search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97582"

    • பெரம்பலூர் மாவட்டம் தபால் கீரனூரில் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்த தபால் கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள மூப்பனார் மற்றும் மகா மாரியம்மன் கோவிலில் 2-ம் ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா நடைபெற்றது. இதற்காக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளிய தேரோட்டம் நடைபெற்றது. தபால் கீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தபால் கீரனூர் பொதுமக்கள் இளைஞர்கள், துபாய் வாழ் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
    • 29-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கைலாசநாதர் -சவுந்தரவல்லி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷங்கள் எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.

    விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    • சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவி லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது.
    • தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. இதனைத் தொடர்ந்து 29-ந்தேதி சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது.

    சேலம்:

    பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவி லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது. தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. இதனைத் தொடர்ந்து 29-ந்தேதி சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது. 25-ந் தேதி முதல் ஜூன் மாதம் 2-ந் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை சாமி புறப்பாடு நடைப்பெறும். மேலும் மாலை வேளையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே அனைத்து பக்கதர்களும், பொதுமக்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா மற்றும் அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.

    • திருவாதவூர் பிடாரி அம்மன் கோவில் ேதரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட திருமறைநாதர்- வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழாவையொட்டி பிடாரி அம்மன் கோவில் திருவிழா கடந்த 5-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று பிடாரி அம்மன் சட்டத்தேரில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • பிரம்மதேசம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • அலங்கரிக்கப்பட்ட 30 அடி உயரமுள்ள தேரில் செல்லியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மங்களமேடு அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் செல்லியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட 30 அடி உயரமுள்ள தேரில் செல்லியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி கோஷங்கள் முழங்க தேரை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிகண்டபுரம், அனுக்கூர், தேவையூர், வேப்பந்தட்டை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பிரம்மதேசம் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.



    • விழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவோணத்தில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

    மேலும் அப்பகுதி கிராமமக்கள் பலர் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவோணம் போலீசார் செய்திருந்தனர்.

    • சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு சிவகாசியில் 5 நாட்கள் விமரிசையாக நடந்த பத்திரகாளியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • பக்தர்கள் தேர் சக்கரங்களில் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

    சிவகாசி

    சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழா தொடங்கிய நாள் முதல் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மேலும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் பொங்கல் வைத்தும், பல்வேறு நேர்த்திக்கடன் களை செலுத்தியும் வழிபாடு நடத்தினர்.

    இந்த திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பத்திரகாளியம்ம னும், சிறிய தேரில் விநாயக ரும் எழுந்தருளினர். 5 நாட்கள் மாலையில் நடந்த தேரோட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பக்தர்கள் வெள்ளத்தில் ரத வீதிகளில் தேர் ஆடி அசைந்து வந்தது கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. 5 நாட்கள் வீதிகளை சுற்றி வந்த தேர் நேற்றைய தினம் நிலைக்கு வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் தேர் சக்கரங்களில் தேங்காய் உடைத்து வழிபட்டனர். 

    • மீனாட்சி அம்மன் கோவில் வசந்த உற்சவம் நடந்தது.
    • திருக்கல்யாணமும், ஜூன் 1-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 24-ந்தேதி முதல் ஜூன் 2 வரை நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்தி களுடன் மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புது மண்டபம் செல்வர். அங்கு பூஜை, தீபாராதனை முடிந்ததும் 4 சித்திரை வீதிகளில் வலம் வந்து கோவிலுக்கு வருவார்கள்.

    ஜூன் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை திருஞான சம்பந்தர் திருவிழாவும், ஜூன் 5-ந் தேதி காலையில் திருஞானசம்பந்தர் தங்கப்பல்லக்கில் எழுந்த ருளும் நிகழ்ச்சியும், 63 நாயன்மார்களின் 4 ஆவணி மூல வீதி புறப்பாடும் நடக்கிறது.

    அன்றிரவு 8 மணிக்கு திருஞானசம்பந்தர் வெள்ளி கோ ரதத்தில் எழுந்தருளி 4 ஆவணி மூல வீதிகளிலும் வலம் வருவார். மே 24-ந் தேதி முதல் ஜூன் 5-ந் தேதி வரை வைகாசி வசந்த உற்சவம் நடப்பதால் உபய தங்கரதம், உபய திருக் கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான திருமறைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ள திருவாதவூரில் மாணிக்க வாசகர் பிறந்தார். இந்த கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.

    வருகிற 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகளுடன் மேலூருக்கு சுவாமி எழுந்தருளுகிறார். மே 31-ந் தேதி காலை 11.15 மணி முதல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும், ஜூன் 1-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    • ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    சுரண்டை:

    சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்தாண்டு திருவிழா

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. முதல் மண்டகப்படி ஜமீன் தாரால் நடத்தப்பட்டது. 2-வது மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3-ம் நாள் மண்டகப்படி செட்டியார் மற்றும் பிள்ளைமார் சமூகத்தினர் சார்பில் நடத்தப்பட்டது. 4-ம் மண்டக படி நாடார் சமுதாயத்திற்குரியவர்களா லும், 5-வது மண்டகப்படி சேனைத் தலைவர், முதலியார் சமுதாயத்தினர் சார்பிலும் நடத்தப்பட்டது.

    6-ம் நாள் மண்டகப்படி படையாட்சி சமுதா யத்தினர், 7-ம் மண்டகப்படி கோட்டைத்தெரு தேவர் சமுதா யத்தினர் மண்டகபடி யாகவும், 8-ம் நாள் அனை த்து சமுதாயம் சார்பில் கொண்டா டப்பட்டது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    தேர்த்திருவிழா

    நேற்று 9-ம் நாள் சிகர நிகழ்ச்சியான தேர்த் திருவிழா நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்க ப்பட்ட தேரில் அழகு பார்வதி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு கோட்டைத் தெரு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வழியாக சுரண்டை நகராட்சி அலுவலகம் அரு கில் வந்தடைந்து. பின்பு அங்கிருந்து புறப்பட்டு கோவில் வளாத்திற்கு வந்தது.

    இன்று 10-வது நாள் சப்தாவரண நிகழ்ச்சி விஸ்வகர்மா சமுதாயம் சார்பில் நடக் கிறது. விழா ஏற்பாடுகளை அனைத்து சமுதாய விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    • சித்திரை திருவிழா மே 2 ந்தேதி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் தெய்வாங்கப் பெருமாள், அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 2 ந்தேதி காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.

    நேற்று புதன்கிழமை 9 ம் நாள் விழா காலையில் பால் குடம், காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.மாலை 5.00 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, மாவடுகுறிச்சி, பொன்காடு, மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • செந்துறை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
    • ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று அம்மன், விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமிழியம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் அம்மன் வீதியுலாவும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனும், மற்றொரு தேரில் விநாயகரும் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று அம்மன், விநாயகர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

    • நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • ஆர்ஜித கல்யாணோற்சவ சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் வருடாந்திர வசந்தோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. அதையொட்டி முதல் நாளான நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், தோமாலை சேவை, சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன்பிறகு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரரை வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்து ஆஸ்தானம் நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வசந்தோற்சவத்தின் 2-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 7 மணி வரை தங்கத் தேரோட்டம் நடக்கிறது. வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் நடக்க இருந்த ஆர்ஜித கல்யாணோற்சவ சேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    ×