search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97038"

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #smartphone



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் மற்றும் ஒன் பவர் ஆன்ட்ராய்டு பவர் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே, ஒன்பவர் மாடலில் FHD பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போனில் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், மோட்டோரோலா லோகோ வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மோட்டோரோலா ஒன் சிறப்பம்சங்கள்:

    - 5.9 இன்ச் 1520x720 பிக்சல் 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்



    மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் 19:9 ஃபுல் ஹெச்.டி பிளஸ் ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - P2i வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 349 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.24,780 என்றும் ஐரோப்பியா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில் செப்டம்பர் மாதம் முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    மோட்டோரோலா ஒன் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் வெளியாகி இருக்கும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #motorola #smartphone
    மோட்டோரோலா ஒன் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் XT1941 என்ற மாடல் நம்பருடன் சீன வலைத்தளமான TENAA-வில் லீக் ஆகியுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளன. புகைப்படங்களில் உள்ள ஸ்மார்ட்போன், கடந்த வாரம் சீனாவில் அறிமுகமான மோட்டோ P30 ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது.

    வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிப்செட், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, இரண்டாவது பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டாவது செல்ஃபி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம், முன்பக்க ஸ்கிரீனின் கீழ் மோட்டோரோலா லோகோ இடம்பெற்றிருக்கிறது. கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது.



    மோட்டோரோலா ஒன் XT1941 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.86 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
    - 6 ஜிபி / 4 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் வைட்/சில்வர் நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் இம்மாதத்தில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவில் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #motorola #smartphone

    புகைப்படம் நன்றி: Android Headlines
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ P30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #MotorolaP30


    மோட்டோரோலாவின் மோட்டோ P30 ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ P30 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் ZUI 4.0 கொண்டுள்ளது.

    கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் டிசைன் கொண்டிருக்கும் மோட்டோ P30 ஸ்மார்ட்போனில் லெனோவோ இசட்5 போன்றே காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்பக்கம் கார்னிங் கொபரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, 1.25μm பிக்சல், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. சப்போர்ட் மற்றும் செல்ஃபிக்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சம், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுகிறது.



    மோட்டோ P30 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5 வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    -  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ZUI 4.0
    - 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.25μm பிக்சல்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
    - 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.25μm பிக்சல்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோ P30 ஸ்மார்ட்போன் வைட், பிளாக் மற்றும் அரோரா புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை 2099 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.21,315) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 128 ஜிபி வெர்ஷன் 2499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.25,380) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #MotorolaP30 #smartphone
    மோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #motorola #smartphone


    மோட்டோரோலா நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன்கள் XT1943 மற்றும் XT1942 மாடல் எண்களில் சீன வலைதளமான TENAA லீக் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மோட்டோரோலா ஒன் மற்றும் ஒன் பவர் என்ற பெயர்களில் ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டிங் உடன் சர்வதேச சந்தையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மோட்டோரோலா P30, P30 நோட் மற்றும் P30 பிளே ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ சீன வலைதளத்தில் பட்டியலிட்டப்பட்டன. XT1943 மாடல் நம்பர் கொண்டிருந்த மொபைல் P30 என்றும், XT1942 மாடல் எண் கொண்டிருந்த மொபைல் P30 நோட் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    இரண்டு புதிய மாடல்களும் சீனாவில் மோட்டோ இசட்3 அறிமுகமாக இருக்கும் நிகழ்விலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 15-ம் தேதி அறிமுகமாக உள்ளது.



    மோட்டோரோலா P30 நோட் / மோட்டோ ஒன் பவர் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 6 ஜிபி / 4 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4850 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோரோலா P30 / மோட்டோ ஒன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
    - 1.6 / 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
    - 6 ஜிபி / 4 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 12 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2820 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்
    மோட்டோரோலாவின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக மோட்டோ இசட்3, மோட்டோ மாட்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MotoZ3


    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் மோட்டோ மாட்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    மோட்டோரோலாவின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான மோட்டோ இசட்3 மாடலில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம், 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, ஏ.ஐ. போட்டோ அம்சங்கள், கூகுள் லென்ஸ் சப்போர்ட் உள்ளிட்டவை கொண்டுள்ளது. 

    முன்பக்கம் மற்றும் பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படும் மோட்டோ இசட்3, எடை குறைவாகவும், 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மூலம் உருவாக்கப்பட்டுல்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டு, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள நிலையில், இசட்3 ஸ்மார்ட்போனில் மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ ஆக்ஷன்ஸ் வசதி, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் டர்போ சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் 5ஜி மோட்டோ மாட் ஒன்றை மோட்டோரோலா அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் வெரிசான் 5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை மோட்டோ இசட்3 பெற்றிருக்கிறது. அமெரிக்க டெலிகாம் நிறுவனமான வெரிசான் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் 5ஜி நெட்வொர்க்-ஐ 2019-ம் ஆண்டு வாக்கில் வழங்க இருக்கிறது. 



    மோட்டோ இசட்3 சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1080x2160 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - அட்ரினோ 540 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/2.0, 1.25um பிக்சல், லேசர் ஆட்டோஃபோகஸ் (pDAF)
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.12um பிக்சல்
    - வாட்டர் ரெசிஸ்டண்ட்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜிங்

    மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 480 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.32,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் 5ஜி மோட்டோ மாட்ஸ் அமெரிக்காவில் பிரத்யேகமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #MotoZ3 #smartphone

    மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் அறிமுக வீடியோவினை கீழே காணலாம்..,

    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #motorola


    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதை உணர்த்துகிறது. முன்னதாக மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன்களுடன் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், மோட்டோ ஜி6 பிளஸ் வெளியீடு மட்டும் தாமதமானது. தாமதத்துக்கான காரணம், விற்பனை மற்றும் விலை சார்ந்த விவரங்கள் அறியப்படவில்லை.



    மோட்டோ ஜி6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.93 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2160 பிக்சல் 18:9 ரக டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
    - அட்ரினோ 508 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் லென்ஸ் எல்இடி ஃபிளாஷ், F/2.2
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, ஃபிளாஷ், F/2.2
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
    - 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை EUR 299 (இந்திய மதிப்பில் ரூ.24,350) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி6 விலை ரூ.13,999 இல் துவங்குகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #motoe5



    மோட்டோரோலா நிறுவனத்தின் ஜி-சீரிஸ் மற்றும் இ சீரிஸ்-இல் மொத்தம் ஆறு புதிய ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. மோட்டோ இ சீரிஸ் என்ட்ரி லெவல் மாடலாக மூன்று ஸ்மார்ட்போன்கள் மோட்டோ இ5, மோட்டோ இ5 பிளஸ் மற்றும் மோட்டோ இ5 பிளே அறிமுகம் செய்யப்பட்டன.

    மோட்டோ இ5 பிளே அமெரிக்க சந்தையில் மட்டும் பிரத்யேகமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்சமயம் ஐரோப்பியா மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளில் வெளியாக இருக்கிறது. எனினும் இம்முறை ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியானதை தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 பிளே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் கூகுளின் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஆன்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் 18:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் மோட்டோ லோகோவின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வேரியன்ட்களிலும் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மற்றபடி பிராசஸர், ரேம் சார்ந்த விவரங்கள் வழங்கப்படவில்லை, எனினும் முந்தைய மோட்டோ இ5 பிளே மாடலில் 2 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு கோ எடிஷன் மாடலில் 1 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மற்ற சிறப்பம்சங்கள் அமெரிக்க மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே வழங்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மோட்டோ இ5 பிளே மாடலில் 2800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம், வாட்டர் ரெஸ்டன்ட் வசதி, ஸ்னாப்டிராகன் 425 / 427 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. #motoe5 #smartphone
    மோட்டோரோலா நிறுவனத்தின் இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட்போன்களின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மோட்டோரோலா நிறுவனத்தின் இ5 மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மோட்டோ இ5 மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் முறையே 5.7 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 4000 எம்.ஏ.ஹெச். மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன.

    ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மோட்டோ டிஸ்ப்ளே மற்றும் மோட்டோ ஆக்ஷன், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ இ5 பிளஸ் மாடலில் 3D பாலிமர் கிளாஸ் பேக் மற்றும் உறிதியான சேசிஸ் வழங்கப்பட்டுள்ளது.



    மோட்டோ இ5 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
    - அட்ரினோ 308 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.12um பிக்சல், PDAF
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல், லேசர் ஆட்டோஃபோகஸ், PDAF
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் கிரே, ஃபைன் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மோட்டோ ஹப் விற்பனை மையங்களில் இந்த ஸ்மார்ட்போனினை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். மோட்டோ இ5 பிளஸ் ஃபைன் கோல்டு மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனினை மோட்டோ ஹப் விற்பனையகங்கள் மட்டுமின்றி அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக வாங்கிட முடியும்.



    அறிமுக சலுகைகள்:

    - ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் அமேசான் வலைதளத்தில் மோட்டோ இ5 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.800 வரை தள்ளுபடி பெற முடியும். 

    - அமேசான் தளத்தில் ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.

    - அமேசான் தளத்தில் ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    - மோட்டோ இ5 மற்றும் இ5 பிளஸ் வாங்கும் ஜியோ பயனர்களுக்கு 130 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 

    - மோட்டோ ஹப்களில் பேடிஎம் மால் செயலி மூலம் மோட்டோ இ5 அல்லது இ5 பிளஸ் வாங்குவோருக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மோட்டோ இ5 பிளஸ் மாடல் ஜூலை 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 IPS டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
    - அட்ரினோ 308 GPU
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.25um பிக்சல், லேசர் ஆட்டோஃபோகஸ், PDAF
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஃபைன் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. மற்ற சந்தைகளில் 196 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,510) என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு குறித்த டீசர் பதிவிடப்பட்டு இருக்கிறது.




    மோட்டோ இ5 டீசர்களை தொடர்ந்து மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ இ5 பிளஸ் டீசர் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக பேட்டரி சார்ந்த பிரச்சனைகள் குறித்த வீடியோவை அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.

    தற்சமயம் மோட்டோ இ5 பிளஸ் வெளியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதே நிகழ்வில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மூன்றாம் தரப்பு விற்பனையாளர் நிர்ணயித்திருக்கும் விலை என்பதால் இது அதிகாரப்பூர்வ விலை கிடையாது

    முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது, எனினும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டது. அறிமுக நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் மட்டும் வெளியிடப்படும் என்றும் மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ் மாடல்கள் ஆசிய பசிபிக், ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



    மோட்டோ இ5 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி, 1440x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 8 எம்பி பிரைமரி கேமரா, செல்ஃபி ஃபிளாஷ்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - டர்போ பவர் சார்ஜிங் வசதி

    ஐரோப்பாவில் மோட்டோ இ5 பிளஸ் விலை EUR 149 (இந்திய மதிப்பில் ரூ.13,495) என நிர்ணயம் செய்யப்பட்டது.
    மோட்டோரோலா ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டு ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    லெனோவோவின் மோட்டோரோலா தனது ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது.  

    மோட்டோரோலா ஒன் பவர் என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் லைவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. 

    ஸ்பெயின் நாட்டு வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 6.2 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2280 பிக்சல், 19:9 ரக நாட்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3780 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.



    புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா, 12 எம்பி, f/1.8 அப்ரேச்சர் மற்றும் 5 எம்பி சென்சார், f/2.0 அப்ரேச்ர் முன்பக்கம் 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் வழங்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் X போன்ற நாட்ச், கீழே சிறிய சின், பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா மாட்யூல் அதன் கீழ் ஆன்ட்ராய்டு ஒன் பிரான்டிங் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்பீக்கர் கிரில் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டது.

    இதுதவிர ஸ்மார்ட்போனின் இதர அம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை. மேலும் மோட்டோரோலா ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் தகவல்கள் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
    இந்தியாவில் மோட்டோ ஜி6 மற்றும் ஜி6 பிளே ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டன. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    மோட்டோரோலா ஏற்கனவே அறிவித்தபடி மோட்டோ ஜி6 மற்றும் ஜி6 பிளே ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 

    முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டது குறி்ப்பிடத்தக்கது. இந்தியாவில் இரன்டு வேரியன்ட்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மோட்டோ ஜி6 பிளஸ் அறிமுகம் செய்யப்படாமல் உள்ளது. தற்சமயம் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ ஜி6 மற்றும் ஜி6 பிளே ஸ்மார்ட்போன்களில் 18:9 ரக டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 4 எம்பி அடாப்டிவ் லோ-லைட் மோட் வழங்கப்பட்டுள்ளன.



    மோட்டோ ஜி6 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - கைரேகை சென்சார்
    - P2i வாட்டர்-ரெப்பலன்ட் நானோ கோட்டிங்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி, டர்போ சார்ஜிங்

    இந்தியாவில் மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் இன்டிகோ பிளாக் நிறம் கொண்டிருப்பதோடு, 3 ஜிபி ரேம் மாடல் ரூ.13,999 என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் அமோசன் தளத்தில் மட்டும் பிரத்யேகமாகவும், மோட்டோ ஹப் ஸ்டோர்களில் ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    அறிமுக சலுகைகள்:

    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு அமேசான் தளத்தில் வாங்குவோருக்கு ரூ.1,250 தள்ளுபடி
    - பேடிஎம் மால் கியூ ஆர் கோடு மூலம் வாங்குவோர் மோட்டோ ஹப்களில் பேடிஎம் மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.1200 கேஷ்பேக்
    - பழைய மோட்டோ ஸ்மார்ட்போன்களை அமேசான் தளத்தில் மட்டும் எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.1000 தள்ளுபடி
    - அமேசான் மற்றும் மோட்டோ ஹப்களில் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி
    - அமேசான் தளத்தில் கின்டிள் லைட் வாங்குவோர் முதல் இ-புத்தகங்களுக்கு 80% வரை தள்ளுபடி
    - ஏர்டெல் 4ஜி போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.499 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்துவோருக்கு ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.

    மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.



    மோட்டோ ஜி6 பிளே சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 IPS டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி, டர்போ சார்ஜிங்

    மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் இன்டிகோ பிளாக் மற்றும் ஃபைன் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மோட்டோ ஜி6 பிளே விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் ப்ளிப்கார்ட் ஆன்லைன் மற்றும் மோட்டோ ஹப் ஸ்டோர்களில் வாங்க முடியும். 

    அறிமுக சலுகைகள்:

    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்குவோருக்கு ரூ.1,000 தள்ளுபடி
    - பேடிஎம் மால் கியூ ஆர் கோடு மூலம் வாங்குவோர் மோட்டோ ஹப்களில் பேடிஎம் மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.1200 கேஷ்பேக்
    - பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.1500 வரை தள்ளுபடி
    - ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.5100 வரை பைபேக் சலுகை
    - ப்ளிப்கார்ட் மற்றும் மோட்டோ ஹப்களில் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி
    - ஜியோ 198 பிரீபெயிட் சலுகையை வாங்கும் போது 25% தள்ளுபடி
    ×