search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிபத்து"

    புதுவையில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி நகரின் பிரதான வீதியில் அடுத்தடுத்து கடைகள் உள்ளது.

    பிளாஸ்டிக் மொத்த வியாபாரிகள் இந்த பகுதியில் அதிக அளவில் கடைகள் வைத்துள்ளனர். இவர்கள் கடையோடு பிளாஸ்டிக் குடோன்களையும் அமைத்து உள்ளனர்.

    நகரின் மிக நெரிசலான பகுதியான இங்கு நேற்று இரவு 11 மணியளவில் ஒரு கடையில் திடீரென தீப்பிடித்தது. இதில் அந்த கடையில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால், தீ வேகமாக மளமளவென அருகில் உள்ள பிளாஸ்டிக் குடோனுக்கு பரவியது.

    இதனையடுத்து தகவல் அறிந்த புதுவை தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 2 வாகனங்களில் வந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.

    தீ கட்டுக்குள் அடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதனால் தீயணைப்பு வீரர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

    மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிளாஸ்டிக் கரும்புகையால் மூச்சு விட முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அந்த பகுதியை சுற்றி உள்ள மக்களை போலீசார் வெளியேற்றினர்.

    அசம்பாவிதங்களை தவிர்க்க அந்த பகுதியில் மின் வினியோகம் தடைபட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

    கட்டுக்குள் அடங்காத தீயை அணைக்க கோரிமேடு, வில்லியனூர், சேதராப்பட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தலா ஒரு வண்டியும் வந்து தீயை அணைத்தனர்.

    சுமார் 5½ மணி நேரம் போராடி அதிகாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    பிளாஸ்டிக் தீயை அணைக்கும் திரவம் கலந்த நுரையுடன் கூடிய நீர் இல்லாததால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மேலும் நவீன கருவிகளும் இல்லாததால் தீயை போராடி அணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இருப்பினும் தீயணைப்பு வீரர்களின் சாமர்த்தியத்தால் அடுத்து இருந்த குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேலும் உருளையன்பேட்டை மற்றும் போக்குவரத்து போலீசார் தீயை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தை எச்சரித்து அப்புறப்படுத்தினர்.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. சிவா தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து தீயணைப்பு வீரர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டனர். சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி தீயணைப்பு வாகனம் வர உதவி செய்தனர்.

    ஆனாலும், இதுவரை சேத மதிப்பு கணக்கிடப்படவில்லை. இருப்பினும் லட்சக்கணக்கில் சேதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? பட்டாசு காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தீபாவளி பண்டிகையில் தீவிபத்தை கட்டுப்படுத்த சென்னையில் தயார் நிலையில் 85 தீயணைப்பு வாகனங்களும் தண்ணீர் லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Diwali
    சென்னை:

    தீபாவளி அன்று பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னையில் உள்ள 38 தீயணைப்பு நிலையங்களில் தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களிலும் தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. மொத்தம் 85 தீயணைப்பு வாகனங்களும் தண்ணீர் லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ராக்கெட் வெடியால் அதிக அளவு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் 32 இடங்களிலும், பிற மாவட்டங்களில் 90 இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 81 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து தீ விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில ராட்சத பலூன் பறக்க விடப்படுகிறது. இதனை தீயணைப்பு துறை டி.ஜி.பி. மகேந்திரன் பறக்க விடுகிறார். இணை இயக்குனர் சாகுல் அமீது மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். #Diwali

    செங்குன்றம் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது.
    செங்குன்றம்:

    செங்குன்றம் ஜி.எஸ்.டி சாலையில் தனியாருக்கு சொந்தமாக ஜவுளிக்கடை உள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த கடையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு சென்றனர். நள்ளிரவு 2.30 மணியளவு கடையில் இருந்து புகை வருவதாக சிலர் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடை உரிமையாளர் டேவிட்ராஜ் கடைக்கு வந்தார். அப்போது கடையில் உள்ள துணிகள் தீப்பற்றி எரிவது தெரிய வந்தது. இதுகுறித்து தீ அணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். சென்னை மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி பாஸ்கரன், மாதவரம் தீயணைப்பு நிலைய அதிகாரி சற்குணம் ஆகியோர் மேற்பார்வையில் 25 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    5 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காலை 7.30 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஜவுளி கடையில் தரைபகுதி, முதல்மாடி, 2-வது மாடியில் உள்ள துணிகள் முழுமையாக எரிந்து நாசமாகின. 3-வது மாடியிலும் துணிகள் எரிந்து இருந்தன.

    இந்த பயங்கர தீவிபத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சினிமா தியேட்டரில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கருகி உள்ளன. #AndhraFire #VisahapatnamCinemaHall
    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஜூவாகா பகுதியில் ஸ்ரீ கன்யா சினிமா ஹால் உள்ளது. இங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தியேட்டரின் தரைத்தளத்தில் பற்றிய தீ, மளமளவெனப் பரவி கூரை வரை பற்றி எரிந்தது. இதனால் கூரையில் இருந்து பல அடி உயரம் நெருப்பு பிளம்பாக காட்சியளித்தது.

    தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களில் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தீவிபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியுள்ளன.  தீப்பிடித்தபோது ஒருசில ஊழியர்கள் மட்டுமே தியேட்டர் வளாகத்தில் இருந்ததாகவும், அவர்கள் உடனடியாக வெளியேறிவிட்டதாவும் தெரிகிறது. தீயை முழுமையாக அணைத்தபிறகே சேத விவரம் தெரியவரும். #AndhraFire #VisahapatnamCinemaHall
    சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் நடந்த விபத்தில் உடல் கருகிய தொழிலாளி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    சிவகாசி:

    சிவகாசியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் தாயில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவகாசி அருகே உள்ள மண்குண்டாம்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் (வயது 48) என்பவர் ஒரு அறையில் ரசாயன மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மருந்து கலவைகள் உரசி தீப்பிடித்தது. அருகில் மத்தாப்புகளும் இருந்ததால் அதில் தீப்பிடித்து மளமளவென பரவி புகைமூட்டம் ஏற்பட்டது. இதில் சிக்கிய நாகராஜன் உடல் கருகினார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் விரைந்து செயல்பட்டதால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

    தீயில் உடல் கருகிய நாகராஜனை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அமெரிக்காவில் தீவிபத்து காரணமாக சுதந்திர தேவி சிலையை காணவந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். #LibertyStatue
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்பர் தீவில் சுதந்திர தேவி சிலை உள்ளது. கையில் தீபத்தை ஏந்திய நிலையில் இருக்கும் அந்த சிலை 151 அடி உயரம் கொண்டது.

    தீவின் நடுவில் நிறுவப்பட்டிருக்கும் இந்த சிலையை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அப்போது அங்கு பயன்படுத்தப்பட்ட 3 புரோடேன் கியாஸ் சிலிண்டர்களில் இருந்து வெளியான தீ மளமளவென பரவியது.

    இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பார்வையாளர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    தீவிபத்து காரணமாக சுதந்திர தேவி சிலையை காணவந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். #LibertyStatue
    மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 பேர் காயமடைந்தனர். #FireAccident
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் மஹால் சாலையில் பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு நேற்று மதியம் மூன்று மணியளவில் திடீரென தீ விபத்து நேரிட்டது.

    தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 9 தீயணைப்பு வாகனங்கள், 2 ஜம்போ டேங்கர்கள் சென்றது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 45 பேர் காயமடைந்தனர். அவர்களில் 22 பேர் தீவிர சிகிச்சைப் பிர்வில் அனும்திக்க்ப்பட்டு உள்ளனர்.
    திருத்துறைப்பூண்டியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேமாகி விட்டதாக கூறப்படுகிறது.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பெரியநாயகிபுரத்தில நடந்த தீ விபத்தில் 45 வீடுகளும், திருத்துறைப்பூண்டியை அடுத்த அரியலூரில் நடந்த தீவிபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதமாகின. இதில் ரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பொன்னையன் செட்டித்தெருவில் உள்ள கருப்பசாமி என்பவரின் குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக நேற்று இரவு 2 மணி அளவில் தீபிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் மளமளவென பரவியது. இதில் கருப்பசாமி வீடு, அவர் நடத்தி வந்த மளிகை கடை மூத்தம்மாள் வீடு மற்றும் அவர் நடத்தி வந்த விறகு கடை மற்றும் அருணாசலம், ஜோதி, கோவிந்தராஜ் ஆகியோரின் வீடுகள் முற்றிலும் எரிந்து சேமானது. ஜோதி வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேமாகி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும். திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று தீயை அணைத்தனர். 4 பேரின் வீடுகளில் இருந்த சிலிண்டர்களை மீட்டனர்.

    இந்த தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட 5 வீடுகள் மற்றும் 2 கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் தங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. #tamilnews
    தலைநகர் டெல்லியில் இருந்து ஜம்மு-தாவி செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று திடீரென தீ விப்த்து ஏற்பட்டது. #Rajdhani #Fire
    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து ஜம்மு-தாவி நோக்கி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டது. சிறிது நேரத்தில் சப்சி மண்டி ரெயில் நிலையம் அருகே வந்தபோது, ரெயிலின் பி-10 கோச்சில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதைக்கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தன.
     
    இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #Rajdhani #Fire
    கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மின் இணைப்பு அறையில் திடீரென்று தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மின் இணைப்பு அறையில் திடீரென்று தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு வந்து உடனடியாக தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டு இருந்தது.  தீ விபத்து காரணமாக மருத்துவமணையில் பரபரப்பு நிலவியது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் மருத்துவமனையில் தீ அனைத்து மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்து உயர் மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
    நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nigeria #NigeriaOilTankerfire

    லாகோஸ்:

    நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று மாலை ஒரு எண்ணெய் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த லாரியில் இருந்து எண்ணெய் வெளியே கசிய தொடங்கியது. 

    சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. அந்த தீ அருகில் இருந்த வாகனங்களுக்கும் வேகமாக பரவியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் 5 பேருந்துகள், 2 டிரக்கள் மற்றும் 45 கார்கள் தீக்கிரையாகியாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரியின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. #Nigeria #NigeriaOilTankerfire
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தோல் தொழிற்சாலையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். #LeatherFactory #Fire
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஜாஜ்மாவ் பகுதியில் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
    இன்று இரவு அந்த தோல் தொழிற்சாலையில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதையடுத்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து 6-க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் வெளியாகவில்லை. தோல் தொழிற்சாலையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #LeatherFactory #Fire
    ×