search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96860"

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற உள்ள கால்இறுதி ஆட்டத்தில் சுவீடன்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #WorldCup2018

    சமரா:

    உலககோப்பை கால்பந்து போட்டியில் 3-வது மற்றும் 4-வது கால்இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.

    சமரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுவீடன் ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியா (1-0), மெக்சிகோவை (3-0) வென்று ஜெர்மனியிடம் (1-2) தோற்று, கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்து அணி ‘லீக்’ ஆட்டத்தில் துனிசியா (2-1), பனாமா (6-1) அணிகளை வென்று பெல்ஜியத்திடம் தோற்று (0-1) இருந்தது. 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டிஷூட்டில் தான் வென்றது.

    1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி சுவீடனின் அதிரடியை சமாளிப்பது சவாலானது. அந்த அணி பின்களத்தில் வலுவாக இருக்கிறது.

    இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து- 8, சுவீடன்-7-ல் வெற்றி பெற்றுள்ளது. 9 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இங்கிலாந்து அணியில் ஹாரிகேன் முதுகெலும்பாக இருக்கிறார். ஸ்டெர்லிங், லிங்கார்டு போன்ற முன்னணி வீரர்களும் உள்ளனர். சுவீடன் அணியில் கிரண்விஸ்ட், போர்ஸ்பெர்க், பெர்த் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    ரஷியா ‘லீக்’ ஆட்டத்தில் சவுதி அரேபியா (5-1), எகிப்து (3-1) அணிகளை தொடர்ந்து உருகுவேயிடம் 0-3 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்தது.

    குரோஷியா அணி தோல்வி அடையவில்லை. 2-0 என்ற கணக்கில் நைஜீரியாவையும், 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவையும், 2-1 என்ற கணக்கில் ஐஸ்லாந்தையும் தோற்கடித்தது. 2-வது சுற்றில் டென்மார்க்கை பெனால்டிஷூட் அவுட்டில் வீழ்த்தியது.

    குரோஷியா அணி பலம் பொருந்தியவை என்பதால் அரை இறுதிக்கு தகுதி பெறலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். இதேபோல கோல்கீப்பர் அகிள்பீவ் முதுகெலும்பாக இருக்கிறார். குரோஷியா அணியில் மோட்ரிச், மென்டிச், ரகட்டிச் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகள் மோதிய போட்டியில் குரோஷியா 1 ஆட்டத்தில் வென்றது. 2 ஆட்டம் ‘டிரா’ ஆனது. #WorldCup2018

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #BRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.



    இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார். 
    இதையடுத்து எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது. 
    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தனக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை கோலாக மாற்றவில்லை. 

    ஆனாலும், ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் 2-1 என்ற கணக்கில் பிரேசில் பின்தங்கியது.

    ஆட்டத்தின் இறுதிவரை யாரும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #BRABEL #BELBRA #BrazilvBelgium
    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது காலிறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #WorldCup2018 #BRABEL
    உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

    இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.



    இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

    இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது. #WorldCup2018 #FifaWorldCup2018 #BRABEL #BELBRA #BrazilvBelgium
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடி வரும் நெய்மர் அடிக்கடி கீழே விழுந்து 14 நிமிட நேரத்தை வீணடித்து உள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. #FIFA2018 #brazil


    பிரேசில் அணி நட்சத்திர வீரர் நெய்மர் மீது இந்த உலககோப்பை யில் கடும் விமர்சனம் முன் வைக்கப்படுகின்றன. அவர் ஆட்டத்தின் போது எதிரணி வீரர்கள் லேசாக உரசியவுடன் கீழே விழுந்து வலியால் துடிப்பது போல் நடிக்கிறார் என்று மெக்சிகோ பயிற்சியாளர் ஜூவான் கார்லஸ் ஒசோரியம் குற்றம் சாட்டினார்.

    மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தின் போது 71-வது நிமிடத்தில் கணுக்காலில் பிடித்து கொண்டு நெய்மர் வலியால் துடித்தார். உடனே மருத்துவ குழுவினர் மைதானத்துக்குள் வந்து சிகிச்சை அளித்ததால் நேரம் விரயம் ஆனது.

    இதை சுட்டி காட்டிய மெக்சி கோ பயிற்சியாளர், நெய்மரின் செயலால் கடைசி கட்டத்தில் நேரம் வீணாகி எங்கள் வீரர்கள் சோர்வடைந்து விட்டனர் என்றார்.

    இதற்கிடையே சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டி.வி. நிறுவனம் ஒன்று நெய்மர் விளையாடிய 4 ஆட்டத்தையும் ஆய்வு செய்தது. இதில் நெய்மர் அடிக்கடி கீழே விழுந்து வலியால் துடித்ததில் அவர் 14 நிமிட நேரத்தை வீணடித்து உள்ளார் என்று தெரிவித்து இருக்கிறது.

    ஆனால் தன் மீதுள்ள விமர்சனத்தை பற்றி நெய்மர் கவலைப்படவில்லை. அவர் கூறுகையில், விமர்சனத்தையோ, பாராட்டுகளையோ நான் கண்டு கொள்வதில்லை. எனது பணி களம் இறங்கி அணிக்காகவும், சக வீரர்களுக்காகவும் உதவுவது மட்டுமே என்றார். #FIFA2018 #brazil

    உலகக்கோப்பை கால்பந்தில் நாளை இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால்இறுதியில் பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. #FIFA2018 #brazil #belgium
    கசான்:

    உலகக்கோப்பை கால்பந்தில் நாளை இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால்இறுதியில் பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் திறமை வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

    5 முறை உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணி ‘லீக்’ ஆட்டங்களில் கோஸ்டாரிகாவை 2-0 என்ற கணக்கிலும், செர்பியாவை 2-0 என்ற கோல் கணக்கிலும் வென்றது. சுவிட்சர்லாந்துடன் 1-1 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 2-வது சுற்றில் மெக்சிகோவை இரண்டு கோல்போட்டு வீழ்த்தியது.

    பிரேசில் அணி 12-வது முறையாக அரை இறுதியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    நட்சத்திர வீரர் நெய்மர் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார். கோல் அடித்தும், சக வீரர்கள் கோல் போடவும் அவர் திறமையான முறையில் செயல்பட்டு வருகிறார்.



    இதுதவிர கோட்டினா, தியாகோ சில்வா, ஜேசஸ், வில்லியன் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர். கடந்த ஆட்டத்தில் காயத்தால் விளையாடாத மார்சிலோ நாளை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து 7-வது முறையாக பிரேசில் அணி கால்இறுதியில் ஆடுகிறது. இதில் 2006-ல் பிரான்சிடமும், 2010-ல் நெதர்லாந்திடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. மேலும் கடந்த 3 உலககோப்பையில் ஐரோப்பிய அணியிடம் தோற்று வெளியேற்றப்பட்டு இருக்கிறது. கடந்த உலக கோப்பையில் அரை இறுதியில் ஜெர்மனியிடம் மோசமாக தோற்று வெளியேற்றப்பட்டது.

    இதனால் ஐரோப்பிய கண்டத்தில் தற்போது பலம் பொருந்திய அணியாக திகழும் பெல்ஜியத்துடன் மிகவும் கவனமாக விளையாட வேண்டும். பெல்ஜியம் அதிரடியை சமாளிப்பது சவாலானது.

    பெல்ஜியம் இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. அந்த அணி ‘லீக்’ ஆட்டங்களில் பனாமா (3-0), துனிசியா (5-2), இங்கிலாந்து (1-0) ஆகிய அணிகளை வென்று இருந்தது. 2-வது சுற்றில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 2 கோல் வாங்கி பின்தங்கி இருந்த நிலையில் 3 கோல் போட்டு முத்திரை பதித்தது.

    பெல்ஜியம் அணியில் கேப்டன் ஹசாட், லுகாகு போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருவரும் சிறந்த முன்னாள் வீரர்கள். பிரேசில் பின்கள வீரர்களுக்கு அவர்கள் சவாலாக இருப்பார்கள்.

    2-வது முறையாக அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் பெல்ஜியம் உள்ளது. கடந்த உலக கோப்பையில் அந்த அணி கால்இறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்று இருந்தது.

    இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 3 ஆட்டத்திலும், பெல்ஜியம் 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. உலக கோப்பையில் ஒருமுறை மோதியுள்ளன. 2002-ம் அண்டு நடந்த போட்டியில் பிரேசில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்தது.

    தற்போது உள்ள பெல்ஜியம் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும். #FIFA2018 #brazil #belgium
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் செர்பியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேசில் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #SRBBRA

    மாஸ்கோ:

    32 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. மாஸ்கோவில் நடைபெற்ற லீக் போட்டியில் பிரேசில், செர்பியா அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டி இரு அணிக்கும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பாலின்ஹோ சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது.  



    செர்பியா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் பிரேசில் அணிக்கு சாதகமாக அமைந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் தியாகோ சில்வா கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 2-0 என முன்னிலை பெற்றது. 



    செர்பியா அணி இறுதிவரை கோல் அடிக்காததால், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #SRBBRA
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. #WorldCupRussia #FIFA2018
    தனது தொடக்க ஆட்டத்தில் (இ பிரிவு) சுவிட்சர்லாந்துடன் ‘டிரா’ கண்ட 5 முறை சாம்பியனான பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மாரை, சுவிட்சர்லாந்து வீரர்கள் குறி வைத்து தாக்கினர். பிடித்து இழுப்பது, காலை இடறி விடுவது என்று 10 முறை அவரை பவுல் செய்தனர். உலக கோப்பையில் கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பிட்ட வீரர் மீது இத்தனை முறை ‘பவுல்’ செய்யப்பட்டது அது தான் முதல் முறையாகும். எப்படியோ இன்றைய ஆட்டத்தில் நெய்மார், பிலிப் காட்டினோ, கேப்ரியல் ஜீசஸ் உள்ளிட்டோர் மீதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் பிரேசிலின் கேப்டனாக மார்சிலோ இருந்தார். சுழற்சி அடிப்படையில் இந்த ஆட்டத்தில் தியாகோ சில்வா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 1960-ம் ஆண்டுக்கு பிறகு பிரேசிலை வெல்ல முடியாமல் தவிக்கும் கோஸ்டாரிகா அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தீவிரம் காட்டும்.

    ‘இ’ பிரிவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் செர்பிய அணி 2-வது வெற்றியை நோக்கி, சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. தொடக்க ஆட்டத்தில் கோஸ்டாரிகாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த செர்பிய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டால் 2-வது சுற்றை எட்டி விடும். மாறாக அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க சுவிட்சர்லாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி காண வேண்டியது அவசியமாகும்.

    குறைந்த மக்கள் தொகையை கொண்ட ஐஸ்லாந்து நாடு, தனது முதல் ஆட்டத்தில் (டி பிரிவு) பலம் வாய்ந்த அர்ஜென்டினாவுடன் பதற்றமின்றி விளையாடி டிரா செய்தது. அந்த அணி உலக கோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் ஆப்பிரிக்க தேசமான நைஜீரியாவுடன் இன்று கோதாவில் இறங்க காத்திருக்கிறது. அதே நேரத்தில் தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் உதைவாங்கிய இளம் வீரர்களை கொண்ட நைஜீரியா அணி, கடந்த உலக கோப்பையை போன்று நாக்-அவுட் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை பெற வேண்டும் என்றால், இன்றைய ஆட்டத்தில் ஐஸ்லாந்தை புரட்டியெடுத்தாக வேண்டும். #WorldCupRussia #FIFA2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற பிரேசில், சுவிட்சர்லாந்து இடையிலான லீக் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. #WorldCup2018 #FIFA2018 #BRASUI

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் செர்பியா, கோஸ்டா ரிகா அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் மெக்சிகோ, ஜெர்மனி அணியையும் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

    இப்போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிலிப்பே கவுடின்ஹோ கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்து அணியினர் எவ்வளவு முயன்றும் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் ஸ்டீவன் ஜூபர் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் இரு அணியினரும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். ஆனால் இறுதிவரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.



    இதைத்தொடர்ந்து இன்று நடைபெற உள்ள லீக் போட்டிகளில் ஸ்வீடன் - கொரியா குடியரசு, பெல்ஜியம் - பனாமா, துனிசியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #BRASUI
    லாரிகள் ஸ்டிரைக் எதிரொலியால் பிரேசில் நகரத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார். #MichelTemer #Lorrystrike

    சாவ்பாங்லோ:

    பிரேசில் நாட்டின் தொழில் நகரம் சாவ்பாவ்லோ. இங்கு லாரி மற்றும் வாகனங்களின் வேலைநிறுத்த போராட்டம் 5 நாட்கள் நடக்கிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுகிறது.

    லாரிகள் இயக்காமல் நடுரோடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரக்குகள் ஏற்றிச் செல்லப்படாததால் பொருட்களுக்கு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே நிலைமையை சமாளிக்க சாவ்பாவ்லோ நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் பிறப்பித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து ரோடுகளில் நிறுத்தப்பட் டுள்ள லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசரநிலை பிரகடனம் குறித்து அதிபர் டெமர் டி.வி.யில் உரை நிகழ்த்தினார். #MichelTemer #Lorrystrike

    பாதத்தில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைந்து வரும் நிலையில், உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கவலையில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் உள்ளார். #Brazil #football #neymar
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் விளையாடியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காத நெய்மர், ஜூன் மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறார்.

    இந்நிலையில், நெய்மர் தனது கால் காயம் மற்றும் உலகக் கோப்பை எதிர்பார்ப்பு குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், தனது காயம் மிக கடுமையானது என்றும், மூன்று மாதங்களாக விளையாடாமல் உலகக் கோப்பையில் விளையாடுவது மிகப்பெரிய சவால் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

    மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயம் இருந்தபோதிலும், மருத்துவர்களின் அறிவுரைகளுக்குப் பிறகு தற்போது மன அமைதி கொண்டுள்ளதாகவும், அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். #Brazil #football #neymar
    ×