search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    பெரியபாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் - கன்னிகைபேர் நெடுஞ்சாலையில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வடமதுரை கூட்டுச் சாலை அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்தது மற்றும் ஜெயபுரம் கூட்டுச்சாலையில் மோட்டார் சைக்கிள் திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    அவர்கள் செங்குன்றத்தை அடுத்த கார்த்திக், காவாங்கரை ஸ்ரீநாத் என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரையும் போலீசார் ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    சோழிங்கநல்லூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரை சந்திப்கலா அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கமலேஷ். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றார். திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த தங்கம்- வைர நகைகள் கொள்ளை போயிருந்தன. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    மதுரையில் பல்கலைக்கழக அதிகாரி, பேராசிரியர் வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் அன்பு நகரில் உள்ள அன்னை அபிராமி தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது67). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சூப்பிரண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று கோபிநாத் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    பின்னர் பீரோவில் இருந்த 29 பவுன் நகை, ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். ஊர் திரும்பிய கோபிநாத் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை- பணம் திருட்டுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தல்லாகுளம் விசாலாட்சி புரத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைகண்ணன் (52). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து 1 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.1500 ரொக்கம் ஆகிய வற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வியாசர்பாடியில் சீல் வைக்கப்பட்ட வெற்றிவேல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ரூ.4 லட்சம் பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MLAsDisqualificationCase #Vetrivel

    சென்னை:

    பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெற்றிவேல், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்தார்.

    அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், முதல்வர் பற்றி விமர்சித்த காரணத்துக்காகவும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில் வெற்றிவேலும் ஒருவர். இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி சர்மாநகரில் உள்ள அவரது அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாநகராட்சி அதிகாரிகள் வெற்றிவேலின் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதன் பின்னர் தொடர்ந்து அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.

    இந்த நிலையில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் மாடி வழியாக உள்ளே புகுந்தனர்.

    மாடியில் உள்ள கதவின் பூட்டை உடைத்து அலுவலகத்தில் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு அமர்ந்து மது அருந்தினர். பின்னர் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை சூறையாடினர். மேஜையை இழுத்துப்போட்டு அதில் அமர்ந்து மது குடித்து கும்மாளமிட்டனர்.

    பின்னர் அங்கிருந்த 12 மின்விசிறிகள், 2 கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களை திருடிச் சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி வெற்றிவேல் எம்.எல்.ஏ. கூறும்போது, கொள்ளை சம்பவம் ஒரு வாரத்துக்குள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். கொள்ளையர்கள் யார்? என்பதை போலீசார் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றார். #MLAsDisqualificationCase #Vetrivel

    காசிமேட்டில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    காசிமேடு, திடீர்நகரை சேர்ந்தவர் சலீம்பாஷா. அதே பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்து உள்ளார். இன்று காலை கடையை திறக்க சென்றபோது ‌ஷட்டர் உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், ரூ.42 ஆயிரத்தை காணவில்லை. மர்மபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. #tamilnews
    ஆண்டிப்பட்டி அருகே வீட்டு கதவை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். #Robbery

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு சிங்கராஜபுரம் தெற்குதெருவை சேர்ந்தவர் குபேந்திரன் மனைவி வசந்தா. கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    வீட்டில் கட்டுமானப்பணி நடப்பதால் கொத்தனார் பிச்சை மட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பிச்சை அதிர்ச்சி அடைந்து வசந்தாவிற்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து வருசநாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். #Robbery

    போரூரில் 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #robbery

    போரூர்:

    போரூர் ராமமூர்த்தி அவென்யூ சக்தி நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அவரது வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதுபற்றி பாஸ்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 16 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

    இதேபோல் அதே பகுதி கணேஷ் அவென்யூவில் பூட்டிக் கிடந்த சதாசிவம் என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் 4 பவுன், பணத்தை சுருட்டி சென்றுவிட்டனர். இது குறித்து போரூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #robbery

    மதுரையில் மேஸ்திரி வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை தாசில்தார் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது47). கட்டிட மேஸ்திரியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    ஊர் திரும்பிய குமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை-பணம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வாழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரத்தில் பாத்திரக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #robbery

    தாராபுரம்:

    தாராபுரம் விட்டல் பாய் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவர் மேற்கு பஜனை மடத்தெருவில் பாத்திர மொத்த வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டுச்சென்றார்.

    இன்று மீண்டும் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணம் திருட்டுபோனது தெரியவந்தது.

    இது குறித்து அவர் தாராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கல்பாக்கம் பகுதியில் பல வீடுகளில் கொள்ளையடித்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 14 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களில் பல வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் 24 மணிநேர தீவிர கண்காணிப்பில் உள்ள அணுமின் நிலைய அதிகாரிகளின் குடியிருப்பு பகுதிகளிலும் கொள்ளை நடந்தது. இதுகுறித்து அணுமின் நிலைய உயர் அதிகாரிகள் புகார் செய்தனர். இதை ஏற்ற காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி தனிப்படை அமைத்தார்.

    பள்ளிக்கரணை போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்தனர். இதில் துப்பு துலங்கியது.

    இதில் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த சதீஷ் (22), சரத்குமார் (19), சரவணன் (21), விக்னேஷ்வர் (22) ஆகிய 4 பேரை பிடித்தனர். இவர்கள் கல்பாக்கம் அடுத்த கரியச்சேரி ரவி என்பவர் வீட்டில் கடந்த வாரம் கொள்ளையடித்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 14 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை சதுரங்கபட்டினம் போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குடியாத்தம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தை சேர்ந்த தசரதன் மகன் சுகுமார் (வயது 28), ராமாலை அடுத்த காந்திகணவாய் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் யுவராஜ் (வயது 30), புவனேஸ்வரிபேட்டை முருகன்நகர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் மோகன் என்கிற காடை மோகன் (வயது 30) ஆகிய 3 பேர் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, இரவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்தனர். மேலும் நகரின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மோட்டார்சைக்கிள் திருட்டிலும் ஈடுபட்டு வந்தனர்.

    இவர்களை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உள்ளிட்ட போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். தற்போது அவர்கள் வேலூர் மத்திய சிறையில் உள்ளனர்.

    சுகுமார், யுவராஜ், மோகன் ஆகியோர் தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரைத்தார். அதன் பேரில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவை மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர். 
    போலீஸ் என கூறி மோட்டார் சைக்கிள் வந்த திருப்பூரில் வாலிபரிடம் பணம் பறித்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் அருகே உள்ள ஜெய்நகரை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 48). டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நல்லூர் ஈஸ்வரன் கோவில் அடுத்துள்ள எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஆனந்தை மறித்து தான் போலீஸ் என்றும், சீருடை இல்லாமல் பணியில் இருப்பதாகவும் கூறி இருசக்கர வாகனத்துக்கான ஆவணம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை கேட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து ரூ.100 பெற்றுக்கொண்டு அனுப்பி விட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்த் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நல்லூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் வண்டி பெரியார் பகுதியை சேர்ந்த விமல்(37) என்பதும், இவர் முத்தனம்பாளையம் பொன்முத்துநகரில் வசித்து வருவதும் தெரியவந்தது.

    கடந்த சில நாட்களாக விமல் இதுபோல் நல்லூர் பகுதிகளில் நின்று கொண்டு, பல இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விமலை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×