search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்து"

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து வீட்டின் முன், உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்தினர் திடீரென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. மேலும், பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக செயல்பட்டதால், அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சில நாட்கள் கழித்து சித்துவும் தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அதன்பின் சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலிடம் கேட்டுக்கொண்டதால், சித்து ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் உயிரிழந்த அரசு ஊழியரின் குடும்பத்தினர், சில வேலையில்லாத செவிலியர்கள் திடீரென இன்று நவ்ஜோத் சிங் சித்து வீட்டின் முன் திரண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்களை சந்தித்த சித்து, பஞ்சாப் இன்று மிகவும் அதிகமான கடனில் உள்ளது’’ என்றார்.
    பாகிஸ்தானில் நடந்த விழாவின்போது காலிஸ்தான் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். #Sidhu
    பாகிஸ்தானின் கர்தார்பூரில், சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் அடக்கஸ்தலத்தில் தர்பார் சாகிப் குருத்வாரா கட்டப்பட்டு உள்ளது. இந்த நகரை இந்தியாவின் பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள தேரா பாபா நானக் நகருடன் இணைக்கும் விதமாக 4.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள வசதியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று கர்தார்பூர் நகரில் நடந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வா, இந்தியாவின் மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டிப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர் கோபால் சிங் சாவ்லாவுடன், சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சித்துவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாவ்லா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம், சித்துவுக்கு எதிராக மீண்டும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை விமர்சித்துள்ள பாஜக, ‘‘பாகிஸ்தான் மண்ணில் இது போன்ற தவறான யுக்திகளுடன் செயல்படுவதை புறந்தள்ளிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளது.
    பஞ்சாப் மந்திரி சித்துவை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை:

    தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் உணவு முறைகள் பற்றியும் இழிவாக பேசியதாக பஞ்சாப் மந்திரி சித்துவை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ‘‘தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் உணவு முறை பற்றியும் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் சித்து இழிவாக பேசியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் யாரும் இதை கண்டித்து அறிக்கைவிடவில்லை.

    சித்து கூட்டணி கட்சியான காங்கிரசை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழ் உணர்வு மிக்க, தமிழர்கள் மீது மதிப்பு வைத்துள்ள பா.ஜனதா போராட்டம் நடத்துகிறது.

    தமிழர்களை இழிவாக பேசிய சித்து மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கையில் தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் துணை போனது. இதனால் 1½ லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். எனவே தமிழர்கள் பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு அருகதை கிடையாது.

    அதே நேரத்தில் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு பா.ஜனதா கட்சி பாடுபட்டு வருகிறது. தமிழ் இனத்தை காக்க தொடர்ந்து பாடுபடு வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் தனஞ்செயன், மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார், நிர்வாகி காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சபரிமலை விவகாரம் குறித்து தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் பெரும்பாலான அய்யப் பக்தர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்கவில்லை. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மக்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்க வேண்டியதுதான் அரசாங் கத்தின் கடமை.

    நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டவர்கள். சட்டத்தை மீறமாட்டோம் என்று கூறும் கேரள முதல் மந்திரியும், அவர் சார்ந்த கட்சியினரும் சட்டத்துக்கு எதிராக போராடியது இல்லையா? ஜல்லிக்கட்டு போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது தானே. அதை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க தானே செய்தார்கள். எத்தனை தொழிற்சாலைகளில் கோர்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் கள்.

    இப்போது சபரிமலை விவகாரத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய மாட்டோம் என்று பிடி வாதமாக இருப்பது அவர் களது இந்து விரோத உணர்வை வெளிப்படுத்தி உள்ளது. பக்தர்களின் உணர்வுக்கு செவிசாய்க்கா விட்டால் அதற்குரிய பலனை ஆட்சியாளர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பாகிஸ்தான் மீது மிகவும் பற்றுள்ளவராக சித்து இருப்பதால் பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மந்திரி சபையில் சேர்ந்து கொள்ளலாம் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது. #BJP #PakistanCabinet

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் நவ்ஜோத்சிங் சித்து.

    ஓய்வுக்கு பிறகு டெலிவி‌ஷன் வர்ணனையாளராக இருந்த அவர் அரசியலுக்கு சென்றார். தற்போது காங்கிரசில் இருக்கும் சித்து பஞ்சாப் மாநில அரசில் கலாச்சார துறை மந்திரியாக இருக்கிறார்.

    இந்த நிலையில் தமிழக கலாச்சாரத்தையும், பாகிஸ்தான் கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு சித்து பேசினார். இமாச்சல பிரதேச மாநிலம் கசோலியில் நடந்த இலக்கிய திருவிழாவில் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் கலாச்சாரம் மொழி, உணவுகள் எனக்கு ஒத்து வராது. என்னால் தினமும் இட்லி சாப்பிட இயலாது. ஆனால் பஞ்சாப் கலாச்சாரமும், பாகிஸ்தான் கலாச்சாரமும் மொழியும், உணவு பழக்க வழக்கமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. இதனால் தென் இந்தியாவை விட பாகிஸ்தான் மக்களுடன் வாழ்வது எனக்கு எளிதானது.

    இவ்வாறு சித்து பேசினார்.

    சித்துவின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

     


    இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பத் பத்ரா இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மீது மிகவும் பற்றுள்ளவராக சித்து இருப்பதால் பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மந்திரி சபையில் சேர்ந்து கொள்ளலாம். அதுதான் அவருக்கு எங்களுடைய கனிவான அறிவுரையாகும்.

    சித்து தனது பேச்சில் தென் இந்தியாவை விட பாகிஸ்தான் உயர்ந்தது எனது தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. நாட்டை தென் இந்தியா, வட இந்தியா என்று பிரிப்பதே காங்கிரசின் சதி திட்டமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான ஜி.வி.எல். நரசிம்மராவ் இது தொடர்பாக கூறியதாவது:-

    சித்துவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒவ்வொரு தென் இந்தியர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். சித்துவையும் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். மேலும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்று அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டியணைத்து சித்து ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி இருந்தார். தற்போது அவர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். #BJP #PakistanCabinet

    பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியை கட்டி தழுவிய சித்துவின் செயலை தாம் எதிர்ப்பதாக பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். #NavjotSinghSidhu #AmarinderSingh
    அமிர்தசரஸ் :

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25ந்தேதி நடந்த தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்தது. அந்த கட்சி சிறிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கும் என தகவல்கள் வெளியாகின.

    இதனை தொடர்ந்து  பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமர் தேர்தலில் இம்ரான்கான் 176 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.  நாட்டின் 22வது பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார்.

    இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து நேரில் கலந்து கொண்டு, இம்ரான்கானை வாழ்த்தினார்.



    விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த சித்துவை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா வரவேற்று கட்டித்தழுவியதுடன் அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

    இந்த சம்பவத்திற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.  பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி தழுவும்பொழுது, இந்தியாவில் உள்ள பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை அந்நாட்டு ராணுவம் சுட்டு கொன்றது சித்துவின் நினைவுக்கு வரவில்லையா? என அக்கட்சியை சேர்ந்த சம்பீத் பத்ரா கேட்டுள்ளார்.

    தொடர்ந்து அவர், பாகிஸ்தானின் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என சித்துஜி கூறியுள்ளார்.  எதற்காக அவர் நன்றி தெரிவிக்க விரும்புகிறார்?  தீவிரவாதிகளை அனுப்பியதற்காகவா?, ஒன்றுமறியாத மக்களை கொன்றதற்காகவா?, நமது ராணுவ வீரர்களை கொன்றதற்காகவா? என்றும் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், சித்துவுக்கு அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி மற்றும் பஞ்சாப் முதல் மந்திரியான அமரீந்தர் சிங் இதுபற்றி கூறும்பொழுது, ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்.  அவர்களது ராணுவ தளபதியை தழுவுவது என்பது ஏற்று கொள்ள முடியாதது. இதனை நான் எதிர்க்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். #NavjotSinghSidhu #AmarinderSingh
    பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவில் பங்கேற்க பஞ்சாப் மந்திரியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து பங்கேற்க உள்ளார். #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது. அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் நாளை பதவியேற்க உள்ளார். 
     
    இந்த பதவி ஏற்பு விழாவுக்காக இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இம்ரான்கானின் அழைப்பை சித்து ஏற்று, இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு நல்லெண்ண தூதராக நான் பாகிஸ்தான் செல்ல உள்ளேன். எனது பயணத்தின் மூலம் இரு நாடுகளிடையே உள்ள உறவு மேம்படும் என நான் நம்புகிறேன் என அவர் வாஹா - அட்டாரி எல்லையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 
    1988-ம் ஆண்டு சாலையில் சண்டையிட்டு முதியவரை தாக்கிய வழக்கில் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத்சிங் சித்து குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. #NavjotSinghSidhu
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து, கடந்த 1988-ம் ஆண்டு
    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள சாலையில் குர்னம் சிங், என்பவருடன் ஏற்பட்ட சண்டையில், அவரது தலையில், நவ்ஜோத் சிங் சித்து பலமாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த, குர்னம் சிங், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த பாட்டியாலா கோர்ட், சித்துவை விடுவித்தது. இருப்பினும், மேல்முறையீடு செய்யப்பட்டதில் அரியானா ஐகோர்ட் 2007-ம் ஆண்டு, சித்துவை குற்றவாளி என அறிவித்தது. அவருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும்,ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து சித்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், எஸ்.கே கவுல் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கப்பட்டதாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து சித்து விடுவிக்கப்பட்டார்.

    அதே வேளையில், கொடூரமாக தாக்கப்பட்டதாக அவர் மீது உள்ள வழக்கில் சித்து குற்றவாளி என நீதிபதிகள் அறிவித்தனர்.  
    அவருக்கான தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

    முன்னதாக, கடந்த மாதம் 14-ம் தேதி வழக்கு விசாரணையின் போது, “சித்துவுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை” என பஞ்சாப் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
    ×