search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரடங்கு"

    கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலையில், கோவில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது புதுச்சேரி அரசு.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் தற்போது மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், புதுச்சேரியில் கோவில் திருவிழாக்கள், மத விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நாள்தோறும் இரவு நேர ஊரடங்கு அமல் ( இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை)
     
    சமூக, பொழுதுபோக்கு தொடர்பாக மக்கள் கூடுவதற்கு தொடர்ந்து தடை  

    இரவு ஊரடங்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் கடற்கரை, பூங்காவை திறந்திருக்கலாம்.

    திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம்.

    இறுதி ஊர்வலங்களில்  20  பேர் வரை கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
    மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் பரவிய வன்முறை ஓய்ந்தபோதிலும், பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.
    ஷில்லாங்:

    மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங்கின் தேம் ஆவ் மாவ்லாங் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அரசு பேருந்து ஊழியர்களுக்கும் சில பெண் பயணிகளுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் 3 பேர் தாக்கப்பட்டனர். பின்னர் ஒரு கும்பல் தேம் ஆவ் மாவ்லாங் நோக்கி சென்றபோது மோதல் வெடித்தது. பின்னர் அது கலவரமாக மாறியது. ஷில்லாங் நகரத்தில் மாத்ரான், மாக்கர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது.

    பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீசார் மீது வன்முறைக் கும்பல் சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. கும்பலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். எனினும் அந்த கும்பல் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டது.

    சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததைத் தொடர்ந்து லும்டிங்ஜிரி காவல் நிலையம் மற்றும் கண்டோன்ட்மெண்ட் பீட் ஹவுஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி வந்தனர்.

    இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. பெட்ரோல், டீசல் போன்ற தீப்பற்றும் பொருட்களை கேன்கள் மற்றும் பாட்டில்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    தற்போது ஓரளவு பதற்றம் தணிந்து ஷில்லாங்கில் அமைதி திரும்பத் தொடங்கி உள்ளது. ஆனால், மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால், வன்முறை நடைபெற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மத்திய ஆயுதப்படை போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார். #ShillongViolence #ShillongCurfew
    ×