search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமி"

    விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறி அசத்தலான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    விண்வெளியில் இருந்தபடி நாசா எடுத்ததாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூமியில் சூரிய மறைவு விண்வெளியில் இப்படித் தான் காட்சியளிக்கும் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    வைரல் புகைப்படம் குறித்த இணைய தேடல்களில் அது விண்வெளியில் இருந்து பூமியில் ஏற்படும் சூரிய மறைவின் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இது விண்வெளியில் இருந்தபடி பூமியில் ஏற்படும் சூரிய உதயத்தின் காட்சி ஆகும். மேலும் இது புகைப்படம் அல்ல. கணினியில் உருவாக்கப்பட்ட படம் ஆகும். 

     வைரல் ஸ்கிரீன்ஷாட்

    இதே படம் 2021, செப்டம்பர் 22 ஆம் தேதி ரெடிட் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட் ஆகும். இந்த வீடியோவின் இணைய முகவரியும் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் புகைப்படம் விண்வெளியில் இருந்து எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. 
    சூரியன் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டது. #NewPlanet

    நியூயார்க்:

    அமெரிக்காவின் கலிபோர்னியா விண்வெளி நிறுவனம் மற்றும் ஸ்பெயின் விண்வெளி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் சூரியன் அருகேயுள்ள ‘பர்னாட்ஸ்’ என்ற நட்சத்திரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த நட்சத்திரம் அருகே பூமியை போன்று ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். அது பூமியை விட 3.2 மடங்கு எடை கொண்டது.

    இது சூரியனிடம் இருந்து 2 சதவீத சக்தியை கிரகித்து கொள்கிறது. இதன் மேற்பரப்பில் மைனஸ் 160 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரினங்கள் வாழமுடியாது. ஏனெனில் அங்கு திரவ நிலையில் தண்ணீர் இல்லை.

    தண்ணீர் அல்லது வாயு இருந்தால் திட நிலையில் தான் இருக்கும். அவை உறைந்த நிலையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #NewPlanet

    பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக பல ஆண்டுகள் நடந்துவந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள், மேலும் 2 நிலவுகள் பூமிக்கு இருப்பதை உறுதி செய்துள்ளனர். #Earth #AdditionalMoons
    புதாபெஸ்ட்:

    அண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதும், அவற்றுக்கு துணை கோள்கள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவற்றை கண்டறியும் உச்சபட்ச இலக்குடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த குழப்பம் நிலவி வருகிறது.

    அந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள், பூமிக்கு கூடுதலாக 2 நிலவுகள் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.



    அந்த இரு நிலவுகளும் தூசுக்களால் ஆன மேகங்களை போல் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவு உள்ள தொலைவிலேயே இரு நிலவுகளும் இருப்பதாகவும் ஆனால் மங்கலான ஒளியை இவை உமிழ்வதால் கண்டறிவதில் சிக்கல் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இவற்றை முதன் முதலில் கண்டறிந்த போலந்து ஆராய்ச்சியாளர் கோர்ட்லெவ்ஸ்கியின் பெயரே இந்த நிலவுகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. பொதுவாக கவிதை எழுதும் கவிஞர்களுக்கு முதலில் எளிமையாக கிடைக்கும் உவமையாக நிலவு இருந்துவரும் நிலையில், இனி ஒன்றுக்கு மூன்று நிலவுகள் இருப்பதால் உவமைக்கு பஞ்சம் இல்லை. #Earth #AdditionalMoons
    சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் பூமியில் விழுந்த 10 கிலோ எடை கொண்ட விண்கல், வீட்டின் கதவு அசையாமல் இருக்க முட்டுக் கொடுக்க வைக்கப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. #space #NASA #Meteorite
    நியூயார்க்:

    அமெரிக்காவின் மிக்சிகன் மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனாசிர்பெஸ். இவரை மிச்சிகனை சேர்ந்த நபர் ஒருவர் சந்தித்தார். அவர் தன்னிடம் 30 ஆண்டுகளாக இருக்கும் ஒரு கல்லை கொடுத்து அதன் தன்மை குறித்து ஆராயும் படி கூறினார்.

    சுமார் 10 கிலோ எடையுள்ள அந்த கல்லை மோனா சிர்பெஸ் ஆய்வு மேற்கொண்டார். அதில் அந்த நபர் கொடுத்தது வினோதமான விண்கல் என தெரியவந்தது.

    1930-ம் ஆண்டுகளில் அதாவது சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு மிச்சிகனில் உள்ள எட்மோர் என்ற இடத்தில் விளைநிலத்தில் விழுந்தது. அதன் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்(ரூ.75 லட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

    தனது ஆய்வு முடிவை உறுதி செய்ய மோனா அந்த கல்லை வாஷிங்டனில் உள்ள ஸ்மித் சோனியன் இன்ஸ்டிட்யூட் என்ற புகழ் பெற்ற அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைத்தார். அது விண்கல் என அந்த மையம் உறுதி செய்தது. மேலும் அதை விலை கொடுத்து வாங்கவும் முன்வந்துள்ளது.



    பெரும்பாலான விண்கற்களில் 90 சதவீத முதல் 95 சதவீதம் வரை இரும்பு இருக்கும். ஆனால் இதில் 88 சதவீதம் இரும்பும், 12 சதவீதம் நிக்கலும் இருப்பது சிறப்பு அம்சமாகும்.

    இந்த வினோதமான விண்கல்லை அந்த நபர் தனது வீட்டின் கதவு அசையாமல் இருக்க கடந்த 30 ஆண்டுகளாக முட்டுக் கொடுக்க பயன்படுத்தி வந்தார்.

    தற்போது விண்கல் என்று தெரிந்த நிலையில் அதை விற்க பெயர் வெளியிடப்படாத உரிமையாளர் விரும்புகிறார். விண்கல் விற்பனை தொகையில் 10 சதவீதத்தை மிக்சிகன் மத்திய பல்கலைக் கழகத்துக்கு வழங்க இருப்பதாக தெரிவித்தார். #space #NASA #Meteorite
    செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமியை நெருங்குவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. #NASA
    லாஸ்ஏஞ்சல்ஸ்:

    பூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகம் முதலில் இருக்கிறது. 26 மாதங்களுக்கு ஒருமுறை பூமி நீள்வட்ட பாதையில் செவ்வாயை கடந்து செல்லும்.

    அதன்படி இந்த மாதம் 27-ந்தேதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான தூரம் குறைகிறது. இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 லட்சம் கி.மீ. தொலைவில் வருகின்றன. இத்தகவலை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

    பொதுவாக செவ்வாய் கிரகம் 38 கோடி கி.மீ. தூரத்தில் சுழலும் இன்று பூமிக்கு 5 கோடியே 76 லட்சம் கி.மீட்டர் நெருக்கத்தில் வருகிறது. எனவே, செவ்வாய் கிரகத்தை டெலஸ்கோப் மூலம் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



    செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் புழுதி புயல் தாக்கியது. இருந்தாலும் டெலஸ்கோப்பில் செவ்வாய் கிரகம் மிக பிரகாசமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் இன்று பூமியை நெருங்கும் காட்சியை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் கிரிப்த் வானிலை ஆய்வு மையம் ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்புகிறது. இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு 5 கோடியே 57 லட்சம் கி.மீ. தூரத்தில் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வந்தது. #NASA
    செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும். இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். #Mars #Earth
    சான்பிரான்சிஸ்கோ:

    சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன.

    அவ்வாறு சுற்றி வரும் செவ்வாய் கிரகம் அடுத்த மாதம் (ஜூலை) 27-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து பார்த்தால் செவ்வாய் கிரகம் நன்றாக தெரியும்.

    ஏனெனில் சூரிய கதிர்களால் பிரதிபலிக்கப்பட்டு அது பிரகாசிக்கும். இந்த தகவலை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.

    இத்தகைய அதிசய நிகழ்வு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக கடந்த 2003-ம் ஆண்டு பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வந்தது.

    தற்போது நிகழும் இந்த சம்பவம் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். #Mars #Earth
    அமெரிக்காவில் கிளாயுயா எரிமலை வெடித்ததின் அதிர்வு காரணமாக அங்கு பூமியில் வெடிப்பு ஏற்பட்டு பிளவுகள் ஏற்பட்டன. #Volcano
    ஹவாஸ்:

    அமெரிக்காவின் ஹவாஸ் தீவில் கிலாயுயா என்ற எரிமலை உள்ளது. அது கடந்த 3-ந்தேதி முதல் வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து லேசான புகை வெளியேறி வந்தது.

    இந்த நிலையில் நேற்று அந்த எரிமலை பயங்கரமாக வெடித்து சிதறியது. அதில் இருந்து எரிமலை குழம்பு வழிந்தோடுகிறது. கரும்புகை வெளியேறுகிறது. நாலாபுறமும் பாறைகள் சிதறுகின்றன.

    எனவே பாதுகாப்பு கருதி கோனா கடற்கரை பகுதியில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



    கிளாயுயா எரிமலை வெடித்ததின் அதிர்வு காரணமாக அங்கு பூமியில் வெடிப்பு ஏற்பட்டு பிளவுகள் ஏற்பட்டன. முன்னதாக அப்பகுதியில் கடுமையான சூறாவளிக் காற்று வீசியது. இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் நிறுவனங்களின் ஜன்னல்கள் கதவுகள் ‘படபட’ வென அடித்தன. அதன் பின்னர்தான் எரிமலையில் இருந்து கியாஸ் மற்றும் குழம்பு வெளியேறியது.

    கிளாயுயா எரிமலை 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது. அதில் இருந்து வெளியான கரும்புகை விண்ணில் பரவியது. அதை மரத்தின் மீது ஏறி ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். #Volcano
    ×