search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96851"

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "பொன்னியின் செல்வன்-1".
    • "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தில் பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    ஆதித்ய கரிகாலன்

    ஆதித்ய கரிகாலன்

    இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு வருகிறான் சோழன் என்ற வாசகத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையில் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தில் விக்ரம், ஆதித்ய கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவித்து போஸ்டர் ஒன்றையும் நேற்று படக்குழு வெளியிட்டிருந்தது.

    வந்தியத்தேவன்

    வந்தியத்தேவன்

    தொடர்ச்சியாக இப்படத்தின் அறிவிப்புகளை கொடுத்து வரும் படக்குழு தற்போது ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், கார்த்தி, வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டு கார்த்தியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ராஜ்ஜியம் இல்லா இளவரசன், உளவாளி, துணிச்சலான வீரர்... இதோ வந்தியத்தேவன்! என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    • பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'.
    • 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கானா மற்றும் ஆந்திர வெளியீட்டு உரிமையை நடிகர் நாகர்ஜுனாவின் அன்னப்பூர்ணா ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    கார்த்தி - நாகர்ஜுனா

    இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி " நாகர்ஜுனா காருவுடன் நான் இருக்கும் போது எப்போதும் நல்ல விதமாக உணர்வேன். தற்போது அவர் என் படத்தின் பின்னால் இருப்பதனால் என்னை மிக உறுதியானவனாக உணர்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    மேலும் சர்தார் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் சர்தார்.
    • இப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும்.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ். லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    கார்த்தி நடித்த படங்களிலேயே இது தான் அதிக செலவில் எடுக்கப்பட்டுவரும் படம். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் மற்றும் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூ. 4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகும். மேலும், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஒரு வருட போராட்டத்துக்குப் பின் பிரதமர் மோடி திரும்பப் பெற்றுள்ளார்.
    மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், ஆகவே அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் பல மாதங்களாக இந்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.

    விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும் நடிகர் கார்த்தி முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். தமிழக முதல்வர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.

    கார்த்தி

    நடிகர் கார்த்தி, "மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    ×