search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெனால்ட்"

    ரெனால்ட் நிறுவனத்தின் எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது க்விட் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் 4 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் க்விட் மாடல் ரெனால்ட் நிறுவன விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பத்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் அங்கமாக ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் 2021 க்விட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரெனால்ட் க்விட் விலை ரூ. 4.11 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 5.56 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ரெனால்ட் க்விட்

    ரெனால்ட் க்விட் மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 53 பி.ஹெச்.பி. திறன், 72 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 67 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 91 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் மாடல் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ, ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் டேட்சன் ரெடி-கோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    இந்தியாவில் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் ரெனால்ட் கேப்டுர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #RenaultCaptur



    பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் நிறுவனத்தின் ‘கேப்டுர் மாடல்’ பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் புகிய கேப்டுர் காரின் விலை ரூ.9.50 லட்ச என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் கேப்டுர் ஆர்.எக்ஸ்.இ மற்றும் கேப்டுர் பிளாடைன் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. பிளாடைன் டீசல் மாடல் விலை ரூ.12 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய மேம்படுத்தப்பட்ட மாடலில் 7 இன்ச் தொடுதிரை மீடியா எவல்யூஷன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இரட்டை ஏர் பேக் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏற்கனவே ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் ரியர் பார்க்கிங் சென்சார் சேர்க்கப்பட்டுள்ளது.



    இதேபோன்று முன் சீட்டில் அமரும் பயணி மற்றும் டிரைவர் சீட் பெல்ட் அணிந்திருப்பதை உணர்த்தும் ரிமைண்டர் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. அதிக வேகத்தில் சென்றால் எச்சரிக்கும் ஹை ஸ்பீடு அலெர்ட் போன்றவை கூடுதல் பாதுகாப்பு அம்சங்களாக இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

    முந்தைய மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்று, புதிய காரிலும் 106 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 110 ஹெச்.பி. பவர் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டிருக்கிறது. இந்த என்ஜின்கள் 5 மற்றும் 6 கியர்களுடன் வருகிறது. 

    முந்தைய பெட்ரோல் மாடலைக் காட்டிலும் இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் விலை ரூ.50 ஆயிரம் குறைவாகும். இந்த கார் நிசான் கிக்ஸ், டாடா ஹாரியர், ஹுண்டாய் கிரெட்டா ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
    ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்விட் இ.வி. காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #KwidEV



    ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் இ.வி. காரை ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய ரெனால்ட் இ.வி. அந்நிறுவனத்தின் க்விட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. க்விட் இ.வி. கார் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் அறிமுகமாகிறது.

    ரெனால்ட் க்விட் இ.வி. முன்னதாக கான்செப்ட் வடிவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்ப்டடது. இதன் தயாரிப்பு முந்தைய வெர்ஷன் முன்னதாக வெளியிடப்பட்டது. இதில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இதே போன்ற வடிவமைப்பு முன்னதாக டாடா ஹேரியர் காரிலும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஹூன்டாய் வென்யூ காரிலும் காணப்பட்டது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய கிரில், சற்று வித்தியாசமான முன்புறம், பின்புறம் புதிய பம்ப்பர்கள் மற்றும் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.



    புதிய க்விட் இ.வி. காரின் தொழில்நுட்ப விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. எனினும், இதன் பவர்டிரெயின் ரெனால்ட் மர்ரும் டாங்ஃபெங் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. இருநிறுவனங்களும் இதற்கான பணிகளை கடந்த ஆண்டு துவங்கின. இதற்கென இ.ஜி.டி. நியூ எனர்ஜி ஆட்டோமோட்டிவ் எனும் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றன.

    க்விட் எலெக்ட்ரிக் காரின் விவரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் இதில் வழங்கப்படும் மோட்டார் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் காரை பயனர்கள் பொதுவெளியில் கிடைக்கும் சார்ஜிங் தளங்களிலும் சார்ஜ் செய்யலாம் என ரெனால்ட் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் காரின் விலை மாற்ற இருக்கிறது. #RenaultKwid



    ரெனால்ட் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலான க்விட் காரின் இந்திய விலையை அதிகரிக்க இருக்கிறது.

    அந்த வகையில் இந்தியாவில் ரெனால்ட் க்விட் கார் விலை ஏப்ரல் 2019 முதல் தற்சமயம் இருப்பதில் இருந்து சுமார் 3 சதவிகிதம் வரை அதிகரிக்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக க்விட் இருக்கிறது.

    சமீபத்தில் ரெனால்ட் தனது மேம்பட்ட 2019 க்விட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேம்பட்ட 2019 ரெனால்ட் க்விச் காரில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு கூடுதல் அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், க்விட் காரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.



    இந்தியாவில் மேம்பட்ட ரெனால்ட் க்விட் பேஸ் வேரியண்ட் விலை ரூ.2.66 லட்சம் என்றும் டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.4.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2019 க்விட் மாடல் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய விலை மாற்றத்தின் படி ரெனால்ட் க்வ்ட் ஹேட்ச்பேக் காரின் பேஸ் வேரியண்ட் விலையில் ரூ.9000 மற்றும் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.12,000 வரை அதிகமாகும். ஏப்ரல் 2019 முதல் புதிய விலை அமலாகிறது. அந்த வகையில் புதிய க்விட் பேஸ் வேரியண்ட் ரூ.2.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரெனால்ட் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டஸ்டர் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #RenaultDuster



    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் டஸ்டர் எஸ்.யு.வி. காரினை 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. கடந்த சில ஆண்டுகளில் இந்த கார் குறைந்தளவு அப்டேட்களை பெற்றிக்கிறது. இந்நிலையில், ரெனால்ட் தனது டஸ்டர் எஸ்.யு.வி. மாடலை அதிகளவு மேம்படுத்தி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புதிய டஸ்டர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரில் இரண்டு அப்டேட்களில் வெளியிட இருக்கிறது. இதன் முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்த ஆண்டும் இரண்டாம் தலைமுறை மாடல் 2020 ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும். இத்துடன் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், தொடுதிரை வசதி கொண்ட மேம்பட்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதில் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.


    புகைப்படம் நன்றி: Zigwheels

    2019 ரெனால்ட் டஸ்டர் மாடலில் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற என்ஜின் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த காரிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் அவற்றுக்கான டிரான்ஸ்மிஷன்களை கொண்டிருக்கிறது. 

    இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் மற்றும் 110 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்க் என இருவித செயல்திறன் கொண்டிருக்கும் என்றும் இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.


    புகைப்படம் நன்றி: Zigwheels

    2020 ரெனால்ட் டஸ்டர் காரில் தற்போதைய டஸ்டர் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2020 டஸ்டர் காரின் கேபின் முழுமையாக மாற்றப்பட்டு, அதிகளவு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது. இரண்டாம் தலைமுறை டஸ்டர் கார் புதிய பி0 பிளாட்ஃபார்மில் உருவாகும் என தெரிகிறது. இதே பிளாட்ஃபார்மில் நிசான் கிக்ஸ் மற்றும் கேப்டுர் கார்கள் உருவாகியிருக்கின்றன.

    பெட்ரோல் என்ஜின் கொண்ட ரெனால்ட் டஸ்டர் கார் பி.எஸ்.-VI ரக எமிஷன்களுக்கு பொருந்தும் வகையில் இருக்கிறது. எனினும், 2020 மாடலில் தற்போதைய டீசல் என்ஜினிற்கு மாற்றாக புதிய 1.5 லிட்டர் புளு DCi என்ஜின் வழங்கப்படலாம் என்றும் இது இருவிதங்களில் டியூன் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. இதன் குறைந்த வெர்ஷன் 95 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் திறனும், மற்றொரு வெர்ஷன் 115 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
    ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #RenaultKwid #ElectricCar



    ரெனால்ட் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கி விருகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் புதிய க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் முதல் முறையாக லீக் ஆகியுள்ளது. இதில் புதிய எலெக்ட்ரிக் காரின் வெளிப்புற மாற்றங்கள் தெரியவந்துள்ளது.

    ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அந்நிறுவனம் 2018 பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்த K-ZE கான்செப்ட் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. முதற்கட்டமாக இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் சென்னையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இதன் மோட்டார் சீனாவில் பொருத்தப்படுகிறது.

    இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகமாக இன்னும் சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. இந்திய அரசு எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு பற்றி தெளிவற்ற நிலைப்பாட்டில் இருப்பதாலேயே எலெக்ட்ரிக் வெர்ஷன் தாமதமாக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காப்புரிமை புகைப்படங்களின் படி க்விட் எலெக்ட்ரிக் வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை.



    எனினும், காரின் முன்பக்கம் புதிய கிரில் வடிவமைப்பு, ஹெட்லேம்ப் கிளஸ்டர் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனம் என்ற வகையில், க்விட் இ.வி. காரின் முன்பக்க பம்ப்பரில் சென்ட்ரல் ஏர் டேம் காணப்படவில்லை. புதிய ஹெட்லேம்ப் கிளஸ்டரில் எல்.இ.டி. யூனிட்கள் மற்றும் டி.ஆர்.எல்.கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறம் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் அப்டேட் செய்யப்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கள் வழங்கப்படலாம் என்றும், க்விட் இ.வி. காரினை சீன ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. 

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் க்விட் இ.வி. திறன் சார்ந்த தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 டஸ்டர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #RenaultDuster



    இந்தியாவில் 2019 ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகமானது. புதிய டஸ்டர் 2019 காரின் துவக்க விலை ரூ.7.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ.13.09 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2019 ரெனால்ட் டஸ்டர் மாடலில் பல்வேறு புதிய அம்சங்களுடன் விலை குறைவான ஆட்டோமேடிக் வெர்ஷனும் அறிமுகமாகி இருக்கிறது. ரெனால்ட் டஸ்டர் 2019 மாடலில் மேம்படுத்தப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய டஸ்டர் மாடலில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. உள்ளிட்டவை பரவலாக அனைத்து வேரியன்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. 2019 டஸ்டர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய டஸ்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர் @5600 ஆர்.பி.எம். மற்றும் 142 என்.எம். டார்க் @4000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    இத்துடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இருவித டியூனிங்கில் கிடைக்கிறது. இதன் பேஸ் என்ஜின் 84 பி.ஹெச்.பி. பவர் @3750 ஆர்.பி.எம். மற்றும் 200 என்.எம். டார்க் @2000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இதன் உயர் ரக வேரியன்ட் 108 பி.ஹெச்.பி. பவர் @3900 ஆர்.பி.எம். மற்றும் 248 என்.எம். டார்க் @2250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.

    இந்தியாவில் 2019 ரெனால்ட் டஸ்டர் கார் சமீபத்தில் அறிமுகமான ஹூன்டாய் கிரெட்டா, மாருதி சுசுகி எஸ்-கிராஸ், மஹிந்திரா டி.யு.வி.300 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
    ரெனால்ட் நிறுவனத்தின் அதகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 க்விட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #2019RenaultKwid #Car



    ரெனால்ட் நிறுவனம் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலான 2019 க்விட் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய 2019 ரெனால்ட் க்விட் காரின் துவக்க விலை ரூ.2.66 லட்சம் துவங்கி, டாப் எண்ட் மாடலின் விலை ரூ.4.60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    2019 ரெனால்ட் க்விட் மாடலில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய என்ட்ரி-லெவல் காரில் ஆன்டி-லாக் பிரேக்கள், டிரைவர் ஏர்பேக், ஸ்பீட்-சென்சிங் டோர் லாக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஓவர்-ஸ்பீடிங் அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.



    ரெனால்ட் க்விட் டாப் எண்ட் மாடலில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், புதிய க்விட் காரின் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

    2019 ரெனால்ட் க்விட் மாடலில் 0.8 மற்றும் 1.0 லிட்டர் என்ஜின்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின்கள் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. 1.0 லிட்டர் என்ஜின் AMT கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. 0.8 லிட்டர் என்ஜின் 53 பி.ஹெச்.பி. பவர், 72 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இதன் 1.0 லிட்டர் என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின்கள் முறையே லிட்டருக்கு 25.17 கிலோமீட்டர் மைலேஜ் மற்றும் லிட்டருக்கு 24.04 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
    ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கும் எம்.பி.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #Renault



    ரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய எம்.பி.வி. (என்ட்ரி லெவல் க்விட் சார்ந்த மாடல்) கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது. புதிய க்விட் சார்ந்த எம்.பி.வி. ஆர்.பி.சி. என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    ரெனால்ட் ஆர்.பி.சி. எம்.பி.வி. கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதால் காரின் சில விவரங்கள் மட்டும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய ரெனால்ட் க்விட் சி.எம்.எஃப்-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது. அந்த வகையில் புதிய காரில் அதிக வீல்பேஸ் இடம்பெற்றுள்ளது.


    புகைப்படம் நன்றி: Aravind Siddaarth T K

    காரின் முன்பக்கம் தவிர மற்ற அம்சங்களின் ஒட்டுமொத்த வடிவமைப்பு ஒரேமாதிரியாக காட்சியளிக்கிறது. எனினும், காரின் உள்புறம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. உபகரணங்களின் படி தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரெனால்ட் எம்.பி.வி. மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (க்விட் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று) வழங்கப்படலாம். இந்த என்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்கியூ, 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

    இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர் வின்டோக்கள், டூயல்-சோன் ஏ.சி. கன்ட்ரோல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம். புதிய ரெனால்ட் எம்.பி.வி. மாடலின் விலை இந்தியாவில் ரூ.7 லட்சத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ.11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நிசான் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் மாற்றுவதாக தெரிவித்துள்ளது. #Nissan



    நிசான் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை ஜனவரி 2019 வாக்கில் நான்கு சதவிகிதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    சர்வதேச சந்தையில் உதிரிபாகங்களின் விலை அதிகரித்து இருப்பதால் கார் மாடல்களின் விலை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிசான் இந்தியா தெரிவித்துள்ளது. புதிய விலை அதிகரிப்பு காரணமாக நிசான் மற்றும் டட்சன் கார்களின் விலை அதிகமாகிறது.



    இந்தியாவில் கார் மாடல்களின் விலை அதிகரிக்க இருப்பதாக ஏற்கனவே மாருதி சுசுகி, ஹூன்டாய், ரெனால்ட், டாடா, பி.எம்.டபுள்யூ. உள்ளிட்ட நிறுவனங்களும் அறிவித்துள்ளன. 

    அடுத்த மாதத்தில் கார் மாடல்களின் விலை அதிகரிக்க இருப்பதாக பல்வேறு நிறுவனங்கள் அறிவித்து இருந்தாலும், தற்சமயம் சில நிறுவனங்கள் தங்களது கார்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்குகின்றன. 

    அந்த வரிசையில் நிசான் இந்தியா நிறுவனமும் தனது மைக்ரா ஆக்டிவ் மற்றும் டெரானோ மாடல்களுக்கு அதிகபட்ச சலுகைகளை வழங்குகிறது.
    ரெனால்ட் நிறுவத்தின் க்விட் ஹேட்ச்பேக் மாடலைத் தழுவி உருவாகும் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #Renault



    ரெனால்ட் நிறுவத்தின் புதிய எம்.பி.வி. கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் க்விட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.

    புதிய எம்.பி.வி. கார் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய கார் இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் ரெனால்ட் எம்.பி.வி. காரின் சில அம்சங்கள் தெரியவந்துள்ளது.

    புகைப்படம் நன்றி: Zigwheels

    வெளிப்புற வடிவமைப்பின் படி, புதிய எம்.பி.வி. மாடல் வழக்கமான ரெனால்ட் வாகனங்களை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. காரின் முன்பக்கம் க்விட் மாடலில் உள்ளதை போன்றே ஸ்டிரெட்ச் செய்யப்பட்ட க்ரோம் கிரில் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் மெல்லிய டையர்களும், காரின் பின்புறம் டெயில் லைட்கள் பூட் லிட் வரை நீள்கிறது.

    காரின் உள்புறம், க்விட் சார்ந்த எம்.பி.வி மாடலில் இன்டகிரேட் செய்யப்பட்ட ஹெட்ரெஸ்ட்கள், மேனுவல் டே/நைட் ரியர்வியூ மிரர், ஏ.சி. வென்ட்களின் அருகில் கான்டிராஸ்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது (இது டேஷ்போர்டு நீளத்திற்கு முழுமையாக நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது). 


    புகைப்படம் நன்றி: Zigwheels

    மற்ற அம்சங்களை பொருத்த வரை க்விட் சார்ந்த எம்.பி.வி. மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர் வின்டோக்கள், டூயல்-சோன் ஏ.சி. கன்ட்ரோல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    புதிய ரெனால்ட் எம்.பி.வி. மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (க்விட் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று) வழங்கப்படலாம். இந்த என்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்கியூ, 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
    ரெனால்ட் இந்தியா நிறுவனம் க்விட் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #kwidfeatureloaded


    ரென்லாட் நிறுவனம் தனது க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. ரெனால்ட் க்விட் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காராக இருக்கிறது. புதிய காரின் வெளியீடு குறித்த விவரங்கள் அறியப்படாத நிலையில், ரெனால்ட் க்விட் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா வரும் என தெரிகிறது.

    இந்தியாவில் ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் வெர்ஷன் விலை ரூ.6.0 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. வெளியாகும் பட்சத்தில் க்விட் எலெக்ட்ரிக் கார் மஹேந்திரா இ20 மாடலுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ரெனால்ட் க்விட் மாடலை உருவாக்கிய பொறியாளர்கள் ஏற்கனவே சீனா சென்று எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்குவதற்கான பணிகளை துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் க்விட் மாடலுக்கான பேட்டரி மற்றும் பேட்டரி மேலாண்மை பணிகளில் சீன பொறியாளர்கள் உதவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    இந்தியாவில் விற்பனையாகும் விலை குறைந்த கார்களில் ஒன்றாக ரெனால்ட் க்விட் இருக்கிறது. க்விட் ஹேட்ச்பேக் மாடல் தற்சமயம் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.0-லிட்டர் வேரியன்ட் AMT டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    காரின் அடிப்படை வடிவமைப்பினை இந்திய பொறியாளர்கள் உருவாக்கியிருக்கும் நிலையில், சீன பொறியாளர்களின் காருக்கான பேட்டரி மற்றும் பேட்டரி மேலாண்மை சிஸ்டத்தை வழங்க இருப்பதாக இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Renault #kwidfeatureloaded
    ×