search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யமஹா"

    யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆர்15எஸ் வி3 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.


    யமஹா நிறுவனத்தின் வை.இசட்.எப். ஆர்15எஸ் வி3 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிள் யுனிபாடி சீட் கொண்டிருக்கிறது. புதிய மாடல் யமஹா ஆர்15 வி4 மோட்டார்சைக்கிளுடன் சேர்ந்து நாட்டின் முன்னணி விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    இந்தியாவில் புதிய யமஹா ஆர்15எஸ் வி3 யுனிபாடி சீட் கொண்ட மாடல் விலை ரூ. 1,57,600 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ரேசிங் புளூ நிறத்தில் கிடைக்கிறது. ஆர்15எஸ் வி3 மாடலில் 155சிசி, 4 ஸ்டிரோக், லிக்விட் கூல்டு, 4 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     யமஹா ஆர்15எஸ் வி3

    இந்த என்ஜின் 18.6 பி.எஸ். திறன், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் மல்டி-பன்ஷன் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், சைடு ஸ்டாண்டு என்ஜின் கட்-ஆப் போன்ற அம்சங்கள் உள்ளன.
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #YamahaMT15



    இந்தியாவில் யமஹா எம்.டி. 15 அறிமுகம். இதன் துவக்க விலை ரூ.1.36 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக இது இருந்தது. விரைவில் இதன் விநியோகம் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    யமஹா எம்.டி.15 வடிவமைப்பு வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதன் ஹெட்லேம்ப் கிளஸ்டரில் டூயல் எல்.இ.டி. செட்டப் மற்றும் இரண்டு எல்.இ.டி. யூனிட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் யமஹா எம்.டி. 15 சர்வதேச சந்தையில் கிடைக்கும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் ஃபியூயல் டென்க் சற்று பெரியதாக காட்சியளிக்கிறது. இத்துடன் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்விங்ஆம் வழங்கப்பட்டிருக்கிறது. யமஹா ஆர்15 வெர்ஷன் 3 மாடலில் அலுமினியம் ஸ்விங்ஆம் வழங்கப்பட்டிருக்கிறது.



    யமஹா எம்.டி. 15 மாடலில் பிரெஸ்டு ஸ்டீல் ஸ்விங்ஆம் வழங்கப்பட்டிருப்பதால், பைக்கின் விலையை குறைக்கிறது. யமஹா எம்.டி. 15 மாடலில் லிக்விட்-கூல்டு, 155சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வேரியபிள் வால் டைமிங்குடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதே என்ஜின் யமஹா ஆர்15 மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்த என்ஜின் 19.3 பி.ஹெச்.பி. பவர், 14.7 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் உடன் வருகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் இ.சி.யு. மேப்பிங் மாற்றப்பட்டிருக்கிறது. ஆர்15 மாடலில் 48டி ஸ்பிராகெட் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், எம்.டி. 15 மாடலில் 52டி பின்புற ஸ்பிராகெட் வழங்கப்பட்டுள்ளது.
    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் ஃபேசினோ டார்க் நைட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. #FascinoDarkKnightEdition



    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஃபேசினோ டார்க் நைட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டார்க் நைட் எடிஷன் மோட்டார்சைக்கிள் விலை ரூ.56,793 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய மொபெட் வாகனம் புதிய நிறம் மற்றும் மரூன் நிற சீட் கொண்டிருக்கிறது. புதிய நிறம் தவிர ஃபேசினோ டார்க் நைட் எடிஷனில் யுனிஃபைடு பிரேக்கிங் சிஸ்டம் (யு.பி.எஸ்.) வழங்கப்பட்டுள்ளது. இது ஹோன்டாவின் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் போன்று இயங்கும். இவைதவிர புதிய ஸ்கூட்டரில் எவ்வித அம்சங்களும் மாற்றப்படவில்லை.



    இந்த ஆண்டு மட்டும் யமஹா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட YZF-R15 வெர்ஷன் 3, புதிய FZ FI, FZS FI, FZ 25, ஃபேசர் 25 மற்றும் இதர ஸ்கூட்டர்களில் யு.பி.எஸ். வசதியை வழங்கியது. இத்துடன் இந்த வாகனங்களில் பல்வேறு புதிய நிறங்களும் கொண்டிருந்தன.

    யமஹா ஃபேசினோ டார்க் நைட் எடிஷனில் தொடர்ந்து 113 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 8.1 என்.எம். டார்க், சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரிக் மற்றும் கிக் ஸ்டார்ட் வசதி வழங்கப்பட்டுள்ளன.
    யமஹா நிறுவனத்தின் எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #YamahaMT15 #Motorcycle
     


    மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் யமஹா நிறுவனம் எம்.டி.15 என்ற பெயரில் புதிய மோட்டார் சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றது என்பதற்கான மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் சி.எம்.வி.ஆர். அனுமதி சான்று பெறப்பட்டுள்ளது.

    அந்த அனுமதி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்த மோட்டார்சைக்கிள் 155சி.சி. திறன் கொண்டிருக்கும் என தெரிய வந்துள்ளது. ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொண்டதாகவும், இது 19.3 ஹெச்.பி. திறனை 10,000 ஆர்.பி.எம்., 14.7 என்.எம். டார்க் இழுதிறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்ரும் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் வரும் என தெரிகிறது.

    விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் யமஹா எம்.டி. 15 மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு தயாராகி விட்ட நிலையில் காட்சியளிக்கிறது.


    புகைப்படம் நன்றி: Auto Today

    புதிய யமஹா எம்.டி. 15 மோட்டார்சைக்கிளில் ஃபுல்-எல்.இ.டி. ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் அறிமுகமானதும் 150-160 சிசி பிரிவில் அதிக செயல்திறன் வழங்கும் மோட்டார்சைக்கிளாக யமஹா எம்.டி. 15 இருக்கும் என தெரிகிறது.

    தாய்லாந்தில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய இதே மாடல் மோட்டார்சைக்கிளை விட இந்தியாவில் அறிமுகமாகும் மாடலின் நீளம் அதிகமாகும். இருந்தாலும் மாடல்களிலும் ஒரே அளவிலான சக்கரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளின் எடை 138 கிலோ இருக்கும் என்று தெரிகிறது.

    சர்வதேச சந்தையில் கிடைக்கும் இந்த மாடல் மோட்டார்சைக்கிளைக் விட இந்திய மாடல்களில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் வழக்கமான டெலஸ்கோப்பிக் ஃபோர்க் உள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமாக உள்ளது.
    யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த YZF R15 V3.0 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் புதிய மஞ்சள் நிற வெர்ஷனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. #YamahaYZFR15 #Motorcycle



    இந்தியாவில் இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின் அறிமுகமாகும் வாகனங்கள் அனைத்தும் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) எனப்படும் வசதியுடன் தயாரிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. 

    இதன் எதிரொலியாக யமஹா நிறுவனம் தனது பிரபலமான ஆர்.15 மோட்டார்சைக்கிளில் இத்தகைய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் விலை இந்தியாவில் ரூ. 1.39 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய மோட்டார்சைக்கிள் மஞ்சள் நிற எடிஷனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    முன்னதாக யமஹா ஆர்15 ஏ.பி.எஸ். வெர்ஷன் புதிய டார்க்நைட் நிறசத்தில் மேட் பினிஷ் செய்யப்பட்டிருந்தது. இந்த வசதி FZ, , சல்யூடோ RS, யமஹா ரே ZR ஆகிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய யமஹா ஆர்15 மோட்டார்சைக்கிள் 155 சி.சி. திறன் கொண்டது. 4-வால்வ் லிக்விட் கூல்டு ஃபியூயல் இன்ஜெக்ஷன் தன்மை கொண்டது. 19.3 பி.ஹெச்.பி. திறன் 10 ஆயிரம் ஆர்.பி.எம். 15 என்.எம். டார்க் செயல்திறன் வெளிப்படுத்தக் கூடியது. இதில் 6 கியர்கள் உள்ளன. இத்துடன் ஸ்லிப் கிளட்ச் வசதியும் கொண்டது.

    இது முழுவதும் டிஜிட்டல் செயல்பாடுகளைக் கொண்டது. இதில் எல்.இ.டி. முகப்பு விளக்கு, பின்புற விளக்குகள் உள்ளன. புதுப்பொலிவோடு கூடுதல் பாதுகாப்பு அம்சமான ஏ.பி.எஸ். வசதி வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    யமஹா நிறுவனத்தின் 2019 FZ Fi v3 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது. #Yamaha #Motorcycle



    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட யமஹா நிறுவனத்தின் 2019 FZ Fi v3 மோட்டார்சைக்கிள் அறிமுகமானது. புதிய FZ Fi v3 விலை ரூ.95,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யமஹா FZ-S Fi மோட்டார்சைக்கிள் விலை ரூ.97,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இரு மோட்டார்சைக்கிள்களிலும் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 149சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 4-ஸ்டிரோக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின்களில் புதிதாக சப்-ஃபிரேம், புதிய என்ஜின் செட்டிங்கள், சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ்., பின்புறம் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.



    2019 மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. ஹெட்லைட் தனியாக வழங்கப்பட்டுள்ளது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடல்களை விட அதிக வெளிச்சத்தை வழங்குகிறது. மேலும் ஃபியூயல் டேன்க் முந்தைய மாடலை விட பெரியதாக இருக்கிறது. இவற்றுடன் ஒற்றை சீட், புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் எக்சாஸ்ட் கேன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    முந்தைய மாடலை விட சிறப்பான கண்ட்ரோல் வழங்கும் நோக்கில் பின்புறம் புதிதாக சப்-ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஹேன்டிள்-பார் சற்றே உயர்த்தப்பட்டு இருப்பதால், நீண்ட தூர பயணங்களை இலகுவாக மேற்கொள்ளலாம். 

    யமஹா 2019 FZ Fi v3 மோட்டார்சைக்கிளில் வழங்கியிருக்கும் 149சிசி என்ஜின் இம்முறை 13.2 பி.எஸ். பவர் @8000 ஆர்.பி.எம் மற்றும் 12.8 என்.எம். டார்க் @6000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
    யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் FZ16 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது. #YAMAHA #motorcycle
    2019 ஆண்டில் யமஹா நிறுவனத்தின் முதல் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. அந்த வகையில் யமஹா நிறுவனம் தனது FZS-FI மாடலான FZ16 மோட்டார்சைக்கிளை ஜனவரி 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    யமஹா FZ16 வடிவமைப்பு FZ25 மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. புதிய FZ16 மோட்டார்சைக்கிளின் டேன்க் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இத்துடன் புதிய ஹெட்லேம்ப் கிளஸ்டர் ஒன்றும் வழங்கப்படுகிறது. தற்போதைய FZs மாடல்களில் ஹாலோஜன் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில்,FZ16 மாடலில் எல்.இ.டி. லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதுதவிர மோட்டார்சைக்கிளின் பின்புறம் சிறியதாக்கப்பட்டு, முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட டையர் ஹக்கர் வழங்கப்பட்டுள்ளது. எனினும், மோட்டார்சைக்கிளின் டெயில் லைட்கள் மற்றும் இன்டிகேட்டர்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    யமஹா FZ16 மாடலில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. தற்போதைய FZs மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜின் 13 பி.ஹெச்.பி. பவர், 12.8 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனால் புதிய மோட்டார்சைக்கிள் அதிக செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.

    தற்போதைய மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் யமஹா FZ16 மோட்டார்சைக்கிளில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படும்.

    யமஹா நிறுவனம் சமீபத்தில் தனது YZF-R15 V3.0 மோட்டார்சைக்கிளில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதியை வழங்கியது. புதிய யமஹா R15 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் டார்க்நைட் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய யமஹா R15 ஏ.பி.எஸ். மாடல் விலை ரூ.1.39 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  #YAMAHA #motorcycle
    யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சல்யூடோ ஆர்.எக்ஸ். மற்றும் சல்யூடோ 125 என இரண்டு புது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. #YAMAHA #motorcycles



    யமஹா நிறுவனம் புதிய சல்யூடோ ரக மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. யு.பி.எஸ். வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டார்சைக்கிள் மாடல்களின் துவக்க விலை ரூ.52,500 என நிர்ணயம் செய்யப்பட்டு டிஸ்க் பிரேக் வேரியன்ட் விலை ரூ.60,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    யூனிஃபைடு பிரேக்கிங் சிஸ்டம் (யு.பி.எஸ்.) யமஹாவின் காம்பி பிரேக் சிஸ்டம் ஆகும். காம்பி-பிரேக்கிங் சிஸ்டம்கள் பயனர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசு பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



    ஏப்ரல் 1, 2019 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125சிசி மற்றும் அதற்கும் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களில் காம்பி-பிரேக் சிஸ்டம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமலாகிறது. அந்த வகையில் 125சிசிக்கும் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட வேண்டும்.

    யமஹா சல்யூடோ ஆர்.எக்ஸ். யு.பி.எஸ். மாடலில் ஏர்-கூல்டு, 110 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 7.5 பி.ஹெச்.பி. பவர், 8.5 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. யமஹா சல்யூடோ 125 யு.பி.எஸ். மாடலில் ஏர்-கூல்டு, 125சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.3 பி.ஹெச்.பி. பவர், 10.1 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. 

    இந்தியாவில் யமஹா சல்யூடோ ஆர்.எக்ஸ். யு.பி.எஸ். மாடல் டி.வி.எஸ். ரேடியான், ஹோன்டா சி.டி. 110 டிசீம் டி.எக்ஸ், பஜாஜ் பிளாட்டினா 100 இ.எஸ். உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
    இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் பேட்டரி பேக் மாடல்களை உருவாக்கும் பணிகளில் யமஹா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. #Yamaha #battery



    மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானிய நிறுவனமான யஹமா, இந்தியாவிற்காக பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்க உள்ளது. ஜப்பானில் உள்ள யமஹா மோட்டார் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு இதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் இது மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளுமே மாற்று எரிபொருளில் இயங்கும் வாகன போக்குவரத்திற்கு மாறி வருகின்றன.

    அதில் குறிப்பாக பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மத்திய அரசும் ‘பேம்’ எனும் திட்டத்தின் மூலம் பேட்டரி வாகனங்களுக்கு மானியம் அளிப்பதோடு பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.



    இந்தியா மற்றும் ஜப்பான் தவிர பிற நாடுகளில் உள்ள 100 யமஹா நிறுவன பொறியாளர்கள் பேட்டரி வாகன உருவாக்கத்திற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பேட்டரி வாகனங்களுக்கான உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் சிலவற்றை யமஹமா நிறுவனப் பொறியாளர்கள் அடையாளம் கண்டு தங்களுக்குத் தேவையான வகையில் வடிவமைத்துத் தருவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

    சில மாதங்களுக்கு முன்புதான் யமஹா நிறுவனம் பேட்டரி வாகனம் குறித்து இந்தியர்களிடையே கருத்து கேட்டது. இதன் அடிப்படையில் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையிலான பேட்டரி மோட்டார் சைக்கிளை உருவாக்க யமஹா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இந்தியாவிற்கு என தயாரிக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிளை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது. சுற்றுச் சூழலை காக்கும் வகையிலான ‘பேட்டரி பைக்’குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.
    யமஹா மியூசிக் நிறுவனத்தின் இசைக் கருவிகள் விரைவில் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. #YAMAHA



    இசைக் கருவிகளை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் யமஹா மியூசிக் அகௌஸ்டிக் கிட்டார்கள் மற்றும் போர்டபிள் கீபோர்டுகளை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்ய இருக்கிறது. அந்த வகையில் ஆண்டு முழுக்க நடைபெறும் உற்பத்தியில் இருந்து சுமார் 20-30 சதவிகித கருவிகளை ஏற்றுமதி செய்ய யமஹா மியூசிக் திட்டமிட்டுள்ளது.

    வரும் ஆண்டுகளில் யமஹா மியூசிக் இந்தியா நிறுவனம் 4,00,000 அகௌஸ்டிக் கிட்டார்கள், 3,00,000 போர்டபிள் கீபோர்டு உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய இருக்கிறது.

    யமஹா மியூசிக் இந்தியா மொத்தம் 72 கோடி சிங்கப்பூர் டாலர்கள் முதலீட்டில் கட்டமைக்கும் தயாரிப்பு ஆலையில் 4,00,000 அகௌஸ்டிக் கிட்டார்கள் மற்றும் 3,00,000 போர்டபிள் கீபோர்டுகளை உற்பத்தி செய்யப்பட இருப்பதாக யமஹா மியூசிக் இந்தியா நிர்வாக இயக்குனர் தகாஷி ஹாகா தெரிவித்தார். 

    சென்னையில் உருவாக இருக்கும் உற்பத்தி ஆலையில் முதற்கட்டமாக 38 கோடி சிங்கப்பூர் டாலர்களை யமஹா மியூசிக் இந்தியா முதலீடு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதற்கட்ட கட்டுமான பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது. இதன் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் துவங்க இருக்கிறது.

    தமிழ் நாட்டில் உற்பத்தியாக இருக்கும் இசைக்கருவிகள் இந்திய வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் முதல் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் கருவிகளில் 20-30 சதவிகிதம் மட்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
    யமஹா நிறுவனத்தின் ஆர்25 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. #YAMAHA


    யமஹா நிறுவனத்தின் ஆர்25 மோட்டார்சைக்கிள் நவம்பர் மாதத்தில் அறிமுKம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 2018 இந்தோனேசியா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், யமஹா ஆர்3 மோட்டார்சைக்கிளின் டீசரும் நவம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என தெரிகிறது.

    புதிய ஆர்25 மற்றும் ஆர்3 மாடல்களில் மேம்படுத்தப்பட்ட முன்பக்கம், மெல்லிய எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படலாம். இத்துடன் முன்பக்கம் தற்போதைய மாடலை விட கூர்மையாகவும், அதிரடியாகவும் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆர்3 மோட்டார்சைக்கிள் ஆர்15 மாடலை போன்று அதிக ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை யமஹா ஆர்25 மற்றும் ஆர்3 மாடலில் அப்சைடு-டவுன் ஃபோர்க் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் இந்தியாவில் ஆர்3 மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கி விலையை முடிந்தவரை குறைவாக நி்ர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    யமஹா ஆர்25 மாடலில் 249சிசி லிக்விட்-கூல்டு, பேரலெல் ட்வின் இன்ஜின் வழங்கப்படலாம் என்றும் இந்த இன்ஜின் 35 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 22.6 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. ஆர்3 மாடலில் 321சிசி லிக்விட்-கூல்டு, பேரலெல் ட்வின் இன்ஜின் வழங்கும் என்றும் இந்த இன்ஜின் 41.4 பி.ஹெச்.பி. பவர், 29.6 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும்.

    யமஹா ஆர்25 மற்றும் ஆர்3 மாடலில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்றும் இவற்றில் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் வேரியபில் வால்வ் அக்டுயேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. மற்ற அம்சங்கள் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    யமஹா நிறுவனம் இந்தியாவில் ஆர்15 வெர்ஷன் 2.0 மாடலை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்த மோட்டார்சைக்கிள் அந்நிறுவன வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. #YAMAHA


    யமஹா நிறுவனத்தின் ஆர்15 வெர்ஷன் 2.0 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் இருந்து திரும்ப பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்15 வெர்ஷன் 2.0 யமஹா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

    யமஹா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஆர்15 வெர்ஷன் 3 விற்பனை அதிகரிக்கும் நிலையில், பழைய மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. யமஹா ஆர்15 மோட்டார்சைக்கிள் என்ட்ரி லெவல் பெர்ஃபார்மன்ஸ் பிரிவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

    ஆர்15 மாடலின் முதல் தலைமுறை மாடல் மற்றும் யமஹா மோட்டோ ஜிபி மாடலை தழுவி உருவாக்கப்பட்டது. யமஹா YZF-R15 V3.0 மாடலில் 155சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.03 பி.ஹெச்.பி. பவர், 15 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் இடம்பெற்றிருப்பதால் கியர் டவுன்ஷிஃப்ட் செய்யும் போது மென்மையாக இருக்கும். 

    இத்துடன் செயல்திறனை மேம்படுத்தும் VVA சிஸ்டம் எனும் அம்சத்தை யமஹா அறிமுகம் செய்திருக்கிறது. புதிய யமஹா YZF-R15 V3.0 வடிவமைப்பு அதன் முந்தைய YZF-R1  மற்றும் YZF-R6 மாடல்களை தழுவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேம்படுத்தப்பட்ட காற்றோட்டத்துடன் கூடிய முன்பக்க ஃபேரிங் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. 

    இதன் டெயில் பகுதியில் புதிய வடிவமைப்புடன் கூடிய டெயில் லைட் மற்றும் டையர் ஹக்கர் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய யமஹா YZF-R15 V3.0 மாடலில் முற்றிலும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், 18 பாராமீட்டர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 
    ×