என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ப.சிதம்பரம்"
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், ஐதராபாத்தில் நிகழ்சி ஒன்றில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம். இந்த விலை உயர்வினால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இதற்கான தீர்வை கண்டறிந்து பெட்ரோல், டீசல் விலையை அரசு விரைவில் குறைக்கும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :-
பாரதிய ஜனதா கட்சி இலவசமாக கச்சா எண்ணெயை பெறுவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். அதன்பிறகு தான் உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியும்.
பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றால் கருப்பு பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், தேர்தல் சமயத்தில் புழங்கும் கருப்பு பணத்தால் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். அப்படியெனில் மத்திய அரசு ஒழித்து விட்டதாக கூறும் கருப்பு பணம் எப்படி வந்தது ?.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். #PChidambaram
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். பாராளுமன்ற தேர்தல் மற்றும் கட்சி வளர்ச் சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருந்தது.
இந்த நிலையில் கூட்டம் தொடங்கியதும், ப.சிதம்பரம் அமர்ந்திருந்த மேடை அருகே சென்ற காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு தரப்பினர், தங்களை ஒரு பிரிவினர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம், உறுப்பினர் சேர்க்கை போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் எங்களுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ப.சிதம்பரத்திடம் முறையிட்டனர்.
இதனால் அங்கு இரு தரப்பினர் இடையே வாக்கு வாதம், தள்ளுமுள்ள ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ப.சிதம்பரம் ஈடுபட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் வாக்குவாதத்தை கைவிடவில்லை. மேலும் நிர்வாகிகளுக்கு இடையே மோதல், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ப.சிதம்பரம் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
தமிழக காங்கிரசில் தொடர்ந்து கோஷ்டிபூசல் நிலவி வருகிறது. இதனால் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கரூரில் நடந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PChidambaram #congress
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களையும், கட்சி தொண்டர்களையும் கவரும் விதமாக ‘சக்தி’ என்ற திட்டத்தை நேற்று பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தொடங்கிவைத்தார்.
அதன்பிறகு ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தில் ‘சக்தி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சாதாரண தொண்டர்களுடன் எந்த நேரத்திலும் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி தொடர்பு கொண்டு பேச முடியும் என்ற சூழல் ஏற்படும்.
கர்நாடகத்தில் பூத் கமிட்டி மட்டத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது. அதனால் தான் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பூத் கமிட்டி மட்டத்தில் இருந்து கட்சிக்கு சக்தி கொடுக்க தான், புதிதாக சக்தி திட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
கர்நாடகம், குஜராத் மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவை விட காங்கிரஸ் கூடுதல் ஓட்டுகளை பெற்றது. ஆனால் பா.ஜனதாவை விட காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றது. கர்நாடகத்தில் பா.ஜனதாவை விட காங்கிரஸ் கட்சி 7 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றது. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 36 சதவீத ஓட்டுகளும், பா.ஜனதாவுக்கு 34 சதவீத ஓட்டுகளும் கிடைத்தது.
அப்படி இருந்தும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க போவதாக பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள். காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்க யாராலும் முடியாது. அது ஒருபோதும் நடக்காது. ஆனால் பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதே காங்கிரசின் லட்சியம் ஆகும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை. பா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதை காங்கிரஸ் தொண்டர்கள் சாத்தியமாக்குவார்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். #Chidambaram #Tamilnews
தற்போது காங்கிரஸ் 12 மாநிலங்களில் வலுவாக உள்ளது. இப்போது காங்கிரசுக்கு உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையை விட வரும் தேர்தலில் 3 மடங்கு எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதாவது காங்கிரஸ் தனித்து 150 இடங்களை பெற முடியும். மற்ற மாநிலங்களில் நாம் பிராந்திய கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைப்பது முக்கியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே ராகுல்காந்தி கூறி இருந்தார். அந்த கருத்தை முன்வைத்து பலரும் இந்த கூட்டத்தில் பேசினார்கள்.
சில தலைவர்கள் பேசும் போது, எதிர்க்கட்சிகள் பலவற்றையும் சேர்த்து வலுவான கூட்டணி அமைப்பதற்கு நமது கட்சி எந்த தயக்கமும் காட்ட கூடாது.
நமது வியூகம் சரியான நிலையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ராகுல்காந்தியை முன்னிலைப்படுத்திதான் இந்த கூட்டணி அமைய வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். #PChidambaram #Congress #ParliamentElection2019
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி முஸ்லிம் ஆதரவு கட்சியாக மாற முயற்சிக்கிறது, மதத்தை வைத்து காங்கிரஸ் அபாயகரமாக விளையாட்டு விளையாடுகிறது. 1947 பிரிவினைவாதம், மதக் கலவரம் என்று கூறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சமுதாய நல்லிணக்கத்துக்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு காங்கிரசே பொறுப்பு” என்று கூறினார்.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அதில் அவர், “நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் கலவரங்களைத் தூண்ட திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்று ராணுவ மந்திரி சொல்கிறார். இது தொடர்பான ரகசிய தகவல்களை அவர் உள்துறை மந்திரியிடம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.
மேலும், “பாகிஸ்தானை அடக்கி விட்டு, பயங்கரவாதத்தை ஒழித்து விட்டு, எல்லை தாண்டிய ஊடுருவல்களை தடுத்து நிறுத்தி விட்டு, ரபேல் போர் விமானங்கள் வாங்கி விட்டு இப்போது ராணுவ மந்திரிக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களின் மத சார்புகளை பற்றி விசாரிப்பதற்கு நேரம் இருக்கிறது” என்றும் சாடி உள்ளார். #Chidambaram #Sitharaman #tamilnews
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதி பெறாமல் இந்த முதலீடு செய்யப்பட்டது. இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியது என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதன் அடிப்படையில் அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆகஸ்டு 7-ந்தேதி வரை தடையை நீடித்து நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டுள்ளார்.
தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் எனக்கு எதிராக அமலாக்கத்துறை சதி செய்கிறது. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயரோ வேறு எந்த அதிகாரியின் பெயரோ இடம் பெறவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கு நீதிமன்றத்தில் பதில் தருவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ளது. இங்கு ப.சிதம்பரம், குடும்பத்துடன் வசிக்கிறார். ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு போய்விட்டதாக, அவரது மேலாளர் முரளி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ஆகியவை திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில், ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடன்பிறந்த சகோதரிகளான இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது நகைகள் மற்றும் பொருட்கள் திருடியதை வெண்ணிலா, விஜி ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருட்டு போன நகை மற்றும் பொருட்களை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி, தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என்று முதலில் போலீசார் கூறினார்கள்.
இதற்கிடையே திருட்டுப்போன நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து நேற்று திடீரென் நுங்கம்பாக்கம் போலீசார் வெண்ணிலா, விஜி ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு பிறகு நேற்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்தனர்.
திருட்டுப்போன நகைகளும் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என்று சட்டநிபுணர்கள் கூறியதால், இருவரும் கைது செய்யப்பட்டார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். #PChidambaram #HouseRobbery #Tamilnews
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆனால் போலீசில் கொடுத்த புகாரை திடீர் என வாபஸ் பெற்றுவிட்டனர்.
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ளது. இங்கு ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வசிக்கின்றனர். ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு போய்விட்டதாக, அவரது மேலாளர் முரளி நேற்று முன்தினம் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை துணியால் மூடி மறைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த திருட்டு வழக்கில், ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வெண்ணிலா, விஜி ஆகியோர் உடன்பிறந்த சகோதரி ஆவார்கள். அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், நகைகள் மற்றும் பொருட்கள் திருடிய குற்றத்தை வெண்ணிலா, விஜி ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருட்டு போன நகை மற்றும் பொருட்களை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று பிற்பகலில் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றும், வழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மராட்டிய மாநில காங்கிரஸ் சார்பில் நாசிக்கில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய சூழல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பேசியதாவது:-
பொருளாதார நெருக்கடி நிலையால் தமிழ்நாட்டில் மட்டும் 57 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளனர்.
இதற்கு தீர்வு காண வேண்டிய பிரதமரும், மத்திய மந்திரிகளும் அதுபற்றி பேசாமல் மவுனம் காத்து வருகிறார்கள்.
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மக்களை அடித்து கொல்லும் கும்பலில் உள்ளவர்கள் கூட வேலை இல்லாதவர்கள்தான்.
பிரணாப் முகர்ஜி மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஜி.எஸ்டி.யை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதாவினர் தற்போது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து பெருமைப்பட பேசி வருகின்றனர்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார். #Congress #PChidambaram
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு கடந்த மே 31-ம் தேதி ஆஜராகும்படி ப.சிதம்பரத்திற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருந்தது தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட டெல்லி ஐகோர்ட், ஜூலை 3-ம் தேதி (இன்று) வரை சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவிற்கு பதில் மனு அளிக்க கோர்ட்டில் சி.பி.ஐ அவகாசம் கோரியது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் 1- ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என தடை விதித்தார்.
இதேபோல் ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜூலை 10-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #ChidambaramGetsProtection
சென்னை:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எழுதிய ‘ஸ்பீக்கிங் டுரூத் டூ பவர்’ என்ற ஆங்கில புத்தகம் மற்றும் அதன் தமிழாக்கம் ஆன ‘வாய்மையே வெல்லும்‘ புத்தகம்வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நேற்று மாலை நடைபெற்றது.
சேது சொக்கலிங்கம் வரவேற்றார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் பேசினார்கள்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. ஏற்புரையாற்றி பேசியதாவது:-
நான் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுகிறேன். ஆனால் தமிழ் மொழி பெயர்ப்பு செய்யாமல் தமிழிலேயே எழுதிட முடியுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. என்றாவது ஒருநாள் தமிழில் கட்டுரை எழுத முயற்சிக்கிறேன்.
அரசு துன்பம் செய்யக்கூடாது. அப்படி துன்பம் செய்யும் அரசை தட்டிக்கேட்கும் மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும்.
இந்தியாவில் 2-ல் ஒரு குழந்தை ரத்தசோகையுடனும், 3-ல் ஒரு குழந்தை எடை குறைவுடனும், 5-ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுடனும் பிறக்கிறது. ஒரு குழந்தை இந்தியாவில் முழு மனிதனாக வரவே முடியாது.
சாதி, மதம் ஒழியவேண்டும் என்றால் அனைவரும் எழுதவேண்டும், அனைவரும் பேசவேண்டும். எழுதாத, பேசாத ஒரு சமுதாயம், ஊமைத் துறையாக அடங்கி இருக்கும்.
சமுதாயத்தில் எழுத்தும், பேச்சும் ஊன்றுகோலாக வேண்டும். அப்போது தான் சமுதாய சீரழிவுகள், அரசியல் ஒழுங்கீனங்கள், பொருளாதார தவறுகள் களையப்படும் என்று நம்புகிறேன். அதற்காகத்தான் நான் எழுதுகிறேன். அதற்காகவே பேசுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியாக கவிஞர் இலக்கியா நடராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் செய்து இருந்தார்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ், துறைமுகம் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pchidambaram #tngovernment #congress
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்