search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96851"

    • இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கணம்'.
    • இப்படத்தில் நடிகர் கார்த்தி பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

    அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடிக்க அவருக்கு அம்மாவாக நடிகை அமலா நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    கணம் போஸ்டர்

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'கணம்' படத்தின் அடுத்த பாடலான 'மாரிபோச்சோ' பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

    தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற தலைப்பில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
    • இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் கார்த்தி நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் தனது 70 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளில் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். மேலும் விஜயகாந்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

     

    வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வருவாரா? அவரை பார்க்க முடியுமா என்று தொண்டர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்கள் முன் உற்சாகமாக கைகளை அசைத்ததோடு வெற்றியை குறிக்கும் வகையில் பெரு விரலையும் வளைத்து காட்டி அனைவரையும் சந்தோஷப்படுத்தினார்.

    இந்நிலையில் விஜயகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் சங்கம் சார்பில், பொருளாளர் கார்த்தி நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இவருடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமசந்திரன் ஆகியோர் இருந்தனர். 

     

    • குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜு முருகன்.
    • ராஜு முருகன் இயக்கத்தில் புதிய படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.

    குக்கூ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து இவர் ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனான கார்த்தி நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக இருக்கின்றன. இதைத்தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

     

    கார்த்தி

    கார்த்தி

    இந்நிலையில் பெயரிடப்படாத இப்படத்தில் இதுவரை கார்த்தி ஏற்காத புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இதற்கான ஒத்திகை மற்றும் பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கதைகளை வித்யாசமாக தேர்வு செய்து நடிக்கும் கார்த்தி படத்திற்காக எடுக்கும் இந்த முயற்சி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

    • முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான படம் விருமன்.
    • விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார்.

    விருமன்

    விருமன்

     

    மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கார்த்தி

    கார்த்தி

     

    இந்நிலையில் விருமன் திரைப்பட வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் கார்த்தி, சூரி, நடிகை அதீதி சங்கர், இயக்குனர் முத்தையா உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்தனர். மதுரை திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்த நடிகர் கார்த்தி பேசியதாவது, மதுரை ரசிகர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி என்றும், விருமன் படத்தை வெற்றியடைய செய்த ரசிகர்களுக்கும், திரையரங்கு நிர்வாகிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்துக் கொண்டார்.

    • முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான படம் விருமன்.
    • இப்படத்தில் இடம்பெற்ற 'கஞ்சா பூ கண்ணால' பாடல் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.

    நடிகர் கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் விருமன். இந்த படத்தில் 'கஞ்சா பூ கண்ணால' என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இளைஞர்கள் அதிகம் பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலையில், கஞ்சாவை மையப்படுத்தி பாடல் வரிகள் இடம் பெறலாமா என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

     

    விருமன்

    விருமன்

    இந்த நிலையில், 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்காக தான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக பாடலை எழுதிய பாடலாசிரியர் மணிமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, மயக்கும் தன்மைக்காக பெண்ணின் கண்களை கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும், கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.

     

    பாடலாசிரியர் மணிமாறன்

    பாடலாசிரியர் மணிமாறன்

    மேலும், பாடலின் வரிகள் கற்பனைக்காக உவமைப்படுத்தப்பட்டது என்று கூறிய அவர், தான் எழுதியது தவறான வார்த்தைதான் என்றும் கூறினார். இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான படம் விருமன்.
    • இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் அதிதி.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அதிதி அறிமுகமாகியுள்ளார். விருமன் படத்தில் அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். 'முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

     

    அதிதி

    அதிதி

    அதிதி, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஷங்கரின் மகள் என்பதாலேயே அவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என விமர்சனங்கள் எழுந்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை ஆத்மிகா மறைமுகமாக இதுகுறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

    அதிதி

    அதிதி

     

    இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அதிதி பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "என் அப்பாவால் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஆனால் திறமை இல்லாவிட்டால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காது. ரசிகர்கள் ஆதரிக்க மாட்டார்கள். இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியாது. வாரிசு அந்தஸ்து இல்லை, மாறாக திறமைதான் கை கொடுக்கும்". என்று அவர் கூறியுள்ளார்.இவரின் இந்த கருத்துக்கு பலரின் ஆதரவு கிடைத்து வருகிறது.

    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    விருமன்

    யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் படக்குழு பலரும் அவர்களுடைய குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் சூர்யா பேசியதாவது, "எங்களுக்கு பின்னாடி இருக்கும் மிகப்பெரிய பலம் எங்கள் வீட்டு பெண்கள் தான். அவர்களின் தியாகம் மிகப்பெரியது. ஒரு ஆண் இங்கே வெற்றி பெறுவது எளிது. ஆனால், ஒரு பெண் வெற்றிபெற பத்து மடங்கு போராட வேண்டியிருக்கிறது.


    கார்த்தி - சூர்யா

    வீட்டிலிருக்கும் ஆண் மகனை முன்னிறுத்தி அவர்கள் பின்னால் இருக்கிறார்கள். என் தங்கச்சி சொன்னது தான் எனக்கு இப்போது நியாபகம் வருகிறது. 'எங்களுக்கு சொர்க்கம் எதுன்னா, நாங்க சாப்பிட்ட தட்ட இன்னொருத்தங்க கழுவுறது தான்' என்று சொன்னார்கள். பெண்களை ஒவ்வொரு முறையும் முன்னிறுத்தி அவர்களை புரிந்துகொள்ள வேண்டும்'' என்று பேசினார்.

    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    விருமன்

    யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் படக்குழு பலரும் அவர்களுடைய குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் கார்த்தி பேசியதாவது "வெற்றி அடிக்கடி கிடைப்பதில்லை. கிடைக்கும்போது கொண்டாடிவிட வேண்டும். பெரிய குடும்பத்தின் வெற்றி இது.


    கார்த்தி - சூர்யா

    ஒவ்வொரு நாளும் முத்தையா கண்ணீருடன் தான் கதை சொல்வார். விட்டுக் கொடுத்துப் போவதில் தான் குடும்பத்தின் அழகே இருக்கிறது. கூட்டு குடும்பமாக வாழ மிகப்பெரிய சகிப்புத்தன்மை தேவை. நம்மைவிட அவர்கள் முக்கியம் எனக் கருத வேண்டும்.

    இந்தப்படம் கிராமத்தில் ஓடும். நகரத்தில் சந்தேகம்தான் என்றார்கள். ஆனால், நகரத்தில் நான் கேட்டே படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. குடும்பங்களின் தியாகத்தால் தான் நாங்கள் வெளியில் வந்து வேலை செய்ய முடிகிறது'' என்று பேசினார்.

    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

     

    கார்த்தி - சூர்யா

    கார்த்தி - சூர்யா

    யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

     

    சூர்யா - கார்த்தி - அதிதி சங்கர்

    சூர்யா - கார்த்தி - அதிதி சங்கர்

    இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் படக்குழு பலரும் அவர்களுடைய குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். அப்பொழுது நடிகர் கார்த்தியுடன் அதிதி சங்கர் கபடி விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

    • தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
    • இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

    தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா, நந்தா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

     

    நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது, கட்டிட நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் வசந்த் உள்ளிட்டோர் நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு பாராட்டு தெரிவித்து நினைவு சின்னம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    பின்னர் நடிகர் சங்க கட்டிட நிதியாக சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து நடிகர் சங்க கட்டிட நிதியாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை நாசரிடம் வழங்கினார்கள்.

    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • விருமன் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    விருமன்

    யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'விருமன்' படத்தின் ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது.

    இதில் தனக்கு முதல் எதிரியான தன் அப்பா பிரகாஷ் ராஜை அடித்தவனுக்கு மேல தாளத்தோடு வந்து பிரகாஷ் ராஜ் முன்பே மோதிரம் போடுவது போல் வெளியாகியுள்ளது இந்த ஸ்னீக் பீக். ''விருமன்'' திரைப்படம் நாளை ( ஆகஸ்ட் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • விருமன் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், யுவன் சங்கர் ராஜா மற்றும் அதிதி சங்கர் இணைந்து பாடியுள்ள "மதுர வீரன்" பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் மூலம் அதிதி சங்கர் பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.


    விருமன்

    இந்நிலையில், இந்த பாடலை முதலில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில் பாடியுள்ளார்.  அதன்பின்னர் "மதுர வீரன்" பாடல் அதிதி சங்கர் குரலில் வெளியாகியுள்ளது. இதனால் பலரும் அதிதி சங்கரை விமர்சித்து வந்தனர். இது தொடர்பாக பேசியுள்ள பாடகி ராஜலட்சுமி சினிமாவில் இவ்வாறு நடப்பது சகஜம் தான்.

    ஒரு பாடல் யார் படினால் நன்றாக இருக்கும் என்பதை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி மதுரை வீரன் பாடலுக்கு அதிதியின் குரல் பொறுத்தமாக இருந்ததால் பாட வைத்துள்ளனர். அவரும் அருமையாக பாடியுள்ளார். சரியான ஆளுக்குதான் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். இதற்காக அதிதியை விமர்சிப்பது வருத்தமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

    விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×