search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97175"

    சர்க்கரைநோய்க்கு மருந்தாகவும், சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் சக்தியும் கொண்டது வாழைத்தண்டு. இன்று இதனை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைத்தண்டு - சிறிய துண்டு,
    தேங்காய் - 1 பத்தை,
    தனியா - கால் டீஸ்பூன்,
    கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - இரண்டு,
    பூண்டு - நாலு பல்,
    புளி - நெல்லிக்காய் அளவு,
    உப்பு - தேவையான அளவு,
    கடுகு - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.



    செய்முறை :  

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து பின் தனியாவை, போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு வதக்கவும். தண்டு பச்சை வாசம் போக நன்கு வதக்கவும்.

    பின் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நன்றாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து துவையலில் கொட்டி பரிமாறவும்.

    கடைசியில் கடுகு தாளித்து கொட்டி அரைத்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த செட்டிநாடு மிளகாய் சட்னி சூப்பரான இருக்கும். இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 2
    வரமிளகாய் - 5
    பூண்டு - 3
    புளி - 1 இன்ச்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு :

    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

    பின்பு அதில் பூண்டு, புளி, வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, உப்பு தூவி மீண்டும் 2 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால், செட்டிநாடு மிளகாய் சட்னி ரெடி!!

    புளிக்கு பதிலாக தக்காளியையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் - கால் கிலோ
    தக்காளி - 3
    கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
    மிளகாய் வத்தல் - 8
    பெரிய வெங்காயம் - 3
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை வறுத்துக் கொள்ளவேண்டும்

    பிறகு கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்

    நன்கு ஆறிய பின் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் சட்னி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீரிழிவு நோய்க்கும், சிறுநீரக கல்லுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து. வாழைப்பூ மாதவிடாய் பிரச்சனைக்கும் சிறந்த மருந்து. இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைப்பூ - ஒன்று
    புளி - எலுமிச்சையளவு
    கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
    உளுத்தம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
    சிவப்பு மிளகாய் - 3
    தேங்காய் - ஒரு கைப்பிடி
    எண்ணெய் - வதக்க

    தாளிக்க :

    கடுகு, கறிவேப்பிலை



    செய்முறை :

    வாழைப்பூவை கழுவிவிட்டு, நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றையும் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.

    அதே வாணலியில் வாழைப்பூவை போட்டு நன்றாக வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து கிளறி நன்கு சுருளும் வரை வதக்கி அதோடு தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுக்கவும்.

    வதக்கிய வாழைப்பூவுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து தாளித்து துவையலில் கொட்டி கிளறி பரிமாறவும்.

    சுவையான வாழைப்புத் துவையல் ரெடி.

    இதை சூடான சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். தயிர்சாதத்திற்கும் தொட்டு கொள்ளலாம்..

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பித்தம் அதிகம் உள்ளவர்கள், காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு இந்த கொத்தமல்லி விதை சட்னி நல்ல பலனை அளிக்கும். இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி விதை - 100 கிராம்
    மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
    புளி - நெல்லிக்காய் அளவு
    கல் உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    மிளகாய் வற்றல் - ஒரு எண்ணம்
    கடுகு - ¼ ஸ்பூன்
    வெந்தயம் - 10 எண்ணம்



    செய்முறை :

    முதலில் கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றலை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றலை சேர்த்து வறுக்கவும்.

    கொத்தமல்லி விதையானது வாசனை வந்து வெடித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.

    புளியை சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

    வறுத்த கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

    பின் அதனுடன் ஊற வைத்த புளி, தேவையான அளவு கல் உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம், மிளகாய் வற்றல் போட்டு தாளித்து அரைத்த கொத்தமல்லி விதைக் கலவையுடன் சேர்க்கவும்.

    சுவையான கொத்தமல்லி விதை சட்னி தயார்.

    இதனை இட்லி, தோசை, ஆப்பம், சாத வகைகள் ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாங்காயை சட்னி செய்து, மதிய வேளையில் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாங்காய் - 2
    பாசிப்பருப்பு - 1/4 கப்
    வரமிளகாய் - 4
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வெல்லம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான பொருட்கள்

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    வரமிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை :

    மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்கவும்.

    பின்பு அதே வாணலியில் சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

    அடுத்து மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

    பிறகு அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×