட்டி ரூ. 70 லட்சத்தை பறித்து சென்று விட்டனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே 4 பேரை போலீசார் கைது செய்து ரூ. 9½ லட்சத்தை பறிமுதல் செய்து இருந்தனர். இந்த நிலையில் திருவள்ளூரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான சவுகார்பேட்டையை சேர்ந்த முத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். #tamilnews
    ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் ரோட்டில் பழங்குளம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசராக முத்துமாரி என்பவரும், விற்பனையாளராக காட்டூரணியை சேர்ந்த சதீஷ்குமரனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு இருவரும் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கடையின் பணம் இருக்கிறதா? என தேடி பார்த்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் கடையில் இருந்த 437 மதுபாட்டில்களை திருடிக்கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    மறுநாள் அதிகாலை அந்த பகுதி மக்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கேணிக்கரை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். சூப்பர்வைசர் முத்துமாரி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    காஞ்சீபுரம்-திருத்தணி-புட்லூரில் தாசில்தார் வீடு உள்பட 4 இடங்களில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், லிங்கப்பன் தெருவில் பறக்கும் படை தாசில்தார் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. நேற்று இரவு பூட்டி கிடந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை மூட்டைகட்டி அள்ளிச் சென்று விட்டனர்.

    அதே பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி. நேற்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ½ கிலோ வெள்ளிப்பொருட்களை சுருட்டிச் சென்று விட்டனர்.

    திருத்தணி ஆசிரியர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி. ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று காலை அவர் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். இரவு வீட்டுக்கு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு சவரன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

    இது குறித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    திருவள்ளூரை அடுத்த புட்லூரை சேர்ந்தவர் சங்கர். வேன் டிரைவர். இவர் சரக்கு ஏற்றி கொண்டு ஐதராபாத் சென்று விட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு திருவாலங்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.14 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×