search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்முதல்"

    கேரட் தரத்துக்கு ஏற்ப விலை கிடைப்பதால் 2 மடங்காக விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ கேரட் விவசாயிகளிடம் இருந்து ரூ.20-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் நஷ்டம் அடைந்து வந்தனர். மேலும் தோட்ட பராமரிப்பு செலவை கூட ஈடுகட்ட முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ கேரட் ரூ.45 முதல் ரூ.50 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது. தரத்துக்கு ஏற்ப விலை கிடைப்பதால் 2 மடங்காக விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

    ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கழுவி சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் மூட்டைகளில் வாகனங்கள் மூலம் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச்செல்லப்படுகிறது.

    ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் ஏலம் மண்டிகளில் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.6 முதல் ரூ.10, பீட்ரூட் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.30, பீன்ஸ் ரூ.60, டர்னீப் ரூ.50, நூல்கோல் ரூ.50, முள்ளங்கி ரூ.15 முதல் ரூ.20, மேரக்காய் ரூ.10 வரை விலை கிடைக்கிறது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து உள்ளது.

    இருப்பினும் சமவெளி பகுதிகளில் தொடர் மழை பெய்வதால், அங்கிருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அந்த காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது.

    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70 ஆக உயர்ந்து உள்ளது. பெரிய வெங்காயம் ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.60, வெண்டைக்காய் ரூ.120, கத்தரிக்காய் ரூ.120, பூண்டு ரூ.160 என விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    ரபேல் போர் விமான முறைகேடு ஊழல் குறித்து விரைவில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் புகார் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. #Congress #RafaleDeal

    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 32 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தத்தை பாரதிய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தினார்கள்.

    அதில் அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.

    அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு ஒப்பந்தத்தை மாற்றி அமைத்திருப்பதாகம் குற்றம்சாட்டுகின்றன.

     


    பாராளுமன்ற தேர்தல் வரஇருக்கிற நேரத்தில் பாரதிய ஜனதா அரசு மீது ரபேல் விமான ஊழல் விவகாரத்தை பெரிய அளவில் கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாரதிய ஜனதா அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, இந்த முறைகேட்டில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று குற்றம்சாட்டினார். விமான ஊழல் விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் திட்டங்களை காங்கிரஸ் உருவாக்கி வருகிறது.

    இது சம்பந்தமாக ஏற்கனவே நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் உள்ள ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. விரைவில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் திடம் இதுபற்றி புகார் அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    மத்திய அரசு துறைகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை கண்காணிப்பதற்காக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பிடம் ஊழல் முறைகேடுகள் குறித்து புகார் அளித்தால் அதுபற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்.

    எனவே ரபேல் போர் விமான முறைகேடு விவகாரத்தையும் ஊழல் கண்காணிப்பு ஆணையத் திடம் காங்கிரஸ் கொண்டு செல்கிறது. புகாருடன் பல்வேறு ஆவண ஆதாரங்களையும் கொடுக்க உள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி கூட்டணி மேலும் பல்வேறு எதிர்க் கட்சிகளுடன் இணைந்து புகாரை கொடுக்கலாம் என திட்டமிட்டது. ஆனால் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் தான் இந்த வி‌ஷயத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளன. எனவே காங்கிரஸ் தனித்து புகார் கொடுப்பதா? அல்லது மற்ற கட்சிகளையும் இணைத்து கொண்டு புகார் கொடுப்பதா? என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளனர்.

    இந்த புகாரை ஏற்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆய்வு மேற் கொண்டால் அது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையலாம்.

    எனவே இந்த வி‌ஷயத்தை பூதாகரமாக்க காங்கிரஸ் நினைக்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்துவதை வாரிசு அரசியல் என்று பாரதிய ஜனதா கடுமையாக விமர்சித்து வருகிறது. எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இந்த ஊழல் விவகாரத்தை கிளப்ப காங்கிரஸ் விரும்புகிறது.

    பாரதிய ஜனதா மூத்த தலைவர்களான யஷ்வந்த்சின்கா, அருண்ஷோரி ஆகியோரும் ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று சமீபத்தில் பேட்டி அளித்தனர். இதுவும் தங்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக காங்கிரஸ் கருதுகிறது.

    ×