search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    கோடம்பாக்கத்தில் 2 வீடுகளில் 70 பவுன் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    கோடம்பாக்கத்தில் ரங்கநாதபுரத்தில் ரகுகுமார் என்பவது வீட்டில் 45 பவுன் நகை மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    இதேபோல கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் மதுமதி என்ற ஆசிரியர் வீட்டில் 25 பவுன் தங்க நகைகளும், கொள்ளையடிக்கப்பட்டன. தியாகராஜன் வீட்டில் ½ கிலோ வெள்ளி பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

    பொன்னேரி அருகே அடகு கடையை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இங்கு நகைகளை அடகு வைத்துள்ளனர்.

    நேற்று இரவு சந்தோஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். கடை முன்பு கண்காணிப்பு கேமராவும் பொருத்தி இருந்தார்.

    இரவு 12.30 மணியளவில் இந்த கடைக்கு வந்த ஒரு கொள்ளை கும்பல், முதலில் கண்காணிப்பு கேமராவை உடைத்து எறிந்தது. ‌ஷட்டரில் உள்ள பூட்டுகளை உடைத்து விட்டு கிரில் கதவை திறக்க முயன்றனர்.

    அப்போது சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் இருந்தவர் வெளியே எட்டிப்பார்த்தார். யார் அது என்று குரல் கொடுத்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அங்கு வந்தனர்.

    இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுபற்றி அடகு கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் வந்தார். கடைக்குள் கொள்ளையர்கள் நுழைவதற்குள் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்ததால் கொள்ளையர்கள் ஓடி விட்டனர்.

    இதனால் அடகு கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பின.இதுகுறித்து பொன்னேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    பொன்னேரியை அடுத்த வெண்பாக்கத்தில் தையல் கடை வைத்திருப்பவர் மனோ. நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை கடையின் ‌ஷட்டர் திறந்து கிடந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம், செட்ஆப் பாக்ஸ், ஆதார் அட்டை ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுபற்றி பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இரண்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சிங்காநல்லூரில் ஆட்டோவை வழிமறித்து தம்பதியை மிரட்டி நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை நீலிகோணம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் கோபால். ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி. இவரது மனைவி சாந்தாமணி(51).

    இவர்கள் இருவரும் திருக்கடையூர் சென்று விட்டு பஸ்சில் ஊர் திரும்பினர். நள்ளிரவு 12.30 மணிக்கு சிங்காநல்லூர் பஸ் நிலையம் வந்த அவர்கள் ஆட்டோவில் வீட்டுக்கு சென்றனர்.

    ஆட்டோ நீலிகோணம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டோவை மறித்தனர்.

    கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள் சாந்தாமணி அணிந்திருந்த தங்க செயின், கோபால் அணிந்திருந்த மோதிரம் என 6 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து சாந்தாமணி சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களின் முன்புறம் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் வழிப்பறி கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோயம்பேடு பகுதியில் கொள்ளை-வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோயம்பேடு விருகம்பாக்கம் சாலையில் நேற்று முன்தினம் இரவு குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் தீபக்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் கொருக்குபேட்டை மீனாம்பிகை நகர் 6-வது தெருவைச் சேர்ந்த ராமசந்திரன் (25) பண்டிகையை முன்னிட்டு வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருக்கும் வீடுகளை பகல் நேரத்தில் நோட்டமிட்டு பின்னர் இரவு நேரத்தில் வீடு புகுந்து கைவரிசை காட்டி வந்தார் என்பது தெரிய வந்தது.

    அவரிடம் இருந்து 11 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ராமசந்திரனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    இதுபோல் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலைய அலுவலகம் முன்பு நேற்று கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர் இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு பைக்கை திருடுவதும், செயின் பறிப்பில் ஈடுபடுவதும் பின்னர் அந்த பைக்கை விற்பனை செய்து விடுவதும் தெரியவந்தது. கோயம்பேடு பகுதியில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபட வந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது.

    திண்டுக்கல் அருகே கடையை உடைத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வெள்ளோடு நரசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. இவர் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் வெள்ள பொம்மன் பட்டி பிரிவு எதிரே புதிதாக மெக்கானிக் கடை திறந்துள்ளார்.

    சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கு இருந்த உதிரி பாகங்கள் மற்றும் ரூ.3500 பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

    மறு நாள் காலை கடைக்கு வந்த மகாராஜா பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் கொள்ளை போனதும் தெரிய வந்தது.

    இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போல் 4 வழிச்சாலை ஓரம் இருந்த மெக்கானிக் ஷாப்பில் கொள்ளை போனது. மேலும் நடந்து சென்ற பெண்ணிடம் மொபைல் மற்றும் நகைகளை பறித்துச் சென்றனர்.

    தொடர் கொள்ளையால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

    நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி வயதானவர்களிடம் நூதனமுறையில் நகைகளை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோயம்பேடு:

    கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வரும் வயதானவர்களை குறி வைத்து பெண் ஒருவர், கலைஞர் நிதி உதவி தொகை ரூ.10 ஆயிரம் தருகிறார்கள் என்று கூறி அவர்களிடம் இருந்து நகைகளை பெற்று தலைமறைவாகி விடும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

    இதுபற்றி நகைகளை ஏமாந்த சிலர் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நூதன முறையில் நகை கொள்ளையில் ஈடுபட்ட ரெட்டேரி கண்ணகி நகர் திருவள்ளூர் தெருவைச் சேர்ந்த லட்சுமி (40) என்ப வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    அவர் வெளியூரில் இருந்து வரும் வயதான பெண்களை குறிவைத்து நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி அவர்கள் அணிந்து இருந்த நகையை ஏமாற்றி வாங்கிக் கொண்டு தலைமறைவாகி வருவது தெரிந்தது. அவரிடமிருந்து 1 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஏழுகிணறு பகுதியில் செல்போன்கடை ஊழியரை வெட்டி ரூ.60 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    ஏழுகிணறு பெரியண்ணா தெருவில் செல்போன் மொத்த வியாபார கடை வைத்திருப்பவர் ஜாபர்.

    இந்த கடையில் ஏழுகிணறு ஆனைக்கார தெருவைச் சேர்ந்த ரபீக்கான் (34) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மொத்த கடையில் இருந்து மற்ற கடைகளுக்கு செல்போன்கள் வினியோகிக்கப்படுகின்றன.

    இந்த கடைகளில் பணம் வசூல் செய்வதற்காக ரபீக்கான் நேற்று சென்றார். இரவு 11 மணியளவில் வசூலான பணப்பையுடன் மோட்டார் சைக்கிளில் தான் வேலைபார்க்கும் கடைக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    ஏழுகிணறு பெரியண்ணா தெருவுக்கு வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர், ரபீக்கானை வழிமறித்தனர். திடீர் என்று அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றனர். இதில் அவரது கை மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். இதற்குள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் பறித்துச்சென்ற பையில் ரூ.60 லட்சம் வசூல் பணம் இருந்தது.

    இதுகுறித்து ஏழுகிணறு போலீசில் புகார் செய்யப்பட்டது. அரிவாளால் வெட்டப்பட்ட ரபீக்கான் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கொள்ளை சம்பவம் குறித்து ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    ரூ.60 லட்சத்தை கொள்ளையடித்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஏழுகிணறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே கல்லூர் கிராமம் உள்ளது. இங்கு இருக்கும் காளி அம்மன் கோவிலில் கிராம மக்கள் வழிபட்டு வருகிறார்கள். நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூட்டப்பட்டது.

    இன்று காலை, கோவிலுக்கு சாமி கும்பிட சிலர் சென்றனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது.

    கோவில் இருந்த குத்து விளக்கு, வெள்ளி பூஜை பொருட்கள், பட்டுப் புடவைகள், ஆம்ளிப்பர், ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவிலில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வல்லன் குமாரவிளை பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி பார்வதி(வயது72).

    நேற்று பார்வதி வீட்டில் இருந்து கடைக்கு சென்றிருந்தார். அப்போது அவரது இளைய மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பார்வதியின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே சென்று அவரது மகளிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அப்போது பார்வதியும் வீட்டிற்கு வந்தார்.

    அவர் வீட்டின் உள்ளே சென்று அவர்களுக்கு தண்ணீர் எடுக்கச் சென்றார். இந்த நிலையில் அவரது இளைய மகள் கையில் கிடந்த 2 கிராம் தங்க மோதிரத்தை அவர்கள் பறித்தனர். இதனை பார்த்த பார்வதி கூச்சலிட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இதனை பார்த்த அந்த 3 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்தது, தூத்துக்குடியைச் சேர்ந்த நெல்லையப்பன் மற்றும் வட்டக்கோட்டைச் சேர்ந்த ஆறுமுகம், அய்யப்பன் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இதில் நெல்லையப்பன், ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அய்யப்பனை தேடி வருகிறார்கள். #tamilnews
    திருவொற்றியூரில் அரிசி கடையில் ரூ.25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், மார்க்கெட் பகுதியில் அரிசி கடை நடத்தி வருபவர் காமாட்சி. திருவொற்றியூர் நாடார் உறவின் முறை சங்க செயலாளராக உள்ளார்.

    நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் அரிசி கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறந்த போது பணப் பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரத்தை காணவில்லை.

    மேலும் சுவற்றில் இருந்த வெப்பக்காற்றை வெளியேற்ற பொருத்தி இருந்த விசிறி கழற்றப்பட்டு இருந்தது. அதன் துளை வழியாக புகுந்த மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

    பின்புறமாக உள்ள மரக்கடை வழியாக வந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதேபோல் நேற்று இரவு திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள நகை கடையில் வியாபாரி மீது மிளகாய் பொடியை தூவி 6 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    வெள்ளகோவில் அருகே மெக்கானிக் வீட்டின் கதவை உடைத்து நகை -பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம் பாளையம் வடிவேல் நகரை சேர்ந்தவர் முருகேசன் (38). இரு சக்கர வாகன மெக்கானிக்.

    இவர் தனது வீட்டை பூட்டி விட்டு நேற்று காலை குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். மதியம் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன் பக்க கதவு கம்பியால் நெம்பி திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கப்பணம், வளையல், மோதிரம் உள்ளிட்ட 3 பவுன் நகைகளை திருட்டு போய் இருந்தது.

    இதனால் முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நகை- பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை - பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    கொள்ளிடம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த மகேந்திரபள்ளி ஊராட்சி வெட்டாற்றங்கரையில் காத்தாயி அம்மன்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வழக்கம் போல் பூஜை முடிந்ததும், இரவு பூஜாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நள்ளிரவு மர்மநபர்கள் கோவில் மதில் சுவர் வழியாக ஏறிகுதித்து கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி இன்று காலை தெரியவந்ததும் அப்பகுதி மக்கள் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலிலும் மர்ம நபர்கள் புகுந்து நேற்று இரவு உண்டியல் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். இரண்டு கோவில்களிலும் ரூ.50 ஆயிரம் வரை பணம் திருட்டு போய் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரிலும் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×