search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெர்மனி"

    புதிய நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறினார்.
    பெர்லின்:

    ஜெர்மனியில் கொரோனா தொற்று குறையாத நிலையில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. 

    தடுப்பூசி போடப்படாதவர்களுக்கான கட்டுப்பாடுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறும் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படும். இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த அதிபர் ஏஞ்சலா மெர்கெல் மற்றும் 16 மாநிலங்களின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த விதிமுறையின்படி, தடுப்பூசி போடப்படாதவர்கள் சில இடங்களில் இருந்து விலக்கப்படுவார்கள்.

    கடந்த ஏழு நாட்களில் 100,000 பேருக்கு மூன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு நிலவரம் மோசமாக உள்ளதாக பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறினார். புதிய நோயாளிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    ஜெர்மனியில் நேற்று 65,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து அதிக அளவிலான தினசரி பாதிப்பு ஆகும்.

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில், 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டார். இதில் 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.



    மற்றொரு ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஹூர்காச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 
    5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.
    பெர்லின்:

    வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசல் என்பது முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது. இதற்கு தீர்வுகாணும் வகையில் வானில் பறந்து செல்லும் ஏர்டாக்சிகளை உருவாக்கி குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன.



    அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனமான லில்லியம், இத்தகைய பறக்கும் காரை 2025-ம் ஆண்டுக்குள் போக்குவரத்து சேவைக்கு அறிமுகப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை அந்நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. லில்லியம் ஜெட் என பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் கார் ‘ரிமோர்ட் கண்ட்ரோல்’ மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பறக்கும் கார் மணிக்கு 300 கிலோ மீட்டர் வரை பறக்க இயலும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ஜெர்மனியில் இந்தியர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Indianmurder

    புதுடெல்லி:

    இந்தியாவைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ஸ்மிதா சாரூர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஜெர்மனியில் முனீச் நகரம் அருகே தங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் பிரசாந்தும், அவரது மனைவி ஸ்மிதாவும் கத்தியால் குத்தப்பட்டனர். அவர்களில் பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்மிதா காயத்துடன் உயிர் தப்பினார்.

    முனிச் நகரில் குடியேறி இருக்கும் மற்றொரு வெளி நாட்டுக்காரர் இக்கொலையில் ஈடுபட்டார். இந்ததகவலை மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    மேலும் பிரசாந்த்-ஸ்மிதாவின் 2 குழந்தைகளையும் முனிச் நகரில் உள்ள இந்திய தூதரகம் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மற்ற விரிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

    டுவிட்டரில் தன்னை சவ்கிதாரி (காவலாளி) என சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு டுவிட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் விளக்கம் கேட்டார்.

    அதற்கு பதில் அளித்த அவர், “ஏனெனில் நலன் விரும்பிகளுக்கும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் நான் காவலாளியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    ரபேல் போர் விமான விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியை காவலாளியே ஒரு திருடனாக இருக்கிறார் என குற்றம் சாட்டினார். எனவே மோடி தன்னை ஒரு சவ்கிதாரி (காவலாளி) என குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து பா.ஜனதா தலைவர்களும் மந்திரிகளும் தங்களது பெயருக்கு முன்னாள் சவ்கிதாரி’ என சேர்த்துக் கொண்டனர். #Indianmurder

    பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக பிரான்சு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. #MasoodAzhar
    பெர்லின்:

    புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத அமைப்பு தலைவர் மவுலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்க கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 4-வது தடவையாக தடுத்து நிறுத்தியது.



    இதற்கிடையே புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை சர்வதேச நாடுகளிடம் இந்தியா கொண்டு சென்றது. அதை தொடர்ந்து பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிராக பிரான்சு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு பெருகியுள்ளது.

    தீர்மானத்துக்கு தற்போது ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் ஹன்ஸ் கிறிஸ்டியன் வின்கலர் உறுதி செய்துள்ளார்.

    இதுகுறித்து ஐரோப்பிய யூனியனில் ஆலோசிக்கப்பட்டது.அதில் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் அனைத்தும் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க கோரும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 உறுப்பினர்களில் 14 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. #MasoodAzhar
    மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெர்மனியில் ஆங்குஸ்டா-விக்டோரியா என்ற பழமையான பள்ளிக்கூடத்தில் காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டு உள்ளது. #MahatmaGandhi #Germany
    பெர்லின்:

    மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜெர்மனியில் உள்ள டிரையர் நகரில் உள்ள ஆங்குஸ்டா-விக்டோரியா என்ற பழமையான பள்ளிக்கூடத்தில் காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டு உள்ளது.

    ஜெர்மனி நாட்டிற்கான இந்திய தூதர் முக்தா தத்தா தோமர் முன்னிலையில், டிரையர் மாநகர மேயர் ஒல்ப்ரம் லேபே சிலையை திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்ற முன்னாள் மேயர் கிளாஸ் ஜேன்சன், காந்தியின் தத்துவங்களை நினைவுகூர்ந்தார்.

    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் மலேசியாவை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது ஜெர்மனி. #HockeyWorldCup2018 #Germany #Malaysia
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் மலேசியா அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் டிம் ஹெர்ஸ்புருச் முத்ல் கோல் அடித்தார். அவரை தொடர்ந்து 14 மற்றும் 18வது நிமிடத்தில் மற்றொரு வீரரான கிறிஸ்டோபர் ருர் தலா ஒரு கோல் அடித்தார்.

    ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் மலேசிய வீரர் ரஸி ரஹிம் ஒரு கோல் அடித்தார். அவரை தொடர்ந்து மற்றொரு வீரரான  
    நபில் நூர் 28வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இரண்டாவது பாதியில் ஜெர்மனி வீரர் மார்கோ மில்டாகு 39-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அப்போது ஜெர்மனி 4 - 2  என முன்னிலை வகித்தது. அடுத்த சில நிமிடங்களில் மலேசிய வீரர் ரஸி ரஹிம் ஒரு கோல் அடித்தார். 59-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் டிம் ஹெர்ஸ்புருச் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஜெர்மனி அணி மலேசியாவை 5 - 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஜெர்மனி அணி காலிறுதிக்குள் நுழைந்தது. ஜெர்மனி வீரர் கிறிஸ்டோபர் ருர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #HockeyWorldCup2018 #Germany #Malaysia
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் நெதர்லாந்து அணியை 4 -1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Germany #Netherlands
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் 13-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி வீரர் மிர்கோ புருஜ்சர் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். 

    அதன்பின்னர் ஜெர்மனி அணி ஆட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டது. ஜெர்மனி வீரர் மதியாஸ் முல்லர் 30வது நிமிடத்திலும், லூகாஸ் விண்ட்பெடர் 52வது நிமிடத்திலும், மார்கோ மில்டாகு 54 வது நிமிடத்திலும், கிறிஸ்டோபர் ரூர் 58வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், நெதர்லாந்து அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஜெர்மனி காலிறுதிக்கான வாய்ப்பை நெருங்கியுள்ளது. #HockeyWorldCup2018 #Germany #Netherlands
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தான் அணியை ஜெர்மனி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Pakistan #Germany
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான், ஜெர்மனி அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 36வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்கோ மில்ட்காவ் அபாரமாக ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஜெர்மனி அணி பாகிஸ்தான் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Pakistan #Germany
    அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் சென்ற விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் அவரது முதல்நாள் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. #Merkel #G20 #MerkelmissG20
    பெர்லின்:

    ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது  உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.

    இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 13-வது உச்சி மாநாடு அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் இன்று 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் முதல் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் பெர்லின் நகரில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவருடன் அரசு உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவும் சென்றது.



    நெதர்லாந்து நாட்டின்மீது நடு வானில் பறக்கும்போது மின்சார சாதனங்கள் சரியாக இயங்காததால் விமானத்தை தொடர்ந்து இயக்க இயலாது என்று விமானி தீர்மானித்தார். இதைதொடர்ந்து, அங்கிருந்து ஜெர்மனி நாட்டுக்கு  திரும்பிய விமானம் ரினே-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள கோல்ன் நகரில் அவசரமாக தரையிறங்கியது.

    இதனால், ஜி-20 மாநாட்டின் முதல்நாள் கூட்டத்தில் ஏஞ்சலா மெர்க்கல் பங்கேற்க முடியாமல் போனது. நேற்றிரவு போன் நகரில் தங்கி ஓய்வெடுத்த அவர், வேறொரு பயணிகள் விமானம் மூலம் இன்று அர்ஜென்டினா சென்றடைகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    #Merkel #G20 #MerkelmissG20 
    ஜெர்மனியின் மேற்கு பகுதியில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார். #Pilotkilled #smallplanescollision #Germanyplanescollision
    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு ரிஹ்னே-வெஸ்ட்பாலியா பகுதியில் விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற இரு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத வகையில் வான்வெளியில் ஒன்றோடொன்று நேருக்குநேராக மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் ஒரு விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு விமானி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. #Pilotkilled  #smallplanescollision  #Germanyplanescollision .
    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான மர்மங்கள் தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் அறிவித்துள்ளார். #AngelaMerkel #Germany #Saudi #JamalKhashoggi
    பெர்லின்:

    சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முடியாட்சியை எதிர்த்து கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இந்த தகவலை சமீபத்தில் சவுதி அரசு உறுதி செய்தது.

    இதனை அடுத்து, சவுதிக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர். பத்திரிகையாளரின் மரணத்துக்கு முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.



    அதன் ஒருபகுதியாக செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரெஜ் பேபிஸ் உடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் உள்ள மர்மங்கள் நீக்கப்படும் வரையில் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்போவது இல்லை என தெரிவித்துள்ளார்.

    480 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஆயுதங்களை சவுதிக்கு ஏற்றுமதி செய்ய கடந்த மாதம் ஜெர்மனி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. #AngelaMerkel #Germany #Saudi #JamalKhashoggi
    ×