search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97270"

    சாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய லேப்டாப் ஃபிளாஷ் என அழைக்கப்படுகிறது. #Samsung #laptop



    சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் 802.11 ac 2X2 ஜிகாபிட் வயர்லெஸ் LAN கார்டு கொண்டுள்ளது. இதனால் புதிய லேப்டாப்பில் நொடிக்கு 1.7 ஜிகாபைட் வேகம் வரை சீராக இயங்கும்.

    இத்துடன் புதிய ஃபிளாஷ் லேப்டாப் 13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் KT கார்ப் மொபைல் நெட்வொர்க்கிற்காக சேவைகளுக்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. 

    பாதுகாப்பு வசதியை மேம்படுத்தும் வகையில் சாம்சங் தனது ஃபிளாஷ் லேப்டாப்பில் அந்நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய பாதுகாப்பு அமைப்பை வழங்கியிருக்கிறது. புதிய லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. 



    கைரேகை சென்சார், சாம்சங் ரகசிய ஃபோல்டர் கொண்டிருக்கும் சாம்சங் ஃபிளாஷ் லேப்டாப்பில் பயனர்கள் தங்களது தரவுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். 

    சர்வதேச ஃபிளாஷ் ஸ்டோரேஜ் கார்டுகளை சப்போர்ட் செய்யும் ஃபிளாஷ் லேப்டாப் வழக்கமான மைக்ரோ எஸ்.டி. கார்டுகளை விட ஐந்து மடங்கு வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் புகிய ஃபிளாஷ் லேப்டாப் மாடல்கள் வைட், சார்கோல் மற்றும் கோரல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 8,20,000 வொன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,360 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Samsung #laptop
    மார்த்தாண்டத்தில் இரவில் படித்து கொண்டிருந்தபோது லேப்-டாப்பில் மின்சாரம் பாய்ந்து பிளஸ்-1 மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி, காட்டுவிளையை சேர்ந்தவர் பெனட். ராணுவ வீரர்.

    பெனட்டிற்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் மதுரையில் படித்து வருகிறார். மகள் பெஜின் (வயது 16). உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்தார்.

    தினமும் வீட்டில் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பார். இதற்காக லேப்- டாப்பும் பயன்படுத்துவார்.

    வழக்கம் போல பெஜின் நேற்றிரவும் வீட்டில் படித்து கொண்டிருந்தார். அவர் அருகில் லேப்-டாப்பும் இருந்தது. அதனை சார்ஜரில் போட்டபடி பெஜின் படித்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

    இன்று காலை பெஜினின் அறை நீண்ட நேரம் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பெஜின், லேப்-டாப்பில் தலைசாய்த்தபடி இறந்து கிடந்தார்.

    அதிர்ச்சி அடைந்த பெற்றோர் லேப்-டாப்பை அகற்றிவிட்டு பெஜினை மீட்க முயன்றனர். அப்போது லேப்-டாப்பில் மின்சாரம் பாய்ந்திருப்பது தெரியவந்தது.

    பெஜின் இரவில் படித்து முடித்த பின்பு லேப்-டாப்பை சார்ஜரில் இருந்து அகற்றவில்லை என்றும், இதில் மின்சாரம் பாய்ந்து அவர் இறந்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இதுபற்றி பெஜினின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெஜினின் தந்தை தற்போது காஷ்மீர் மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். மகள் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நன்றாக படிக்கும் மாணவி, படித்து கொண்டிருந்த போதே இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சாதனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் புதிய சர்ஃபேஸ் சாதனம் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Microsoft
     


    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய ஹார்டுவேர் நிகழ்வு அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய சர்ஃபேஸ் சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தற்போதைய சர்ஃபேஸ் நோட்புக் மாடல்களுக்கு புதிய சர்ஃபேஸ் ப்ரோ மற்ரும் சர்ஃபேஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இத்துடன் டூயல் டிஸ்ப்ளே கொண்ட பாக்கெட் சர்ஃபேஸ் சாதனம் ஆன்ட்ரோமெடா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.



    முன்னதாக மலிவு விலை சர்ஃபேஸ் கோ டேப்லெட் மாடலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. மைக்ரோசாஃப்ட் வெளியிட்டு இருக்கும் அழைப்பிதழில் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் ஹார்டுவேர் சார்ந்த அப்கிரேடுகளை எதிர்பார்க்கலாம். 

    அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் புதிய சர்பேஸ் ப்ரோ மாடலில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சர்ஃபேஸ் ப்ரோ 5 மாடலை விட மேம்படுத்தப்பட்ட புதிய பிராசஸர்கள், பெரிய பேட்டரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகமான சர்ஃபேஸ் லேப்டாப் மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டூயல்-டிஸ்ப்ளே சர்ஃபேஸ் சாதனத்தை தனது புதிய நோட்புக் மாடல்களுடன் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டிருந்தது. இரண்டு திரைகளுடன் இந்த சாதனம் மடிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ 13-இன்ச் மற்றும் 15-இன்ச் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய சாதனங்கள் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MacBookPro2018



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 மேக்புக் ப்ரோ 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மாடல்கள் டச் பார் வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

    இரண்டு ஆப்பிள் சாதனங்களிலும் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 15-இன்ச் மாடலில் 6-கோர்கள் 70% வரை வேகமாக இயங்கும் என்றும் 13-இன்ச் மாடல் முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும் போது இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இவற்றுடன் 32 ஜிபி மெமரி, ட்ரூ டோன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பதால் சிறப்பான அனுபவம் பெற முடியும் என்பதோடு மூன்றாம் தலைமுறை கீபோர்டு வழங்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் T2 சிப் கொண்ட முதல் மேக்புக் ப்ரோ மாடல்கள் இது ஆகும். 

    முன்னதாக இந்த சிப் ஐமேக் ப்ரோ மாடலில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சிப் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதியை வழங்குவதோடு, செக்யூர் பூட் மற்றும் என்க்ரிப்டெட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இத்துடன் இந்த சிப் மேக் சாதனங்களில் முதல் முறையாக சிரி (Hey Siri) அம்சத்தையும் வழங்குகிறது.



    15 இன்ச் மேக்புக் ப்ரோ (2018)

    - 6-கோர் இன்டெல் கோர் i7 மற்றும் i9 பிராசஸர்கள்
    - அதிகபட்சம் 2.9 ஜிகாஹெர்ட்ஸ் 4.8 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
    - 32 ஜிபி DDR4 மெமரி
    - சக்திவாய்ந்த ரேடியான் ப்ரோ டிஸ்கிரீட் கிராஃபிக்ஸ் மற்றும் 4 ஜிபி வரை வீடியோ மெமரி
    - அதிகபட்சம் 4TB வரையிலான SSD ஸ்டோரேஜ்
    - ட்ரூ டோன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம்
    - ஆப்பிள் T2 சிப்
    - டச் பார் மற்றும் டச் ஐடி



    13 இன்ச் மேக்புக் ப்ரோ (2018)

    - குவாட்கோர் இன்டெல் கோர் i5 மற்றும் i7 பிராசஸர்கள்
    - அதிகபட்சம் 2.7 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 4.5 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
    - இருமடங்கு eDRAM
    - இன்டெல் ஐரிஸ் ப்ளஸ் இன்டகிரேடெட் கிராஃபிக்ஸ் 655 மற்றும் 128 எம்பி eDRAM
    - அதிகபட்சம் 2TB வரை SSD ஸ்டோரேஜ்
    - ட்ரூ டோன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம்
    - ஆப்பிள் T2 சிப்
    - டச் பார் மற்றும் டச் ஐடி

    புதிய 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ (2018) மாடல்களின் விலை ரூ.1,49,900 ( அமெரிக்காவில் 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.1,23,150) மற்றும் ரூ.1,99,900 (அமெரிக்காவில் 2399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.1,64,220) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

     

    ஆப்பிள் 2018 மேக்புக் ப்ரோ மாடல்களின் விற்பனை இம்மாதத்திலேயே தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் விற்பனையாளர்களிடம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக்புக் ப்ரோ மாடல்களுக்கு ஏற்ற லெதர் ஸ்லீவ்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கிறது.

    13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ சேடிள் பிரவுன், மிட்நைட் ப்ளு நிறங்களில் லெதர் ஸ்லீவ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை 179 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் லெதர் ஸ்லீவ்கள் உயர் ரக லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதோடு மென்மையான மைக்ரோஃபைபர் லைனிங் செய்யப்பட்டுள்ளது. #MacBookPro2018 #Apple
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விலை குறைந்த சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விலை குறைந்த 2-இன்-1 நோட்புக் சர்ஃபேஸ் கோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய சர்ஃபேஸ் கோ ஆப்பிளின் 6-ம் தலைமுறை ஐபேட் மாடலுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.

    6-ம் தலைமுறை ஐபேட் போன்று சர்ஃபேஸ் கோ மாடலில் உண்மையான சர்ஃபேஸ் புக் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் சில அம்சங்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக புதிய சாதனத்தின் விலையை குறைக்க முடிந்தது.

    வடிவமைப்பை பொருத்த வரை புதிய சாதனம் பார்க்க வழக்கமான சர்ஃபேஸ் புக் போன்றே காட்சியளிக்கிறது. இதன் ஸ்கிரீன் அளவு லேப்டாப் அல்லது நோட்புக் சாதனங்களை கடந்து டேப்லெட் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. முழுமையான மெட்டல் யூனிபாடி மற்றும் முன்பக்கம் டெம்ப்பர்டு கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ மாடலில் 10.0 இன்ச் ஐ.பி.எஸ். எல்.சி.டி. டிஸ்ப்ளே மற்றும் 500 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஐபேட் போன்றே புதிய சர்ஃபேஸ் கோ மாடலிலும் சர்ஃபேஸ் கோ மைக்ரோசாஃப்ட் இன் சர்ஃபேஸ் பென் சப்போர்ட் கொண்டிருக்கிறது.



    இந்த டேப்லெட் அல்லது நோட்புக் சாதனம் 7-ம் தலைமுறை கோல்டு பிராசஸர் 4415Y, ஃபேன்-லெஸ் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குவதோடு 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஃபிளாஷ் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    கனெக்டிவிட்டியை பொருத்த வரை 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சர்ஃபேஸ் கோ நோட்புக் மாடலில் கீபேட் மற்றும் டிராக்கர் பயன்களை வழங்கும் கேஸ் வழங்கப்படுகிறது.

    கூடுதலாக பயனர்களுக்கு வயர்லெஸ் ப்ளூடூத் மவுஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. எனினும் இவற்றுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் கோ நோட்புக் விலை 399 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.27,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்சமயம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ப்ரிட்டன், அயர்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்த்ரியா, பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே, சுவீடன், போலாந்து, இத்தாலி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    இதேபோன்று ஜப்பான், சிங்கப்பூர், கொரியா, தாய்வான், மலேசியா, தாய்லாந்து, ஹாங் காங் மற்றும் சீனாவில் விரைவில் முன்பதிவு துவங்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய சர்ஃபேஸ் கோ இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ரேசர் நிறுவனத்தின் ரேசர் பிளேடு லேப்டாப் மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    கலிஃபோர்னியா:

    ரேசர் நிறுவனத்தின் ரேசர் பிளேடு லேப்டாப் மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 அறிமுகம் செயய்ப்பட்டது. புதிய ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்செல் கோர் பிராசஸர் கொண்டுள்ளது. 15.6 இன்ச் அளவில் உலகின் சிறிய கேமிங் லேப்டாப் மாடலாக ரேசர் பிளேடு இருக்கிறது.

    ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, இதன் 4K டிஸ்ப்ளே வேரியன்ட் மல்டி டச் வசதி, 4.9 மில்லிமீட்டர் அளவு மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. அடக்கமான வடிவமைப்பு, ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் அனோடைஸ் செய்யப்பட்ட பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    ரேசர் கோர் X என்பது தன்டர்போல்ட் 3 எக்ஸ்டெர்னல் கிராஃபிக்ஸ் ஆகும். இது கேமிங் திறனை அதிகப்படுத்தும் வசதி கொண்டுள்ளது. ரேசர் கோர் சீரிஸ் எக்ஸ்டெர்னல் கிராஃபிக்ஸ் கோர் வி2 மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 வசதி கொண்ட மேக் லேப்டாப்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது இன்டிகிரேட் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் லேப்டாப்-ஐ டெஸ்க்டாப் தர கேமிங் இயந்திரங்களாக மாற்றும். இது விண்டோஸ் மற்றும் மேக் சாதனங்களுடன் இணைந்து வேலை செய்யும் வசதியை கொண்டுள்ளது. அதிகபட்சம் 3-ஸ்லாட் அகலமான டெஸ்க்டாப் கிராஃபிக்ஸ் கார்டுகளை தாங்குவதோடு சமீபத்திய டெஸ்க்டாப் PCle கிராஃபிக்ஸ் கார்டுகளையும் சப்போர்ட் செய்யும்.



    ரேசர் பிளேடு கேமிங் லேப்டாப் சிறப்பம்சங்கள்:

    - 15.6 இன்ச் 1920x1080 பிக்சல் அதிகபட்சம் 144Hz / 4K 3840x2160 டிஸ்ப்ளே
    - இன்டெல் கோர் i7-8750H (8th Gen) பிராசஸர்
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 4.1 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
    - NVIDIA GeForce GTX 1060 Max-Q / NVIDIA GeForce GTX 1070 Max-Q
    - அதிகபட்சம் 32 ஜிபி ரேம்
    - அதிகபட்சம் 512 ஜிபி PCIe SSD, 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
    - விண்டோஸ் 10
    - 1 எம்பி வெப்கேமரா
    - வைபை, ப்ளூடூத், தன்டர்போல்ட் 3 (யுஎஸ்பி-சி) x 1, யுஎஸ்பி 3.1x 3
    - மினி டிஸ்ப்ளே போர்ட் 1.4 x 1
    - 3 செல்கள் 48 Whrs பேட்டரி



    விலை மற்றும் விற்பனை:

    ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி 60 ஜிகாஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்ட மாடலின் விலை 1899.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,29,138) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 144 ஜிகாஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மாடல் விலை 2199.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,49,610) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரேசர் பிளேடு லேப்டாப் 4K டிஸ்ப்ளே கொண்ட மாடலின் விலை 2899.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,97,213) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முதறகட்டமாக ரேசர் கோர் X லேப்டாப் அமெரிக்கா, கனடா, லண்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் மற்ற நாடுகளில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    அசுஸ் நிறுவனத்தின் சென்புக் ப்ரோ 15 (UX550GD) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    அசுஸ் நிறுவனத்தன் சென்புக் ப்ரோ 15 (UX550GD) லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரீமியம் வேரியன்ட் இன்டெல் கோர் i9 பிராசஸர் மற்றும் 4K டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 18.9மில்லிமீட்டர் தடிமனாக இருக்கும் லேப்டாப் 1.86 கிலோ எடை கொண்டுள்ளது. 

    சென்புக் ப்ரோ 15 லேப்டாப் சிங்கிள் டீப் டைவ் புளு நிறத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை குறித்த அறிவிப்புகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. எனினும் புதிய லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    சென்புக் ப்ரோ 15 (UX550GD) சிறப்பம்சங்கள்:

    அசுஸ் சென்புக் ப்ரோ 15 விண்டோஸ் 10 ப்ரோ / விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளங்களில் கிடைக்கிறது. 15.6 இன்ச் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி 1920x1080 பிக்சல் மற்றும் 4K 3840x2160 பிக்சல் பேனல்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

    புதிய அசுஸ் லேப்டாப் இன்டெல் கோர் i5-8300H / கோர் i7-8750H / கோர் i9-8950H பிராசஸ்ர்கள் மற்றும் 8 ஜிபி / 16 ஜிபி ரேம் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் கிராஃபிக்ஸ் அம்சங்களை என்விடியா ஜீஃபோர்ஸ் GTX 1050 GPU ( Nvidia GeForce GTX 1050 GPU) மற்றும் 4 ஜிபி ரேம் கவனித்து கொள்கிறது. 



    மெமரியை பொருத்த வரை 1000 ஜிபி/ 512 ஜிபி PCIe SSD மற்றும் 512 ஜிபி/ 256 ஜிபி SATA3 SSD-யுடன் வழங்கப்படுகிறது. லேப்டாப்பில் ஃபுல்-சைஸ் பேக்லிட் கீபோர்டு மற்றும் 1.5மில்லிமீட்டர் கீ டிராவல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரெசிஷன் டச்பேடில் விண்டோஸ் ஹெல்லோ சப்போர்ட் கொண்ட கைரேகை சென்சார் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    ஆடியோவை எதிர்பார்ப்போருக்கு சென்புக் ப்ரோ 15 மாடலில் சோனிக்மாஸ்டர் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம், மைக்ரோபோன் மற்றும் கார்டனா குரல் அங்கீகார வசதி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹார்மன் கார்டன் பிரான்டிங் கொண்டுள்ளது. இ்துடன் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள விஜிஏ வெப்கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்-ஐ சக்தியூட்ட 71Whr 8-செல் லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. 

    கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை அசுஸ் சென்புக் ப்ரோ 15 மாடலில் இரண்டு யுஎஸ்பி டைப் சி 3.1 ஜென் 2 (தன்டர்போல்ட்) போர்ட்கள், இரண்டு யுஎஸ்பி டைப் ஏ 3.1 ஜென் 2 போர்ட்கள், ஒரு ஹெச்டிஎம்ஐ, ஒரு காம்போ ஆடியோ ஜாக், ஒரு மைக்ரோ கார்டு ரீடர் உள்ளிட்டவையும் டூயல் பேன்ட் வைபை, ப்ளூடூத் 5.0 வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
    ஹெச்பி நிறுவனத்தின் எலைட்புக் 700 G5, ப்ரோபுக் 645 G4 லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    ஹெச்பி நிறுவனத்தின் எலைட்புக் 700 G5 மற்றும் ப்ரோபுக் 645 G4 லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய லேப்டாப்களில் AMD ரைசன் ப்ரோ மொபைல் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன.

    வியாபாரம் மற்றும் அலுவல் ரீதியிலான பணிகளுக்கு என உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய லேப்டாப்களில் தன்டர்போல்ட் டாக் G2 வசதி கொண்டுள்ளது.

    ஹெச்பி எலைட்புக் 700 சீரிஸ் எலைட்புக் 735 G5, எலைட்புக் 745 G5, எலைட்புக் 755 G5 என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 13.3 இன்ச் 1366x768, 14 இன்ச் 1920x1080 மற்றும் 15.6 2560x1440 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இவை 2.0 ஜிகாஹெர்ட்ஸ் AMD ரைசன் 7 ப்ரோ 2700U, ரேடியான் வீகா 10 GPU, 2 எம்பி L2 கேச்சி + 4எம்பி L3 கொண்டுள்ளது. 



    விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய லேப்டாப்களில் 802.11ac + ப்ளூடூத் வயர்லெஸ் மாட்யூல் மற்றும் 4ஜி எல்ட்இ மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இதன் TB3 போர்ட் ஹெப் சமீபத்தில் அறிமுகம் செய்த தன்டர்போல்ட் 3 சப்போர்ட் கொண்டுள்ளது. இத்துடன் பேங் மற்றும் லுஃப்சென் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் ஹெச்டிஎம்ஐ போர்ட், 720 பிக்சல் வெப்கேம், ஆடியோவிற்கு TRRS கனெக்டர், ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் கொண்டுள்ளது. இதேபோன்று ஹெச்பி ப்ரோபுக் 645 G4 லேப்டாப் மாடைலில் மிலிட்டரி ஸ்டேன்டர்டு டெஸ்டிங்-ஐ விரைவில் பூர்த்தி செய்ய இருக்கிறது.

    700 சீரிஸ் போன்றே இந்த லேப்டாப் மாடலிலும் AMD ரைசன் 7 ப்ரோ பிராசஸர், 15.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. விண்டோஸ் 10 மற்றும் கார்டனா வசதி கொண்டுள்ளது. ஹெச்பி ப்ரோபுக் 645 G4 மாடலின் விற்பனை விரைவில் துவங்கும் என்றும் இதன் விலை 759 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.51,114), ஹெச்பி எலைட்புக் 700 சீரிஸ் விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.67,277) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×