search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96933"

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #SUZUKI #ElectricVehicle



    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சுசுகி நிறுவனத்திற்கு இந்திய சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் சர்வதேச வாகனங்கள் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக மாற்றப்பட்டு, சிறப்பு விலையில் வெளியிடப்படுகிறது. 

    ஏற்கனவே சுசுகி நிறுவனம் லெட்ஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மாடலை ஜப்பானில் விற்பனை செய்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் லெட்ஸ் இ.வி. வெர்ஷன் ஸ்கூட்டர் புதிய வடிவமைப்புடன் வெளியாகும் என தெரிகிறது.

    புதிய ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மோட்டார் சர்வதேச சந்தைகளில் பொதுவான ஒன்றாக இருக்கும் நிலையில், வெளிப்புற வடிவமைப்பு மட்டும் சுசுகி இந்தியா குழுவினர் மேற்கொள்வர் என தெரிகிறது. இதனால் இந்தியா பயனர்களுக்கு ஏற்ற வடிவமைப்புடன் விற்பனையை அதிகரிக்க முடியும் என கூறப்படுகிறது.
    பியாஜியோ இந்தியா நிறுவனம் 2019 அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Aprilia



    பியாஜியோ இந்தியா நிறுவனம் 2019 அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய நிறங்களில், சில அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஸ்கூட்டர் புதிய தோற்றம் பெற்றிருக்கிறது. இரண்டு வெர்ஷன்களும் முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர்கள், புதிய வின்ட்ஷீல்டு மற்றும் செமி-டிஜிட்டல் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 2019 அப்ரிலியா எஸ்.ஆர். 150 மாடலில் இத்தாலி நாட்டு கொடியை தழுவிய நிறங்கள் பூசப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் ஸ்கூட்டர் இம்முறை ரெட், வைட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் அலாய் வீல்கள் கருப்பு நிறத்தில் பூசப்பட்டுள்ளன. கூடுதலாக பியாஜியோ தனது 150 சிசி ஸ்கூட்டரின் புளு நிற வேரியன்ட் அறிமுகம் செய்தது. 



    இன்ஜின் அம்சங்களை பொருத்த் வரை 154.8 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 10.4 பி.ஹெச்.பி. பவர், 11.4 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் CVT யூனிட் வழங்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.

    பிரேக்கிங்கை பொருத்த வரை முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர். 150 மாடலில் இதுவரை ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படவில்லை.

    இந்தியாவில் 2019 அப்ரிலியா எஸ்.ஆர். 150 ஸ்கூட்டரின் விலை ரூ.70,031 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது. எஸ்.ஆர். 150 கார்பன் விலை ரூ.73,500 என்றும் எஸ்.ஆர். 150 ரேஸ் விலை ரூ.80,211 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2018 நவி ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கூட்டரின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #navi110


    இந்தியாவில் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான ஹோன்டா நவி ஸ்கூட்டர் ஒரு லட்சம் யூனிட் விற்பனையை கடந்திருக்கிறது. நவி ஸ்கூட்டர் ஹோன்டா இந்தியா ஆய்வு மற்றும் உற்பத்தி ஆலையில் உருவாக்கப்பட்ட முதல் ஸ்கூட்டர் ஆகும்.
    சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட 2018 நவி ஸ்கூட்டரை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

    ஹோன்டா நவி புதிய வெர்ஷன் பிரீமியம் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய நவி மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா தவிர ஹோன்டா நவி ஸ்கூட்டர் லத்தின் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. புதிய 2018 ஹோன்டா நவி மாடலில் புதிய ஃபியூயல் காஜ், மெட்டல் மஃப்ளர் ப்ரோடெக்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் கிராப் ரெயில், ஹெட்லைட் கவர்கள் மற்றும் ரியர்வியூ கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஸ்போர்ட் ரெட் நிறம் கொண்ட குஷன் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹோன்டா நவி 2018 மாடல்: ரேன்ஜ் கிரீன் மற்றும் லடாக் பிரவுன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.



    இதுதவிர கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. 2018 ஹோன்டா நவி ஸ்கூட்டரில் 109சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் ஹோன்டா ஆக்டிவா மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 9 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஹோன்டா நவி மாடலின் முன்பக்கம் மற்றும் பின்புறம் முறையே 12 இன்ச் மற்றும் 10 இன்ச் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் ஹோன்டா நவி 2018 ஸ்கூட்டர் விலை ரூ.44,775 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #navi110 #Scooter
    635 விதிமீறல்கள் நிலுவையில் இருந்த ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டரை மடக்கிப்படித்த போலீசார் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவருக்கு பெரிய தொகையை அபராதமாக விதித்தனர். #TrafficOfficers


    மைசூரு நகர போக்குவரத்து காவல் துறைக்கு 'அன்றைய' வாகன சோதனை வழக்கமானதாக இருக்கவில்லை. வாகன சோதனையின் போது சிக்கிய ஹோன்டா ஆக்டிவா காவல் துறையினரின் நீண்ட நாள் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

    போக்குவரத்து காவல் துறையினர் மடக்கிய குறிப்பிட்ட ஹோன்டா ஆக்டிவா மீது ஏற்கனவே 635 போக்குவரத்து விதிமீறல்கள் நிலுவையில் இருந்தது, காவல் துறையினருக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்த உணர்வை ஏற்படுத்தியது. ஆக்டிவா ஸ்கூட்டரின் பதிவு எண் மூலம் நிலுவையில் இருந்த விதிமீறல் விவரங்களை காவல் துறையினர் தெரிந்து கொண்டனர்.

    சிறிதளவு விதிமீறல் என்றாலே கொதித்தெழும் போக்குவரத்து காவல்துறையினர், இத்தனை விதிமீறல்களுக்கு பெரிய தொகையை அபராதமாக கணக்கிட்டு, வாகனத்தை ஓட்டிவந்தவர் கையில் ஒப்படைத்ததோடு, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். விதிமீறல்களுக்கு மொத்தமாக குறிப்பிட்ட ஆக்டிவா ஸ்கூட்டருக்கு ரூ.63,500 அபராதமாக விதித்தனர். 



    மேலும் விதிமீறியவர் மீது வழக்க தொடர்ந்து அபராத தொகையை பெற முடிவு செய்துள்ளோம். நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருப்போம் என போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    மைசூருவில் புத்தம் புதிய ஹோன்டா ஆக்டிவா விலை ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் போக்குவரத்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ள ஹோன்டா ஆக்டிவா 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் குறித்த விவரங்கள் அறியப்படவில்லை. காவல் துறையினர் ஸ்கூட்டரின் உரிமையாளரை கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் இத்தகைய அபராத தொகையை எவ்வாறு மீட்பது என்ற யோசனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #TrafficOfficers

    Source: Cartoq
    யமஹா நிறுவனத்தின் சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டர் விநியோகம் துவங்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #YAMAHA


    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா நிறுவனத்தின் சிக்னஸ் ரே ZR ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டர் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், தற்சமயம் விநியோகம் துவங்கி இருக்கிறது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்த ரே ZR 100 ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் சில காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்திருக்கிறது. 

    புதிய ஸ்கூட்டரில் புதிய ஸ்போர்ட் கிராஃபிக்ஸ் மற்றும் தங்க நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய டீக்கல்கள், கருப்பு நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    யமஹா சிக்னஸ் ரே ZR 100 ஸ்ட்ரீட் ரேலி எடிஷன் மாடல் யமஹாவின் இரண்டு சர்வதேச மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் இறக்கை போன்ற ஃபேரிங் வடிவமைப்பு யமஹா MT-09 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே வின்ட்ஸ்கிரீன் போன்றும் இயங்குகிறது.



    யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி மாடலில் 113சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7.1 பி.ஹெச்.பி. பவர், 8.1 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் சி.வி.டி. கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 170 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள், சீட் கீழ் 21 லிட்டர் ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்தியாவில் யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி மாடலின் விலை ரூ.57,898 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ரேலி ரெட் மற்றும் ரேசிங் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. அதன்படி யமஹா ரே ZR ஸ்ட்ரீட் ரேலி விற்பனையாளர்களிடம் வந்தடைந்த நிலையில், விநியோகம் துவங்கப்பட்டுள்ளது. #YAMAHA #Cygnus
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டூயட் 125 ஸ்கூட்டரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்கூட்டர் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #HERO


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய டூயட் 125 ஸ்கூட்டர் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் மேஸ்ட்ரோ 125 மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்ட டூயட் 125 வடிவமைப்பு பார்க்க 110சிசி வேரியன்ட் போன்றே காட்சியளிக்கிறது. 

    எனினும் க்ரோம் கார்னிஷிங் செய்யப்பட்டு மாடலுக்கு பிரீமியம் தோற்றம் கிடைக்கிறது. புதிய டூயட் 125 மாடலின் அனலாக் ஸ்பீடோமீட்டர், சிறிய டிஜிட்டல் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஓடோமீட்டர், ஃபியூயல் லெவல், ட்ரிப் மீட்டர் மற்றும் சர்வீஸ் டியூ இன்டிகேட்டர் உள்ளிட்டவற்றை காண்பிக்கிறது.

    ஹீரோ டூயட் 125 இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இது டூயட் 110 மாடலை விட சக்திவாய்ந்த வெர்ஷனாக இருக்கும். இதன் எடை 113 கிலோ மற்றும் அதிகபட்சம் 130 கிலோ பேலோடு திறன் கொண்டிரும் என கூறப்படுகிறது.



    புதிய டூயட் 125 மாடலில் 124.6சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, 4-ஸ்டிரோக் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஹீரோ டூயட் 125 மாடலில் i3S ஐடிள் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்றும், இந்த இன்ஜின் 8.7 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 10.2 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கப்படலாம்.

    சஸ்பென்ஷன்களை பொருத்த வரை முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் காயில்-போன்ற ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் பிரிவில் 130மில்லிமீட்டர் டிரம் பிரேக் இரண்டு சக்கரங்களிலும் வழங்கப்பட்டு, இன்டகிரேட் செய்யப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் புதிய டூயட் 125 மாடலின் விலை ரூ.58,000 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும், வெளியாதும் இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க் 125, சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125, சுசுகி அக்சஸ் 125 மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #HERO
    ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2018 ஏவியேட்டர் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கூட்டர் விலை மற்றும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #Honda


    ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 2018 ஏவியேட்டர் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2018 ஹோன்டா ஏவியேட்டர் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பொசிஷன் லேம்ப்கள், 4-இன்-1 லாக், சீட் ஓப்பனர் ஸ்விட்ச், மஃப்ளர் ப்ரோடெக்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    2018 ஹோன்டா ஏவியேட்டர் மாடல் பியல் ஸ்பார்டன் ரெட் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. முன்னதாக பியல் இக்னியஸ் பிளாக், மேட் செலின் சில்வர் மெட்டாலிக் மற்றும் பியல் அமேசிங் வைட் என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஏவியேட்டர் ஸ்கூட்டரில் 109சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதே இன்ஜின் முந்தைய ஏவியேட்டர் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

    இதன் சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ-ஷாக் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 12 இன்ச் மற்றும் 10 இன்ச் டியூப்லெஸ் டையர்கள் முறையே முன்புறம் மற்றும் பின்பக்கம் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் அம்சத்தை பொருத்த வரை 2018 ஏவியேட்டர் மாடலில் 130மில்லிமீட்டர் டிரம் பிரேக்கள் இரண்டு சக்கரங்களில் வழங்கப்படுகிறது. 



    இத்துடன் முன்புறம் 190மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதனுடன் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் ஹோன்டா நிறுவனத்தின் 2018 ஆக்டிவா i மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது. ஹோன்டா ஆக்டிவா i தற்போதைய மாடலை விட மெல்லியதாக காட்சியளிக்கிறது.

    இந்தியாவில் 2018 ஏவியேட்டர் மாடலின் துவக்க விலை ரூ.55,157 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Honda #scooters
    பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா நோட் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Vespa #Piaggio



    பியாஜியோ நிறுவனத்தின் புதிய ரக வெஸ்பா ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேரியன்ட் வெஸ்பா நோட் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் வெஸ்பா LX 125 ஸ்கூட்டரை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் வெஸ்பா நோட் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தாலிய மொழியில் நோட் என்றால் இரவு என அர்த்தம் என்ற வகையில், புதிய வெஸ்பா நோட் முழுமையாக கருப்பு நிற தீம் கொண்டிருக்கிறது.

    வெஸ்பா நோட் ஸ்கூட்டர் மேட் பிளாக் நிறம் மற்றும் க்ரோம் பாகங்கள் மற்றும் அலாய் வீல்களும் கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனையாகும் ஸ்டான்டர்டு வெஸ்பா மாடலை விட பார்க்க அழகாகவும், மிக நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.



    புதிய வெஸ்பா நோட் ஸ்கூட்டரில் 125சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9.9 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்ஜின் CVT கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. வெஸ்பா நோட் ஸ்கூட்டர் இந்தியா தவிர சர்வதேச சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இதன் சர்வதேச மாடல் இந்திய ஸ்கூட்டரை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    வெஸ்பா நோட் மாடல் LX 125 போன்றே காட்சியளிப்பதோடு ஒரே மாதிரியான மெக்கானிக்கல் உபகரணங்களும் வழங்கப்படுகிறது. புதிய வேரியன்ட் சிங்கிள் சைடு முன்பக்க சஸ்பென்ஷன், பின்புறம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங் 150 மில்லிமீட்டர் டிரம் முன்பக்கமும், பின்புறம் 140 மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய வெஸ்பா நோட் விலை ரூ.70,285 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்கூட்டரை பயனர்கள் ரூ.2,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Vespa #Piaggio
    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 2018 ஆக்டிவா i ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Honda #Activa_i



    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் 2018 ஆக்டிவா i ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமானது. புதிய ஆக்டிவா i மாடல் வழக்கமான ஆக்டிவா மாடலை விட மெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும் ஆக்டிவா i மாடல் ஸ்டேன்டர்டு வேரியன்ட்-ஐ விட எடை குறைவாகவும் இருக்கிறது.

    இந்தியாவில் 2018 ஆக்டா i மாடல் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஆக்டிவா i மாடல்: கேன்டி ஜேஸி புளு, இம்பீரியல் ரெட் மெட்டாலிக், லஷ் மேக்னெட்டா மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் ஆர்சிட் பர்ப்பிள் மெட்டாலிக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.



    இவற்றில் டூயல்-டோன் நிறங்கள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ், மெட்டாலிக் மஃப்ளர் ப்ரோடெக்டர், நான்கில் ஒரு லாக், முன்பக்கம் புதிய ஹூக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்த வரை ஆக்டிவா-i மாடலில் வாகன நிறம் கண்ணாடிகள், டைனமிக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 18-லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மற்றும் மொபைல் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    2018 ஹோன்டா ஆக்டிவா-i மாடலில் 109.19சிசி, 4-ஸ்டிரோக் ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 8.94 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் 10-இன்ச் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங் முன்புறம் மற்றும் பின்பக்கம் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் மற்றும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 2018 ஹோன்டா ஆக்டிவா-i மாடலின் விலை ரூ.50,010 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா அபார வளர்ச்சி பெற்று, இந்திய சந்தையில் முன்னணி இடத்தை பெற்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HondaActiva
    இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. ஜூன் மாதத்துடன் நிறைவுற்ற காலாண்டில் ஹோன்டா நிறுவனம் மட்டும் 81% பங்குகளை பெற்றிருக்கிறது.

    அந்நிறுவன வரலாற்றிலேயே அதிகபட்ச வளர்ச்சி பெற்று ஹோன்டா நிறுவன ஸ்கூட்டர்கள் சந்தையில் 200 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த காலாண்டில் மட்டும் ஹோன்டா நிறுவனம் 9,04,647 ஆக்டிவா மாடல்களை விற்பனை செய்திருக்கிறது. இதே காலாண்டில் முன்னதாக இந்தியாவில் அதிகம் விற்பனையான மோட்டார்சைக்கிளாக இருந்த ஹீரோ ஸ்ப்லென்டர் 8,24,999 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    மோட்டார்சைக்கிள்களுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், ஆக்டிவா தொடர்ந்து இந்தியாவில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இதே காலாண்டில் அதிகம் விற்பனையாகியிருக்கும் ஸ்கூட்டர், சுமார் 9 லட்சம் யூனிட்களை கடந்த ஒற்றை இருசக்கர வாகனமாக இருக்கிறது. மேலும் ஆக்டிவா மற்றும் ஸ்ப்லென்டர் யூனிட்களிடையே குறைந்த இடைவெளியாக பதிவாகியுள்ளது.


    முன்னதாக செப்டம்பர் 2017 காலாண்டில் 9,51,186 ஆக்டிவா யூனிட்கள் விற்பனையான நிலையில் 7,13,182 ஸ்ப்லென்டர் யூனிட்களே விற்பனையாகி இருந்தது. மே 2016-ம் ஆண்டு ஸ்ப்லென்டர் மாடலை பின்னுக்குத் தள்ளி ஹோன்டா ஆக்டிவா இந்திய சந்தையில் முதலிடத்தை பிடித்தது. 17 ஆண்டுகள் கழித்து இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையில் முதலிடத்தை ஹோன்டா நிறுவனம் பிடித்தது.

    "ஒரே காலாண்டில் சுமார் 18 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். இதே காலாண்டில் ஆக்டிவா மட்டும் 40% வேகமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இது ஒட்டுமொத்த சந்தையை விட வேகமானது," என ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் வை.எஸ். குலேரியா தெரிவித்திருக்கிறார்.  #HondaActiva
    பஜாஜ் நிறுவனத்தின் பிரபல கியர் ஸ்கூட்டராக இருந்த செட்டாக் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #bajaj #Scooter



    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் பிரான்டு தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எனினும், பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் கியர் ஸ்கூட்டர் அந்த காலத்தில் பிரபலமான மாடலாக இருக்கிறது. பின் ஆட்டோமேடிக் ஸ்கூட்டர்களின் வரவு காரணமாக செட்டாக் விற்பனை நிறுத்தப்பட்டது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி பஜாஜ் செட்டாக் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் செட்டாக் பிரான்டு 2019-ம் ஆண்டில் மீண்டும் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பஜாஜ் செட்டாக் 125சிசி ஸ்கூட்டராக இருக்கும் என்றும் இதன் விலை ரூ.70,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 



    புதிய பஜாஜ் செட்டாக் பழைய மாடலின் வடிவமைப்பை தழுவி சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய பஜாஜ் செட்டாக் ஸ்கூட்டரில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படலாம் என்றும் இந்த இன்ஜின் 9.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் அதிக மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய செட்டாக் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் போர்ட், அலாய் வீல்கள், அதிகளவு ஸ்டோரேஜ் இடவசதி, கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் புதிய ஆட்டோமேடிக் ஸ்கூட்டரை வெளியிடும் திட்டம் எதுவும் இல்லை என்றும், புதிய பிரிவில் கால்பதிக்கும் முன் சர்வதேச மோட்டார்சைக்கிள் சந்தையில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவன தலைவர் ராஜிவ் பஜாஜ் 2015-ம் ஆண்டில் தெரிவித்திருந்தார்.
     
    புகைப்படம் நன்றி: GaadiWaadi.com
    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2018 நவி ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கூட்டரின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #navi110
     


    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய 2018 நவி ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய மாடலை விட புதிய வெர்ஷன் பிரீமியம் மாடலாக உருவாகியுள்ளது.

    கூடுதல் பிரீமியம் கட்டணத்திற்கு நவி மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் 2016-ம் ஆண்டில் ஹோன்டா நவி ஸ்கூட்டர் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. நவி ஸ்கூட்டர் முழுமையாக ஹோன்டா இந்தியா ஆய்வு மற்றும் வளர்ச்சி குழுமத்தால் வடிவமைக்கப்பட்டதாகும்.

    இந்தியா தவிர ஹோன்டா நவி ஸ்கூட்டர் லத்தின் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. புதிய 2018 ஹோன்டா நவி மாடலில் புதிய ஃபியூயல் காஜ், மெட்டல் மஃப்ளர் ப்ரோடெக்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 



    இத்துடன் கிராப் ரெயில், ஹெட்லைட் கவர்கள் மற்றும் ரியர்வியூ கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஸ்போர்ட் ரெட் நிறம் கொண்ட குஷன் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹோன்டா நவி 2018 மாடல்: ரேன்ஜ் கிரீன் மற்றும் லடாக் பிரவுன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

    இதுதவிர கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. 2018 ஹோன்டா நவி ஸ்கூட்டரில் 109சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் ஹோன்டா ஆக்டிவா மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8 பி.ஹெச்.பி. பவர், 9 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஹோன்டா நவி மாடலின் முன்பக்கம் மற்றும் பின்புறம் முறையே 12 இன்ச் மற்றும் 10 இன்ச் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் ஹோன்டா நவி 2018 ஸ்கூட்டர் விலை ரூ.44,775 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட ரூ.1,991 வரை விலை அதிகம் ஆகும். #navi110 #Scooter
    ×