search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெர்மனி"

    ஜெர்மனியில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதால் ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Germany #Hostage
    பெர்லின்:

    ஜெர்மனி நாட்டில் மைன்ஸ் நகரில் உள்ள ரெயில் நிலையத்துக்கு பின்புறம் ஒரு மருந்துக்கடை உள்ளது. அதனுள் புகுந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்த ஒரு பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார். இதனால், ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் நிலையம் மூடப்பட்டது. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    போலீசார் வந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவர் லேசாக காயம் அடைந்து இருந்தார். மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். பயங்கரவாதத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.  #Germany #Hostage 
    ஜெர்மனியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #planecrash
    பெர்லின் :

    மத்திய ஜெர்மனியின் வஸ்ஸர்குப்பே மலைக்கு அருகே அமைந்துள்ள ஃபல்டா இன் ஹெஸ்சே நகரில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. 

    நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அப்பகுதியில் உள்ள விமான நிலைய ஓடுதளத்தில் தரையிரங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து  அருகே மக்கள் குழுமியிருந்த இடத்தில் விழுந்து நொறுங்கியது.

    இதில், விமானத்தில் பயணம் செய்த 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்த பின்னர் விபத்துக்கான காரணம் தெரியவரும் என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.  #planecrash
    மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை திரட்டும் நோக்கத்தில் அம்மாநில முதல் மந்திரி ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார். #MamataGermanytrip
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை திரட்டும் நோக்கத்தில் அம்மாநில முதல் மந்திரி ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார். #MamataGermanytrip

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நல்ல பலனை அளித்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதிய நிறுவனங்களின் உரிமையாளர்களும் ஜெர்மனி, இத்தாலி நாட்டு அரசுகளும் தங்கள் நாட்டுக்கு வருமாறு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுத்திருந்தன.

    அந்த அழைப்பை ஏற்று மம்தா பானர்ஜி இன்று காலை 9.45 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு புறப்பட்டு சென்றார். வழியில் துபாயில் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் ஜெர்மனி சென்றடையும் அவர் அங்கிருந்து இத்தாலி நாட்டின் மிலன் நகருக்கு செல்கிறார்.

    இருநாடுகளிலும் 12 நாள் சுற்றுப்பயணம் செய்து முதலீடுகளை திரட்டும் மம்தா, வரும் 28-ம் தேதி கொல்கத்தா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மம்தாவுடன் மேற்கு வங்காளம் மாநில அரசின் தலைமை செயலாளர் மலய் டேய், நிதிமந்திரி அமித் மித்ரா மற்றும் நிதித்துறை செயலாளர் திவேதி ஆகியோரும் சென்றுள்ளனர். #MamataGermanytrip ##MamataItalytrip
    காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். #RahulGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கலந்துரையாடுகிறார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு டெல்லியில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டு சென்றார். இரண்டு நாட்கள் அவர் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துப் பேசுகிறார். மேலும், ஹம்பர்க் மற்றும் பெர்லின் நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் பேசவுள்ளார்.

    அதைத்தொடர்ந்து, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இங்கிலாந்து செல்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடுவதுடன், பிரபல வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ராகுல் செல்லும் 2வது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.
     
    கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்திய வம்சாவளியினருடன் ராகுல் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொரியா குடியரசிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி தொடரைவிட்டு வெளியேறியது. #KORGER #FIFAWorldCup2018 #FIFA2018

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெருகிறது. ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி, கொரியா குடியரசை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஜெர்மனி அணி களமிறங்கியது.

    போட்டி தொடங்கியதில் இருந்தே ஜெர்மனி அணி கோல் போட தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் கொரியா அணி எளிதாக முறியடித்தது. கொரியா அணியின் கோல்கீப்பர் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. 



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதிலும் இரு அணியும் கோல் அடிக்க முடியாமல் இருந்தனர். கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கொரியா அணியின் கிம் யங்வான் கோல் அடித்து அணிக்கு முன்னிலை 
    கொடுத்தார். 

    அதன்பின் ஜெர்மனி அணி கோல்கீப்பரை உள்ளே இறக்கி விளையாடியது. இதை பயன்படுத்தி கொண்ட கொரியா அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் கொரியா அணி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் ஜெர்மனி அணி மேற்கொண்டு கோல் அடிக்காததால் கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 



    இதனால் ‘எஃப்’ பிரிவு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ஜெர்மனி அணி தொடரைவிட்டு வெளியேறியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #KORGER
    ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். #ISSFJuniorWorldCup #SaurabhChaudhary

    பெர்லின்:

    ஜெர்மனியின் சுஹல் நகரில் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி தங்கம் வென்றார். இது இந்தியாவுக்கு எட்டாவது பதக்கங்கமாகும்.

    இந்தப்போட்டியில் சவுத்ரி மொத்தமாக 243.7 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்தார். முன்னதாக சீனாவின் வாங் ஜிஹாவின் 242.5 புள்ளிகளே உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் சவுத்ரி இந்த சாதனையை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 



    இதே பிரிவில் கொரியாவின் லிம் ஹோஜின் (239.6) வெள்ளிப்பதக்கமும், சினாவின் வாங் ஜிஹாவ் (218.7) வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா எட்டு தங்கம், ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் என 14 பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. #ISSFJuniorWorldCup #SaurabhChaudhary
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018 #GERSWE
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் இடம் பிடித்துள்ள ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்வீடன் அணியின் ஒலா டொல்வானன் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
     
    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தனது ஆக்ரோ‌ஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மார்கோ ரூயஸ் ஒரு கோல் அடித்தார். அதற்கு பிறகு ஆட்டத்தின் இறுதிவரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 



    இதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் ஜெர்மனி அணியின் டோனி குருஸ் 95-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினார்.

    இறுதியில், போட்டியின் முடிவில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பையும் பெற்றது.

    உலககோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
    உலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன் அணியும் ஜெர்மனி அணியும் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் ஜெர்மனி அணி உள்ளது. #Fifa2018 #WorldCup2018
    சோச்சி:

    உலககோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனிக்கு முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது.

    4 முறை உலக கோப்பையை வென்ற அந்த அணி தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மெக்சிகோவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

    ஜெர்மனி அணி 2-வது ஆட்டத்தில் சுவீடனை இன்று சந்திக்கிறது. இரவு 11.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஜெர்மனிக்கு உள்ளது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் ஜெர்மனி வீரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடுவார்கள்.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தனது ஆக்ரோ‌ஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.

    சுவீடன் அணி ‘டிரா’ செய்யும் நோக்கில் விளையாடுவார்கள். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் தென்கொரியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. சுவீடன் வெற்றி பெற்றால் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

    இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ஜெர்மனி 15-ல், சுவீடன் 12-ல், வெற்றி பெற்றுள்ளன. 9 ஆட்டம் ‘டிரா’ ஆனது. கடைசியாக 2013-ல் மோதிய ஆட்டத்தில் ஜெர்மனி 5-3 என்ற கணக்கில் வென்று இருந்தது.

    இதே பிரிவில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மெக்சிகோ- தென்கொரியா அணிகள் மோதுகின்றன. இதில் மெக்சிகோ வென்று 2-வது சுற்றில் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது. கொரியா தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

    மெக்சிகோ தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி இருந்தது. தென்கொரியாவை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும். இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் மெக்சிகோ 6 முறையும், தென்கொரியா 2 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டிரா ஆனது.

    ‘ஜி’ பிரிவில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம்- துனிசியா அணிகள் மோதுகின்றன.

    பெல்ஜியம் தொடக்க ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தியது. இதனால் அந்த அணி துனிசியாவை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.

    துனிசியா தொடக்க ஆட்டத்தில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோற்றது. இன்றும் தோல்வி அடைந்தால் அந்த அணி வெளியேற்றப்படும்.

    இரு அணிகளும் 3 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இரு அணிகளும் தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டிரா’ ஆனது. #Fifa2018 #WorldCup2018
    உலக கோப்பை கால்பந்து போட்டியையொட்டி தனியார் அமைப்பு ஆன்லைன் மூலம் ஓட்டெடுப்பு நடத்தியதில் ஜெர்மனிக்கு அதிகமானோர் வாக்களித்துள்ளனர். #FIFA2018 #WorldCup #Germany
    உலக கோப்பை போட்டியையொட்டி தனியார் அமைப்பு ஆன்லைன் மூலம் ஓட்டெடுப்பு நடத்தியது. 63 ஆயிரம் பேர் வாக்களித்ததில் ஜெர்மனிக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    27.9 சதவீதம் பேர் ஜெர்மனி உலக கோப்பையை கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக அர்ஜென்டினா (25.5 சதவீதம்), பிரேசில் (23.9), ஸ்பெயின் (8.8), பிரான்ஸ் (6.7) ஆகிய அணிகள் உள்ளன. 7.2 சதவீதம் பேர் யாருக்கும் வாக்களிக்கவில்லை.

    சிறந்த வீரருக்கான தங்க ஷூ விருது பிரேசிலை சேர்ந்த நெய்மருக்கு கிடைக்கும் என்று 26.8 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மெஸ்சி (26.2), ரொனால்டோ (20.9) உள்ளனர்.

    ஆசிய கண்டத்தில் உள்ள அணிகளில் தென்கொரியா சிறந்தது என்று 38.2 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். ஜப்பான் (36.4), ஈரான் (18.4), சவுதி அரேபியா (6.7) ஆகியவை அதற்கு அடுத்த நிலையில் உள்ளன. #FIFA2018 #WorldCup #Germany
    நடப்பு கால்பந்து உலக சாம்பியனான ஜெர்மனி அணி, சர்வதேச கால்பந்து தரவரிசையில் முதலிடத்துடன் உலக கோப்பை கால்பந்து தொடரில் களமிறங்க உள்ளது. #FIFA2018 #Germany #FIFArankings

    உலக கோப்பை கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது. இதில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷியாவில் நடக்கிறது. சுமார் 32 அணிகள் பங்கேற்கும் 64 போட்டிகளை கொண்ட இத்தொடர் ரஷியாவின் 11 முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதன் இறுதிப்போட்டி மாஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் ஜூலை 15-ம் தேதி நடக்கவுள்ளது. 

    இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள சர்வதேச கால்பந்து தரவரிசையில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனால் ஜெர்மனி அணி நடப்பு சாம்பியன் என்ற பெருமை மட்டுமின்றி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணி என்ற பெயருடன் உலக கோப்பையில் களமிறங்க உள்ளது. இது அந்த அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் என கூறப்படுகிறது.



    இந்த தரவரிசையில் ஜெர்மனி, பிரேசில், பெல்ஜியம், போர்ட்டுகல், அர்ஜெண்டினா ஆகிய அணிகள் அடுத்தடுத்து முதல் ஐந்து இடங்களில் உள்ளன. 66வது இடத்தில் இருந்த ரஷியா அணி, நான்கு இடங்கள் பின்தங்கி 70-வது இடத்தில் உள்ளது. இதுவே  சர்வதேச அளவில் ரஷியா அணியின் மோசமான தரமாகும். #FIFA2018 #Germany #FIFArankings
    ஜெர்மனியில் மாசு கட்டுப்பாட்டை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles
    பிராங்பர்ட்:

    ஜெர்மனியின் துறைமுக நகரம் ஹாம்பர்க் இங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகளில் சரக்கு எடுத்து செல்லப்படுகிறது. துறைமுகத்துக்கு அதிக அளவில் வந்து செல்லும் டீசல் வாகனங்களால் நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாசு, ஏற்பட்டுள்ளது.

    எனவே அதை தடுக்க வருகிற 31-ந்தேதி முதல் இங்கு டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 31-ந் தேதிக்கு பிறகு யூரோ- 6 புகை தரச்சான்று இல்லாத டீசல் வாகனங்களை இயக்க முடியாது.

    இதனால் 90 சதவீத டீசல் வாகனங்கள் ஹாம்பர்க் நகருக்குள் இயங்க முடியாத நிலை உள்ளது. எனினும், உள்ளூர்வாசிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு சிறிது காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #DieselVehicles
    ஜெர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    பெர்லின்:

    ஜெர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் மாவட்டத்துக்கு உட்பட்ட சார்ப்ரூச்கென் நகரில் நேற்று ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் தான் எனவும் கூறப்படுகிறது. #tamilnews
    ×