search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபம்"

    கார்த்திகை தீபத்திருநாளான இன்று மாலையில் விளக்கேற்றிய பிறகு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டு, இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.
    கார்த்திகை தீபத்திருநாளான இன்று சிவ வழிபாடு செய்வோம். இன்று இல்லத்தையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, வீடு முழுக்க தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அப்போது விளக்கேற்றிய பிறகு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டு, இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.

    தீபம் ஜோதி பரப்பிரம்மம்
    தீபம் சர்வ தமோபஹம்
    தீபனே சாத்யத சர்வம்
    சந்த்யா தீப நமோஸ்துதே!

    இந்த ஸ்லோகத்தை 108 முறை ஜபிப்பது விசேஷம். இயலாதவர்கள் 11 முறை அல்லது 9 முறை அல்லது மூன்று முறை எனச் சொல்லலாம். கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுங்கள். சிவபார்வதியை தம்பதி சமேதராக வணங்குங்கள். வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். வீடு மனை யோகம் கிடைக்கும். இழந்ததையெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள். இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள் என்பது உறுதி.
    உலகம் முழுவதும் பஞ்ச பூதங்கள் இயங்கி வருவதால் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர்.
    உலகம் பஞ்சபூத சக்தியான நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பால் இயங்கி வருகிறது. இதேபோல் நமது உடலும் பஞ்ச சக்தியான எலும்பு, தோல், முடி, நரம்பு, தசையால் இயங்கி வருகிறது. இதேபோல் இந்த உலகம் பஞ்ச உலோகம், பஞ்சபூத சக்தி, பஞ்ச சக்தி, பஞ்சகிரியா சக்தி, பஞ்சமுகம் ஆகிய பஞ்ச சக்தியாலும், ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி ஆகிய ஐந்து சக்திகளாகவும் இயங்கி வருகிறது. உலகம் முழுவதும் பஞ்ச பூதங்கள் இயங்கி வருவதால் நமது முன்னோர்கள் அதை முறைப்படி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளக்கு வடிவமாக அமைத்துள்ளனர்.

    இதையொட்டி கோயில்கள், வீடுகள், சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிக்கும் முதலாவது குத்து விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு துவங்குவது காலம் காலமாக நடந்து வரும் வழக்கம். குத்துவிளக்கில் கிழக்கு முகமாக விளக்கேற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும். மேற்கு முகமாக விளக்கேற்றினால் கிரக தோஷம், பங்காளி பகை உண்டாகும். வடக்கு முகமாக விளக்கேற்றினால் கல்வி மற்றும் சுப காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும், திரண்ட செல்வம் உண்டு.

    தெற்கு முகமாக விளக்கேற்றினால் அபசகுனம், பெரும் பாவம் உண்டாகும். குத்து விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலனாக இருக்கும், இருமுகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமையுடன் இருக்கும், மும்முகம் ஏற்றினால் புத்திர சுகம், கல்வி கேள்விகளில் விருத்தியாகும், நான்கு முகம் ஏற்றினால் சர்வ பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும் என்பது ஐதீகமாகும். இதேபோல் தாமரை தண்டில் திரியால் தீபமேற்றினால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும். வாழைத்தண்டு நூல் திரியால் தீபமேற்றினால் குலதெய்வக் குற்றம், சாபம் நீங்கும். புது மஞ்சள் சேலை துண்டு திரியால் தீபமேற்றினால் தாம்பத்ய தகராறு நீங்கும்.

    புதுவெள்ளை வஸ்திரத்தில் பன்னீரை விட்டு உலர விட்டு திரியால் தீபமேற்றினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும். நெய்விளக்கு ஏற்றினால் லட்சுமி வாசம் செய்வாள். இலுப்பை எண்ணெயால் விளக்கேற்றினால் பூஜிப்பவருக்கும், பூஜிக்கப்படும் இடத்துக்கும் விருத்தியுண்டாகும். விளக்கெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பங்கள் விலகும்.
    வீட்டின் பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது பழந்தமிழர் வழக்கம். விளக்கேற்றிய பிறகு என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி நம்முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர்.
    பூஜை அறை என்பது ஒரு புனிதமான அறை. தெய்வப் படங்களை அதில் வைத்து வழிபடுவது வழக்கம். வீட்டின் பூஜை அறையில் மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது பழந்தமிழர் வழக்கம். அங்ஙனம் விளக்கேற்றிய பிறகு என்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றி நம்முன்னோர்கள் எடுத்துரைக்கின்றனர்.

    குறிப்பாக விளக்கேற்றிய பிறகு அடுத்தவர்களுக்கு பால், மோர், உப்பு, அரிசி, சுண்ணாம்பு போன்ற வெள்ளைப் பொருட்கள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. விளக்கேற்றியதும் வீட்டைக் கூட்டக் கூடாது. துணி துவைக்கக் கூடாது.
    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை திருக்கோவிலுக்குள் சிவகங்கை தீர்த்தத்தில் புற அழுக்குப்போக புனித நீராடி பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அசுத்தம் அகற்றினால் பிரமஞானம் பெறலாம்.
    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை திருக்கோவிலுக்குள் சிவகங்கை தீர்த்தத்தில் புற அழுக்குப்போக புனித நீராடி பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அசுத்தம் அகற்றினால் பிரமஞானம் பெறலாம்.

    பக்தர்களின் உச்சகட்டமாக அமைவது கார்த்திகை தீபத்திற்கு நெய்குடம் கட்டுதலாகும். கார்த்திகை தீபத்திற்கு பிறகும் மலைமேல் உள்ள தீபமானது 10 நாட்களுக்கு குறையாமல் ஏற்றி வைக்கப்படும். அதற்கு பின் தீபம் ஏற்றி வைக்க பயன்படுத்தப்பட்ட பாத்திரம் திருக்கோவிலுக்கு எடுத்து வரப்படும். அந்த பாத்திரத்தில் எஞ்சி உள்ள கருமை நிறமுள்ள சாம்பல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. பக்தர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த மை அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    திருக்கோவிலில் கிழக்கு ராஜ கோபுரத்தின் உச்சியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள அகல் விளக்குகளில் இறந்தவர்கள் மோட்சம் சென்றடைய வேண்டுதல் செய்து இறந்தவர்கள் பெயரில் உடல் அடக்கம் செய்யப்படும் நாள் அல்லது திதி அன்று அவரவர்களின் பிரார்த்தனைக்கு ஏற்றவாறு நல்லெண்ணை (அல்லது) இலுப்பை எண்ணையில் மோட்சதீபம் போடப்பட்டு வருகிறது. இது எந்த திருக்கோவிலிலும் இல்லாத பிரார்த்தனை சிறப்பாகும்.

    குழந்தை பேறில்லாதவர்கள் அண்ணாமலையாரை வேண்டி குழந்தை பிறந்ததும் திருக்கோவிலுக்கு வந்து அர்ச்சனை ஆராதனை செய்து கரும்பு கட்டுகள் கொண்டு வந்து புடவையினால் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து மாடவீதி வலம் வந்து பிரார்த்தனை செலுத்துவது எந்த திருக்கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.

    மூன்றாம் பிரகாரத்தில் தல விருட்சமான மகிழ மரம் உள்ளது. குழந்தை பாக்கியமற்ற பக்தர்கள் இறைவனை வேண்டிக் கொண்டு துணியால் செய்யப்பட்ட சிறிய தொட்டில்களை இந்த மரத்தின் கிளைகளில் கட்டுவார்கள். அவர்களுடைய வேண்டுதலை நிறைவேற்றியவுடன் தங்கள் குழந்தைகளுடன் இத்திருக்கோவிலுக்கு வந்து தாங்கள் கட்டியிருந்த துணித் தொட்டில்களை நீக்கிவிட்டு காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது.
    விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குள் சூரிய தேவதை ஆவாஹனமாகி விடுவாள். விளக்கேற்றிய பிறகு சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    * விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
    * விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.
    * விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
    * விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.

    * விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.
    * விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.

    * விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
    * விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.
    * வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது.

    கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
    அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.

    கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

    வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

    எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

    சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

    தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டு விடக்கூடாது. தீபத்தை எப்படி குளிர வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    பொதுவாக மக்கள் தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டு விடுகின்றனர். இது தவறு!. தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

    மேலும் விளக்கை அணை எனக் கூற கூடாது, விளக்கை குளிரவை எனக் கூற வேண்டும். விளக்கை ஆண்கள், ஏற்றுவதோ, குளிர வைப்பதோ செய்யக் கூடாது. பெண்களே செய்ய வேண்டும்.

    தீபத்தை வாயினால் ஊதியோ, வெறுங்கையினாலோ அணைக்க கூடாது, தீபத்தைக் குளிர வைக்க திரியின் அடிப்பகுதியை (எண்ணெயில் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்வலரூபிணே நம என்று சொல்லிப் பின் புறமாக இழுக்க வேண்டும். அப்போது தீச்சுடர் சிறிது சிறிதாகக் குறைந்து, திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.
    கார்த்திகை மாதம் முழுவதும் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
    * திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம்.
    * கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம்.
    * கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    * கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.
    * கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.
    * கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.

    * கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.
    * கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.
    * கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

    * கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.
    * கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.
    * கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
    * தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
    கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழியில் பிரசித்தி பெற்ற வாமனபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனையும், இரவு சாமி வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

    பொதுவாக சிவன்கோவில்களில் பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றப்படும். ஆனால் வாமனபுரீஸ்வரர் கோவிலில் மட்டும் பரணி நட்சத்திரத்துக்கு மறுநாள் வரும் ரோகிணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும். அதன்படி இந்த ஆண்டு ரோகிணி நட்சத்திரமான நேற்று முன்தினம் கோவிலின் முன்புள்ள மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி வாமனபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு மங்கள வாத்திய இசை ஒலிக்க கோவில் முன்புறம் உள்ள மலை உச்சியில் ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது.

    அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து கோவில் அருகே வைக்கப்பட்டிருந்த 5 சொக்கப்பனைகள் கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    தினமும் நாம் ஏற்றும் தீபத்தில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் இணைந்து இருந்து அருள்புரிகின்றனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
    முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்றுகிறோம். ஆனால் சிறப்புமிக்க இந்நாளில் மட்டுமல்லாமல், தினமும் நாம் ஏற்றும் தீபத்தில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் இணைந்து இருந்து அருள்புரிகின்றனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    தீபத்தில் இருந்து வெளிப்படும் சுடரில் செல்வ வளம் தரும் அன்னை மகாலட்சுமியும், அதன் ஒளியில் அறிவுச்சுடர் பரப்பும் அன்னை சரஸ்வதியும், சுடரில் இருந்து வெளிப்படும் வெப்பத்தில் வீரத்தை தந்து ஆரோக்கியம் தரும் அன்னை பார்வதியும் இருப்பதாக ஐதீகம். ஆகவே தான் ஒரு வீடு எல்லா நலன்களும் பெற தினமும் விளக்கேற்றி வைப்பது சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.
    தீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த 16 வகையான தீபங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம் என பதினாறு வகையான தீபங்கள் உண்டு.

    தீபத்திற்கான எண்ணெய்

    எக்காலத்திலும் தீபம் ஏற்றுவதற்கு, சுத்தமான நல்லெண்ணெயை பயன்படுத்தாலம். ஏற்கனவே உபயோகித்த எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதே போல் கடலை எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது.

    இல்லத்தில் இறை வனின் அருளும், கல்வியும், செல்வமும் சிறந்து விளங்கிடவும், வாழ்வும் துன்பங்கள் இல்லாமல் சுகமாக அமையும் வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகிய ஐந்து எண்ணெய்களைக் கலந்து தீபம் ஏற்றுவது சிறப்பு.
    நமது பற்றுகளை ஆசைகளை இறைவனிடம் தெரிவிக்கச் செல்லும் பக்தர்கள் நெய் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறும் என்று கூறுகின்றனர் ஞானிகள்.
    இருளை விலக்குவது விளக்கு. அருளை வழங்குவது விளக்கு. ஜோதியை வழிபட்டால் ஒளி மயமான வாழ்க்கை உருவாகும் என்பதால் ஜோதியோடு லெட்சுமியை ஒப்பிட்டு ஜோதிலெட்சுமி என்று சொல்வார்கள்.

    ஆதிலெட்சுமியும், ஜோதிலெட்சுமியும் உங்களுக்கு அருள் கொடுத்தால் பாதியில் நின்ற பணிகள் கூட பரபரப்பாக முடிவடையும். பணத்தேவைகளுள் பூர்த்தியாகும். மின் விளக்கிற்கும் நெய் விளக்கிற்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஒரு மின் விளக்கை மற்றொரு மின்விளக்கோடு ஒட்டி வைத்தால் பற்றிக் கொள்ளாது.

    ஆனால் அதே சமயம் ஒரு எரியும் நெய் விளக்கை மற்றொரு நெய் விளக்கோடு ஒட்டி வைத்தால், அதுவும் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கும் எனவே நமது பற்றுகளை ஆசைகளை இறைவனிடம் தெரிவிக்கச் செல்லும் பக்தர்கள் நெய் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறும் என்று கூறுகின்றனர் ஞானிகள்.
    ×