search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    வியாழன் கோளின் வெப்பத்தன்மை மற்றும் கோள்கள் உருவாவது பற்றி புரிந்துகொள்ள முடிகிறது. இது ஆமதாபாத் ஆய்வு கூடத்தால் 2-வதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் ஆகும்.
    பெங்களூர்:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூட விஞ்ஞானிகள், வியாழன் கோளை விட பெரிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அது 725 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. நவீன ரேடியல் ஆய்வு கருவி மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. 1.2 மீட்டர் நீளம் கொண்ட தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    அது வியாழன் கோளை விட 1.4 மடங்கு பெரியதாக உள்ளது. இந்த அளவீட்டு பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி கடந்த மார்ச் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விஞ்ஞானி அபிஜித் சக்ரபர்த்தி தலைமையிலான குழுவினர் இதை கண்டுபிடித்துள்ளனர். இதில் அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டினரும் இருக்கிறார்கள். இந்த புதிய கிரகம் சிறப்பு தன்மைகளை கொண்டுள்ளது.

    அதன் தரைதளம் மிக அதிக வெப்பம் கொண்டதாக உள்ளது. பெருந்திரள் நட்சத்திரங்களுக்கு அருகில் இருக்கும் இதுபோன்ற கோள்கள் வெப்பமான வியாழன் கோள்கள் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற ஆய்வுகள், வியாழன் கோளின் வெப்பத்தன்மை மற்றும் கோள்கள் உருவாவது பற்றி புரிந்துகொள்ள முடிகிறது. இது ஆமதாபாத் ஆய்வு கூடத்தால் 2-வதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் ஆகும்.

    இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நிலவு சுற்றுப்பாதையில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான விண்கலங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்த நிகழ்வை விஞ்ஞானிகள் துரிதமாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை மூலம் தடுத்து உள்ளனர்.

    ரஷிய நாட்டுக்கு சொந்தமான சிறிய வகையிலான பூமியின் தொலை உணர்த்தலுக்கான செயற்கைகோளான கானோபஸ்-வி என்ற விண்கலத்தின் மீது இந்தியாவுக்கு சொந்தமான பூமி தொலை உணர்த்தலுக்கான செயற்கைகோளான கார்ட்டோ சாட்-2எப் என்ற 700 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் சுற்றுப்பாதையில் செயல்பட்டு வருகின்றன.

    இந்த செயற்கைகோள்கள் கடந்த ஆண்டு நவம்பர் 27-ந் தேதி 224 மீட்டர் தூர இடைவெளியில் வந்த போது ஒன்றோடு ஒன்று மோத இருந்தது. இதனை இருநாட்டு விஞ்ஞானிகளும் சரியான நேரத்தில் கண்டுப்பிடித்து உரிய நடவடிக்கை மூலம் மோதலை தவிர்த்தனர்.

    இதேபோன்று கடந்த மாதம் 20-ந் தேதி காலை 11.15 மணி அளவில் நிலவின் வடதுருவத்திற்கு அருகில் நிலவு சுற்றுப்பாதையில் ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த சந்திரயான்-2 விண்கலமும், அமெரிக்காவின் நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் (எல்.ஆர்.ஓ.) என்ற விண்கலமும் நிலவு சுற்றுப்பாதையில் நிலவின் வட துருவத்தை நெருங்கிச் சென்ற போது ஒன்றோடு ஒன்று மோத இருந்தன.

    இந்த இரண்டு விண்கலத்திற்கு இடையேயான ரேடியல் செயல்பாடு 100 மீட்டருக்கும் குறைவாக இருந்தது. இதனை கண்டுப்பிடித்த இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் துரிதமாக கண்டுபிடித்து விண்கலங்கள் மிக அருகில் செல்லும் அபாயத்தைத் தணிக்க, மோதல் தவிர்ப்பு சூழ்ச்சி (சிஏஎம்) என்ற விஞ்ஞான பூர்வமான நடவடிக்கை மூலம் தடுத்து உள்ளனர். சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைகோள்கள் மற்ற விண்கலங்களோடு அல்லது விண்வெளி குப்பைகளுடன் மோதும் அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டுக்கான 33 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று தொடங்கிய நிலையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு அது விண்ணில் ஏவப்படுகிறது. #ISRO #PSLVC42
    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று இரவு 10 மணி 7 நிமிடங்களில் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

    இதற்காக 3 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது.

    இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 33 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று (சனிக்கிழமை) பகல் 1 மணி 8 நிமிடத்தில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

    விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி 7 நிமிடங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதால், சென்னைவாசிகள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தபடியே ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப் பாய்வதை காணலாம்.

    வானம் மேக மூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்தால், பொதுமக்கள் அனைவரும் இதனை கண்டுகளிக்க முடியும். இது வானில் ஒரு வர்ண ஜாலம் போல் காட்சி அளிக்கும்.

    மேற்கண்ட தகவலை இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.  #ISRO #PSLVC42
    ×