search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97412"

    • தொண்டி திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • நந்திக்கு பால், பழம், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, அரிசிமாவு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்பு ஈஸ்வரர் கோவிலில் உள்ள நந்திக்கு பால், பழம், பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, அரிசிமாவு, தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து உற்சவமூர்த்தி வீதி உலா நடந்தது.

    பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி ஆகியோர் செய்திருந்தனர். இதே போல் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் கோவில், ஓரியூர் சேயுமானவர் கோவில், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேஸ்வரர் கோவில், தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    • செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகி நிம்மதியாய் வாழ்வீர்கள்.
    • எந்தக் கிழமையில் பிரதோஷம் வரும் போது, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

    மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவபெருமானை வேண்டுவதும் ருத்ரம் உள்ளிட்டவற்றைப் பாராயணம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். அந்த நாளில்,நம்மால் முடிந்த அளவு, பத்துபேருக்கேனும் தயிர்சாதம் வழங்கினால், நமக்கும் நம் குடும்பத்தாரும் நம் சுற்றத்தாருக்கும் பல நல்லதுகளை, சத்விஷயங்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

    இந்த பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும். ஒவ்வொரு கிழமைகளில் பிரதோஷம் வரும். எந்தக் கிழமையில் பிரதோஷம் வரும் போது, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

    ஞாயிறு பிரதோஷம்:

    சூரிய திசை நடப்பவர்கள், ஞாயிறு அன்று வரும் பிரதோஷ நாளில் சிவபெருமானை நினைத்து பிரார்த்தனை செய்தால், சூரிய பகவானின் அருளும் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!

    திங்கள் பிரதோஷம்:

    பிரதோஷத்தில் ஸோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், திங்கள் அன்று வரும் பிரதோஷத்திற்கு சிவ வழிபாடு செய்வது சிறப்பு! இதனால், மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

    செவ்வாய் பிரதோஷம்:

    செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்தன்று சிவநாமம் சொல்லியும் சிவ துதி சொல்லியும் பாராயணம் செய்து வணங்கினால், ருணம் மற்றும் ரணத்தையெல்லாம் நீக்கியருள்வார் சிவபெருமான். இதனால், செவ்வாயால் வரும் கெடுதல்கள் அனைத்தும் நீங்கும்.பித்ரு தோஷம் விலகும். முன்னோர் ஆசி கிடைக்கும்.

    கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது சத்தியம்!

    புதன் பிரதோஷம்:

    புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோஷதன்று, சிவபூஜை செய்வது மகா புண்ணியம். . இதனால், புதனால் வரும் கெடு பலன்கள் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கலைகளில் சிறந்து திகழ்வார்கள்.

    வியாழன் பிரதோஷம்:

    குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், வியாழன் அன்று வரும் பிரதோஷத்திற்குச் சென்று, குருவுக்கு நிகரான சிவனாரை வணங்கவேண்டும். இதனால், கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். குரு பலம் கூடும்!

    வெள்ளி பிரதோஷம்:

    சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோஷத்தன்று, வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து, பாயசம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, வேண்டிக்கொண்டால், உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம்!

    சனி மஹா பிரதோஷம்:

    சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று தென்னாடுடைய சிவனை மனதார வேண்டிக்கொண்டு, தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, பத்துபேருக்கேனும் வழங்கினால், மகா புண்ணியம்.

    ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    இந்தநாளில், சிவனாரை நினைத்து பூஜித்து விளக்கேற்றுங்கள். பத்துபேருக்காவது தயிர்சாதம் வழங்குங்கள். எந்த தீயசக்திகளும் அண்டாது காப்பார் ஈசன். செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகி நிம்மதியாய் வாழ்வீர்கள்!

    • மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
    • இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 5-ந் தேதி சித்திரை மாத பவுர்ணமி, 3-ந் தேதி பிரதோஷம் என்பதால் வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற நாளை (புதன்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயதுக்கு உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.

    மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    இரவில் மலைக் கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இந்த மாதம் சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

    • சோழவந்தானில் பிரதோஷ விழா நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. விழாவையொட்டி சனீஸ்வரன் லிங்கம் நந்திகேசுவரர் சிவனுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர்.

    விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் சுவாமியுடன் கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடந்தன. தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர்- எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். குழும தாளாளர்-சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருது பாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் கோவிலிலும், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ விழா நடந்தது.

    • சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாரா தனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம்விக்ரம சோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி ,உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொ ண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷ த்தையொட்டி சிவபெருமா னுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம்,தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாரா தனைகள் நடைபெற்றது.

    பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாஏற்பாடுகளை கோவில்நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • திரளானோர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் உள்ள ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில் சித்திரை சோம வார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    கொடி மரம் முன்உள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதேபோல் இக்கோவில் பின்புறம் உள்ள சிருங்கேரி சங்கரமடம், குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் மற்றும் காசி நந்திக்கு சிறப்பு அபிஷேக பூஜை, கங்கை தீர்த்தம் அபிஷேகம் நடைபெற்றது.

    இடைக்காட்டூர் மணி கண்டஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி கோவி லிலும் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடத்தி வழிபட்ட பக்தர்கள்
    • சுமார் 50 அடி தூரம் கடல் “திடீர்” என்று உள் வாங்கி காணப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களில் கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் நிறம் மாறுவது, அலையே இல்லாமல் குளம்போல் காட்சியளிப்பது போன்ற இயற்கை மாற்றங்கள் திகழ்ந்து வருகின்றன. அந்த அடிப்படையில் நாளை சர்வ மகாளய அமாவாசை என்பதால் கன்னியாகுமரி கடலில் நேற்று மாலையில் இருந்து கடலில் "திடீர்"என்று மாற்றம் ஏற்பட்டது.

    அப்போது கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரம் கடல் "திடீர்" என்று உள் வாங்கி காணப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதில் பாறையில் இருந்த சுமார் 2 அடி உயரம் உள்ள சிவலிங்க சிலையும் வெளியே தெரிந்தது. இந்த செய்தி அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது.

    இதைத்தொடர்ந்து அந்த சிவலிங்க சிலையை பார்க்க கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கடலுக்குள் மூழ்கி இருந்த சிவலிங்க சிலைவெளியே தெரிந்ததை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதைப்பார்த்த பக்தர்கள் நேற்று பிரதோஷம் என்பதால் அந்த சிவலிங்க சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினார்கள். அந்த சிவலிங்க சிலைக்கு நல்லெண்ணெய், அரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, களபம், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, புனித நீர் மற்றும் கடல் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடத்தினார்கள்.

    அதன் பிறகு அந்த சிவலிங்க சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தி அலங்கார தீபாரதனை காட்டினார்கள். அப்போது கடற்கரையில் திரண்டிருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த சிவலிங்க சிலையை வணங்கிவழிபட்டனர். சிலர் கடலில்இருந்தஅந்த சிவலிங்க சிலையை தங்களது செல்போன்களில் படம் பிடித்து சென்றனர்

    பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம், ஆராதனை. சிறப்புயாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பல்லடம், ஏப்.4-

    சிவன் கோவில்களில் பிரதோ ஷ தினத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவதுவழக்கம். சிவபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோஷ நாளில் கோவி லுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும்என முன்னோர்கள் கூறுகின்றனர். அதன்படி பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம், ஆராதனை. சிறப்புயாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதே போல பல்லடம் அருகே உள்ள சித்த ம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடை பெற்றது. காமாட்சி புரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். அதே போல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம்தான்.
    • நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி நாளில் . பள்ளி கொண்டது துவாதசியில். உலகமெலாம் உய்வுறத் தாண்டவமாடியது திரயோதசி நாளில். அதுவும் அந்திசாயும் நேரத்தில். இந்தக் காலத்தைத்தான் பிரதோஷக்காலம் என்கிறோம்.

    பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

    சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம்தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாகவும், இந்நாளில் சிவனைத் தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும் என்பது ஐதிகம். 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    சோமவார பிரதோஷநாளில் இருக்கும் விரதம் பன்மடங்கு பலன்களைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    மாலை சிவன் கோயிலுக்குச் சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி, ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம்புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்

    அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.

    சிவபெருமானுக்கும், நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். கொண்டக்கடலை எலுமிச்சை சாதமோ தயிர்ச்சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குக் கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும். முன்னேற்றம் கிடைக்கும்.

    பிரதோஷ காலத்தில் காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்ப்பிப்பது மிகவும் சிறப்பானது. பிரதோஷ நாளான இன்று தவறாமல் விரதம் இருந்து ஈசனை வழிபட்டு வளம் பெறலாம்.

    • எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை.
    • இரவில் மலைக் கோவிலில் தங்க அனுமதி இல்லை.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 3-ந் தேதி பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி (5-ந் தேதி) வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை யேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இன்று (ஞாயிறு) பிரதோஷ தினமாகும்.
    • இந்த பிரதோஷ விரதம் மரணபயத்தை நீக்கும்.

    திதிகளில் 13-வது திதி திரயோதசி. இந்த திதி தினத்தை பிரதோஷ தினம் என்பார்கள். வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமும் வரும். பிரதோஷ நாட்களில் விரதம் இருந்து நந்தியையும் சிவனையும் வழிபட வேண்டும்.

    இன்று (ஞாயிறு) பிரதோஷ தினமாகும். இன்று பிரதோஷ விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்துக்கு மிருத்யுஞ்ஜய பிரதோஷ விரதம் என்று பெயர். இந்த பிரதோஷ விரதம் மரணபயத்தை நீக்கும். ஆயுளை நீட்டிக்கும்.

    இன்று காலை முதல் விரதமிருந்து மாலையில் சிவன் கோவிலுக்குச் சென்று வணங்குவதால் துன்பங்கள் நீங்கும். நோயால் அவதிப்படுபவர்கள் கோவிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும், மாலையில் பூஜை அறையில் ஒரு விளக்கேற்றி வைத்து, சிவபெருமானை எண்ணி மிருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதால் நோய்கள் அகலும்.

    கடன் தொல்லைகள் நீங்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றைய வழிபாடுகள் மூலம் சூரியனின் அருளையும் பெற முடியும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது.
    • இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 19-ந் தேதி பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை (21-ந் தேதி) வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 22-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்து உள்ளது.

    மேற்கண்ட அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×