search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96904"

    செங்குன்றத்தில் நர்சை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்குன்றம்:

    சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் 108 ஆம்புலன்சு அலுவலகம் உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அவரிக்காடு பகுதியை சேர்ந்தகுமார் மனைவி தாமரைக்கனி நர்சாக பணி புரிந்து வந்தார்.

    அங்கு வேலைபார்த்த டாக்டர் ஒருவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தாமரைக் கனிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபற்றி தாமரைக்கனி அப்போதே தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்சு தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    இதனால் மனஉளைச்சல் அடைந்த டாக்டர் அப்போதே வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தாமரைக்கனி தொடர்ந்து அந்த அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் தாமரைக்கனி நேற்று இரவு பாடிய நல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரை தாக்கி கடத்த முயன்றனர். அவர்களிடம் இருந்து தாமரைக்கனி தப்பி வந்து செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டரே ஆட்களை வைத்து தன்னை கடத்த முயன்றதாக கூறி இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மர்மநபர்கள் தாக்கியதில் தாமரைக்கனி பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #tamilnews
    ஒரத்தநாடு அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கருப்பட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30) விவசாயி. இவரது மனைவி கனிமொழி (24). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் கனிமொழி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று மாலை இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அருகில் உள்ள வடக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த செவிலியர்கள் டாக்டர் தற்போது பணியில் இல்லை. எனவே நாங்கள் தான் பிரசவம் பார்க்க வேண்டும் என்று கூறி கனிமொழிக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

    இதில் கனிமொழிக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை இறந்து விட்டது. இதனால் செவிலியர்கள் மற்றும் கனிமொழி உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை இறந்த குழந்தையின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் பிரகாஷ் மற்றும் அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் அவசர கால சிகிச்சைக்கு வடக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தால் இங்கு டாக்டர் பணியில் இருப்பதில்லை. நேற்று இரவு பிரசவ வலியால் துடித்த எனது மனைவியை இங்கு அழைத்துவந்தபோதும் டாக்டர் இல்லை.

    அப்போது பணியில் இருந்த 2 செவிலியர்கள் எனது மனைவிக்கு பிரசவம் பார்த்தனர். ஆனால் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டது. இதற்கு காரணம் இங்கு டாக்டர் பணியில் இல்லாததே என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



    இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு கொண்டு சென்ற பெண்ணிற்கு பிறந்த குழந்தை இறந்ததால் ஓரத்தநாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ‘செக்’ மோசடி வழக்கில் டாக்டருக்கு பட்டுக்கோட்டை கோர்ட்டில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் டாக்டர் ராஜேந்திரன்(வயது 65). இவர், அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். தான் வாங்கிய கடனுக்காக ரூ.12 லட்சத்துக்கு டாக்டர் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியனுக்கு செக் கொடுத்துள்ளார்.

    அந்த செக்கை பாலசுப்பிரமணியன் வங்கியில் செலுத்தியபோது அது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதனால் டாக்டர் ராஜேந்திரன் மீது பாலசுப்பிரமணியன் பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2016-ம் ஆண்டு முதல் விசாரணை நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கை விசாரித்த படடுக்கோட்டை குற்றவியல் விரைவு கோர்ட்டு நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் ராஜேந்திரனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.12 லட்சத்தை கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். பின்னர் டாக்டர் ராஜேந்திரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 
    அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடி கவனக்குறைவாக ஆபரேசன் செய்ததால், பாதிக்கப்பட்டதாக சுமார் 100 பெண்கள் புகார் கூறியுள்ளனர். #DancingDoctor
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் விண்டெல் பூட்டே. தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணரான இவர் தனது மருத்துவமனையில் உள்ள ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது,  இடையிடையே மியூசிக் போட்டு ஆடிப்பாடி மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு ஆடிப் பாடும்போது எடுத்த வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவேற்றமும் செய்துள்ளார். அதில், அறுவை சிகிச்சைக்காக நோயாளி மயக்க நிலையில் படுத்திருக்க, அருகில் டாக்டர் வெண்டெல் நடனமாடுகிறார். அவரது உதவியாளர்களும் சேர்ந்து ஆடுகின்றனர்.



    அவரிடம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் நோயாளிகள் பலர் இந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒருவேளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல் உபாதைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு டாக்டரின் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கை காரணமாக இருக்கலாம் என சுமார் 100 பேர் கூறியுள்ளனர்.

    இந்நிலையில் டாக்டர் விண்டெலுக்கு எதிராக சில பெண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். டாக்டர் விண்டெலிடம் சிகிச்சை பெற்ற பிறகு நோய்த்தாக்கம், தொற்றுநோய்கள் மற்றும் மூளை பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர். ஆனால் டாக்டரோ, அவரது மருத்துவமனை தரப்பில் இருந்தோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. #DancingDoctor
    அமெரிக்காவில் டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட ஜிம்னாஸ்டிக் பெண்களுக்கு மிக்சிகன் பல்கலைக்கழகம் ரூ.3250 கோடி நஷ்டஈடு வழங்க ஒப்புக்கொண்டது.#LarryNassar #MichiganStateUniversity
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சி கழகத்தின் டாக்டராக லார்ரி நஸ்சார் (54). பணிபுரிந்தார்.

    இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் ‘செக்ஸ்’சில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அவரால் பாதிக்கப்பட்டதாக 332 பெண்கள் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    அவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர மிக்சிகன் பல்கலைக்கழகம் விரும்பியது.

    பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் ஜேட் கபூயா, அய்ல்ஸ்டீபன்ஸ், காலசிஸ்மூரே

    அதை தொடர்ந்து டாக்டர் லார்ரி நஸ்சாரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன் வந்தது. அதன்படி ரூ.3250 கோடி வழங்க ஒப்புக்கொண்டது.

    இத் தகவலை பல்கலைக் கழக குழு தலைவர் பிரையன் பிரஸ்லின் தெரிவித்துள்ளார்.#LarryNassar #MichiganStateUniversity
    ×