search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97567"

    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.


    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி மஹிந்திராவின் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 81,500 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. சலுகை பலன்கள் ஒவ்வொரு விற்பனை மையத்திற்கு ஏற்ப வேறுபடும். மஹிந்திரா தார், பொலிரோ நியோ மற்றும் எக்ஸ்.யு.வி.700 மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.

     மஹிந்திரா கார்

    கே.யு.வி.100 என்.எக்ஸ்.டி. மாடலுக்கு ரூ. 61,055, மஹிந்திரா ஸ்கார்பியோவிற்கு ரூ. 32,320, அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 81,500, எக்ஸ்.யு.வி.300 மாடலுக்கு ரூ. 49 ஆயிரம், மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 40,200, பொலிரோ மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மஹிந்திரா தனது புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் முன்பதிவில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்தது. இந்தியாவில் அறிமுகமான ஒரே மாதத்தில் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் முன்பதிவில் 70 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது.

    முன்னதாக மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலின் முதல் யூனிட் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சுனில் அன்டிலுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தற்போது மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி.700 பெட்ரோல் வேரியண்ட்களை மட்டும் வினியோகம் செய்து வருகிறது. இம்மாத இறுதியில் டீசல் வேரியண்ட்களின் வினியோகம் துவங்குகிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதிக்குள் நாடு முழுக்க 14 ஆயிரம் எக்ஸ்.யு.வி.700 யூனிட்களை வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 நான்கு வேரியண்ட்கள், இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை பொலேரோ கார் ஏர் பேக் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் உருவாகி வருகிறது.



    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான எஸ்.யு.வி. மாடல் பொலேரோ. மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகிய மாடலும் இதுவே. நகர் பகுதிகள் மட்டுமின்றி கிராமப்பகுதிகளிலும், நீண்ட தூர பயணம் மேற்கொள்வோரின் பிரதான தேர்வாக இருந்தது பொலேரோ. 

    பொலேரோ மாடலில் மஹிந்திரா தற்போது பல்வேறு மேம்பட்ட அம்சங்களை புகுத்தி வருகிறது. குறிப்பாக 2020-ம் ஆண்டு ஏப்ரலில் அமலுக்கு வர உள்ள பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப இதன் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர பாதுகாப்பு அம்சமாக டிரைவர் பக்கத்தில் ஏர் பேக் வசதி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ரியர் பார்க்கிங் சென்சார் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    டிரைவர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏர் பேக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் முந்தைய மாடல் ஸ்டீரிங் வீலை விட இதில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக டி.யு.வி. 300 மாடலில் உள்ள ஸ்டீரிங் வீல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீட் பெல்ட் மாட்டுவதை உணர்த்தும் கருவி, வேகக் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவையும் இதில் கூடுதலாக இடம்பெற்றுள்ள தனி அம்சங்களாகும். 



    பின்புற பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை வலியுறுத்தும் வகையில் பின் இருக்கை பயணிகளுக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படாதது போலிருந்தாலும் விபத்து சோதனையில் பக்கவாட்டு சோதனை அவசியம் என விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் இதன் வடிவமைப்பு மேலும் உறுதியாக்கப்பட்டுள்ளது.

    டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிறப்பான ஆடியோ சிஸ்டம், மஹிந்திரா நிறுவனத்தின் 1.5 லிட்டர் எம்.ஹாக். டி.70 டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. திறன் மற்றும் 195 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. சமீபகாலமாக பல்வேறு மாடல் எஸ்.யு.வி.க்கள் வந்துள்ளதால், சந்தையில் பொலேரோ விற்பனை சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. புதிய மாற்றங்களுடன் வரும் இந்த எஸ்.யு.வி. மீண்டும் தனது முன்னிலையைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மேம்பட்ட டி.யு.வி.300 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது டி.யு.வி.300 மாடல் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.8.38 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    மேம்பட்ட டி.யு.வி.300 காரில் புதிய கிரில் முன்பக்க அமைப்பு, ஸ்மோக்டு முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் விளக்கு (டி.ஆர்.எல்.), ஸ்கிட் பிளேட், துல்லியமாக தெரியும் பின்புற விளக்கு, எக்ஸ் வடிவிலான பின்புற ஸ்பேர் சக்கர கவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.



    இதில் ஏ.பி.எஸ். (ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்), ரியர் பார்க்கிங் சென்சார், முன்புறத்தில் 2 ஏர் பேக்குகள் ஆகியன இதன் கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. சீட் பெல்ட் எச்சரிக்கை, வேகக்கட்டுப்பாட்டு எச்சரிக்கை ஆகியன மேம்படுத்தப்பட்ட மாடலின் சிறப்பு அம்சமாகும். 

    புதிய காரிலும் 100 ஹெச்.பி. திறன், 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 5 கியர்களுடன் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கிறது. இதில் 5 மாடல்கள் உள்ளன. இதில் டாப்-எண்ட் பிரீமியம் மாடலின் விலை ரூ.10.17 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க இதுவரை சுமார் 26,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். #Mahindra



    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 கார் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்பதிவு துவங்கிய முதல் மாதத்திலேயே இந்த காரை வாங்க சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், காரை வாங்க இதுவரை சுமார் 26,000 பேர் முன்பதிவு செய்திருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.

    முன்பதிவு துவங்கிய இரண்டறை மாதங்களில் காரை வாங்க 26,000 பேர் முன்பதிவு செய்திருக்கின்றனர். இதுதவிர காரை முன்பதிவு செய்தவர்களில் 70 சதவிதகிதம் பேர் டாப்-எண்ட் மாடலையே முன்பதிவு செய்திருக்கின்றனர் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. எஸ்.யு.வி. காரின் ஒட்டுமொத்த விற்பனையில் பெட்ரோல் என்ஜின் மாடல்களே ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.



    பிப்ரவரி முதல் மார்ச் 2019 வரையிலான காலக்கட்டத்தில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 முன்பதிவு செய்தவர்களில் 40 சதவிகிதம் பேர் பெட்ரோல் என்ஜின் மாடலை தேர்வு செய்துள்ளனர். எக்ஸ்.யு.வி.300 கார் நான்கு வேரியண்ட்களில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    அதன்படி 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின், 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இதுவரை எக்ஸ்.யு.வி.300 காரில் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் வழங்கப்படவில்லை. எனினும், விரைவில் AMT வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ.11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சந்தையில் களமிறங்கியிருக்கும் மஹி்ந்திரா தார் ஸ்பெஷல் எடிஷன் கார் விவரங்களை பார்ப்போம். #Mahindra



    சாகச பயண வாகனமான தார், இந்தியாவில் ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வசதியோடு ஸ்பெஷல் எடிஷன் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களும் விபத்து சோதனை (கிராஷ் டெஸ்ட்) சான்று பெற்றிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. முந்தைய தலைமுறை மாடல்கள் அனைத்துமே இத்தகைய சோதனைக்கு உள்படுத்தப்படாதவை. 

    இதனால் முந்தைய மாடல்கள் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிஷனையே தொடர்ந்து உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த காரில் கூடுதல் சிறப்பம்சமாக ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளது.



    ஸ்டாண்டர்டு மாடலைக் காட்டிலும் வெளிப்புறத் தோற்றத்திலும் மாறுதல் கொண்டதாக ஸ்பெஷல் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவைப்பட்டால் சி.ஆர்.டி.இ. என்ஜினை தேர்வு செய்யும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷனில் அலாய் வீல்கள் கூடுதல் சிறப்பம்சமாக இருக்கின்றன. 

    இது முந்தைய மாடலை விட அளவில் பெரியதாகவும், அதிக திறன் கொண்டதாகவும், எரிபொருள் சிக்கனமானதாகவும் இருக்கும் என்று தெரிகிறது. அத்துடன் இது பி.எஸ். VI புகை சோதனை விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விதிமுறை 2020-ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வருவதாக இருந்தாலும் தனது மாடலில் இந்த வசதியை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு அளிக்க மஹிந்திரா திட்டமிட்டு அதை செயல்படுத்தியுள்ளது. 

    இந்த காரில் 140 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 2.0 லிட்டர் என்ஜின் மற்றும் 6 கியர்களைக் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இத்துடன் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஸ்பீடு வார்னிங் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகிறது.
    இந்திய மக்கள் பயணங்களில் சந்திக்கும் பிரச்சனையை சரி செய்ய ஆனந்த் மஹிந்திராவுக்கு 11 வயது சிறுமி அட்வைஸ் கொடுத்திருக்கிறார். #AnandMahindra
    மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா 11 வயது சிறுமிக்கு ட்விட்டரில் தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில் 11 வயது சிறுமி தனக்கு எழுதியிருந்த கடிதத்தின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

    இந்திய சாலைகளில் பயணிக்கும் போது அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனையை சரி செய்ய மிக எளிய வழிமுறையை மும்பையில் வசிக்கும் 11 வயது சிறுமி ஆனந்த் மஹிந்திராவுக்கு தெரிவித்திருக்கிறார். சாலைகளில் செல்லும் வாகனங்களில் ஹாரன் எழுப்பப்படும் போது பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலரும் பாதிக்கப்பட்டிருப்போம்.



    இதற்கு தீர்வு காண 11 வயதான மஹிகா மிஸ்ரா ஆனந்த் மஹிந்திராவுக்கு கோரிக்கையாக வைத்திருந்தார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் பலர் தேவையற்ற நிலைகளில் ஹாரன் எழுப்புவதை தடுக்கும் நோக்கில், பத்து நிமிடங்களில் ஐந்து முறை மட்டும் ஹாரன் வேலை செய்யும் படி மாற்றம் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

    இத்துடன் ஹாரன் ஒலிக்கும் நேரம் வெறும் மூன்று நொடிகள் மட்டுமே இருக்க வேண்டும் என மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். இதுபோன்று மாறும் போது ஹாரன் மூலம் ஏற்படும் ஒலி மாசு பெருமளவு குறைக்கப்படும் என அவர் தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.


    சிறுமியின் கடித்ததை மின்னஞ்சலில் பார்த்த ஆனந்த் மஹிந்திரா கடிதத்தின் புகைப்படத்துடன், சிறுமியின் செயலை பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். நாள் முழுக்க உழைத்து திரும்பும் போது, இதுபோன்ற மின்னஞ்சலை பார்க்கும் போது களைப்பு முழுமையாக நீங்கிவிடுகிறது. இந்த உலகம் சிறப்பாகவும், அமைதியாகவும் இருக்க நினைக்கும் இச்சிறுமி போன்ற மக்களுக்காக நான் பணியாற்றுகிறேன் என்று எனக்கு தெரியும் என சிறுமியின் செயல் பற்றி தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். #AnandMahindra

    மஹிந்திரா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கே.யு.வி. 100 காரின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Mahindra



    இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சாரத்தில் ஓடும் கார்களை தயாரிக்க கார் கம்பெனிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதை ஏற்று, மஹிந்திரா நிறுவனம் புதிய மின்சார காரை வடிவமைத்துள்ளது.

    மஹிந்திரா இ.கே.யு.வி. 100 என அழைக்கப்படும் இந்தக்கார் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் மேலும் இரு மாதங்கள் தள்ளிப்போகும் என தெரிகிறது. 



    எலெக்ட்ரிக் கார் என்பதால் என்ஜினிற்கு மாற்றாக லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்கும் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக்காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 140 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் பேட்டரி சார்ஜ் ஆகி விடும் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் இ.கே.யு.வி. 100 மாடலை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம்  எஸ்.யூ.வி., எக்ஸ்.யூ.வி. 300 உள்ளிட்ட மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 கார் ஒரே மாதத்தில் சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #MahindraXUV300



    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க ஒரே மாதத்தில் சுமார் 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பிப்ரவரி 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதிகமானோர் முன்பதிவு செய்திருக்கும் புதிய எக்ஸ்.யு.வி. 300 காரை வாங்க பயனர்கள் மூன்று வாரங்களுக்கு காத்திருக்க வேண்டி இருக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 W4, W6, W8 மற்றும் W8 OPT நான்கு வேரியண்ட்களில் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.



    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 காரில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 1.2 லிட்டர் யூனிட் 110 பி.ஹெச்.பி., 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் என்ஜின் 115 பி.ஹெச்.பி., 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இருவித என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.300 காரின் ஆட்டோமேடிக் வெர்ஷனை சோதனை செய்யும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. இந்த வெர்ஷன் வரும் மாதங்களில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 முன்னணி இடம் பிடித்திருக்கிறது.

    புதிய மஹிந்திரா காம்பேக்ட் எக்ஸ்.யு.வி. கார் இந்தியாவில் விற்பனையாகும் மொத்தம் எஸ்.யு.வி. கார்களில் 40 சதவிகித பங்கு வகிப்பதாக மஹிந்திரா தெரிவித்திருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.யு.வி. 300 கார் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. #MahindraXUV300 #Car



    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி. 300 காரை இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.யு.வி. 300 விலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனலவே துவங்கிவிட்ட நிலையில், இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது. எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.



    இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 

    புதிய எக்ஸ்.யு.வி. 300 காரில் எல்.இ.டி. ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் இக்னிஷன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும், 3-பாயிண்ட் சீட் பெல்ட், ஐசோஃபிக்ஸ், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இதுவரை இந்த காரை வாங்க சுமார் 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #MahindraXUV300



    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்.யு.வி.300 காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்குள் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க சுமார் 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

    புதிய எக்ஸ்.யு.வி.300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது. எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    புதிய எக்ஸ்.யு.வி.300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.



    புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

    இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

    புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ கார் 8 சீட்டர் வேரியன்ட இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #Mahindra #Marazzo



    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ காரின் 8-சீட்டர் வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய மராசோ M8 8-சீட்டர் வேரியன்ட் விலை ரூ.13.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் வழக்கமான 7 சீட்டர் வேரியன்ட்டை விட ரூ.8000 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 17-இன்ச் அலாய் வீல், டி.ஆர்.எல்., ஃபாக்ஸ் லெதர் சீட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சில மஹிந்திரா விற்பனையாளர்கள் ஏற்கனவே இந்த மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கிவிட்டன.



    மஹிந்திரா மராசோ மாடலில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 128 பி.ஹெச்.பி. பவர். 320 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மராசோ காரின் பெட்ரோல் வெர்ஷன் மற்றும் AMT வேரியன்ட் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×