search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    பெருங்குடி அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்கள், பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை, பெருங்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட வலையப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு திருமங்கலம் கொடி மரத்தெருவைச் சேர்ந்த அப்துல் ரகு (வயது 44) என்பவர் மேலாளராகவும், முருகேசன் என்பவர் உதவியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருவரும் கடையை மூடிவிட்டுச் சென்றனர்.

    வலையப்பட்டியைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (48) என்பவர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள கட்டிடத்தில் தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் ரொக்கம், 144 மது பாட்டில்களை திருடினர்.

    அப்போது சத்தம் கேட்டு எழுந்த இப்ராகிம்ஷா திருடன்.... திருடன்... என கூச்சலிட்டார். இதையடுத்து உஷாரான கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்களை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

    கொடைக்கானலில் வெளி மாவட்டங்களை சேர்ந்த கொள்ளையர்கள் சமீப காலமாக ஊடுருவி வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் நடப்பது போல பைக்கில் சென்று கொள்ளையடித்து கைவரிசை காட்டி வருவது நகர மக்களை பீதி அடைய வைத்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் லாஸ்காட்ரோடு பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த கார்மெல்மேரி (வயது38) என்பவரிடமிருந்து அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மேல்மலை கூக்கால் கிராமத்தைசேர்ந்த சிவா (19), நவரத்தினம் என்ற ராசுக்குட்டி (19),விஜய் என்ற கட்டாரி (16)ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பையை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

    அந்த பெண் கூச்சலிடவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெருமாள் மலை சோதனைச் சாவடி போலீசார் வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மூவரையும் கைது செய்தனர்.

    கொடைக்கானல் சப்-இன்ஸ்பெக்டர் பொன்குண சேகரன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த கைப்பையை கைப்பற்றி அதில் இருந்த பணம் மற்றும் பொருட்களை பெண்ணிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் கொடைக்கானல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    கானத்தூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    கானத்தூரை அடுத்த உத்தண்டி காட்டகிரண்ட் பகுதியில் வசித்து வருபவர் சுனில். இவர் தரமணியில் உள்ளவர் உலக வங்கி அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை திரும்பி வந்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 90 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.

    இது குறித்து கானத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர்.

    எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகின்றனர். #tamilnews
    களக்காடு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    களக்காடு

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மேல்கரையை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் தங்கியிருந்து கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தா (வயது 38). சம்பவத்தன்று வசந்தா தனது மகளை பள்ளியில் விடுவதற்காக களக்காட்டிற்கு சென்று விட்டார். 

    இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டின் பின் பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த செயின், மோதிரம், கம்மல் உள்பட 8.25 பவுன் எடை கொண்ட தங்க நகைகளையும் மற்றும் ரூ. 30 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர். 

    இவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். பின்னர் வசந்தா வந்து பார்த்த போது கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    நாமக்கல்லில் லாரி அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அன்புநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (35). லாரி அதிபரான இவர் குடும்பத்துடன் கடந்த 24 ந் தேதி திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    நேற்றிரவு சிவக்குமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் எல்.டி.டிவியை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது தெரியவந்தது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. சிவக்குமார் ஊரில் இல்லாத சமயம் பார்த்த மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதனால் உள்ளூரை சேர்ந்த கொள்ளையர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து சிவக்குமார் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சங்கரன்கோவில் பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பாறை பட்டி, பிள்ளைகுளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை நடந்தது. இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் சித்ரகலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் நாகை மாவட்டம் திருகுவளை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது25), அரவிந்தன் (எ) ரூபன்ராஜ் (23), பாலசிங்கம் (24) ஆகியோர் என்பதும், இவர்கள் பிரபல கொள்ளையர்கள் என்றும் தெரியவந்தது.

    3 பேரும் சங்கரன்கோவில் பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மாரியப்பன் பைக்கில் சென்று கொள்ளையடிப்பதும், அதற்கு மற்ற 2 பேரும் உதவியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    சத்திரப்பட்டி அருகே தொழிலாளி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள தேவத்தூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் நாட்ராயன். கூலி தொழிலாளி. அவரது மனைவி குப்பாத்தாள் . இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டனர்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் ஏறி குதித்தனர். பூட்டியிருந்த பூட்டை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    மாலை வீட்டிற்கு வந்த குப்பாத்தாள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை- பணம் மாயமானது கண்டு பதறினார்.

    இதுகுறித்து உடனே அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அம்பிளிக்கை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒட்டன்சத்திரம் அருகே விலாசம் கேட்பதுபோல் பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து மனைவி செல்லம்மாள் (வயது50). சின்னகரட்டு பட்டி சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே வந்த 2 மர்ம நபர்கள் செல்லம்மாளிடம் முகவரி கேட்டனர். அவர் வழி கூறிக்கொண்டிருக்கும் போதே திடீரென செல்லம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போட்டார்.

    இருந்த போதும் சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரத்தில் மார்க்கெட் உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்கள் வருகின்றனர். மேலும் வடமாநிலத்தில் இருந்தும் கட்டிட தொழிலுக்கு பணியாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

    இவர்களில் சிலர் தனியாக உள்ள வீடு மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் பணம், நகைகளை கொள்ளைடித்து விட்டு வெளியூர்களுக்கு தப்பி சென்று விடுகின்றனர்.

    இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதியின் வீட்டுக்குள் புகுந்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

    மேலும் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஆட்டோ, மோட்டார் சைக்கிள் திருட்டு என குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொடைரோடு:

    திண்டுக்கல் அருகே கொடைரோடு மாலைய கவுண்டன்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று வியாபாரம் முடிந்ததும் விற்பனையாளர்கள் மற்றும் பாரில் வேலை செய்பவர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.

    தோட்டத்து காவலுக்கு வெள்ளிமலை (வயது 45) என்பவர் மட்டும் இருந்தார். நள்ளிரவு சமயத்தில் இங்கு காரில் வந்த முகமூடி கும்பல் வெள்ளிமலையை கத்தியை காட்டி மிரட்டியது. மேலும் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்து விட்டு கடையை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் சாவகாசமாக அமர்ந்து மதுகுடித்து கும்மாள மிட்டனர். அங்கிருந்த 240 மது பாட்டில்களையும் பணம் ரூ.900த்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து காரில் ஏறி தப்பிச் சென்றனர். முகமூடி அணிந்திருந்ததால் வந்தவர்கள் அடையாளம் தெரிய வில்லை. இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை விற்பனை தொகையை விற்பனையாளர்கள் எடுத்துச் சென்றதால் பெருமளவு பணம் தப்பித்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அருகே யாகப்பகன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளை நடந்தது. தற்போது காவலாளி உள்ள கடையிலேயே அவரை மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதியில் பக்தர்கள் மற்றும் பயணிகளிடம் பணம், நகை கொள்ளையடித்து வந்த 9 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் பக்தர்கள் மற்றும் பயணிகளிடம் பணம், நகை கொள்ளையடித்து வந்த 9 பேர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதியில் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் குற்றங்கள் புரிபவர்களை கண்டறிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஒரு கும்பல் பக்தர்கள் போல் நடித்து சகபயணிகள் மற்றும் பக்தர்களிடமிருந்து பணம், நகை கொள்ளையடித்து வந்ததை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கண்டறிந்தனர். அந்த கும்பல் தங்கியிருந்த இடத்துக்கு சென்று 5 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 100 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள் ரூ. 30 ஆயிரம் ரொக்கம், ஒரு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    கைது செய்யப்பட்டவர்கள் கர்நாடகா மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்த பேலா (45), ரேணுகா (55), கார்த்திக் (20), சந்தோஷ் (28), வாணிஸ்ரீ (50), சவிதா (30), நாகராஜூ (21), மது (20), அனூப் (24) என்பது தெரியவந்தது.தெலுங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு திருட்டு செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இவர்க்ள் அனைவரும் திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாதவரத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதவரம்:

    மாதவரம் பால் பண்ணை சி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி சரளா. ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்.

    கணவன்-மனைவி இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த வாரம் கேரளா சென்றனர். இந்த நிலையில் அவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரும் மாயமாகி இருந்தது.

    சந்தேகம் அடைந்த அவர்களது உறவினர் மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருந்தன. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து காரையும் திருடி சென்றிருப்பது தெரிந்தது.

    போலீஸ் விசாரணையில் கொள்ளையர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றதும், அங்கு இருந்த சாவியை எடுத்து நகை-பணத்தை திருடியதும், வீட்டின் முன்பு நின்ற காரை திருடி சென்றதும் தெரியவந்தது.

    ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆரணி:

    ஆரணி அடுத்த திருமணி கிராமத்தில் வந்தவாசி செல்லும் சாலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு மர்ம கும்பல் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×