search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    கோவை அருகே கேரள வியாபாரியை கத்திமுனையில் மிரட்டி ரூ.1½ லட்சம் கொள்ளையடித்த கும்பல் அவரது காரையும் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.
    கோவை:

    ராஜஸ்தானை சேர்ந்தவர் கான்சிங்(வயது 32). இவர் கேரள மாநிலம் திருச்சூரில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இவர் பொருட்கள் வாங்குவதற்காக நேற்று இரவு கோவைக்கு காரில் புறப்பட்டார். இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கார் மதுக்கரை மரப்பாலம் சாலையில் வந்த போது மற்றொரு காரில் வந்த 4 பேர் கும்பல் இவரது காரை மறித்தனர்.

    அந்த கும்பல் கத்தியை காட்டி கான்சிங்கை மிரட்டினர். அவரிடம் இருந்த ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம், செல்போன் ஆகியவற்றை பறித்த மர்மநபர்கள் கான்சிங்கை கீழே தள்ளி விட்டு அவரது காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கான்சிங், அவ்வழியாக வந்த வாகனத்தில் ஏறி மதுக்கரை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். உடனடியாக போலீசார் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கார் நம்பரை கூறி அனைத்து போலீஸ் நிலையங்களையும் உஷார்படுத்தினர்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. எனினும் சந்தேகத்திற்கிடமாக யாரும் சிக்கவில்லை.இது குறித்து கான்சிங் கொடுத்த புகாரின்பேரில் மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    டெல்லியில் உள்ள ரெயில் நிலையத்தில் இரண்டு ராணுவ வீரர்களின் உடைமைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புது டெல்லி :

    தலைநகர் டெல்லியில், பழைய டெல்லி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இரண்டு ராணுவ வீரர்கள், அங்குள்ள ஓய்வறையில் ஒன்றில் இன்று காலை தூங்கிக்கொண்டிருந்தனர். அந்நேரம், ராணுவ வீரர்களின் பெட்டிகள், அடையாள அட்டை, கைக்கடிகாரம் மற்றும் செல்போன்களை அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் திருடிக்கொண்டு ஓடிவிட்டனர்.

    இதுதொடர்பாக ரெயில்வே காவல் நிலையத்தில் ராணுவ வீரர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில்வே நிர்வாகமும்  விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    வேப்பனப்பள்ளி அருகே விவசாயி வீட்டில் புகுந்து கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடித்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வத் நாராயணன். விவசாயி. இவரது வீட்டில் கடந்த 9-ந்தேதி மர்ம நபர்கள் 4 பேர் புகுந்து கத்திமுனையில் மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து அஸ்வத் நாராயணன் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராபவதி, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் தங்கவேல் (வயது 22) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்கவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம், 8 பவுன் நகை மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தங்கவேலின் நண்பர்கள் 3 பேரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரைக்குடியில் ஒரு மணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பலைச் சேர்ந்த 3 நபர்கள் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் அம்பலமாகி உள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடியில் ஒரு மணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பலைச் சேர்ந்த 3 நபர்கள் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா மூலம் அம்பலமாகி உள்ளது.

    காரைக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் வெற்றி. இவர் காரைக்குடி நகராட்சியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி (வயது 40). இவர் தனது மகளுடன் காரைக்குடி கழனிவாசலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தை உதைத்து கீழே தள்ளினர். அதில் கீழே விழுந்த ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

    இதேபோல காரைக்குடி ஆறுமுகநகர் 5-வது வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஓய்வு பெற்ற நீதிபதி. இவரது மனைவி செல்வி (30). இருவரும் காரைக்குடி டவுனுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பெரியார் சிலை அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டனர்.

    காரைக்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி(25). இவர் முடியரசனார் சாலையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு கண்டனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் விக்னேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

    தொடர் சம்பவங்கள் குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற 3 இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர். அப்போது 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்த 3 பேர் என்று தெரியவந்தது. சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் நடந்துள்ளது. ஒருமணி நேரத்திற்குள் 3 பெண்களிடம் 34 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதால் காரைக்குடியில் வெளியே செல்லும் பெண்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த போலீசார் பல்வேறு பிரிவிற்கு மாறுதலாகி விட்டதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளது. எனவே குற்றப்பிரிவு போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு காரைக்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    கோவையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சுக்ரவார் பேட்டையை சேர்ந்தவர் கேவாரம். இவர் மரக்கடை மில்ரோடு பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று வேலை முடிந்ததும் வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வேலைக்கு வந்தபோது கடையின் பக்கவாட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் விரைந்து வந்து கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது மேஜையில் வைத்திருந்த ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இன்று பணத்தை வங்கியில் செலுத்த இருந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்து இருக்கிறது.

    இதுபற்றி தெரியவந்ததும் துணை போலீஸ் கமி‌ஷனர் பெருமாள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் வயர்களை துண்டித்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதோடு மட்டுமல்லாமல் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் கருவிகளையும் எடுத்து சென்றது தெரியவந்தது.

    மேலும் கடையில் பணம் இருப்பதை நன்கு தெரிந்து கொண்டவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. கொள்ளை நடந்த கடைக்கு கைரேகை நிபுணர்கள், துப்பறியும் மோப்பநாய் கொண்டு வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி அருகே திருமண வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுப்பேட்டை:

    பண்ருட்டி அருகே திருமண வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). கொத்தனார். இவருடைய மகன் தாமோதரன். இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தாமோதரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இவர்களது திருமணம் நேற்று முன்தினம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நடைபெற்றது. பின்னர் மாலை பண்ருட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி கண்ணன் தனது வீட்டை நேற்று முன்தினம் அதிகாலை பூட்டிவிட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சியில் மும்முரமாக இருந்தார். இந்த நிலையில் திருமண வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நைசாக உள்ளே புகுந்தனர். பின்னர், அவர்கள் வீட்டில் இருந்த 5½ பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் இரவு 10.30 மணிக்கு மேல் கண்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது நகை-பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    திருமண வீட்டில் நகை-பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிவேல், செல்வம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
    கொள்ளையடித்த பணத்தை வைத்து கொடை வள்ளலான கூரியர் நிறுவன ஊழியர் உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
    மும்பை:

    மும்பை புலேஷ்வர் பகுதியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் ரமேஷ்(வயது36). இவர் கடந்த ஏப்ரல் மாதம் கூரியர் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான ரூ.80 லட்சத்துடன் தலைமறைவானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை தேடிவந்தனர்.

    இந்தநிலையில் 20 நாட்களுக்கு முன் உத்தரபிரதேச மாநிலம் விருந்தாவனில் உள்ள ஒரு கோவிலுக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் கோவிலுக்கு நன்கொடையை அள்ளி வழங்கினார். மேலும் பக்தர்களுக்கு ரூ.8 லட்சம் செலவில் உயர்தர உணவினை அன்னதானமாக வழங்கினார்.

    இதேபோல கோவில் வளாகத்தில் இருந்த ஆதரவற்றவர்களுக்கு ஆயிரக்கணக்கில் தானமாக கொடுத்தார். இதனால் அந்த வாலிபர் அப்பகுதி மக்களுக்கு ‘கொடை வள்ளலாக' காட்சி தந்தார்.

    ஆனால் வாலிபர் மீது உள்ளூர் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த தொடங்கினர். இந்தநிலையில் தான் மும்பை போலீசார் ரூ.80 லட்சம் கொள்ளை சம்பவம் குறித்து உ.பி. போலீசாரிடம் விசாரித்தனர். உ.பி. போலீசார் அந்த நேரத்தில் தங்கள் ஊருக்கு வந்துள்ள புதிய கொடை வள்ளல் குறித்து கூறியுள்ளனர். விசாரணையில், மும்பையில் கூரியர் நிறுவன உரிமையாளரிடம் கொள்ளையடித்தவர் தான் விருந்தாவன் கோவிலில் ரூ.8 லட்சத்திற்கு அன்னதானம் கொடுத்தவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு சென்ற மும்பை போலீசார், உ.பி. போலீசார் உதவியுடன் ரமேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான 5 ஐபோன்கள் மற்றும் 1¼ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    கொள்ளையடித்து செய்த பாவத்தை போக்க கோவில்களுக்கு சென்று தானம், தர்மம் செய்ததாக ரமேஷ் போலீசாரிடம் கூறியுள்ளார். 
    விளையாட்டு உபகரண கடையில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கே.கே.நகர்:

    திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகரை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 39), இவர் அதே பகுதியில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இரவு வழக்கம் போல் வியாபாரத்தினை முடித்து விட்டு கடையினை பூட்டி சென்றார். காலை கடையில் கொள்ளை நடந்திருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் முன்பக்க கதவின் (சட்டர்) பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது.

    இது குறித்து அவர் கே.கே. நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு உப கரணங்கள் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. 

    இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந் நிலையில் கே.கே.நகர் அய்யப்பநகரை சேர்ந்த ராஜா (வயது 18) என்பவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் கடையில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். அவரிடமிருந்து விளையாட்டு பொருட்கள், ரூ. 4 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ராஜாவிடம் விசாரணை நடந்து வருகிறது.
    வில்லியனூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் செல்போன்கள் மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    சுல்தான் பேட்டை நடுத் தெருவை சேர்ந்தவர்முகமது யாகூப் (வயது 42). இவர் வில்லியனூர்-பெரம்பை செல்லும் சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ராமபரதேசி சாமி சித்தர் கோவில் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் முகமது யாகூப் செல்போன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை 6 மணிக்கு பக்கத்து கடைக்காரர் கடையை திறக்க வந்த போது செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷெட்டர் கதவு திறந்து கிடந்ததை கண்டார்.

    முகமது யாகூப்புக்கு இதுபற்றி அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பதறியடித்துக் கொண்டு கடைக்கு வந்தார். அப்போது கடையின் 3 பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு கடையில் விற்பனைக்கு வைத்திருந்த விலை உயர்ந்த 6 செல்போன்கள், ரீசார்ஜ் கார்டுகள் மற்றும் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு முகமது யாகூப் திடுக்கிட்டார்.

    கொள்ளை போன செல்போன்கள், ரீசார்ஜ் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.75 ஆயிரமாகும்.

    யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டுகளை உடைத்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து முகமது யாகூப் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    கொள்ளை நடந்த இடம் எப்போதும் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும்.

    மேலும் செல்போன் கடை அருகே போக்குவரத்து போலீஸ் நிலையமும் உள்ளது. அவ்வாறு இருக்க மர்ம நபர்கள் துணிச்சலாக பூட்டுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கிகளுடன் வந்த கொள்ளையர்கள் 45 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். #bankrobbery #odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ரூர்கேலா நகரம். இந்த நகரத்தின் பஜார் பகுதியில் பிரபல இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை அமைந்துள்ளது. இன்று காலை 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 7 கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்து வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.

    இதையடுத்து வங்கி ஊழியர்களை தாக்கி அவர்களிடம் இருந்து வங்கியின் கஜானா சாவியை பறித்துக்கொண்ட கொள்ளையர்கள், 45 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், வங்கியில் உள்ள 
    சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்குகளையும் கைப்பற்றி பின் தப்பிசென்றுள்ளனர்.



    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக சம்பவம் தொடர்பான விசாரணையில் கொள்ளையர்கள் இந்தி மொழியில் பேசிக்கொண்டதாக சம்பவ இடத்தில் இருந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து,  அண்டை மாநிலங்களை சேர்ந்த கொள்ளை கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப்பகலில் நகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள வங்கியில் நடைபெற்ற இந்த துணீகர கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #bankrobbery #odisha
    டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து, ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கோபால்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்த கோபால்பட்டியில், பாறைப்பட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக தாடிக்கொம்புவை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 47), விற்பனையாளர்களாக அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன், கோபால்பட்டியை சேர்ந்த பவுல் ஏஞ்சல் ஸ்டீபன் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

    நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலை முடிந்து ஊழியர்கள், கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை 7 மணி அளவில் டாஸ்மாக் கடை வழியாக தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து விற்பனையாளர் பவுல்ஏஞ்சல் ஸ்டீபனுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் அவர், உடனடியாக டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மதுபான பாட்டில்கள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர், உயர் அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் டாஸ்மாக் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். பின்னர் கடையின் இருப்பை ஆய்வு செய்தபோது, மொத்தம் 124 மதுபான பெட்டிகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

    நேற்றுமுன்தினம் மாலை வரை 300 மதுபான பெட்டிகள் விற்பனைக்காக இருந்துள்ளது. இரவு 7 மணி அளவில் மேலும் 280 மதுபான பெட்டிகள் லாரி மூலம் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளது. அதனை சரிபார்த்து விற்பனை கணக்கை முடித்துவிட்டு இரவு 10.30 மணிக்கு பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

    இதையடுத்து நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள், மதுக்கடையின் பூட்டை உடைத்து 124 மதுபான பெட்டிகளை மட்டும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சம்பவ இடத்துக்கு திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்து கொண்டனர்.

    இதற்கிடையே கொள்ளை சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கடையை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் திண்டுக்கல் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாசினி, போலீஸ் துணை சூப்பிரண்டு கோபால் ஆகியோரும் விசாரணை நடத்தினர்.

    கடந்த மாதம் திண்டுக்கல் அருகே ராஜக்காபட்டியை அடுத்த பூசாரிபட்டியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் கொள்ளை போனது. அந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தான் இந்த சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சென்னையில் வழிப்பறி கொள்ளையை தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, 3 நாட்களாக இரவு விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.
    சென்னை:

    சென்னையில் வழிப்பறி கொள்ளையை தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, கடந்த திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் இரவு விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    புதன்கிழமை அன்று 3-வது நாளாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சந்தேக நபர்கள் 462 பேரும், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 10 பேரும், பழைய குற்றவாளிகள் 4 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 31 பேரும் பிடிபட்டனர்.

    மேலும் குற்றப்பின்னணி கொண்ட 32 பேரும் போலீசார் சோதனையில் சிக்கினார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 34 பேர்கள் மீது வழக்கு போடப்பட்டது. இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    ×