search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97581"

    இசை, நடனம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும், பதவி, நிர்வாகம் ஆகிய பாக்கியங்களையும் அளிப்பவள் ராஜமாதங்கி என்னும் சியாமளா தேவி.
    இசை, நடனம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும், பதவி, நிர்வாகம் ஆகிய பாக்கியங்களையும் அளிப்பவள் ராஜமாதங்கி என்னும் சியாமளா தேவி. அவளை மகாகவி காளிதாசர், பாஸ்கர ராயர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் வணங்கி அருள் பெற்றனர் என்பது வரலாறு. தச மகா வித்யைகளுள், மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யா ரூபம் ஆவாள். சரஸ்வதியின் சொரூபமாக உள்ள சியா மளாதேவி வழிபாடு என்பது, சங்கீதத்தில் ஒருவரை பிரபலம் அடையச்செய்யும் என்பதும் ஐதீகம்.

    * அம்பாளின் 51 சக்தி பீடங்களில் ராஜமாதங்கி -சியாமளா சக்தி பீடமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது.

    * காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள காயத்ரி மண்டபத்திற்கு வலப்புறத்தில் ராஜ சியாமளா தேவியின் அழகிய உருவத்தை தரிசனம் செய்யலாம்.

    * புதுக்கோட்டை புவனேஸ்வரி கருவறைக்கு முன்புறத்தில் ராஜ மாதங்கியை தரிசனம் செய்யலாம்.

    * சென்னை ஆதம்பாக்கம் புவனேஸ்வரி ஆலய கருவறைக்கு முன்புறம் நின்ற கோலத்தில் மாதங்கியை தரிசிக்கலாம்.

    * சேலம், மன்னார்பாளையத்தில் பசுமை நிறைந்த சுற்றுச்சூழலில் ராஜ மாதங்கி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

    * திருப்போரூர், செம்பாக்கம் ஸ்ரீ பீடம் பாலா சமஸ்தானத்தில் ராஜ மாதங்கி கோவில் இருக்கிறது.
    ராஜமாதங்கி தேவி, பக்தர்களுக்கு சகல நலன்களையும், செல்வத்தையும் அளிப்பதற்காக, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் சக்திகளும் ஒருங்கே பெற்றவளாக இருக்கிறாள் என்பது ஐதீகம்.
    கல்வி மற்றும் செல்வம் ஆகிய இரண்டு பாக்கியங்களுக்கும் அதிதேவதையாக இருப்பவள் ராஜமாதங்கி ஆவாள். ஒப்பற்ற அழகும், அனைவரையும் வணங்கச் செய்யும் கம்பீரமும் கொண்ட ராஜமாதங்கிக்கு, ராஜ சியாமளா, காதம்பரி, வாக் விலாஸினி என்ற பெயர்களும் உள்ளன. ஆதிசங்கரர் முதல் சங்கீத மும்மூர்த்திகள் வரை ஆன்மிக சான்றோர்கள் பலரும் இந்த அன்னையை வழிபட்டு சிறப்படைந்துள்ளனர்.

    ஆதி பராசக்தியின் மந்திரிணியாக இருந்து ஆலோசனைகள் சொல்லும் இவள், சாக்த வழிபாட்டில் சப்த மாதர்களில் ஒருவராகவும், தசமகா வித்யைகளில் ஒன்பதாவது நிலையிலும் இருக்கிறாள். இந்தியாவின் வட மாநிலங்களில் இவளை ‘சியாமளா தேவி’ என்று அழைக்கிறார்கள். இதற்கு ‘நீலம் கலந்த பச்சை நிறம்’ என்று பொருளாகும். ராஜமாதங்கி தேவி, பக்தர்களுக்கு சகல நலன்களையும், செல்வத்தையும் அளிப்பதற்காக, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் சக்திகளும் ஒருங்கே பெற்றவளாக இருக்கிறாள் என்பது ஐதீகம்.

    மதங்க முனிவரின் மகள்


    இறைவனின் அருள் வேண்டி கடும் தவம் செய்தார் மதங்க முனிவர். அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சியளித்தார். ஈசனிடம், “அன்னை பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும்” என்றும், “மகளை மணந்து கொண்டு ஈசன் தனக்கு மருமகனாக இருக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் வைத்தார். அப்படியே சிவனும் அருளினார்.

    மகாசக்தி மனித உருவம் எடுக்க இயலாது என்பதால், அன்னையின் மந்திர சக்தி மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தது. திருவெண்காடு ஆலயத்தில் உள்ள மதங்க புஷ்கரணியில் மலர்ந்திருந்த நீலோத்பல மலரில் ராஜ மாதங்கி பிறந்தாள். அது ஒரு ஆடி மாத வெள்ளிக்கிழமையாகும். அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் கையில் உள்ள கரும்பு வில்லே ராஜமாதங்கியாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது. மாதங்கி பருவம் அடைந்ததும், ஈசனின் வாக்குப்படியே அவருக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டார் மதங்க முனிவர். சித்திரை மாத வளர்பிறை சப்தமி திதியில், சிவபெருமான் மதங்கேஸ்வரராக வருகை புரிந்தார். மாதங்கிக்கும், ஈசனுக்கும் திருவெண்காட்டில் திருமணம் நடந்தது என்று திருவெண்காடு தல புராணம் கூறுகிறது.

    திருமணத்தின்போது, அன்னை மாதங்கிக்கு எவ்விதமான சீர் வரிசையும் செய்யப்படவில்லை. அகிலத்தையே தன் கைப்பிடியில் வைத்திருக்கும் நாயகிக்கு, தம்மால் என்ன செய்ய முடியும் என்று மதங்க முனிவர் அமைதியாக இருந்துவிட்டார். ‘ஆண்டவனின் திருமணமே ஆனாலும், சீர் வரிசை இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது’ என தேவர்களுக்குள் விவாதம் ஏற்பட்டது. அது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் சிவனே தலையிட்டு, “சீர்வரிசை தருவதும், பெறுவதும் தவறு” என்று கண்டித்தார்.

    “சீர் பெறுவது திருமணச் சடங்குகளில் ஒன்று” என பிரம்மா கூறியதை அடுத்து, சிவனின் ஆணைப்படி நந்திதேவர் கயிலையில் இருந்து பெரும் செல்வத்தினை கொண்டு வந்து, அன்னைக்கு கொடுத்து பிரச்சினையை தீர்த்ததாக திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் ஆலய தல புராணம் தெரிவிக்கிறது.

    அரச போகம் அளிக்கும் மாதங்கி தேவியின், அங்க தேவதைகளாக ஹசந்தி சியாமளா, சுக சியாமளா, சாரிகா சியாமளா, வீணா சியாமளா, வேணு சியாமளா, லகுஷ்யாமளா என ஆறு தேவிகள் தோன்றி கலைகளின் அதிபதிகளாக மாறினர். லலிதா சகஸ்ர நாமம், ஸ்ரீசாக்த பிரமோதத்தம், மீனாட்சி பஞ்ச ரத்னம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம், நவரத்தின மாலா போன்ற பல நூல்களில் ராஜ மாதங்கியின் புகழ் போற்றப்படுகிறது.

    இந்த தேவியின் மரகதப் பச்சை வண்ணம் - ஞானத்தைக் குறிக்கிறது. கைகளில் உள்ள வீணை - சங்கீத மேதை என்பதை சொல்கிறது. கிளி - பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும், ஆத்ம ஞானத்தையும் காட்டுகிறது. மலர் அம்பு - கலைகளில் தேர்ச்சியையும், பாசம், ஈர்ப்பு, சக்தியையும், அங்குசம் - அடக்கி ஆளும் திறனையும், கரும்பு- உலகியல் ஞானத்தையும் குறிப்பதாக ஐதீகம்.
    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சைவ சமய குரவர்களில் நால்வரில் ஒருவரும், திருநீற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவருமான திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூலநட்சத்திர நாளன்று அவதரித்தார். சிவபெருமானும், உமாதேவியும் ஞானப்பால் ஊட்டியதால் அவர் தேவாரம் பாடினார். அந்த நாளை திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா ஆண்டுதோறும் சித்தனாதன் விபூதி நிறுவனத்தின் சார்பில் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொண்டாப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று காலசந்தி பூஜைக்குபின் காலை 9 மணியளவில் முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும், தாமரை மலர்களால் அர்ச்சனையும் நடந்தது.

    இதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனையும், மகா தீபாராதனையும் நடந்தது. ஓதுவார்கள் தேவாரப்பாடல்களை பாடிய பின்னர் திருஞானசம்பந்தர் வழிபாடு நடைபெற்றது. பின்னர் சப்பரத்தில் திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். சிவன், உமா தேவியுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பெரியநாயகி அம்மன் கோவில் உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து விநாயகர் சன்னதி முன்பு திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் குருக்கள் செல்வசுப்பிரமணியம் பொற்கின்னத்தில் ஞானப்பாலை திருஞானசம்பந்தருக்கு ஊட்டினார். மேலும் திருஞானசம்பந்தர், சிவன், பார்வதிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு ஞானப்பால் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, அசோக், செந்தில், கார்த்திகேயன், குமரகுரு மற்றும் குடும்பத்தினர், கொங்கு வேளாளர் சங்க பிரமுகர் மாரிமுத்து, அரிமா சுப்புராஜ் உள்பட முக்கிய பிரமுர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம்தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
    வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1-ம் தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் சிரசு மிதந்து வரும் கண்கொள்ளா காட்சியை காண்பதற்கே ஆயிரம் கண்கள் வேண்டும்.

    கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழாவையொட்டி இன்று (புதன்கிழமை) தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு அதிகாலை சுமார் 5 மணி அளவில் கெங்கைஅம்மன் சிரசு ஊர்வலம் புறப்படும். ஊர்வலம் தரணம்பேட்டை, என்.ஜி.செட்டி தெரு, காந்தி ரோடு, ஜவகர்லால் தெரு, கோபாலபுரம் வழியாக கெங்கையம்மன் கோவிலை வந்தடையும்.

    அம்மன் சிரசு ஊர்வலம் வருகிற வழிநெடுகிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிநின்று அம்மனை தரிசனம் செய்வார்கள். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபடுவர். மேலும் நேர்த்திக்கடனாக பலர் அம்மன், காளி உள்ளிட்ட வேடம் அணிந்து வழிபடுவார்கள். சிலம்பாட்டம், புலி ஆட்டம் போன்றவை ஊர்வலத்தினை பின்தொடர்ந்து நடைபெறும்.

    கெங்கையம்மன் கோவிலை சிரசு வந்தடைந்த பின்னர் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சி உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சாந்த சொரூபியாக மாறும் கெங்கைஅம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருள் பாலிக்கிறார். பின்னர் இரவு 8 மணி அளவில் சண்டாளச்சி உடலில் இருந்து பிரிக்கப்பட்ட அம்மன் சிரசு வீதிஉலாவாக கவுண்டன்ய நதியின் வழியே சென்று புங்கனூர் அம்மன் கோவிலை அடையும். அப்போது கண்ணை கவரும் சிறப்பு வாண வேடிக்கை நடைபெறும்.
    வராஹி அம்மனுக்கு உகந்த இந்த மூலமந்திரத்தில் தினமும் சொல்லி வந்தால் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும்.
    “ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம்
    ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன
    வசங்கரி தனம் வர்ஷய
    வர்ஷய ஸ்வாஹ:”

    பூஜை முறைகள்: வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

    இதன் பலன்: தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. அன்று காலை 8.30 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் 17-ந் தேதி காலை தேரோட்டம், 18-ந் தேதி காலை முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி, இரவில் தெப்பத்திருவிழா ஆகியவை நடைபெறுகிறது.

    வைகாசி விசாக திருவிழாவுக்கான கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கோவிலின் கிழக்கு வாசலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோவிலின் பிரதான நுழைவு வாயில் அருகில் மேல்சாந்தி பத்மநாபன் போற்றி பூஜைகள் செய்து கால் நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட கோவில்களின் தலைமை அலுவலக மேலாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுக நயினார், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நீண்டகாலமாக இழுபறியாகும் வழக்கு, உறவினர்களுக்குள் சொத்து தகராறு உள்ளவர்கள் வழக்குகளில் வெற்றி பெற, திதி நித்யா தேவியான விஜயாவை விரதம் இருந்து வழிபடலாம்.
    நீண்டகாலமாக இழுபறியாகும் வழக்கு, உறவினர்களுக்குள் சொத்து தகராறு, மன உளைச்சல் வழக்கு என்று வருத்தத்துடன் வாழ்க்கை நடத்தும் நேர்மைவாதிகள், வழக்குகளில் வெற்றி பெற, திதி நித்யா தேவியான விஜயாவை விரதம் இருந்து வழிபடலாம்.

    சக்தியின் அம்சமாக விளங்கும் இவள், ஆணவத்தை அடக்கி பக்தர்களைக் காப்பதிலும் அருள்புரிகிறாள். கலைத்துறையில் ஈடுபட விரும்புபவர்கள், கலைத்துறையில் வெற்றிபெறவும். வளர்ச்சியோடு நீடித்த புகழை பெறவும் இந்த திதி நித்யா தேவி விஜயா அருள்புரிகிறாள்.
     
    நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை, அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதாம்பிகையுடன், ஸ்ரீ சக்கரம் வைத்து கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை ஒரு வருடம் விரதம் இருந்து சொல்லி வந்தால், திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

    நீங்கள் வளர்பிறை துவாதசி அல்லது தேய் பிறை சதுர்த்தி திதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி விஜயா. அன்றைய தினம் விரதம் இருந்து வீட்டில் விளக்கேற்றி, விஜயாவை வணங்கினால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். கலைத்துறையில் வளர்ச்சி ஏற்படும்.

    மூலமந்திரம்:

    ஓம் விஜயா தேவ்யை வித்மஹே
    மஹா நித்யாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்.
    திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும், வடிவுடையம்மன் ஞான சக்தியாகவும், கொடியிடையம்மன் கிரியா சக்தியாகவும் திகழ்கிறார்கள். இந்த மூன்று அம்மன்களையும் பவுர்ணமி நாளில் வழிபட்டால் நீங்கள் விரும்பும் அனைத்து நடக்கும்.
    பவுர்ணமி என்றதும் உங்கள் அனைவருக்கும் கிரிவலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் சித்ரா பவுர்ணமி தினம் கிரிவலத்துக்கு மட்டுமல்ல இதர வழிபாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக அம்மன் ஆலயங்களில் வழிபாடு செய்யவும், புனித நதிகளில் நீராடவும் சித்ரா பவுர்ணமி மிக மிக உகந்த நாளாகும்.

    இத்தகைய சிறப்புடைய சித்ரா பவுர்ணமி தினமான இன்று அம்மன் ஆலயங்களுக்கு செல்ல தவறாதீர்கள். சென்னைவாசிகளுக்கு எத்தனையோ அம்மன் ஆலயங்கள் இருந்தாலும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.

    மிகவும் மகத்துவம் வாய்ந்த இந்த மூன்று அம்மன் ஆலயங்கள் பற்றி சென்னைவாசிகள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பார்கள். திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடையம்மன் ஆகியோரே அந்த மூன்று அம்மன்கள் ஆவார்கள்.

    திருவுடையம்மன் ஆலயம் மீஞ்சூர் அருகே மேலூர் எனும் ஊரில் இருக்கிறது. வடிவுடையம்மன் திருவெற்றியூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். கொடியிடையம்மன் திருமுல்லைவாயலில் ஆலயம் கொண்டு இருக்கிறாள்.

    சென்னையை சுற்றி இந்த மூன்று அம்மன்களும் முக்கோண புள்ளிப்போல அமைந்து இருக்கிறார்கள். பொதுவாக சக்தியின் வடிவத்தை இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்வார்கள். அந்த வகையில் திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும், வடிவுடையம்மன் ஞான சக்தியாகவும், கொடியிடையம்மன் கிரியா சக்தியாகவும் திகழ்கிறார்கள். இந்த மூன்று அம்மன்களும் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்களை ஒரே நாளில் வழிபட வேண்டும். அதுவும் காலையில் திருவுடையம்மனையும், மதியம் வடிவுடையம்மனையும், மாலையில் கொடியிடையம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இந்த மூன்று அம்மன்களையும் வழிபட்டால் நீங்கள் விரும்பும் அனைத்து பலன்களையும் பெற முடியும்.

    இந்த மூன்று அம்மன் விக்கிரகங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்ட சிறப்புக்குரியவர்கள். அதன் பின்னணியில்தான் இந்த மூன்று அம்மன்களையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டும் என்ற ஐதீகம் அடங்கி உள்ளது. இந்த ஐதீகத்துக்கு தொடர்புடைய அந்த வரலாறு வருமாறு:-

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மீஞ்சூர் அருகில் உள்ள மேலூர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அந்தப் பகுதியில் ஒரு சிறிய கிராமம் உருவானது. அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வந்தரின் பசு அப்பகுதியில் சுகந்தவனம் என்ற அடர்ந்த காட்டின் உள்ளே சென்று ஒரு மேட்டுப்பகுதியில் பசு தானே பால் சொரிவதையும், பாம்பு ஒன்று பாலை அருந்துவதையும் அபூர்வ காட்சியாகக் கண்டு மெய்சிலிர்த்தனர்.

    அந்த முட்புதரை விலக்கிப் பார்த்தபோது புற்றானது சிவலிங்க வடிவமாக இருந்தது. சிவபெருமான் புற்றுவடிவில் அங்கு வாசம் செய்ததால் ஊர்மக்கள் அவ்விடத்தில் கோவில் கட்டினார்கள். அந்தச் சுயம்பு லிங்கத்துக்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வந்தார்கள்.

    சோழநாட்டினை ஆண்டு வந்த விக்கிரம சோழ மன்னன் ஒரு தடவை வடநாடு மீது போர் தொடுத்து, வெற்றி பெற்று சுகந்தவனம் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தான். காலை பூஜைக்காக விசாரித்த மன்னன் சுகந்தீஸ்வரர் (திருமணங்கீஸ்வரரர்) வரலாற்றை அறிந்து, இத்திருக்கோவில் சிவனை வழிபட்டபோது, சக்தி (அம்மன்) இல்லாமல் சிவன் மட்டுமே உள்ளதை கண்டான். உடனே மன்னன் சிற்பியை அழைத்து, சிவனுக்கு நிகராக சக்தியை அம்மன் சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டான்.

    அம்மனை வடிக்க தேர்ந்த கல் ஒன்றைக் கொண்டு வர, சிற்பி அலைந்து திரிந்து மலை உச்சியில் கல் ஒன்றைக் கண்டான். அதனை கீழே கொண்டுவரும்போது கைபிடி நழுவி உருண்டு விழுந்ததில் கல் உடைந்து மூன்று பாகங்களாக ஆனது.

    அந்த சிற்பி தான் தவறு செய்து விட்டதாக நினைத்து கையைச் சிதைத்துக் கொள்ள முற்பட்டான் அப்போது அம்மன் தோன்றி - தவறு உன்னிடம் இல்லை. நான் இங்கு மட்டும் இச்சா சக்தியாக தனித்து இல்லாமல், ஞான சக்தியாக வடிவுடையம்மனாக (புற்றீஸ்வரர் தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவெற்றியூர்), கிரியாசக்தியாக கொடியிடை அம்மனாக (மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயல்) ஆக முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி வடிவமாக நாம் உருக்கொள்ளவே மூன்று பாகங்கள் ஆனோம். மூவகை உருவையும் வடித்து மேற்படி திருக்கோவில்களில் பிரதிஷ்டை செய்து விடுவாயாக என உத்தரவிட்டு மறைந்தாள். அதன்படி திருப்பணிகள் செய்து, மூன்று அம்மன்களுக்கும் தனி சன்னதிகளாக அமைக்கப்பட்டது.

    முதல் சக்தியான திருவுடையம்மன் நான்கு கர நாயகி, மேலிருகரங்கில் பாச அங்குசம். கீழ்வலக்கரம் அபய முத்திரையாகவும் இடக்கரம் வரஹஸ்தமாகவும் திருக்கோலம் கொண்டு காட்சி தரும் திருமேனியாள் கருணை வடிவே உருவாகி நிற்கிறாள். அம்மனின் அழகிய வதனத்தில் என்றும் வாடாத புன்னகை. அன்னையின் ஒரு கரம் ‘என்னைச் சரணடை’ என்பது போல காட்டுகிறது.

    ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ திருவுடையம்மனை வணங்கி வருபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் இல்லாதோர் ஸ்ரீதிருவுடையம்மனை ஆறுவாரம் அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

    ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீதிருவுடையம்மனை வணங்கும் மாணவ-மாணவிகள் படிப்பிலும், அறிவிலும், சிறந்து வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.
    கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது. முன் ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் சக்தி திருவுடையம்மன் ஆகும்.

    மேலூர் திருவுடையம்மன் ஆலயம் பற்றி கூடுதல் தகவல்களை ஆலய செயல் அலுவலர் எம்.கிகிருஷ்ணமூர்த்தியிடம் 99768 49791 என்ற எண்ணிலும், கோவில் பணியாளர் ஏழுமலையை 82487 39713 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.



    அடுத்து நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருவெற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆலயம்.

    பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. ஞானசக்தியாக, வடிவுடை நாயகியைத் தொழுவோருக்கு அற்புதமான மணவாழ்க்கை அமையும். பௌர்ணமிகளில், அதுவும் வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுவதால் நாள் முழுவதும் நடை திறந்திருக்கிறது.

    மூன்றாவதாக மாலையில் நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருமுல்லைவாயலில் உள்ள கொடியிடையம்மன் சமேத மாசிலாமணீஸ்வரர் ஆலயம் ஆகும்.

    திருவொற்றியூரில் இருந்து புறநகர் பகுதியின் வழியாக மிக எளிதாக திருமுல்லைவாயலுக்கு சொல்லலாம்.

    இத்தலத்தில் நந்தி தேவர் திரும்பிய நிலையில் இருக்கிறார். மன்னன் வெற்றியின் சின்னமாக அங்கிருந்த வெள்ளெருக்குத் தூண்களைக் கொண்டு வந்து கோயில் கட்டினான். மன்னன் வாளால் வெட்டிய அடையாளம் தற்போதும் சிவலிங்கத்தில் உள்ளது. எனவே சந்தனக்காப்புடன் இறைவன் காட்சியளிக்கின்றார்.
    இத்தலத்து இறைவி கொடியிடை நாயகி கிரியா சக்தியாக அழைக்கப்படுகிறாள்.

    அசுவினி முதலான் 27 நட்சத்திரங்களும் செய்த பாவம் நீங்க கொடியிடை நாயகியை வணங்கி சாபம் நீங்கிய இடம். இந்திராணி இத்தலத்து அம்மனை வழிபட்டு இந்திரனை மீளப்பெற்ற தலம்.

    வெள்ளிக்கிழமை பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வரும் நாளில் மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும், வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால், காசி - இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.

    இன்று வெள்ளிக்கிழமையன்று பவுர்ணமி தினம். எனவே மிக அரிதான அன்றைய தின வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள். பக்தர்கள் ஒன்று சேர்ந்து வாகன வசதி செய்து கொண்டு சென்றால் மூன்று ஆலயங்களுக்கும் எளிதில் சென்று வரலாம்.


    சகல சக்திகளும் தரும் 3 அம்மன் தரிசனம்


    இச்சா சக்தி

    விருப்பங்களை நிறைவேற்றுபவள், சவுந்தர்யத்தின் இருப்பிடம், லாவண்யமானவள், மனதை சுண்டி இழுத்து அதில் எண்ணற்ற கனவுகளை விதைப்பவள், அமைதிக்கான ஆதாரம், நமக்கு சவுபாக்கியங்களை தருபவள்.

    ஞான சக்தி


    அறிவு தருபவள், சகல வித்தைகளிலும் நமக்கு வெற்றி தருபவள், நமது புத்தியில் உறைபவள், கவிதையாக, காவியமாக, சங்கீதமாக அருள்பாலிப்பவள்.

    கிரியா சக்தி

    வாழ்க்கை வளம்பெற தூண்டிவிடுபவள், துவக்கிவைப்பவள், ஒளிமயமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுப்பவள், செல்வம், செல்வாக்கு தந்து சுகமான வாழ்வருளும் சர்வேஸ்வரி.

    மூன்று அம்மன்களையும் பக்தர்கள் தரிசிப்பதற்காக சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 19-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் இரவு 9 வரை கோவில் நடை திறந்திருக்கும். 
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குங்கும மேனியாய் காட்சியளிக்கும் அம்மன் வைரக் கம்மல், வைர மூக்குத்தி அணிந்திருப்பார்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களுள் தைப்பூசம், பூச்சொரிதல், சித்திரை தேரோட்டம், தெப்ப உற்சவம், பஞ்சபிரகார விழா ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும். இங்குள்ள அம்மனின் தலைக்குமேல் 5 தலை நாகம் போன்ற அமைப்பிருக்கும். குங்கும மேனியாய் காட்சியளிக்கும் அம்மன் வைரக் கம்மல், வைர மூக்குத்தி அணிந்திருப்பார்.

    8 கைகளுடன் அம்மன் வீற்றிருப்பார். விஜயநகர அரசன் போருக்கு புறப்பட்டு செல்லும்போது சமயபுரம் மாரியம்மனிடம் போரில் தான் வெற்றி பெற்றால் தனியாக ஒரு கோவிலை கட்டுவதாக வேண்டிக்கொண்டான். போரில் வெற்றி பெற்றவுடன் கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. மாரியம்மன் வீற்றிக்கும் இப்பகுதியை சமயபுரம், கண்ணனூர், கண்ணபுரம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    ஆதிமாரியம்மனாக விளங்கும் அம்மன் இனாம்சமயபுரத்தில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் தலவிருட்சம் வேப்பமரம் ஆகும். ஒரு காலத்தில் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் வேப்பமரத்தையும் சுற்றி வந்து வணங்கி செல்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவருக்கும் அம்மை நோய் கண்டால் அம்மனின் தீர்த்தத்தை உடலில் தெளித்தால் அது மறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    பிரசித்தி பெற்ற சக்தி தலமான புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பக்தர்கள் 1,000 பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    தஞ்சை புன்னைநல்லூரில் பிரசித்தி பெற்ற சக்தி தலமாக மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் இருந்து 1,000 பால்குட ஊர்வலம் நேற்று காலை புறப்பட்டது. நாதஸ்வர இசையுடனும், வாண வேடிக்கையுடனும், வேத கோஷங்களுடன் புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது.

    அங்கு 4 ஆயிரம் லிட்டர் பாலினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் வாணவேடிக்கையுடன் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை பிராமணாள் கைங்கர்ய டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    ×