search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்டு"

    கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்:

    கவுனி அரிசி மாவு - 250 கிராம்,
    தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
    நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.

    செய்முறை:

    கவுனி அரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி பிறகு மிக்ஸியில் அரைத்துவைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவில் தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாகப் பிசையவும். தண்ணீர் தெளித்து பிசைவதால் மாவு கெட்டியாகிவிடக் கூடாது. மாவாகவே இருக்க வேண்டும். ஆனால், மாவில் ஈரப்பதம் இருக்க வேண்டும். அந்த மாவை சல்லடையில் போட்டு சலிக்கவும்.

    ஐந்து நிமிடங்கள் ஆனதும் இட்லிப்பானையில் துணி போட்டு சலித்த மாவை ஏழு நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

    அதை மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சர்க்கரை சேர்த்து பிசிறி எடுத்து உருண்டையாகப் பிடிக்கலாம் அல்லது அப்படியே பரிமாறலாம்.

    சத்தான கவுனி அரிசி உருண்டை ரெடி.

    குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேரட், கோவா சேர்த்து வீட்டிலேயே சூப்பரான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 200 கிராம்,
    தேங்காய்த்துருவல் - 1 கப்,
    பொடித்த கோவா - 1/2 கப்,
    சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு,
    மெல்லியதாக சீவிய பாதாம், பிஸ்தா - தேவைக்கு,
    உடைத்த முந்திரி, காய்ந்த திராட்சை - தேவைக்கு,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
    அலங்கரிக்க விருப்பமான நட்ஸ் - தேவைக்கு.



    செய்முறை :

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    நான்ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து நெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் முந்திரி, காய்ந்த திராட்சையை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

    அதே கடாயில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கேரட்டை போட்டு வதக்கவும். ‘

    கேரட் சிறிது வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொடித்த கோவாவை சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் 10 நிமிடம் வதக்கவும்.

    அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து அனைத்தும் சுருண்டு கடாயில் ஒட்டாமல் வரும்பொழுது வறுத்த முந்திரி, காய்ந்த திராட்சை கலந்து இறக்கவும்.

    ஆறியதும் லட்டுகளாக பிடித்து பிஸ்தா, பாதாம் சீவலால் அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான கேரட் கோவா லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கவுனி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த கவுனி அரிசியில் சத்தான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கவுனி அரிசி மாவு - அரை கப்
    பொட்டுக்கடலை மாவு - அரை கப்
    பாதாம் பவுடர் - 4 டேபிள்ஸ்பூன்
    நெய் - கால் கப்
    துருவிய வெல்லம் - முக்கால் கப்
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு



    செய்முறை:

    வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடானதும், முந்திரியைச் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியில் கவுனி அரிசி மாவைச் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்கவும்.

    மாவு ஆறியதும் மீதமுள்ளவற்றில் நெய், முந்திரி தவிர்த்து பொட்டுக்கடலை மாவு, பாதாம் பவுடர், துருவிய வெல்லம், ஏலக்காய்த்தூள், போட்டு இதில் உருக்கிய நெய்யை ஊற்றி கைப்பொறுக்கும் சூட்டில் லட்டுகளாகப் பிடிக்கவும்.

    லட்டின் மேலே முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.

    சத்தான கவுனி அரிசி லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வஜ்ரவேல் ஆனந்த் இயக்கத்தில் குணா பாபு - ஸ்வேதா நடிப்பில் உருவாகும் `லட்டு' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #Laddu
    கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் சார்பாக அமுதா ஆனந்த் தயாரிப்பில், ஐரிஸ் புரொடெக்ஷன்ஸ் சார்பாக பி.ராதாகிருஷ்ணன் இணை தயாரிப்பில் உருவாகும் படம் `லட்டு'.

    இந்த படத்தை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக குணா பாபு நடிக்கிறார். இவர் இரும்புத்திரை, தமிழ் படம் 2.0, தீரன் அதிகாரம் ஒன்று, காளி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர கேடி (எ) கருப்பு துரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். குழந்தை நட்சத்திரங்களாக விஷ்வேஷ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். 

    குழந்தைகளுக்கு எதை சொன்னாலும் குணமாக சொல்ல வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது. அம்மா இல்லாத இரட்டையரை தந்தை எப்படி வளர்க்கிறார் என்பதையும், அதை சார்ந்த இன்னும் பல சுவாரசியமான விஷயங்களையும் மையப்படுத்தி படம் உருவாகிறது.



    இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஓக்கேனக்கல், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் படம் வெளியாகவுள்ளது. #Laddu

    தீபாவளிக்கு இனிப்பு, காரம் மிகவும் ஸ்பெஷல். இந்த தீபாவளிக்கு எளிய முறையில் வீட்டிலேயே பாசிப்பருப்பு லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப் பருப்பு -1 கப்
    பொடித்த சர்க்கரை - 1 கப்
    நெய் - 100 கிராம்
    ஏலக்காய் - 4
    முந்திரி பருப்பு -10



    செய்முறை :

    வாணலியில் பாசிப்பருப்பை போட்டு வறுத்து மிக்சியில் மாவாக்கிக்கொள்ளவும். அதனை சலித்துக் கொள்ளவும்.

    ஏலக்காய் மற்றும் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.

    பின்னர் அவற்றை பாசிப் பருப்பு மாவுடன் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    பின்னர் அதனுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    வாணலியில் நெய்யை ஊற்றி அதனை உருக்கி மாவு மீது ஊற்றி சூடு பொறுக்கும் அளவுக்கு இருக்கும் போதே லட்டுகளாக பிடிக்கவும்.

    ருசியான பாசிப்பருப்பு லட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரவையுடன் தேங்காய் சேர்த்து லட்டு செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த லட்டை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    ரவை - ஒரு கப்,
    தேங்காய் துருவல் - அரை கப்,
    சர்க்கரை - ஒரு கப்,
    வறுத்த முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    நெய் - 50 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
    பால் - சிறிதளவு



    செய்முறை:  

    ரவையை நெய்யில் சிவக்க வறுத்து கொள்ளவும்.

    தேங்காய் துருவலை வறுத்து கொள்ளவும்.

    ரவையுடன், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்கும் போது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும்.

    இப்போது இந்த பாகை ரவை கலவையில் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

    சூப்பரான ரவை தேங்காய் லட்டு ரெடி.

    இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×