search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    வாடகை பணம் கேட்டு மிரட்டியதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்த திரும்பிய வியாபாரி மரணமடைந்ததை தொடர்ந்து கோவில் தர்மகர்த்தாவை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள யதோகதகாரி கோவிலுக்கு சொந்தமான இடம் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ளது. இதில் ஏராளமானோர் கடை வைத்து உள்ளனர்.

    இதில் அதே பகுதியைச் சேர்ந்த ரகுநாதன் (43) என்பவர் கடை வைத்து இருந்தார். அவர் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே கோவில் தர்மகர்த்தா நாராயணன் என்பவர் வாடகை பாக்கி வைத்திருந்த வியாபாரிகளை கடைகளை காலி செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி ரகுநாதன் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “நான் வாடகை பாக்கி வைத்திருந்ததால் கோவில் தர்ம கர்த்தா நாராயணன் மற்றும் காஞ்சீபுரம் ரவுடி தியாகுவின் தாய் பவானி ஆகியோர் கடைக்கு வந்து என்னை மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதன் பின்னர் ஆட்டோவில் வீடு திரும்பிய ரகுநாதனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ரகுநாதனின் மனைவி தேவி சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் கோவில் தர்மகர்த்தா நாராயணனை 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். #tamilnews
    ஈரான் கச்சா எண்ணெய் விவகாரத்தில் தங்கள் வேண்டுகோளை ஏற்காத நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். #DonaldTrump
    துபாய்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை விதித்துள்ளது.

    மேலும் ஈரானிடம் இருந்து சர்வதேச நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

    இதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பேரலுக்கு 100 டாலருக்கு மேல் விலை ஏறும்பட்சத்தில் சவுதி அரேபியா மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் ‘ஓபேக்‘ நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் எண்ணெய் விலை குறையும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு சவுதி அரேபியா ஒத்துக் கொள்ளவில்லை.

    இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மிசிசிப்பியில் ‘சவுத்அவ்ன்’ நகரில் நடந்த விழாவில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.


    அப்போது தனது நட்பு நாடான ஜப்பான் மற்றும் தென்கொரியா குறித்து பேசினார். மேலும் மற்றொரு நட்பு நாடான சவுதி அரேபியா குறித்து குறிப்பிடும்போது மன்னரை கடுமையாக தாக்கினார்.

    மக்களின் கரகோ‌ஷத்துக்கு இடையே பேசிய அவர், “பணக்கார நாடாக இருந்தாலும் சவுதி அரேபியாவை நாம்தான் பாதுகாக்கிறோம். நான் அந்நாட்டு மன்னர் சல்மான் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன்.

    மன்னரே உங்களை நாங்கள் (அமெரிக்கா)தான் பாதுகாக்கிறோம். எங்களது ராணுவத்தின் தயவு இன்றி உங்களால் அங்கு 2 வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாது” என்று எதைப்பற்றியும் பகிரங்கமாக குறிப்பிடாமல் மிரட்டல் விடுத்தார். #USPresident #DonaldTrump #SaudiArabiaKing
    திருநின்றவூரை சேர்ந்த 11 வயது சிறுமி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Threat

    போரூர்:

    சென்னை அவசர ஆம்புலன்ஸ் சேவை பிரிவு எண் 108-க்கு செல்போனில் பேசிய மர்ம நபர் ராமாபுரத்தில் குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

    இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கும் ராமாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனுக்கும் தகவல் தெரிவித்தனர் இதையடுத்து அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்ததில் ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் இருந்து அழைப்பு வந்தது தெரிந்தது.

    இதுபற்றி திருநின்றவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் போனில் பேசியது கூலி தொழிலாளியான சேகர் என்பவரின் 11 வயது மகள் என்பது தெரிந்தது. மேலும் சிறுமி பேசிய செல்போன் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடையது என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Threat

    மதுரையில் கத்தி முனையில் பணம் பறித்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை ஹார்வி பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 18). இவர் பஜார் சாலையில் நடந்து சென்றபோது 2 பேர் வழி மறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி நாகராஜை மிரட்டி பணத்தை பறித்துச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, திடீர்நகர் மணிகண்டன் (28), அண்ணாநகர் பாலா பிரவீன் (25) ஆகியோரை கைது செய்தனர்.

    மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சிந்தாமணி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் சாலையில் நடந்து சென்றபோது 2 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (19), திருச்சி காளீஸ்வரன் (22) ஆகியோரை கைது செய்தனர்.

    பெண்ணை மிரட்டி கைதான போலி சப்-இன்ஸ்பெக்டர் திருச்செங்கோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சியை சேர்ந்தவர் பிரேமா(வயது 42). விசைத்தறி அதிபர்.
    இவருக்கும், தேவனாங் குறிச்சி அருகே உள்ள கீழேரிப்பட்டியை சேர்ந்த விசைத்தறி அதிபர் விக்னேஷ்(45) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பிரேமா விக்னேசுக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. பலமுறை கேட்டுப்பார்த்தும் பணத்தை கொடுக்கவில்லை. 

    இதனால் விக்னேஷ், தனது நண்பர் கோம்பை நகரை சேர்ந்த பெயிண்டிங் காண்ட்ராக்டர் ரத்தினம் (45) என்பவரை சந்தித்து, பிரேமாவிடம் இருந்து தனது பணத்தை எப்படியாவது? வாங்கி தருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து ரத்தினம் நேற்று பிரேமாவை சந்தித்து பேசினார். தான் திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்தில்  சப்-இன்ஸ்பெக்டராக உள்ளேன். விக்னேசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடு. இல்லையென்றால், வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

    பயந்து போன பிரேமா இது பற்றி இன்ஸ்பெக்டரிடம் கூறுவதற்காக திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சப்-இன்ஸ் பெக்டர் என்று கூறி ரத்தினம் என்பவர் எனது வீட்டிற்கு வந்து என்னை மிரட்டினார் என தெரிவித்தார்.

    அதற்கு போலீசார், ரத்தினம் என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் யாரும் எங்கள் போலீஸ் நிலையத்தில் கிடையாது என்றனர். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பிரேமா, தன்னை மிரட்டியது போலி சப்-இன்ஸ்பெக்டர் என்பதை உணர்ந்தார்.

    போலீசாரும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி போலி சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினத்தை கைது செய்து, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.
    ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க நேரிடும் என ஈரான் அதிபர் ரவுகானி எச்சரித்துள்ளார். #Iranwilldefeat #Trump #Saddam #Rouhani
    டெஹ்ரான்:

    பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி  ஈரானின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அந்த தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் வர்த்தக உறவுகளை வைத்து கொள்ள கூடாது எனவும் அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. இதனால் மேலும் பல சிக்கல்களை ஈரான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    இந்நிலையில், ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க நேரிடும் என ஈரான் அதிபர் ரவுகானி எச்சரித்துள்ளார்.

    நாட்டு மக்களுடன் வானொலி மூலம் உரையாற்றிய ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி, 1980-களில் ஈரான் மீது போர் தொடர்ந்த சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதேகதி அமெரிக்காவுக்கும், டிரம்ப்புக்கும் ஏற்படும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பயந்து ஏவுகணைகளை நாங்கள் கைவிட முடியாது என அவர் தெரிவித்தார். #Iranwilldefeat #Trump #Saddam #Rouhani
    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை கொலை செய்யப்போவதாக வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிய 2 பேரை உத்தரகாண்ட் போலீசார் கைது செய்தனர். #NirmalaSitharaman
    பிதோராகார்:

    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் சேவை தினமாக கொண்டாடப் பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டம் தார்சுலா நகரில் ராணுவத்தினர் ஏற்பாடு செய்த மருத்துவ முகாமை மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கிவைத்தார்.

    முன்னதாக, நிர்மலா சீதாராமன் அந்த நகருக்கு வருகைதர இருப்பதை அறிந்த ஒருவர் தனது வாட்ஸ்-அப் குரூப்பில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் சர்ச்சைக்குரிய ஒரு தகவலை அனுப்பினார். அதில், ‘நான் நிர்மலா சீதாராமனை துப்பாக்கியால் சுடப்போகிறேன். நாளையே அவரது கடைசி நாள்’ என்று கூறியிருந்தார்.



    அதற்கு மற்றொருவரும் பதில் அளித்து, இதுதொடர்பாக 2 பேரும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். இதை கண்டுபிடித்த உளவுத்துறையினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து எச்சரித்தனர். போலீசார் அந்த 2 பேரையும் கண்டுபிடித்து நேற்று காலை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்த வாட்ஸ்-அப் குரூப்பின் நிர்வாகி (அட்மின்) பற்றியும் விசாரணை நடக்கிறது. கைதான 2 பேருக்கும் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா?, அவர்களிடம் துப்பாக்கி உள்பட ஆயுதங்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் குடிபோதையில் இவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொண்டது தெரியவந்தது. ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம்சந்திரா ராஜ்குரு தெரிவித்தார். 
    கடையை அடைக்குமாறு மிரட்டல் விடுத்ததால் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பர்னிச்சர் கடை திறந்து இருந்தது. அந்த கடையை அடைக்குமாறு தி.மு.க.வினர் மிரட்டல் விடுத்தனர்.

    எனவே கடையை அடைக்கச்சொல்லி மிரட்டியதாக கடையின் உரிமையாளர் பிரவீன் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டார் போலீசார் தி.மு.க.வினர் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 19 பேரில் ஒருவரான தி.மு.க. இளைஞரணி நிர்வாகியான கோதை கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 18 பேரை தேடி வருகிறார்கள்.
    சேலத்தில் லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் மேட்டூர், கருப்பு ரெட்டியூர் அருகே உள்ள கும்புரான் காடு பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 34). லாரி டிரைவர். இவர் நேற்று சங்ககிரி அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னக்கவுண்டனூர் என்ற இடத்தில் லாரியை ஓட்டி வந்து நிறுத்தினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஹரிகரனை மிரட்டி பணத்தை பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, திருப்பூர் மாவட்டம் கனகையம்பாளையம், கிழக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் என்கிற மதன் (30), திருப்பூர் விக்னேஸ்வரர் நகரை சேர்ந்த பூபதி (23), திருச்செங்கோடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த குப்புசாமி என்கிற சதாசிவம் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மதன் மீது தாராபுரம், பழனி டவுன், சூலூர் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது.

    இதுபோல் சங்ககிரி, கலியனூர் பிரிவு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் முருகேசன் (48)கீழே இறங்கியபோது அவரை 6 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றது. இந்த 6 பேர் கும்பலை சங்ககிரி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மதுரை சிறைத்துறை எஸ்.பி.க்கு மிரட்டல் விடுத்தது உண்மை என்றால் ரவுடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #TNMinister #CVeShanmugam
    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சென்னை மாகாணம் என்று முன்பு அழைக்கப்பட்டது. அண்ணாவின் சீரிய முயற்சியால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.

    இதைபோல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரையும் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் மதுரையில் சிறைத்துறை பெண் எஸ்.பி.யை ரவுடி மிரட்டி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு அமைச்சர் பதில் அளிக்கும்போது, இந்த பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது. போலீஸ் சூப்பிரண்டுக்கு ரவுடி மிரட்டல் விடுத்தது உண்மை என்றால் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவருக்கும் எச்சரிக்கை விடும் விதமாக பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TNMinister #CVeShanmugam
    மதுரை அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை அருகே உள்ள துவரிமான் கணேசபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீமன். இவர் பெரியார் பஸ் நிலையம் பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

    உடனே ஸ்ரீமன் கூச்சலிட்டதால் பொதுமக்கள் விரட்டிச்சென்று 2 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் திடீர்நகரைச் சேர்ந்த முபாரக்அலி (51), ஒத்தப்பட்டி வைத்திய நாதபுரத்தைச் சேர்ந்த அபிஷேக் (20) என தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கோரிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (51). இவர் பள்ளிவாசல் தெருவில் நடந்து சென்றபோது கே.புதூரைச் சேர்ந்த நாகவேலு (28), கோரிப்பாளையம் இப்ராகிம் (32) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். #tamilnews
    எனது ஆன்மீக யாத்திரையை தடுக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். மிரட்டல்கள் பற்றி எனக்கு கவலை இல்லை என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். #arjunsampath

    கோவை:

    இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது-

    இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைய வேண்டும். மாநிலத்தில் ரஜினி தலைமையிலான ஆன்மீக அரசு அமைய வேண்டும் என்பதற்காக ‘மி‌ஷன் 2019’ என்ற பெயரில் 108 நாட்கள் ஆன்மீக யாத்திரை தொடங்க உள்ளேன்.

    இந்த யாத்திரை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்க இருந்தது. பாரதீய ஜனதா, ரஜினி உள்ளிட்ட ஆன்மிக அரசியலை முன்னிலைப் படுத்துபவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன்.

    இது சில அமைப்பினருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் எனது யாத்திரைக்கு இடை யூறு ஏற்படுத்துகிறார்கள். நான் தொலைக்காட்சிகளில் பேசும் போதும், கட்டுரைகள் வெளியிடும் போதெல்லாம் எனக்கு புதிய, புதிய செல்போன் நம்பர்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தது.

    தற்போது என்னை கொல்ல சதி நடப்பதாக செய்திகள் மூலம் அறிந்தேன். நான் கடந்த 30 வருடங்களாக மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். மிரட்டல்களை பற்றி கவலைப்படவில்லை. எனக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #arjunsampath

    ×