search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96851"

    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது.

    கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூரி, அகரம் அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.


    சூரி

    இதையடுத்து, விருமன் படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி, "நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டுதான் பேசுவேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் எனதான் பெயர் வைத்துள்ளேன். என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது நான் படிக்காதவன், அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும் என அவர் பேசினார்.

    தற்போது நடிகர் சூரியின் ஒயிலாட்டம்  வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், சூரி கோவில் திருவிழா ஒன்றில் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடுகிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் கைதி.
    • இந்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான "கைதி" திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் "கைதி -2" படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. இதன் பின்னர், கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெளியான "விக்ரம்" திரைப்படத்தில் "கைதி" காட்சிகள் இடம்பெற்றது ரசிகர்கள் மத்தியில் "கைதி -2" படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியை எழுப்பியது.


    கைதி

    இந்நிலையில், "விருமன்" படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம் கைதி -2 படம் எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, அடுத்த ஆண்டு "கைதி -2" திரைப்படம் தொடங்கும். லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தில் கவனம் செலுத்தி வருவதால், அந்த படத்தை முடித்த பின்னர் "கைதி -2" படத்தின் பணிகள் தொடங்கும்" எனக் கூறியுள்ளார்.

    நடிகர் கார்த்தியின் "விருமன்" திரைப்படம் ஆகஸ்ட் -12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • விருமன் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    விருமன்

    இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (03-08-2022) நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் கார்த்தி, "கிராமத்து படங்கள் எவ்வளவு முக்கியம் என்று எல்லோரும் சொன்னார்கள். கிராமத்து படங்களை நிறைய எடுக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு முத்தையா சார் மாதிரி ஆட்கள் தான் உந்துதல்.

    பருத்தி வீரனுக்குப் பிறகு யாராவது கிராமத்துக் கதை கூறினால் பயம் இருக்கும். கொம்பன் கதை கேட்கும்போது தான் அந்த நம்பிக்கை திரும்ப வந்தது. அதன் வெற்றிக்குப் பிறகு இந்த கதை கூறினார். எல்லா கதையிலும் கதாநாயகனுக்கு அப்பா தான் நாயகனாக இருப்பார். ஆனால், இந்த கதையில் அப்பா தான் முதல் வில்லன்.


    கார்த்தி

    யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கும் ஒருவன், அப்பனே தப்பு செய்தாலும் விடமாட்டான் என்று கதை கூறினார். அந்த வரியே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அப்பா யார் என்று கேட்டால், பிரகாஷ்ராஜ் தவிர வேறு ஆள் கிடையாது. அவரை எதிர்த்து நிற்கும் போது தனி சுகம் இருக்கும். அது அவருக்கும் பிடிக்கும்" என்று கூறினார்.

    'விருமன்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • விருமன் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    விருமன்

    யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (03-08-2022) மதுரையில் நடைபெற்றது. விருமன் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி விருமன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு கை எழுதுக்கு மறுகை நிலத்துக்கு, இளையோன் வயித்துக்கு மூத்தவர் அறிவுக்கு, இருவரும் தமிழர் வாழ்விற்கு.. விருமனுக்கும் விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • விருமன் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    கொம்பன் படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

     

    விருமன்

    விருமன்

    இந்த நிலையில் 'விருமன்' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. 'விருமன்' படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. ஆக்சன் காட்சிகளுடன் வெளியான விருமன் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

    'விருமன்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 



    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

    கொம்பன் படத்தினை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    விருமன்

    யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தின் 'மதுர வீரன்' பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இது தனக்கு பிடித்தமான பாடல் என நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.



    • முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

    கொம்பன் படத்தினை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றப் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    விருமன்

    அதன்படி, விருமன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவில், இயக்குனர் பாரதிராஜா, ஷங்கர், சூர்யா, கார்த்தி, சூரி, அதிதி ஷங்கர், இயக்குனர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

    இந்த விழாவில், ஒரு பாடலுக்கு நடன இயக்குனர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் - பாவனியும் நடனமாடுகின்றனர்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இந்த திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான 'பொன்னி நதி' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     

    கார்த்தி - பொன்னியின் செல்வன்

    கார்த்தி - பொன்னியின் செல்வன்

    அந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, உங்கள் அனைவரின் முன்னிலையில் முதல் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது நம்முடைய படம். தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். ஆனால், இப்படத்தில் ஒரு வித்தியாசம். இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். இருப்பினும், திரைப்படமாக பார்க்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது. நான், ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் சார் தான் அதிக நாட்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஜெயராம் சார் மட்டும் தான் நடிகன். நாம் வெறும் 'ந' மட்டும் தான் என்று நானும், ஜெயம் ரவியும் பேசிக் கொள்வோம். அந்தளவுக்கு திறமையான நடிகர் அவர். ஆழ்வார்கடியார் நம்பி 51/2 அடி உயரம். ஆனால், ஜெயராம் சார் 61/2 அடி, 51/2 அடியாக மாறுவதற்கு ஒரு விஷயம் செய்திருக்கிறார். அந்த ரகசியத்தை நான் இப்போது கூற மாட்டேன். ஆனால், அது கற்பனையிலும் நினைக்க முடியாதது.

    பொன்னி நதி, நதிகளில் நாகரிகம் அடைந்தது. நாம் பரிணாம வளர்ச்சியடைந்ததும் நதியில் தான். அந்த காலத்தில் பொன்னி நதி என்று அழைக்கப்பட்டது. இன்று காவிரி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த படத்தை எவ்வளவு போராடினாலும் எடுத்து முடிக்க முடியாது என்ற பலபேர் கூறினார்கள். நாங்கள் படத்தை ஆரம்பித்த பிறகு, கோவிட் வருகிறது. ஆனால், ஒரு நதிக்கு கடல் எங்கு இருக்கிறது என்று எப்படி தெரியுமோ, அதுபோல மணி சாருக்கு இந்த படத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பது தெரியும் என்கிற நம்பிக்கை இருந்தது.

     

    கார்த்தி

    கார்த்தி

    120 நாட்களிலேயே பொன்னியின் செல்வன்-1 மற்றும் பொன்னியின் செல்வன்-2 இரண்டையும் முடித்துவிட்டார். 120 நாட்களில் 2 படங்களை எடுத்து முடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது யாரும் நம்பமாட்டார்கள். விடியற்காலை 2.30 மணிக்கு மேக்கப் அப் போடுவதற்கு தயாராக இருப்போம். ஆனால், அதற்குமுன் எங்களுக்கு மேக்கப் போடுவதற்கு 30 பேர் தயாராக இருப்பார்கள். யாரும் அதிகளவில் தூங்கியதில்லை. புத்தகம் படித்து விட்டு அதை நினைத்துக் கொண்டு படப்பிடிப்பிற்குச் சென்றால், அதைவிட அழகாக மணி சார் அதை உருவாக்கி வைத்திருப்பார்.

    இதுபோன்று ஒரு படம் எடுப்பதற்கு புதிதாக ஒரு மனிதன் பிறந்து 30 வருடங்கள் வளர்ந்து வரவேண்டும். பாடல்களுக்கு இளங்கோ கிருஷ்ணா என்ற புதியவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். பாடல் வரிகளைக் கேட்கும்போது சோழ நாட்டிற்குள் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அனைவருக்கும் நன்றி. இவ்வளவு ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் இருப்பது மிக சிறந்த அனுபவமாக உள்ளது என்றார்.



    • முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன்.
    • இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

    கொம்பன் படத்தினை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    விருமன் போஸ்டர்

    இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், அதிதி சங்கரின் அறிமுக படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளது.


    • பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'.
    • 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'சர்தார்' படத்தின் டப்பிங்கின் போது கார்த்தியுடன் நடந்த உரையாடல் வீடியோவை இயக்குனர் மித்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    கார்த்தி

    அந்த வீடியோவில் மித்ரன், கார்த்தியிடம் "நாயகன் கமல் சார் மாதிரி கொஞ்சம் பேசுங்கள் இந்த வசனம் அதிலிருந்து இன்ஸ்பைர் ஆகி எழுதியது என்று கூறுகிறார். இதற்கு கார்த்தி எங்க நீங்க பேசி காட்டுங்க.., நமக்கு என்ன வருமோ அந்த ஸ்டைல்ல போய்டுவோம்" என்று கூறிவிட்டு "நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் நாற்பதாயிரம் பேருக்கு தெரியுற மாறி பண்ணனும்" என்று படத்தில் இடம்பெற்ற வசனத்தை டப்பிங் பேசுகிறார்.

    • குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜு முருகன்.
    • ராஜு முருகன் இயக்கத்தில் புதிய படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.

    குக்கூ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜு முருகன். இதையடுத்து இவர் ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனான கார்த்தி நடித்துள்ள 'விருமன்', 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராக இருக்கின்றன. இதைத்தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார்.

    விஜய் சேதுபதி - கார்த்தி

    இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது கால்ஷீட் இல்லாத காரணத்தால் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள வில்லன் நடிகருக்கான தேடலில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • மணிரத்னம் இயக்கியுள்ள "பொன்னியின் செல்வன்-1" படத்தின் போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.
    • இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன்-1" வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவையாக திரிஷாவும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில் திரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து அவரை கலாய்த்துள்ளார். அதில், "இளவரசி... ப்ளீஸ் உங்களின் லைவ் லொக்கேஷனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை ட்ராப் ஆஃப் பண்ணனும்" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

    இதற்கு பதிலளித்து பதிவிட்ட திரிஷா, சாரி, அரண்மனையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஸ்மார்ட் ஆட்களுக்கு அனுமதி இல்லை என்று பதிலளித்துள்ளார். இவர்களின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



    ×