search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97622"

    • திங்கட்கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர்.
    • பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது.

    திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார்.கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பைச் சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம். கார்த்திகை சோமவார நாளில் சிவனாருக்கு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்யுங்கள்.

    சோமன் என்றால் சந்திரன், அவனுக்கு உரிய தினம் திங்கள் கிழமை. அந்தக் கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி.

    காரணம், இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லுவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன. சிவனின் ஜடாமுடியில் சந்திரன் அமர்ந்திருந்தான். இதைக் கண்ட பார்வதிக்கு ஆச்சர்யம். தன் சுவாமியின் ஜடா முடியில் சந்திரன் அமரும் பேறு எப்படி வாய்த்தது என்று ஸ்வாமி சந்திரனைத் தாங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? அதற்கு அவன் செய்த பாக்கியம் என்ன? என்று பரமனிடமே கேட்டாள் பார்வதி.

    எனக்காக விரதம் இருந்து என்னை மகிழ்வித்தான். அதுவே காரணம் என்றார். அதற்கு பார்வதி தேவியும் மற்றும் அங்கிருந்தவர்களும் தங்களுக்கும் இந்த விரதம் குறித்துக் கூறி தாங்களும் பெருமானின் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற வழிசெய்யக் கோரினாள். அதன்படி, சிவபெருமானே, பார்வதி தேவிக்கும் மற்றும் அங்கே கூடியிருந்தவர்களுக்கும் இந்த விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார் என்கிறது புராணம்.

    திங்கட்கிழமையில் அதிகாலையில் குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். அந்தணரை தம்பதியாய் வரவழைத்து, அவர்களையே பார்வதி, பரமேஸ்வரனாக பாவனை செய்து அவர்களுக்கு தானம் அளித்து ஆசிர்வாதம் பெற வேண்டும்.வசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.

    • ஏகாதசியில் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது.
    • ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது.

    திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். இந்த திதியை புண்ணியகாலம் என்பர்.

    இதில், மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.

    ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக்கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள்.

    ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.ஏகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது.

    இதனால், மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது, உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். விரதத்தை முடித்த உடன், ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    உபவாசத்தின்போது, சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.

    • அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் குருபகவான். 
    • குரு பகவானுக்கு உகந்த ஸ்லோகங்கள், மந்திரங்கள் படிப்பது மிகவும் நல்லது.

    குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமை அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

    குரு பகவானுக்கு வியாழக்கிழமை வழிபாட்டிற்கு உரியத் தினமாகும். அள்ளிக் கொடுப்பதில் வள்ளல் என்ற பட்டத்திற்குச் சொந்தமானவர் குருபகவான். 

    இது போன்ற குரு பகவானின் பலன்களைப் பெறுவதற்கு சில விரதங்களை கடைப்பிடித்தால் குறிப்பாக வியாழக்கிழமைகளில் விரதம் இருந்தால் சில சிறப்பான மூலிகை கிடைக்கும் என்பது ஐதீகமாகும். இதன் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

    வியாழக்கிழமை விரதம் இருந்தால் குரு பகவானின் முழு நன்மைகளையும் பெற முடியும். அதன் மூலம் பல நன்மைகளும், சிறப்பான நன்மைகளும் உண்டாகும். ஒரு ஆண்டிற்கு 16 வளர்பிறை வியாழக்கிழமை விரதம் இருந்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். 

    இந்த விரதத்தை 3 ஆண்டுகள் கடைப்பிடித்தால் குரு பகவானின் முழு அருளையும் பெற்று வாழ்க்கை முழுவதும் சிறப்பான செல்வங்களைப் பெறலாம்.

    குரு பகவானுக்கு விரதம் இருப்பவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு மஞ்சள் நிற உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். உணவு நீர் எதையும் அருந்தாமல் நவகிரக சன்னதிக்குச் சென்று மஞ்சள் நிறப் பூக்களை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

    குருபகவானுக்கு மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் மேலும் சிறப்பாகும். குங்குமப்பூ கலந்த மாலை குரு பகவானுக்கு அபிஷேகம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். விரதம் இருக்கும் நாட்கள் முழுவதும் உணவருந்த அமைந்திருந்தால் நல்ல பலன்களைப் பெற முடியும். குரு பகவானுக்கு உகந்த ஸ்லோகங்கள், மந்திரங்கள் படிப்பது மிகவும் நல்லது.

    இரவு நேரத்தில் விரதத்தை முடித்துக் கொள்ள உப்பு சேர்க்காத உணவு குரு பகவானுக்குப் படைத்துவிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். 

    இவ்வாறு விரதத்தை வியாழக்கிழமை என்று முழுமையாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் பல யோகங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமண சிக்கல், குழந்தை இல்லாமை, தொழில், வியாபாரம் போன்ற சிக்கல்கள் நிவர்த்தியாகும். வாழ்வில் வளம் பெருகும்.

    • தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.
    • கார்த்திகை விரத பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது

    கார்த்திகை தீபம் தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது.

    திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்த அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்தாள். அப்போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டாள்.

    அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய கார்த்திகை தீபம் ஏற்றி விரதம் இருந்தாள். கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளினால் சகல மேன்மைகளையும் பெறுவர். கார்த்திகை விரதத்தை தவறாமல் பன்னிரண்டு வருடம் கடைப்பிடித்து நாரத முனிவர் சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றார்.

    கார்த்திகை அன்று தீபங்கள் ஏற்றி வைத்து விட்டு மூன்று முறை

    தீபம் ஜோதி பரப்பிரம்ஹம்!

    தீபம் சர்வ தமோபஹம்!

    தீபனே சாத்யதே சர்வம்!

    சந்த்யா தீப நமோஸ்துதே!

    என்ற சுலோகத்தை சொல்வது மிகவும் விசேஷமான பலனை தரும். திருக்கார்த்திகை தினத்தில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.

    கார்த்திகை திருநாளில் நெல் பொரியுடன் வெல்லப்பாகும், தேங்காய் துருவலும் சேர்த்து பொரி உருண்டை பிடித்து அண்ணாமலையாருக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள். வெள்ளை நிறப்பொரி திருநீறு பூசிய சிவனையும், தேங்காய்ச் துருவல் கொடைத் தன்மை கொண்ட மாவலியையும், வெல்லம் பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன.

    ஆத்மார்த்தமான பக்தியால் மகிழ்ந்து சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்ற தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும், அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

    • கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உரியது.
    • சிவத்தலங்களை தரிசிப்பதும் கோடிப்புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

    சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்து சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.

    உலகம் முழுவதும் ஒளி வீசச்செய்யக்கூடிய சந்திரனின் சாபத்தை சிவபெருமான் நிவர்த்தி செய்த தினம் ஒரு கார்த்திகை மாத திங்கட்கிழமை ஆகும். 'க்ஷயரோகம்' என்னும் உடல் தேயும் நோய்க்கு ஆளான சந்திரன் சிவனைச் சரணடைந்து மீண்டும் வளர ஆரம்பித்த தினமே கார்த்திகை சோமவாரமாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்வர். இத்தகைய கார்த்திகை சோமவாரத்தில் நாம் சிவபெருமானை ஆராதித்து விரதம் இருந்து வழிபடுவதால் நம் வாழ்வின் கஷ்டங்கள் விலகி இஷ்டங்கள் பூர்த்தியாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    கார்த்திகை மாதம் இந்துக்களிடையே புனிதமான ஒரு மாதமாகவும் பலவிரதங்களை அனுஷ்டிக்கும் மாதமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதத்தில் பல விரதங்கள் இருப்பினும் கார்த்திகை சோமவார விரதம் சிவனுக்கு உரியது. துன்பங்களை விலக்கி இன்பங்களை வழங்கக்கூடிய விரதமாக சோமவார விரதம் அமைகிறது.

    சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

    கார்த்திகை சோமாவார திருநாள்களில் சிவத்தலங்களை தரிசிப்பதும் கோடிப்புண்ணியத்தைப் பெற்றுத் தரும். கார்த்திகை சோம வார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி அன்றாட அனுஷ்டானங்களை முடித்து சிவ பூஜை செய்ய வேண்டும்.

    ஒரு வயதுமுதிர்ந்த தம்பதியினரை அழைத்து வந்து உபசாரங்கள் செய்து அவர்களுக்குத் தங்களால் இயன்ற அளவு தானங்கள் அளித்து ஆசி பெறுதல் வேண்டும். அன்று பகல்பொழுது உண்ணாமல் இருந்து மாலையில் சிவதரிசனம் செய்து முன்னிரவில் சிறு உணவு உண்டு உபவாசம் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு செய்ய முடியாதவர்கள் அன்று நீராடி சிவ ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற அபிஷேக திரவியங்களை சமர்ப்பித்து வழிபடுதல் வேண்டும்.

    கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில், கணவனும் மனைவியும் ஆலயங்களுக்குச் சென்று வருவது உத்தமம். அதனால் சிவ-சக்தியின் ஆசி கிடைத்து, காலம் முழுவதும் அந்தத் தம்பதி கருத்து வேறுபாடின்றி இணைந்திருப்பார்கள்.

    கார்த்திகை மாதத்தில் ஸ்ரீமன் நாராயணர், ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் எழுந்தருள்வதாக ஐதிகம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரி மஞ்சளால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால், மகா விஷ்ணுவுடன் லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள் என்கிறார்கள் பக்தர்கள்.

    கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சிப்பவர்கள், வைகுண்டம் செல்லும் பாக்கியத்தை அடைவர். கார்த்திகை சோம வார நாளில், சங்காபிஷேக தரிசனம் செய்தால் கடன் தொல்லையில் இருந்து மீள்வர் என்பது நம்பிக்கை.

    • ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.
    • இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்டத்தை அடைவார்கள்.

    ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என போற்றப்படுகிறது. பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் 'பீம விரதம்' என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.

    இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள். தண்ணீர் பஞ்சமாக இருக்கும் இந்த காலத்தில் தண்ணீரை தானம் செய்வார்களா என்று யோசிக்காதீர்கள். மகத்துவம் நிறைந்த இந்த நாளில் ஒரு குடம் ஏன் ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீராவது தவித்த வாய்க்கு தானமாக கொடுத்து பாருங்கள் அப்புறம் உங்களுக்கு நடக்கும் நன்மைகளை நீங்கள் அறிவீர்கள்.

    நிர்ஜல ஏகாதசி விரதமிருப்போர் எமதர்மராஜாவை சந்தித்து அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி தண்டனை அனுபவிக்க வேண்டாம். வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள். புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும். நிர்ஜல ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும். ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம்.

    இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள். அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள். இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்டத்தை அடைவார்கள். இன்று நீங்களும் பெருமாளை நினைத்து விரதம் இருந்து ஒரு குடம் தண்ணீர் யாருக்காவது தானமாக கொடுங்களேன்.

    • சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
    • சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

    கார்த்திகை மாதம் துவாதசி நாளில், துளசி தேவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து துளசி தளைகளால் மகா விஷ்ணுவை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளைக்கும் ஒவ்வொரு அஸ்வமேதயாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

    கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதி தேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம்.

    விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.

    நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

    தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர்.

    கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

    கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, விரதம் இருந்து சிவவிஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, ஜென்ம நட்சத்திரம் ஆகிய 5 தினங்கள் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.
    • உண்ணா நோன்பு கடைபிடித்து வந்தால் உங்கள் உடலுக்குள் ஏற்படும் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொள்ளமுடியும்.

    உண்ணா நோன்பு என்பது நம் உடலுக்குள் வாழும் நுண்கிருமிகளை கட்டுப்படுத்துவதாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். எப்படி என்றால் அமாவாசை பவுர்ணமி எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறதோ அதுவரை சாப்பிடக்கூடாது. அடுத்து வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி தினங்களில் அந்த திதி எப்போது தொடங்கி எப்போது முடிகிறதோ அதுவரை உண்ணாவிரதம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கடுத்து உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்றும் அது தொடங்கி முடியும் காலம் வரை நோன்பு இருக்க வேண்டும்.

    இப்படியாக ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை, பவுர்ணமி,வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, ஜென்ம நட்சத்திரம் ஆகிய 5 தினங்கள் உண்ணா நோன்பு இருக்க வேண்டும். இவ்வாறு கடைபிடித்து வந்தால் உங்கள் உடலுக்குள் ஏற்படும் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொள்ளமுடியும். உண்ணா நோன்பு சமயத்தில் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்.

    ஏன் இந்த 5 நாட்களில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என்றால், உடலில் நன்மை பயக்கக் கூடிய நுண்கிருமிகளும் தீமை பயக்கக் கூடிய நுண் கிருமிகளும் இருக்கின்றன. தீமை பயக்கக்கூடிய நுண்கிருமிகள் சாப்பிட்டுவிட்டு ஏற்படுத்தக்கூடிய கழிவுகள் தான் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த கிருமிகள் மேற்கண்ட 5 தினங்களில் மிகவும் செயலூக்கத்துடன் இருக்கும்.

    அதனால் அந்த நாட்களில் நிறைய உணவை சாப்பிடும். எனவே அவற்றை தடுக்கும் வகையில் அன்றைய தினம் உண்ணாவிரதம் இருக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.

    இந்த நாட்களில் நாம் உண்ணாவிரதம் இருந்து வந்தால் தீமை செய்யும் நுண்ணுயிர்களால் உண்டாகும் விஷக்கழிவுகள் இருக்காது. உடல் தூய்மையாக இருக்கும். இதற்கு தான் அந்த உண்ணா நோன்பு, கடவுளைச் சென்று அடைவதற்காக அல்ல.

    நம்முள் இருக்கும் உயிர்தான் கடவுளின் அங்கம். அந்த உயிரை காத்து நிற்கும் நம் உடல் ஒரு கோயில். அந்த கோயிலை தூய்மையாக வைத்திருக்க ஏற்படுத்தப்பட்டது தான் உண்ணா நோன்பு.

    -டாக்டர் சி கே. நந்தகோபாலன்.

    • குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
    • குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும்.

    ஒருவருக்கு குல தெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று பல்வேறு நிலைகளில் வழிபாட்டுக்கு உரிய தெய்வங்கள் இருக்கலாம். பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக ஒருவரது குல தெய்வமே குறிப்பிடப்படுகிறது. காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக போற்றப்படுவது ஐதீகம். தனது அருளை குலதெய்வம் அளிப்பதுடன், மற்ற தெய்வ வழிபாடுகளுக்கான பலன்களையும் அளிப்பது ஒருவரது குல தெய்வம்தான் என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாள் செய்யாததை கோள் செய்யும் என்றும், கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது.

    ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும். அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை என்றும் சொல்லப்படுகின்றன. குல தெய்வங்கள் இல்லாத குடும்பத்தினர் எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டு, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், முற்றிலும் நிவர்த்தி செய்ய இயலாது என்ற ஆன்மிக சூட்சுமத்தை சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஒவ்வொருவருக்கும் இரண்டு விதமான பூர்வ ஜென்ம கர்ம வினைகள் இருக்கின்றன. அவை, முன்னோர் செய்த பாவ, புண்ணியங்களால் வரும் நன்மை, தீமைகள் மற்றும் அவரவர் வாழ்கையில் செய்துள்ள பாவ, புண்ணியங்களால் ஏற்படும் நன்மை, தீமைகள் ஆகியவையாகும்.

    பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பர். அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குல தெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால் ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    • நெய் அபிஷேகம் ஸ்ரீ சன்னிதானத்தில் செய்ய வேண்டிய ஒன்றாகும்.
    • அபிஷேகம் செய்து கிடைக்கும் நெய்யை பிரசாதமாக உபயோகப்படுத்த வேண்டும்.

    எருமேலி: தர்மசாஸ்தா சன்னதி (எருமேலி) ஐயப்ப பக்தர்கள் இச்சன்னதியில் அவசியம் பேட்டை துள்ள வேண்டும். மணிகண்டன் ராஜசே கரமன்னன் ஆணைப்படி காட்டுக்கு வேட்டையாடச் சென்று வந்ததன் நினைவாக இது செய்யப்படுகிறது. பேட்டைதுள்ளல் என்பது மகிழ்ச்சியாக ஆடப்படும் நடனம், பேட்டை துள்ளலின் போது சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தக்கத்தோம் என்று பாடவேண்டும் காணிக்கைகளை உண்டியலில் போடவேண்டும்.

    பம்பா நதி வழிபாடு: பம்பை நதியில் பக்தியுடன் ஐயப்பனை நினைவில் கொண்டு நீராட வேண்டும். நீராடியபின், குருதட்சணை, அன்னதானம், பம்பை விளக்கு ஆகிய சக்திக்குரிய பூஜைகளை நடத்த வேண்டும். பம்பை நதிக்கரையில் பம்பா சத்யா எனும் அன்னதானம் செய்ய வேண்டும். காட்டிலுள்ள மூலிகை மரம், வேர் போன்றவற்றை விறகாகக் கொண்டு தயாரிக்கப்படும் அன்னத்தையும் மற்றும் உள்ள பதார்த்தங்களையும் உண்பதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகின்றன.

    பம்பை-ஸ்ரீராமர் அனுமர் கோவில் வழிபாடு: பம்பை நதிக்கரையில் உள்ள கணபதி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டபின் ஸ்ரீராமர் கோவிலிலும், ஸ்ரீஹனுமார் கோவிலிலும் வழிபட வேண்டும்.

    பந்தள ராஜ வந்தனம்: நீலிமலை ஏறுவதற்கு முன்பாக நதிக்கரையில் வீற்றிருக்கும் பந்தளராஜா ஆசிரமத்திற்கு வந்து இறைவனை வழிபட்ட பிறகே செல்ல வேண்டும்.

    அப்பாச்சிக்குழி, இப்பாச்சிக்குழி: ஐயப்ப சுவாமியின் முக்கியமான பூதகணமான கடுவரனால் துர்பூதங்களும், துர்வேதனங்களும் இங்கு அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கன்னி சுவாமிகள் தங்கள் மூத்த குருசுவாமி ஆணைப்படி இந்த இடத்தில் அரிசி மாவு உருண்டையும் வெல்ல உருண்டை களையும் இந்தக்குழியில் போட வேண்டும்.

    சரஸ்குழி ஆல்துறை: கன்னிசுவாமிகள் குருதட்சணை வழங்கியபிறகு இந்த இடத்தில் சரக்கோல் குத்த வேண்டும்.

    நெய் அபிஷேகம்: நெய் அபிஷேகம் ஸ்ரீ சன்னிதானத்தில் செய்ய வேண்டிய ஒன்றாகும். ஐயப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்து கிடைக்கும் நெய்யை பிரசாதமாக உபயோகப்படுத்த வேண்டும்.

    கணபதி சுவாமி சன்னதி: இங்கு ஒரு ஹோமகுண்டம் இருக்கும். இதில் நெய், தேங்காயின் ஒரு பங்கை போட வேண்டும்.

    சண்முக சுவாமி சன்னதி: இதுவும் மகா கணபதி சன்னி தானத்தைப்போல சன்னதிக்குள் இருக்கிறது. இங்கு பன்னீர், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் முதலியவற்றை ஏற்றி வழிபட வேண்டும். மாளிகைப்புறத்தம்மா ஐயப்ப சக்தி ஸ்வரூபிணி தேங்காய் உருட்டல் அந்த அம்மனுக்குரிய முக்கி யமான வழிபாடு, இங்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பாக்கு முதலியவற்றை தேவியின் முன்வைக்க வேண்டும். இங்கு பிரசாதம் வாங்கிக் கொள்ளவும்.

    கருத்த சுவாமிகள்: அவல், நெல்பொறி, வெல்லம், பழம், தேங்காய், வறுத்தபொடி முதலியவற்றை செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

    கருப்ப சுவாமிகள்: இங்கு கற்கண்டு திராட்சைப்பழம், கற்பூரம் ஆகியவற்றை காணிக்கையாக வைத்து வழிபட வேண்டும்.

    நாகராஜா, நாகஷியம்: இங்கு மஞ்சள்பொடி, கற்பூரம் வைத்து வணங்க வேண்டும். பின் சர்ப்ப தோஷம் ஏற்படாமல் இருக்க சர்ப்ப பாட்டு பாட வேண்டும்.

    வாபர் சுவாமி: இந்த சன்னதியில் வாசனை திரவியங்களான பன்னீர், ஊதுபத்தி, தேங்காய், நெல், மிளகு ஆகிய வற்றை வைத்து வணங்க வேண்டும்.

    • விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும்.
    • ஐயப்பன்மார் மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.

    1.  ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ந் தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னிதானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும் படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.

    2 .துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.

    3.  பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்திலிருந்து குருசாமியை முழுமனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

    4.நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போது முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.

    5.மலைக்குச் செல்லக் கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியோர் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமுமில்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழுப் பொறுப்பினையும் வைத்து, முகமலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    6.மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சாரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.

    7.காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனைகளில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.

    8.படுக்கை, தலையணைகளை நீக்கி, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

    9.களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

    10.எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றைக் தவிர்க்கவேண்டும்.

    11.மற்றவர்களிடம் பேசும் பொழுது, "சாமி சரணம்"எனத் தொடங்கி, பின் விடை பெறும்பொழுதும் "சாமிசரணம்" எனச் சொல்ல வேண்டும்.

    12.விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.

    13.பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்கவேண்டும்.

    14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் "நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம்" என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும் பொழுது போய் வருகிறேன். என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பத்தியுணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.

    15.மாலையணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்.

    16.மாலையணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.

    17.யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்பன் பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக் காவது அன்னமிடுதல் மிக்க அருள்பாலிக்கும்.

    18.மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்பமார்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டிய திருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்துகொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.

    19.எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமானதாகும். எனவே எந்தப் பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். மாதவிலக்கான பெண்களை காணக்கூடாது. தவறுதலாகக் காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.

    20.இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும். யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.

    21. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்திலிருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற பழமலை ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

    22.12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.

    23.யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.

    24.பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.

    25.பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப்பெறுவதுதான் சபரிமலை பஸ்பம், இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    26.இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யை யும், விபூதி பிர சாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

    27.ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத் தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக் கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.

    28.குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களிலெல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.

    29.ஐயப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி ஐயப்பன்மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில், கடமை சூழ்நிலை கருதி எரிமேலியிலிருந்து சாலைக்காயம் வழியாகவும், சிலர் வண்டிப்பெரியாறு வழியாகவும் சபரிமலை செல்கிறார்கள். என்றாலும் பெரிய பாதையில் செல்லும் பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகளின் சக்தி கலந்த காற்றினை பெறுவதாலும், பல மூலிகைகளை கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும் எழில்மிக்க இயற்கைக்காட்சிகளைக் கண்டு களிப்பதால் உள்ளம் பூரிப்பதாலும், பேரின்பமும் பெருநலமும் அடைகிறோம். நீண்டவழிப்பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி வளர்கிறது.

    30.யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.

    31.யாத்திரை இனிதே நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப்படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

    • நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல்
    • இவை ஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதி.

    1. இருமுடியுடன் 18 படி ஏறுதல்

    2. நெய் அபிஷேகம்

    3. தீபஸ்தம்பத்தையும் கணபதி, நாகராஜாவையும் வணங்குதல்

    4. நைவேத்தியப் பொருட்களை ஐயப்பனுக்குச் சமர்ப்பித்தல் (கற்பூர ஆழி எடுத்தல்)

    5. ஐயப்ப தரிசனம்

    6. மஞ்சமாதா தரிசனம்

    7. மலைநடை பகவதி நவக்கிரக வழிபாடு

    8. கடுத்த சுவாமிக்குப் பிரார்த்தனை

    9. கருப்பசுவாமிக்குப் பிரார்த்தனை

    10. நாகராஜா, நாகபட்சிக்குப் பிரார்த்தனை

    11. வாபர் சுவாமிக்கு காணிக்கை செலுத்துதல்

    12. திருவாபரணம் பெட்டி தரிசனம்

    13. ஜோதி தரிசனம்

    14. பஸ்மகுளத்தில் குளித்தல்

    15. மகரவிளக்குத் தரிசனம்

    16. பிரசாதம் பெற்றுக்கொள்ளுதல்

    (அரவனை, பாயாசம், அப்பம் உள்பட)

    17. தந்திரி, மேல் சாந்திகளை வணங்குதல்

    18. 18படி இறங்குதல்

    இவை ஜோதி சமயம் செல்பவர்களுக்கு உள்ள நியதி. மற்றவர்கள் ஜோதி தரிசனம் திருவாபரணம் பெட்டி தரிசனம் தவிர மற்றவை - செய்யலாம்.

    ×