search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா"

    • புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
    • துல்கர் சல்மான் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பெரிய நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன.

    இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

    அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.

    சமீபத்தில் தான் படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனைத்தொடர்ந்து, பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்திற்காக புதிய வகை துப்பாக்கியின் புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படமும் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தில் துல்கர் சல்மான் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் படக்குழுவினரிடம் இருந்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விமல் மா.பொ.சி. எனும் படத்திலும் நடித்துள்ளார்.
    • படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    விமல் நடிக்கும் 'போகுமிடம் வெகுதூரமில்லை' ஃபர்ஸ்ட்-லுக் வெளியானது. பசங்க, களவாணி திரைப்படம் மூலம் மக்களை கவர்ந்தார் நடிகர் விமல்.

    தொடர்ந்து தூங்கா நகரம், வாகை சூடவா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரம்ப காலகட்டத்தில் கில்லி, கிரீடம் போன்ற திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்த விமல், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

    மீனாட்சி சுந்தரம் என்ற கதாபாத்திரத்தில் விமல் நடித்த அப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

    விமல் நடித்த வாகை சூடவா திரைப்படமும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. கடந்த 20 ஆண்டுகளில் தேசிய விருது பெற்ற படங்களில் அதிகம் நடித்த ஒரே தமிழ் நடிகர் விமல். அவர் நேரடியாக தேசிய விருதை பெறவில்லை என்றாலும் அவர் நடித்த படங்கள் மதிப்புமிக்க தேசிய விருதை பெற்றுள்ளது.

    கிட்டதட்ட 3 ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்துவந்த விமல், அதன் பிறகு வெப் சீரிசிலும் நடித்தார். இதற்கிடையில் நடிகர் விமல், போஸ் வெங்கட் இயக்கும் மா.பொ.சி. எனும் படத்திலும் நடித்துள்ளார்.

    இதனையடுத்து, விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் `போகுமிடம் வெகுதூரமில்லை'என்ற திரைப்படம் உருவாகிறது. மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
    • குட் பேட் அக்லி திரைப்படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும்.

    விடாமுயற்சியை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்.

    படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

    அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10ம் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
    • லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

    லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நேற்று வேட்டையன் படப்பிடிபிற்காக ரஜினி மும்பை சென்றார். அவர் விமான நிலையத்திற்கு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்கலில் வைரலாகியது. படத்தின் இன்ட்ரோ பாடலில் அனிருத் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியது. படத்தின் இண்ட்ரோ பாடலில் ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடி இருக்கிறார் அனிருத்.

    அதைத்தொடர்ந்து தற்பொழுது அமிதாப் பச்சனுடன் இணைந்து வேட்டையன் படப்பிடிப்பின் போது எடுக்கப் பட்ட புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த ஒருவரை ஒருவர் கட்டி அணைத்த படியும், சிரித்து கொண்டு கருப்பு நிற கோட் சூட்டில் ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி இருக்கின்றனர்.

    33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதற்கு முன் 1991 ஆம் ஆண்டு 'ஹம்' என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தகது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெங்களூரில் போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து இயக்குனர் பாலசந்தரால் 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் சினிமாவில் அறிமுகமானார்.
    • இந்நிலையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளது.

    சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமா படமாகி வருகிறது.

    இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ், இளையராஜா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    அந்த வகையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பெங்களூரில் போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து இயக்குனர் பாலசந்தரால் 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் சினிமாவில் அறிமுகமானார். 1978-ம் ஆண்டு வெளியான பைரவி படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் ரஜினிகாந்த்.

    தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்' என்ற பாடலுக்கேற்ப திரை உலகில் உச்சத்தை தொட்டவர் ரஜினிகாந்த். 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரா திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் தற்போது தனது 170-வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171-வது படமான 'கூலி' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

    இந்நிலையில் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளது. பிரபல இந்தி தயாரிப்பாளர் சஜித்நாடியாவாலா ரஜினி வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்க இருக்கிறார். இதையொட்டி ரஜினிகாந்தை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசி உள்ளார்.

    படத்திற்கான கதை எழுதும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க போவது யார்? மற்றும் படப்பிடிப்பு விபரங்கள் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கபிலன்வைரமுத்து எழுதி 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகோள் என்ற நாவல் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.
    • கபிலன்வைரமுத்து தமிழில் எழுதிய இந்த நாவல் மீரா ரவிஷங்கரின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.

    1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகோள் என்ற நாவல் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.

    பிரபல பதிப்பகமான ரூபா நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறார்கள். தற்காலத்தின் மெய்நிகர் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி மற்றும் பெருந்தரவு கொள்ளை ஆகியவைகளைக் களமாகக் கொண்ட நாவலில் நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருங்காமநல்லூர் போராட்டம் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    கபிலன்வைரமுத்து தமிழில் எழுதிய இந்த நாவல் மீரா ரவிஷங்கரின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது.

    இது குறித்து கபிலன்வைரமுத்து கூறுகையில் "ஆகோள் ஒரு படைப்பு அல்ல. ஒரு பயணம். அது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு செல்வதில் மகிழ்ச்சி. மொழி,தேசம், பண்பாடு தாண்டி அனைவரும் முகம் பார்க்கும் ஒரு படைப்பாக இந்த நாவலைக் கருதுகிறேன். இந்த களத்தில் எழுதுவதற்கு இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆகோள் நாவலின் இரண்டாம் பாகத்திற்கான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். விரைவில் எழுத்துப்பணிகளைத் தொடங்கவிருக்கிறேன். ரூபா பதிப்பதகத்திற்கும் மொழி பெயர்த்த மீரா ரவிஷங்கர் அவர்களுக்கும், மிஸ்டிக்ஸ் ரைட் மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கும் என் நன்றி" 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்
    • இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது

    அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமாரை சந்தித்து இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'அண்ணாமலை' 'பாட்ஷா' போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் அனைவரையும் கவர்ந்தது
    • தற்போது வெளி வந்த ரஜினி படங்களில் 'இன்ட்ரோ பாடல்' இல்லாமல் படம் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' புதிய படத்தை டைரக்டர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

    லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் இன்ட்ரோ பாடல்கள் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. 'அண்ணாமலை' 'பாட்ஷா' போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் அனைவரையும் கவர்ந்தது.

    தற்போது வெளி வந்த ரஜினி படங்களில் 'இன்ட்ரோ பாடல்' இல்லாமல் படம் வெளி வந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இருந்தனர். எனவே 'வேட்டையன்' படத்தில் ரஜினிகாந்த்தின் அறிமுக பாடல் (இன்ட்ரோ பாடல்) மீண்டும் கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான படப்பிடிப்பு வருகிற 25 -ந்தேதி சென்னை சுந்தர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான 'செட்' போடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பாடலுக்கு பிரபல நடன அமைப்பாளர் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய உள்ளார்.

    இதில் ரஜினியின் அறிமுக பாடலை அவர் பிரமாண்டமாக உருவாக்க உள்ளார். இதில் ரஜினியுடன் ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகிறார்கள்.

    இந்த பாடல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'அண்ணாமலை' 'பாட்ஷா' படத்தில் வரும் அறிமுக பாடல் போன்று பிரமாண்டமாக தயார் செய்யும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் 'வேட்டையன்' படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் வேட்டையன் படத்தின் இன்ட்ரோ பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் இணைந்து நடமாடியுள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
    • நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" 2 படங்களும் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.

    தமிழ் சினிமாவில் தற்போது "ரீ-ரிலீஸ்" படங்கள் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. 'வாரணம் ஆயிரம்', 'வேட்டையாடு விளையாடு', '3', 'விண்ணைத் தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடி வருகின்றன.





    இந்நிலையில் சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான 'கில்லி' படம் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது. இதையடுத்து, மே 1 - ந்தேதி அஜித்தின் பிறந்தநாளை யொட்டி "பில்லா" ,மற்றும் "தீனா" ஆகிய படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட் உள்ளன.



    இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த 2012 -ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ஆகிய 2 படங்களும் விரைவில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் சிவா நிர்வானா இயக்கத்தில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.
    • இந்நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் பல நட்சத்திர நடிகர்களுடன் கதாநாயகியாக இணைந்து சமந்தா நடித்துள்ளார். நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

    கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் சிவா நிர்வானா இயக்கத்தில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.. இப்படம் மக்களிடையே கலந்த விமர்சனத்தை பெற்றது. ஏப்ரல் 28 ஆம் தேதி { இன்று} 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அவருக்கும் பல திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமந்தா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்ததாக ட்ரலாலா மூவிங் பிக்டர்ஸ் தயாரிப்பில் " மா இண்டி பங்காரம்" என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனர், சக நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுக்குறித்து சமந்தா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் மின்னுவது எல்லாம் பொன்னல்ல என்ற தலைப்பில் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏப்ரல் 28 சமந்தா அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் சமந்தா.  முதன்முதலில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அவரது முன்னாள் கணவனான நாக சைத்தன்யாவுடன் இணைந்து 'யே மாயா சேசாவே' என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

    சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

    சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சில நாட்களுக்கு முன் அவர் கலந்துக் கொண்ட 'எல்லே சஸ்டெயினபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் அவர் கருப்பு நிற கவுனை அணிந்திருந்தார். அவரது திருமண கவுனை மறு ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறத்தில் மாற்றி அணிந்திருந்தார். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    ஏப்ரல் 28 { இன்று} சமந்தா அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலமான சமந்தா, சின்மயி , விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
    • இன்று அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமரன் படக்குழு ’சல்யூட்டிங் மேஜர் முகுந்த்’ என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள் அந்த வீடியோ சமூக வலைத்தளங்கள்ளில் வைரலானது.

    தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்திய நாட்டுக்காக சிறப்பான சேவையை செய்து நாட்டுக்காக உயிர் தாகம் செய்தார். இன்று அவரது 10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமரன் படக்குழு 'சல்யூட்டிங் மேஜர் முகுந்த்' என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

    சிவகார்த்திகேயன் அவரது நினைவு இடத்திற்கு சென்று சல்யூட் அடித்த படி ஒரு புகைப்படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " காற்று அசைவதால் நமது தேசிய கொடி பறப்பதில்லை, அதை பாதுகாக்க உயிரை விட்ட அனைத்து வீரர்களின் கடைசி மூச்சில் தான் தேசியக் கொடி பறக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×