search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96933"

    இத்தாலிய ஸ்கூட்டர் பிரான்டு லேம்பெரிட்டா புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இத்தாலி நாட்டை சேர்ந்த ஸ்கூட்டர் பிரான்டு லேம்பெரிட்டா தனது 70-வது ஆண்டு விழாவை 2017-ம் ஆண்டில் கொண்டாடியது. இந்த நிகழ்வை முன்னிட்டு அந்நிறுவனம் வி ஸ்பெஷல் மாடல்களை அறிமுகம் செய்திருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் லேம்பெரிட்டா புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லேம்பெரிட்டா நிறுவனம் மூன்று புதிய மாடல்களை ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யலாம் என்றும் இதைத் தொடர்ந்து புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. லேம்பெரிட்டா வி ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள் வி50, வி125 மற்றும் வி200 என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    2019-ம் ஆண்டு வாக்கில் லேம்பெரிட்டா நிறுவனம் 400சிசி ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லேம்பெரிட்டா வி ஸ்பெஷல் மாடல்கள் ஆஸ்திரியாவை சேர்ந்த கிஸ்கா எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதே நிறுவனம் கேடிஎம் மோட்டார்சைக்கிள்களையும் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது. 



    லேம்பெரிட்டா வி ஸ்பெஷல் மாடலில் அதிநவீன அம்சங்கள் பாரம்பரியமிக்க வடிவமைப்பு சேர்த்து ஸ்கூட்டரின் தோற்றம் மற்றும் பயன்பாட்டை சுவாரஸ்யமாக்குகிறது. இத்துடன் ஸ்டீல் பாடி, ஃபிக்சட் முன்பக்க ஃபென்டர் மற்றும் பிரபல லேம்பெரிட்டா பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. 

    லேம்பெரிட்டா வி ஸ்பெஷல் ஸ்கூட்டர்கள் 50சிசி, 125சிசி மற்றும் 200சிசி என மூன்று வித இன்ஜின்களில் கிடைக்கிறது. இத்துடன் GP மற்றும் SX ஸ்கூட்டர்களையும் அறிமுகம் செய்ய லேம்பெரிட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வி ஸ்பெஷல் மாடல்களில் எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், டர்ன் இன்டிகேட்டர்கள், முன்பக்கம் 220மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் மற்றும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் லேம்பெரிட்டா வி ஸ்பெஷல் எடிஷன்களில் பாதுகாப்பு வசதியை வழங்கும் போஷ் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1950 முதல் 1990 ஆண்டுகளில் லேம்பெரிட்டா ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டன. பின் நிதி பற்றாக்குறை காரணமாக சர்வதேச சந்தையில் இருந்து இந்நிறுவனம் தலைமறைவானது.
    டிவிஎஸ் ரேசிங் நிறுவனத்தின் என்டார்க் SXR ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் என்டார்க் SXR ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய SXR ஸ்கூட்டர் வழக்கமான என்டார்க் 125 ஸ்கூட்டரை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய என்டார்க் SXR ஸ்கூட்டர் தேசிய ரேலி ஷேம்பின்ஷிப் போட்டின் நான்காவது சுற்றில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ஸ்கூட்டரை மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அசிஃப் அலி மற்றும் ஷமிம் கான் ஓட்டுகின்றனர். டிவிஎஸ் என்டார்க் SXR ஏற்கனவே டிவிஎஸ் ரேசிங்-க்கு நல்ல வரவேற்பை பெற்ற SXR 160 மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். 

    வடிவமைப்பை பொருத்த வரை டிவிஎஸ் SXR பார்க்க என்டார்க் 125 போன்றே காட்சியளிக்கிறது. எனினும் புதிய என்டார்க் SXR புதிய டீக்கல்களை கொண்டுள்ளது. என்டார்க் SXR மாடலில் ரேஸ்-டியூன் செய்யப்பட்ட 125சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19 பிஹெச்பி பவர் வழங்குகிறது. முந்தைய என்டார்க் 125 மாடலில் 9 பிஹெச்பி பவர் வழங்குகிறது.  



    டிவிஎஸ் என்டார்க் SXR மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ரேஸ்-டியூன் செய்யப்பட்ட இன்ஜின் மட்டுமின்றி, ரேஸ்-டியூன் செய்யப்பட்ட ஹைட்ராலிக் சஸ்பென்ஷன், ரேஸ்-ஸ்பெக் கொண்ட இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட இக்னிஷன் சிஸ்டம் மற்றும் 12 இன்ச் ஆஃப் ரோடு பட்டன் டயர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிஎஸ் என்டார்க் 125 இந்தியாவின் முதல் ஸ்மார்ட்எக்சோனெக்ட் (SmartXonnect) ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இத்துடன் 55 அம்சங்களை வழங்கும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது.
    பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா SXL ஸ்கூட்டர்கள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா SXL ஸ்கூட்டர் இரண்டு புதிய நிறங்ளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் நிறங்களுடன் வெஸ்பா SXL 150 மற்றும் 125 மாடல்கள் புதிதாக மேட் ரெட் மற்றும் மேட் எல்லோ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    வெஸ்பா SXL 125 மாடலில் 125சிசி இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 9.9 பிஹெச்பி பவர், 10.6 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. வெஸ்பா SXL 150 மாடலில் 150சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 11.4 பிஹெச்பி பவர், 11.5 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. 

    புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வெஸ்பா ஸ்கூட்டர்களின் விற்பனை வெகுவாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெஸ்பா ரெட் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை ரூ.87,009 (எக்ஸ்-ஷோரூம்,மும்பை) என நிர்ணயம் செய்யப்பட்டது.



    வெஸ்பா ஸ்கூட்டர்களின் வடிவமைப்பு பழைய காலம் மற்றும் நவீன கால அம்சங்களை ஒன்றிணைத்து செய்யப்பட்டுள்ளது. வெஸ்பா SXL ஸ்கூட்டர்களின் முன்பக்கம் 200மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், பின்புறம் 140மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன் யூனிட்கள்: முன்பக்கம் சிங்கிள் சைடு ஆர்ம் மற்றும் பின்புறம் டூயல்-ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட வெஸ்பா SXL 150 மாடல் விலை ரூ.94,409 மற்றும் SXL 125 விலை ரூ.88,313 எனி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இரண்டு புதிய நிறங்களுக்கும் பொருந்தும்.
    ஹோன்டா நிறுவனத்தின் டியோ 2018 ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 2018 டியோ ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டியோ இந்தியா முழுக்க அனைத்து ஹோன்டா விற்பனை மையங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    புதிய 2018 டியோ மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், பொசிஷன் லேம்ப், 4-இன் லாக், சீட்-ஐ திறக்கும் ஸ்விட்ச் மற்றும் ஒன்பது வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது. புதிய டியோ மாடலில் மெட்டல் மஃப்ளர் ப்ரோடெக்டர், டீலக்ஸ் வேரியன்ட்-இல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மூன்றடுக்க இகோ ஸ்பீட் இன்டிகேட்டர், கோல்டு-ஃபினிஷ் செய்யப்பட்ட ரிம்களை கொண்டிருக்கிறது. 

    2018 ஹோன்டா டியோ ஸ்டேன்டர்டு மாடல் வைப்ரன்ட் ஆரஞ்சு, பியல் ஸ்போர்ட்ஸ் எல்லோ, ஸ்போர்ட்ஸ் ரெட், கேன்டி ஜேஸ் புளு மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே என ஐந்து வித நிறங்களை கொண்டிருக்கிறது. இதன் டீலக்ஸ் வேரியன்ட் டேசில் எல்லோ மெட்டாலிக், மேட் மார்ஷல் கிரீன், பியல் இக்னியஸ் பிளாக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என நான்கு வித ஷேட்களில் கிடைக்கிறது.



    2018 டியோ மாடலில் 110சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினஅ 8 பிஹெச்பி @ 7000 ஆர்பிஎம் மற்றும் 8.9 என்எம் டார்கியூ @ 5500 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. ஹோன்டா டியோ மாடலில் CVT டிரான்ஸ்மிஷன் மற்றும் அதிகபட்சம் மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    ஹோன்டா டியோ 2018 விலை இந்தியாவில் ரூ.51,292 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என துவங்குகிறது. ஹோன்டா டியோ டீலக்ஸ் வேரியன்ட் விலை ரூ.53,292 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×