என் மலர்
நீங்கள் தேடியது "மிரட்டல்"
- நண்பகல் 12.30 மணியளவில் அடைக்கப்படும் நடை பின்னர் மாலை 5 மணிக்கு திறக்கப்படும்
- 5 மணிக்கு முன்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன் பகுதியில் உள்ள சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் செல்வார்கள்.
கன்னியாகுமரி:
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். நண்பகல் 12.30 மணியளவில் உச்ச பூஜை முடிந்ததும் நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கும். 5 மணிக்கு முன்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன் பகுதியில் உள்ள சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் செல்வார்கள்.
சம்பவத்தன்று மாலை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்த பக்தர் ஒருவர் மாலை நடை திறப்பதற்கு முன்பாக மண்டைக்காட்டிற்கு வந்தார்.வெளியே காத்து நின்ற அவரை அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனை படி சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் ஊழியர்கள் அழைத்து சென்றனர்.
இதனை பார்த்த லட்சுமி புரம் மருத்துவர் காலனியை சேர்ந்த பிரமுகர் பிரதீப் (வயது 43) என்பவர், நடை திறக்கும் முன் அவரை எப்படி கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என கேட்டு கோவில் காவலாளி குமார தாசிடம் தகராறு செய்தார்.பின்னர் குமாரதாசை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோவில் ஸ்ரீ காரியம் செந்தில்குமார் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவில் காவலாளி குமாரதாசை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயக்குமார் சுஜாதாவிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்தார்.
- ஜெயக்குமார் சுஜாதாவிடம் சென்று என்னிடம் பேச வேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி தொட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுஜாதா (வயது 28). புவனகிரி சூர்யா மங்களம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (27). இவர்கள் 2 பேரும் கடலூர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமார் சுஜாதாவிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்தார். இதனால் சுஜாதா ஜெயக்குமாரிடம் போனில் பேச வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் சுஜாதாவிடம் சென்று என்னிடம் பேச வேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே கொடுக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி நந்தினி (வயது 23). சம்பவத்தன்று நந்தினியை இவரது மாமியார் அஞ்சம்மாள் மற்றும் உறவினர்கள் திடீரென்று வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து நந்தினி நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சம்மாள் (55), வாசுகி, திருமகள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்ணீர் பிடிக்க சென்றபோது, சின்னபொண்ணுவை திட்டி, மிரட்டல்விடுத்தனர்.
- ராஜச்சந்திரன, மனோகர் மீது விருத்தா சலம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.
கடலூர்:
விருத்தாசலம் வயலூரை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி சின்னபொண்ணு. ,அதே பகுதியைச் சேர்ந்த ராஜச்சந்திரன், என்பவரது வீட்டின் அருகேஉள்ள மினி டேங்கில் தண்ணீர் பிடிக்க சென்றார்.அப்போது, ராஜசந்திரன் அவரது ஆதரவாளர் மனோகர், ஆகியோர் சின்னபொண்ணுவை திட்டி, மிரட்டல்விடுத்தனர்.இதுகுறித்தபேரில்,புகாரி ன்ராஜச்சந்திரன, மனோகர் மீது விருத்தா சலம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.
- சுகாதாரமான நீரை வினியோகம் செய்யவில்லை.
- நான் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய முடிவு செய்தேன்.
பீளமேடு,
கோவை ஆவா ரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சங்கர். இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் வேளாண் பல்கலையில் பேராசிரி யராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் சண்முகம், அஸ்வின், பிராங்கிளின் என்பவர்களுடன் சேர்ந்து குடிநீர் விற்பனை நிறு வனத்தை நடத்தி வந்தேன்.
ஆனால் அவர்கள் சுகாதாரமான நீரை வினியோகம் செய்யவில்லை. அதனை ஆய்வு செய்ய நான் கம்பெனிக்கு சென்றேன். ஆனால் சண்முகம் என்னை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார். இதனால் நான் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்ய முடிவு செய்தேன்.
இதனை தெரிந்து கொண்ட அவர்கள் என்னை கம்பெனிக்குள் அடைத்து வைத்து மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போன நான் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தேன்.
என்னை அடைத்து வைத்து மிரட்டிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் சண்முகம், அஸ்வின், பிராங்கிளின் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது
- கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் முஜ்மல்(வயது 63). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் முஜ்மல் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இடையக்குறிச்சி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சிட்டு என்ற இளையராஜா(36) என்பவர் முஜ்மலிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முஜ்மல் ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிட்டு என்ற இளையராஜா மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- ரூ. 4 ஆயிரத்து 200 பணத்தை பறித்து விட்டு நடந்த சம்பவம் குறித்து வெளியில் கூற கூடாது என கூறி கொலை மிரட்டல்.
- 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
வல்லம்:
தஞ்சை ரெட்டிபாளையம் மேட்டு தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 35). இவர் தஞ்சையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவதன்று சதீஷ்குமார் வேலை முடித்து விட்டு அவருடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது ரெட்டிபாளையம் காந்தி பாலம் அருகே அவரை 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அங்கு கிடந்த தென்னை மட்டையால் சரமாரியாக தாக்கி ரூ. 4 ஆயிரத்து 200 பணத்தை பறித்து விட்டு நடந்த சம்பவம் குறித்து வெளியில் கூற கூடாது என கூறி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். இது குறித்து சதீஷ்குமார் கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சையை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்து தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- போலீசார் கடலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
தரங்கம்பாடி:
மணல்மேடு அருகே கடலங்குடி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் போலீசார் கடலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடலங்குடி அரண்மனை தெரு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாட்டிக்கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பந்தநல்லூர் மேல செல்லப்பன் பேட்டையை சேர்ந்த கதிரேசன் (வயது37), திருக்கோடிக்காவலைசேர்ந்த தமிழரசன் (40), பந்தநல்லூர் நெய்குப்பையை சேர்ந்த முத்துக்குமார் (38), திருவிடைமருதூர் முல்லங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் கார்த்திகேயன் (34), திருவிடைமருதூரை சேர்ந்த முகமது ரபீக் (47), திருச்சியை சேர்ந்த முஸ்தபா (60), அத்திகடையை சேர்ந்த அனிபா (40), மன்னார்குடி அரிசி கடை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (48), காரைக்காலை சேர்ந்த சதீஷ்குமார் (50), ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
- மாணவியிடம் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- வீரபாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட எடையூர் காவல் சரகம், மீனம்ப நல்லூர் கடைவீதியை சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந் நிலையில், இந்த மாணவியிடம் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி புகைப்படம் எடுத்து மாணவியை மிரட்டி உள்ளார்.
இதனால் பயந்து போன மாணவி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் எடையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கத்திய காட்டி மிரட்டியது திருத்துறைப்பூண்டி சீலத்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டியன் (வயது 24) என்பது தெரிய வந்தது.
உடனடியாக போலீசார் வீரபாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- அத்துமீறி தவறாக நடக்க முயன்றார்.
- கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினார்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை ரஹ்மத் நகரை சேர்ந்த கருப்பணன் மகன் சதீஷ் (வயது26).
இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றார். இதனால் அந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி சாதி பெயரை கூறி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சதீசை கைது செய்தனர்.
- தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- கொலை வழக்கில் தொடர்புடையதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல்(23). இவர் கடந்த 13-ந்தேதி கோவை கோர்ட்டு அருகே 5 பேர் கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.
மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதோடு மட்டுமல்லாமல், கையில் ஆயுதங்களுடன் அவர்கள் சாவகாசமாக நடந்து சென்றது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த குரங்குஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதில் கோகுல் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டதும், இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே குரங்குஸ்ரீராமின் நண்பர்கள் கோகுலை கொன்றதும் தெரியவந்தது.
கோகுல் கும்பலும், குரங்கு ஸ்ரீராம் கும்பலும் கட்டப் பஞ்சாயத்து, அடி-தடி மோதலில் அடிக்கடி ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர இவர்கள் சமூக வலைதளங்களிலும் வீடியோக்களை வெளியிட்டு அடிக்கடி மோதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
குரங்குஸ்ரீராம் கொலையில் தொடங்கி கோகுல் கொலை வரை அவர்கள் சமூக வலைதள பதிவுகள் மூலம் மோதிக்கொண்டனர்.
குரங்கு ஸ்ரீராமை கொன்றதுமே அவரது நண்பர்கள் குரங்கு ஸ்ரீராமின் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கப்படும் என்ற வாசகத்தை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் ஸ்ரீராம் பிரதர்ஸ், ஸ்ரீராம் பிளட்ஸ் என்ற பெயரில் சினிமாவையே மிஞ்சும் வகையில், கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சினிமா பாடல்களையும், வசனங்களையும் ஒலிக்க விட்டு நடந்தபடி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
அதிலும் ஒரு பெண்ணின் கையிலும் உருட்டு கட்டையை கொடுத்து அவரின் பின்னால் 5 பேர் நடந்து வருவது போல பாடலை ஒளிபரப்பி தங்களை சினிமா வில்லன்களை போலவே காட்டி கொண்டதும் தெரியவந்தது.
இப்படி ரவுடிகள் தங்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிடுவதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை களை எடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
யார்? யார் எல்லாம் வீடியோக்களை வெளியிட்டனர் என்பதை கண்டறிய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் ஒரு குழுவையும் அமைத்தனர்.
அந்த குழுவினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்வையிட்டு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில் இன்ஸ்டாகிராமில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வீடியோ மற்றும் வெறுப்பை தூண்டும் வகையிலும் கருத்துக்களை பதிவிட்ட 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து இது போன்று வேறு யாராவது இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை பகிர்ந்துள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
- மாதம் ரூ.10 லட்சம் மாமூல் கேட்டு திறந்தவெளி திரையரங்க மேலாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்
- 3 பேர் மீது வழக்கு
திருச்சி:
திருச்சி அருகே நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் சமீபத்தில் திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டது. இதன் மேலாளராக ரமேஷ் என்பவர் பணிபரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பரமேஸ்வரி அம்மன் கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது காரில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் மாதந்தோறும் ரூ. 10 லட்சம் மாமூல் வாங்கி தர வேண்டும். இல்லையென்றால் உன்னை தொலைத்து விடுவோம் என கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக ரமேஷ், திரையரங்க பங்குதாரர் டாக்டர் ஹரிஷ் குமாரிடம் தெரிவித்தார். உடனே அவர் இதுகுறித்து ராம்ஜி நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மாமூல் கேட்டு தியேட்டர் மேலாளருக்கு மிரட்டல் விடுத்த நவலூர் கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன், போஸ்கோ என்கிற வாண்டையார், மகேந்திரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.