search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97270"

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் கோ 3 லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.


    மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சர்பேஸ் கோ 3 மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 10.25 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிக்ஸ்டாண்டு, 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், சர்பேஸ் பென் வசதி, விண்டோஸ் 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    544 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய சர்பேஸ் கோ 3 8.3 எம்.எம். அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இன்டெல் யு.ஹெச்.டி. கிராபிக்ஸ் 615, 4 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம், 64 ஜிபி இ.எம்.எம்.சி அல்லது 128 ஜிபி எஸ்.எஸ்.டி., வைபை 6 மற்றும் ப்ளூடூத் 5 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

     மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 3

    இந்தியாவில் புதிய சர்பேஸ் கோ 3 4 ஜிபி ரேம், 64 ஜிபி இ.எம்.எம்.சி. ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 42,999 என துவங்குகிறது. இன்டெல் கோர் ஐ3, 8 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்.எஸ்.டி. கொண்ட மாடலின் விலை ரூ. 62,999 ஆகும். இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நவம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. தற்போது இதற்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய லேப்டாப் அறிமுக விவரங்கள் வெளியாகி உள்ளது.


    ரிலையன்ஸ் ஜியோபுக் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் மீண்டும் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்ட லேப்டாப் பிரிவில் ஜியோ களமிறங்குகிறது. முந்தைய ஜியோபோன் நெக்ஸ்ட் போன்றே ஜியோபுக் மாடலும் குறைந்த விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜியோபுக் மாடல் எண்ட்ரி-லெவல் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த லேப்டாப் அம்சங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதன்படி புதிய ஜியோபுக் என்.பி.112எம்.எம். எனும் குறியீட்டு பெயர் கொண்டு உருவாகி வருகிறது. இந்த லேப்டாப் மீடியாடெக் எம்.டி.8788 பிராசஸர் கொண்டிருக்கிறது.

     கோப்புப்படம்

    மேலும் இந்த லேப்டாப் புல் ஹெச்.டி. ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு சார்ந்த ஜியோ ஓ.எஸ்., டூயல் பேண்ட் வைபை, 4ஜி எல்.டி.இ. போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜியோபுக் அம்சங்கள் சார்பில் இதுவரை அந்நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை. 
    ஏற்கனவே பயன்படுத்திய சாம்சங் லேப்டாப் மாடலை ஒருவர் ரூ.9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்.



    2008 ஆம் ஆண்டின் சாம்சங் லேப்டாப்பை ஒருவர் ரூ.9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார். இவர் வாங்கியிருக்கும் லேப்டாப்பில் தீங்கு விளைவிக்கும் உலகின் மிக மோசமான மென்பொருள் நிறுவப்பட்டு இருக்கிறது.

    தி பெர்சிஸ்டன்ஸ் ஆஃப் சௌஸ் (The Persistence of Chaos) என அழைக்கப்படும் இந்த மென்பொருளை சீனாவை சேர்ந்த இணைய நிபுணர் குவோ ஒ டாங் என்பவர் உருவாக்கினார். இதற்கு நியூ யார்க்கை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டீப் இன்ஸ்டின்க்ட் நிதியுதவி வழங்கியிருக்கிறது.

    இந்த நிறுவனம் இணையம் மூலம் நிஜ உலகில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க குவோவுடன் இணைந்து பணியாற்றியது. இதற்கு அந்நிறுவனம் குவோவிற்கு மால்வேர் சார்ந்த உதவிகளையும் வழங்கியது.

    "கம்ப்யூட்டர்கள் உண்மையில் நம்மை பாதிக்காது என்ற மாயை நம்மிடம் இருக்கிறது. ஆனால் இது முற்றிலும் முரணான ஒன்றாகும். ஆயுதப்படுத்தப்பட்ட வைரஸ்கள் மின் இணைப்புகளை தாக்கி நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை," என குவோ தெரிவித்தார்.



    இந்த வைரஸ்களின் பெயர்கள் பெரும்பாலும் பாப் பாடல்களின் தலைப்புகளாகவே கருதப்படுகின்றன. இதுவரை சுமார் 9500 கோடி டாலர்கள் அளவு பொருளாதார இழப்பை இவை ஏற்படுத்தி இருக்கின்றன. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ரேன்சம்வேர் தாக்குதல் 150 நாடுகளில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிக கம்ப்யூட்டர்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    மால்வேர் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க தேவையான வழிமுறைகளை பின்பற்றியதாக குவோ மற்றும் டீப் இன்ஸ்டின்க்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் மற்ற நெட்வொர்க்களுடன் இணையாமல் இருக்க ஏர்-கேப் செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ்கள் மற்ற கம்ப்யூட்டர்களை பாதிக்காமல் இருக்கும். இதனை வாங்கியவருக்கு அனுப்பும் போது இதன் இணைய வசதிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும்.

    இந்த மால்வேரில் வைரஸ்கள், வொர்ம்கள், ஸ்பைவேர், ரேன்சம்வேர் மற்றும் பல்வேறு இதர தீங்கிழைக்கும் குறியீடுகள் (தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும் வகையில் உருவாக்கப்படுவது) உள்ளிட்டவை நிறைந்திருக்கிறது.
    சியோமி நிறுவனம் தனது Mi நோட்புக் ஏர் லேப்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. Mi நோட்புக் ஏர் 2019 மாடலில் புதிய தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. #MiNotebookAir



    சியோமி நிறுவனம் தனது Mi நோட்புக் ஏர் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய லேப்டாப்பில் சியோமி 8-ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 அல்லது கோர் எம்3 பிராசஸர்களை வழங்கியிருக்கிறது. இத்துடன் 4 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி., மற்றும் ஃபுல் ஹெச்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

    முழுமையான மெட்டல் சேசிஸ் கொண்டிருக்கும் Mi நோட்புக் ஏர் எடை 1.07 கிலோ ஆகும். புதிய லேப்டாப்பில் சியோமி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கியுள்ளது. முன்னதாக சியோமி தனது லேப்டாப்களில் ஏழாம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 வெர்ஷனை அறிமுகம் செய்தது. 

    இந்நிலையில், தற்சமயம் 12.5 இன்ச் Mi நோட்புக் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Mi நோட்புக் ஏர் 13.3 இன்ச் மாடலில் ஏற்கனவே 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் சி.பி.யு.க்கள் வழங்கப்படுகின்றன. 



    Mi நோட்புக் ஏர் 12.5 இன்ச் (2019) சிறப்பம்சங்கள்:

    - 12.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1080x1920 பிக்சல் ஸ்கிரீன்
    - 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 / கோர் எம்3 பிராசஸர்
    - 4 ஜி.பி. ரேம்
    - 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
    - டி.டி.எஸ். சரவுண்ட் சவுண்ட்
    - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
    - ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்
    - யு.எஸ்.பி. 3.0 போர்ட்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - பேக்லிட் கீபோர்டு
    - விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்

    சீனாவில் Mi நோட்புக் ஏர் 12.5 இன்ச் (2019) மாடல் விலை CNY 3,599 (இந்திய மதிப்பில் ரூ.38,400) முதல் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை CNY 4,299 (இந்திய மதிப்பில் ரூ.45,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ள Mi நோட்புக் ஏர் மற்ற சந்தைகளில் வெளியிடுவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஸ்டேடியா எனும் கேமிங் சேவையை அறிமுகம் செய்தது. #Google



    கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது கேமிங் சேவையை அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஜி.டி.சி. 2019 நிகழ்வில் கூகுள் தனது கேமிங் சேவையை அறிமுகம் செய்தது. கூகுள் ஸ்டேடியா என அழைக்கப்படும் புதிய சேவையை கொண்டு தொலைகாட்சியில் கேம்களை விளையாடலாம்.

    இதுமட்டுமின்றி கூகுள் ஸ்டேடியா பயன்படுத்தி கூகுள் க்ரோம்காஸ்ட் அல்ட்ரா கொண்டு லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட், அல்லது மொபைல் போன் உள்ளிட்டவற்றில் 4K தரம் நொடிக்கு 60 ஃபிரேம் வேகம் ஹெச்.டி.ஆர். தரத்தில் சரவுண்ட் சவுண்ட் நுட்பத்தில் கேம் விளையாடலாம். 



    ஸ்டேடியா கேமிங் சேவை முழுமையாக ஆன்லைனில் விளையாட வேண்டும் என்பதால், இண்டர்நெட் இணைப்புக்கு ஏற்ப கேம்பிளே அனுபவம் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். கேம்களை உருவாக்க கூகுள் தனது டெவலப்பர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. ஸ்டேடியாவின் கிரவுட் பிளே அம்சம் கொண்டு பார்வையாளர்கள் நேரலையில் ஸ்டிரீம் செய்யப்படும் கேமில் கலந்துகொள்ளலாம்.

    கூகுளின் டேட்டா சென்டருடன் நேரடியாக இணைக்கப்படும் ஸ்டேடியா கண்ட்ரோலரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கேமிங் அனுபவத்தை வைபை இணைப்பின் மூலம் சிறப்பாக மேம்படுத்த முடியும். இதில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஸ்டன்ட் கேப்ச்சர் அம்சம் கொண்டு கேம்பிளேக்களை 4K தரத்தில் யூடியூபில் பகிர்ந்து கொள்ள முடியும்.



    இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் பில்ட்-இன் மைக்ரோபோன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கூகுள் ஸ்டேடியா ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பகுதிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் அறிமுகம் செய்வது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    கூகுள் ஸ்டேடியா அறிமுக வீடியோவை கீழே காணலாம்

    ஹூவாய் நிறுவனம் 2019 மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் மாடலை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #MateBookXPro



    ஹூவாய் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் புதிய மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த லேப்டாப்பின் மேம்பட்ட மாடல் ஆகும். 

    புதிய மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 மாடலில் 13.9 இன்ச் 3K LTPS ஃபுல்வியூ டிஸ்ப்ளே, 14.6 அளவில் மெல்லிய மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் மற்றும் NVIDIA GeForce MX250 GPU கிராஃபிக்ஸ் வசதியுடன் வருகின்றது.

    புதிய லேப்டாப்பின் பவர் பட்டனில் ஹூவாய் கைரேகை சென்சார் வழங்கியிருக்கிறது. இத்துடன் இந்த லேப்டாப்பில் அதிவேக வைபை வசதி, ஹூவாய் ஷேர் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்டு ஹூவாய் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களிடையே புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாக்யூமென்ட்களை அதிவேகமாகவும், மிக எளிமையாகவும் பரிமாற்றம் செய்ய முடியும். 



    ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 சிறப்பம்சங்கள்:

    - 13.9 இன்ச் 3000x2000 பிக்சல் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் i5-8265U / i7-8565U பிராசஸர்
    - 2 ஜி.பி. GDDR5 NVIDIA GeForce MX250 GPU 
    - இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 620
    - 8 ஜி.பி. / 16 ஜி.பி. LPDDR3 2133MHz ரேம்
    - 512 ஜி.பி. / 1000 ஜி.பி. NVMe PCIe எஸ்.எஸ்.டி.
    - விண்டோஸ் 10 ஹோம்
    - 1 எம்.பி. ஹெச்.டி. வெப்கேமரா
    - பவர் பட்டனில் கைரேகை சென்சார்
    - வைபை 802.11ac 2.4 GHz 300 Mbps, 5 GHz 1733 Mbps, 2 x 2 MIMO
    - ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. 3.0 போர்ட், ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி. டைப்-சி
    - குவாட் டிஜிட்டல் மைக்ரோபோன்கள்
    - குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
    - 57.4 Wh பேட்டரி

    ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 லேப்டாப் மிஸ்டிக் சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 1599 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,28,820) என்றும் டாப் எண்ட் வேரியண்ட் விலை 1999 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,61,050) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹெச்.பி. நிறுவனம் இரண்டு புதிய கன்வெர்டிபிள் லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Spectrex360 #Laptop



    ஹெச்.பி. நிறுவனம் ஸ்பெக்டர் X360 மற்றும் ஸ்பெக்டர் ஃபோலியோ கன்வெர்டிபிள் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 உலகின் முதல் லெதர் கன்வெர்டிபிள் கணினியாக அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோன்று ஸ்பெக்டர் X360 15-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 



    ஹெச்.பி. ஸ்பெக்டர் ஃபோலியோ சிறப்பம்சங்கள்:

    - 13.3 இன்ச் 1920x1080 பிக்ல் FHD IPS பிரைட் வியூ WLED-பேக்லிட் மைக்ரோ-எட்ஜ்
    - மல்டி டச் எட்ஜ்-டு-எட்ஜ் கிளாஸ் ஸ்கிரீன்
    - 8ம் தலைமுறை இன்டெல் கோர் i7-8500Y பிராசஸர்
    - இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 615
    - 16 ஜி.பி. LPDDR3-1866 எஸ்.டி. ரேம்
    - 512 ஜி.பி. PCIe NVMe M.2 எஸ்.எஸ்.டி.
    - விண்டோஸ் 10 ப்ரோ
    - ஹெச்.பி. வைடு விஷன்  FHD IR கேமரா
    - ஹெச்.பி. ஆடியோ பூஸ்ட் 2.0, குவாட் ஸ்பீக்கர்கள்
    - டூயல்-பேண்ட் வைபை 802.11 ac (2×2), ப்ளூடூத் 4.2
    - 2 x தண்டர்போல்ட 3 போர்ட்கள், 1 x யு.எஸ்.பி. டைப்-சி 3.1
    - 1 x ஹெட்போன் / மைக்ரோபோன் காம்போ
    - 6-செல், 54.28 Wh Li-ion பாலிமர் பேட்டரி



    ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 சிறப்பம்சங்கள்:

    - 13.3 இன்ச் 1920x1080 பிக்ல் FHD IPS ஆண்டி-கிளேர் மைக்ரோ எட்ஜ் WLED-பேக்லிட் மைக்ரோ-எட்ஜ்
    - 13.3 இன்த் 3840x2160 பிக்சல் 4K IPS ஆண்டி-கிளேர் மைக்ரோ எட்ஜ் WLED-பேக்லிட் பேக்லிட் டச் ஸ்கிரீன்
    - 8ம் தலைமுறை இன்டெல் கோர் i5-8265U / i7-8565U பிராசஸர்
    - இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 620
    - 8 ஜி.பி. / 16 ஜி.பி. LPDDR3-1866 எஸ்.டி. ரேம்
    - 256 ஜி.பி. / 512 ஜி.பி. / 1000 ஜி.பி. PCIe NVMe M.2 எஸ்.எஸ்.டி.
    - விண்டோஸ் 10 ப்ரோ
    - ஹெச்.பி. வைடு விஷன்  FHD IR கேமரா
    - ஹெச்.பி. ஆடியோ பூஸ்ட் 2.0, குவாட் ஸ்பீக்கர்கள்
    - டூயல்-பேண்ட் வைபை 802.11 ac (2×2), ப்ளூடூத் 5
    - 2 x தண்டர்போல்ட 3 போர்ட்கள், 1 x யு.எஸ்.பி. டைப்-சி 3.1
    - 1 x ஹெட்போன் / மைக்ரோபோன் காம்போ
    - 4-செல், 61 Wh Li-ion பாலிமர் பேட்டரி

    ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 டார்க் ஆஷ் கிரே மற்றும் புளு போசிடோன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியன்ட் விலை ரூ.1,29,990 இல் துவங்கி அதிகபட்சம் ரூ.1,69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹெச்.பி. ஸ்பெக்டர் ஃபோலியோ காக்னாக் பிரவுன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ லேப்டாப் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #Microsoft #laptop



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் கோ லேப்டாப் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய சர்ஃபேஸ் கோ துவக்க விலை ரூ.38,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ லேப்டாப் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் சார்ந்து இயங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விலை குறைந்த லேப்டாப் ஆகும். இன்டெல் பிராசஸர், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ மாடலில் 10.0 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே மற்றும் 500 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஐபேட் போன்றே புதிய சர்ஃபேஸ் கோ மாடலிலும் சர்ஃபேஸ் கோ மைக்ரோசாஃப்ட் இன் சர்ஃபேஸ் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.



    இந்த டேப்லெட் அல்லது நோட்புக் சாதனம் 7-ம் தலைமுறை கோல்டு பிராசஸர் 4415Y, ஃபேன்-லெஸ் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குவதோடு 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஃபிளாஷ் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    கனெக்டிவிட்டியை பொருத்த வரை 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சர்ஃபேஸ் கோ நோட்புக் மாடலில் கீபேட் மற்றும் டிராக்கர் பயன்களை வழங்கும் கேஸ் வழங்கப்படுகிறது.
    சியோமி நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்ட Mi நோச்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Xiaomi #notebook



    சியோமி நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Mi நோட்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய நோட்புக் மாடல் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்டுள்ளது. சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஜெ.டி. வலைத்தளங்களில் புதிய Mi நோட்புக் முன்பதிவு செய்யப்படுகிறது.

    பிராசஸர் தவிர புதிய Mi நோட்புக் மாடலில் 4 ஜி.பி. ரேம், 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது. இதன் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ.40,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    சியோமி Mi நோட்புக் ஏர் ஜஸ்ட் சில்வர் நிற வேரியன்ட் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுகிறது. முதற்கட்டமாக CNY 100 செலுத்தி பயனர்கள் தங்களுக்கான நோட்புக் மாடலை முன்பதிவு செய்யலாம்.



    சியோமி Mi நோட்புக் ஏர் சிறப்பம்சங்கள்:

    - 12.5 இன்ச் 920x1080 பிக்சல் டிஸ்ப்ளே
    - விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
    - இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்
    - இன்டெல் ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 615
    - 4 ஜி.பி. ரேம்
    - 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 1 எம்.பி. வெப் கேமரா
    - 8 மணி நேர வீடியோ பிளேபேக்
    - 1சி ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
    - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
    - யு.எஸ்.பி. 3.0 போர்ட்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - ப்ளூடூத் 4.1, வைபை 802.11ac
    அசுஸ் நிறுவனத்தின் புதிய டியூரபிள் கேமிங் நோட்புக்-கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #ASUS #gaming #Laptop



    அசுஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய TUF கேமிங் நோட்புக்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய TUF நோட்புக்-கள் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர் மற்றும் Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. இவற்றில் 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் நானோஎட்ஜ் டிஸ்ப்ளேக்கள் மற்றும் டி.டி.எஸ். சரவுன்ட் சவுன்ட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

    புதிய அசுஸ் TUF FX505 மற்றும் TUF FX705 நோட்புக்-களில் MIL-STD-810G தர உறுதித் தன்மை கொண்டிருக்கிறது. இவற்றுடன் அசுஸ் நிறுவனம் TUF டெஸ்க்டாப் FX10CP மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த டெஸ்க்டாப் மாடலில் இன்டெல் கோர் i7 பிராசஸர் மற்றும் ஐசோலேட் செய்யப்பட்ட ஏர் சேம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அசுஸ் TUF FX505, FX705, TUF டெஸ்க்டாப் FX10CP சிறப்பம்சங்கள்:

    அசுஸ் TUF FX505 மாடலில் 15.6 இன்ச் LED-பேக்லிட் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் ஆன்டி-கிளேர் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர், 8 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 1000 ஜி.பி. மெமரி, 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மற்றும் Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு மற்றும் 6 ஜி.பி. வி.ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    அசுஸ் TUF FX505 போன்று இல்லாமல், TUF FX705 மாடலில் 17.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1920x1080 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர், 8 ஜி.பி. ரேம், Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு மற்றும் 6 ஜி.பி. வி.ரேம் கொண்டிருக்கிறது.



    புதிய TUF நோட்புக் மாடல்களை அசுஸ் நிறுவனம் MIL-810G மிலிட்டரி தரத்தில் உருவாக்கியிருக்கிறது. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய லேப்டாப்களில் பேக்லிட் கீபோர்டு, WASD கீகேப் டிசைன் கொண்டிருக்கிறது. 

    அசுஸ் TUF FX507 மற்றும் TUF FX705 நோட்புக்-களில் 2T2R MU-MIMO 802.11ac வைபை வசதி, ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. டைப்-ஏ 2.0 மற்றும் 3.1, ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் கொண்டிருக்கிறது. 

    இத்துடன் 2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அரே மைக்ரோபோன், டி.டி.எஸ். ஹெட்போன்: X மற்றும் 7.1 சேனல் விர்ச்சுவல் சரவுன்ட் சவுன்ட் அனுபவம் வழங்குகிறது. மேலும் அசுஸ் ஹைப்பர்கூல் தெர்மல் தொழில்நுட்பம், ஆன்டி-டஸ்ட் கூலிங் சிஸ்டம், ஃபேன் ஓவர்பூஸ்ட் தொழில்நுட்பம், டூயல்-ஃபேன் கூலிங் சி.பி.யு. மற்றும் ஜி.பி.யு. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    அசுஸ் TUF டெஸ்க்டாப் FX10CP  மாடலில் இன்டெல் கோர் i7 8700 பிராசஸர், Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு, 32 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. ஹார்டு டிரைவ், 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி. கொண்டிருக்கிறது. இந்த டெஸ்க்டாப் மாடலிலும் தெர்மல் வடிவமைப்பு 802.11ac Wave 2 வைபை 2x2 ஆன்டெனாக்களை கொண்டுள்ளது.

    அசுஸ் TUF FX505, FX705, TUF டெஸ்க்டாப் FX10CP இந்திய விலை:

    அசுஸ் TUF FX505 விலை இந்தியாவில் ரூ.79,990 என்றும், FX705 மாடலின் துவக்க விலை ரூ.1,24,990 என்றும் TUF டெஸ்க்டாப் FX10CP துவக்க விலை ரூ.91,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோட்புக் மற்றும் டெஸ்க்டாப் மாடல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    லெனோவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த தின்க்பேட் இ480 லேப்டாப் மாடலின் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #lenovo #laptop



    மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் தின்க்பேட் இ480 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    முந்தைய மாடல்களைக் காட்டிலும் சிறப்பான செயல்திறன், மிகவும் உறுதியான வடிவமைப்பு என கொடுக்கும் பணத்திற்கு தரமான லேப்டாப் மாடலாக புதிய தின்க்பேட் இ480 உள்ளது. 14 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டு இருக்கும் புது லேப்டாப் விலை இந்தியாவில் ரூ. 57,496 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புது தின்க்பேட் இ480 லேப்டாப் முந்தைய மாடல்களை விட மிகவும் மெல்லியதாகவும், எடை குறைவானதாகவும் உள்ளது. இது கருப்பு நிறத்தில் மிகச் சிறப்பான வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இதன் கீ-போர்டில் ஒளிரும் தன்மை கொண்ட (பேக் லைட்) வசதி இருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் செயல்படுத்த முடியும்.



    இதில் கைரேகை சென்சார் தின்க்பேட் லோகோவின் மேல் அழகாக இடம்பெற்றுள்ளது. தற்சமயம் வெளியாகும் லேப்டாப் மாடல்களில் கைரேகை சென்சார் வழங்கப்படும் நிலையில், புது கீ-போர்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த விஷயத்தில் லெனோவா தனது வாடிக்கையாளர்களின் மன நிலையை நன்கு உணர்ந்து தொழில்நுட்பத்தை செயல்படுத்தியுள்ளதைப் பார்க்க முடிகிறது. இதில் உள்ள டிராக் பேட் மிகச் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

    பொதுவாக கீ-போர்ட் மற்றும் டிராக் பேட் ஆகியவை சிறப்பாக இருந்தால் உங்களது டைப்பிங் திறன் மேம்படும். பிழைகளும் குறைவாக இருக்கும். அந்த வகையில் தின்க்பேட் கீ-போர்ட் மற்றும் டிராக் பேட் ஆகியவை மிக வசதியான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

    இதில் 7-வது தலைமுறை கோர் ஐ3 சி.பி.யு. உள்ளது. 4 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. ஹெச்.டி.டி. ஸ்பின்னிங் 5400 ஆர்.பி.எம். மற்றும் 8-வது தலைமுறை கோர் ஐ7 மற்றும் 8 ஜி.பி. ரேம் 1 டெரா பைட் ஹெச்.டி.டி. ஸ்பின்னிங் 5400 ஆர்.பி.எம். ஆகியவற்றுடன் கிடைக்கிறது. இதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையில் 13 மணி நேரம் தொடர்ந்து செயல்படக் கூடியது.
    ஆப்பிள் நிறுவனத்தின் அக்டோபர் நிகழ்வில் புத்தம் புதிய மேக்புக் ஏர் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக்புக் ஏர் முந்தைய மாடல்களை விட அதிக அம்சங்களை புதிதாக கொண்டுள்ளது. #AppleEvent
    ஆப்பிள் நிறுவனத்தின் அக்டோபர் நிகழ்வில் புத்தம் புதிய மேக்புக் ஏர் லேப்டாப் முதல் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லேப்டாப்பில் 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, கீபோர்டில் டச் ஐடி கைரேகை சென்சார், ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப்செட், முந்தைய மாடல்களை விட பெரிய ஃபோர்ஸ் டச் டிராக்பேட் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 2 தன்டர்போல்ட் போர்ட், ஒரு நாள் முழுக்க பேட்டரி பேக்கப், முந்தைய மாடலை விட 17 சதவிகிதம் சிறியதாகவும், 15.6 எம்.எம். தடிமனாக, 2.75 பவுன்ட் எடை கொண்டுள்ளது.



    புதிய மேக்புக் ஏர் சிறப்பம்சங்கள்:

    - 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஆப்பிள் டி2 சிப்செட்
    - பேக்லிட் கீபோர்டு, ஃபோர்ஸ் டச் டிராக்பேட்
    - ஹே சிரி வாய்ஸ் கமான்ட்
    - டச் ஐ.டி. கைரேகை சென்சார்
    - இரண்டு தன்டர்போல்ட் 3.0 போர்ட்
    - 8ம் தலைமுறை இன்டெல் கோர் i5 பிராசஸர்கள்
    - 16 ஜி.பி. ரேம்
    - 1500 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
    - ஒருநாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி
    - 1.5 கிலோ எடை

    புதிய மேக்புக் ஏர் விலை 1199 டாலர்கள் முதல் துவங்குகிறது. அமெரிக்காவில் இதன் முன்பதிவு இன்று துவங்குகிறது. விற்பனை நவம்பர் 7ம் தேதி துவங்குகிறது. #AppleEvent
    ×