என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 97291
நீங்கள் தேடியது "slug 97291"
சென்னை நகரில் குற்றங்கள் நடைபெறும் இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலைகளில் பணிபுரியும் போலீசாருக்கு உதவும் வகையில் நடமாடும் டிரோன் காவல் பிரிவு செயல்படுத்தப்படுகிறது.
சென்னை:
சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கையின்போது சென்னையில் கண்காணிப்பு பணிக்காக நடமாடும் டிரோன் காவல் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சென்னை பெருநகரில் கூட்டமான இடங்களையும், நீண்ட தூர சாலைகளையும் கண்காணிப்பதற்காக ரூ. 3.60 கோடி செலவில் நடமாடும் டிரோன் காவல் அலகு ஏற்படுத்துவதற்கு நிர்வாக அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை நகரில் குற்றங்கள் நடைபெறும் இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலைகளில் பணிபுரியும் போலீசாருக்கு உதவும் வகையிலும், பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையிலும் நடமாடும் டிரோன் காவல் பிரிவு செயல்படுத்தப்படுகிறது.
இதில் 3 வகையான நடமாடும் டிரோன் போலீஸ் யூனிட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடு அறையுடன் செயல்படும் இந்த யூனிட்டுகள் 40 அடி அகலம், 10 அடி உயரத்தில் இருக்கும். அங்கிருந்தபடி டிரோன்களை பறக்கவிட்டு கண்காணிக்கப்படும். ஒவ்வொரு யூனிட்டிலும் 9 டிரோன்கள் இருக்கும்.
மெரினா கடற்கரை, பாண்டி பஜார் போன்ற இடங்களில் நடமாடும் டிரோன் காவல் பிரிவு செயல்படும்.

டிரோன் வந்து கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ததைக் கண்டு ஆரம்ப சுகாதாரத்தில் பணியில் இருந்த டாக்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொரோனா வைரஸ் தடுப்பூசி சென்றடைந்து வருகிறது.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள ஹரக்காட்டே என்ற கிராமத்துக்கு சந்தப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 50 கொரோனா தடுப்பூசி குப்பிகளை சிரிஞ்சுகளுடன் தி ஆக்டாகாப்டர் என்ற டிரோன் (ஆளில்லா சிறிய ரக விமானம்) எடுத்துச் சென்று நேற்று காலை 9.53 மணிக்கு ஒப்படைத்தது.
அதன்பின்னர் அந்த டிரோன், சந்தப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திரும்பியது.
சாலை வழியாக சென்றால் 40 நிமிடத்தில் சென்று அடையக்கூடிய தொலைவை இந்த டிரோன் 10 நிமிடத்தில் சென்று அடைந்துள்ளது.
டிரோன் வந்து கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ததைக் கண்டு ஆரம்ப சுகாதாரத்தில் பணியில் இருந்த டாக்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரி டாக்டர் மணிஷா தெரிவித்துள்ளார்.
இந்த வினியோகத்தை செய்துள்ள டிரோன், இதற்காகவே வடிவமைக்கப்பட்டு தேசிய விண்வெளி ஆய்வுக்கூடத்தால் இயக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் நிறுவனம் மொபைல் இண்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த சிறிய ரக டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook
இண்டர்நெட் இணைப்பு சீரற்று இருக்கும் பகுதிகளில் இணைய வேகத்தை அதிகப்படுத்த ஃபேஸ்புக் சிறிய ரக டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிரோன்கள் ஹை-டென்சிட்டி சாலிட் ஸ்டேட் டிரைவ்களை கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் டிரோன்கள் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. கேடலினா என்ற குறியீட்டு பெயரில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்றும், இது ஒரு ஆண்டுக்கு முன்பே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் சிறிய டிரோன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு செல்லுலார் சேவைகளில் கவனம் செலுத்தியதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2017 இல் நடைபெற்ற ஃபேஸ்புக் டெவலப்பர் நிகழ்வில் அறிவிக்கப்பட்டு பின் சில மாதங்களிலேயே இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
ஆபத்து மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதிகளில் ஹெலிகாப்டர்களில் தொலைதொடர்பு சாதனங்களை வைத்து வானில் சில நூறு மீட்டர்கள் உயரத்தில் இருந்து இணைய வசதியை வழங்க ஃபேஸ்புக் திட்டமிட்டிருந்தது. 2018 ஜூன் மாதத்தில் ஃபேஸ்புக் அக்யுலா டிரோன் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.
அக்யுலா திட்டத்தின் நோக்கம் உலக மக்களுக்கு இணைய வசதியை அறிமுகம் செய்து அவர்களுக்கு அனைத்து வித வாய்ப்புகளை வழங்குவது தான் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்தார். இதற்கென ஃபேஸ்புக் ஹை ஆல்டி-டியூட் பிளாட்ஃபார்ம் ஸ்டேஷன் சிஸ்டத்தை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது.
சாம்சங் நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் அந்நிறுவனம் மடிக்கக்கூடிய டிரோன் ஒன்றை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. #Samsung #drones
சாம்சங் நிறுவனம் சிறிய ரக ஆளில்லா பறக்கும் ஊர்திகளை (டிரோன்) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தென்கொரிய நிறுவனம் மடிக்கக்கூடிய டிரோன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும், இதில் கேமரா, கைரோஸ்கோப், அக்செல்லோமீட்டர் மற்றும் பாரோமீட்டர் போன்றவை இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த டிரோன் பெருமளவு உற்பத்திக்கு எப்போது தயாராகும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய வகையில் புதிய டிரோன் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த டிரோனின் இறக்கையை மடிக்கவும், நீட்டிக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
புகைப்படம் நன்றி: USPTO | Samsung
இந்த டிரோன் இரண்டு பிரிவுகளை கொண்டிருக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் போது டிரோன் பறக்க தயாராகி விடும். இந்த ஆண்டு மட்டும் டிரோன் தயாரிப்பது பற்றி சாம்சங் பதிவு செய்துள்ள ஐந்தாவது காப்புரிமை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாம்சங் டிரோனின் ஒரு பகுதியில் வயர்லெஸ் தகவல் பரிமாற்றம் செய்யும் சர்கியூட், மற்றொரு பகுதியில் வெளிப்புற கண்ட்ரோலர், நேவிகேஷன் சர்கியூட் போன்ற பாகங்கள் பொருத்தப்படுவதாக சாம்சங் காப்புரிமைகளில் தெரிகிறது.
மேலும் இந்த டிரோன் வழக்கமான டிரோன்களை போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் இதனை ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது கணினி உள்ளிட்டவற்றை கொண்டு இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. கூடுதலாக சாம்சங் டிரோன் கொண்டு மற்ற மின்சாதனங்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.
×

X