search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97689"

    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அதிதி ராவ் ஹிடாரி பாடல் ஒன்றை பாடுகிறார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒரு பாடலை அதிதி ராவ் பாடுவதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    வசந்த பாலன் இயக்கத்தில் நான் நடித்து, இசையமைக்கும் ஜெயில் படத்தின் மூலம் திறமைமிக்க அதிதி ராவ் ஹிடாரி தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். காத்தோடு என தொடங்கும் இந்த டூயட் பாடலில் நானும், அதிதியும் இணைந்து பாடுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 


    ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
     
    சர்வம் தாள மயம் படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் ஒருவருடம் முறையாக மிருதங்கம் கற்றதாக படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனன் கூறினார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon
    ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

    இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பு பற்றி ராஜீவ் மேனன் கூறியதாவது:

    இந்தப் படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் பயங்கரமாக உழைத்து இருக்கிறார். படப்பிடிப்பு செல்வதற்கு முன்பே உமையாள்புரம் சிவராமனிடம் ஒரு வருடம் மிருதங்கம் வகுப்புக்கு ஜி.வி.யை அனுப்பி வெச்சேன். ஜி.வி.க்கு மிருதங்கம் சொல்லிக் கொடுக்குறதுல உமையாள்புரம் சிவராமன் ரொம்ப ஆர்வமா இருந்தார்.



    ஒரு நாள் லேட்டானாலும் எனக்கு போன் பண்ணி, `என்ன சார் இன்னும் ஜி.வி வரலை’னு கேட்டுடுவார். அப்பறம் நான் போன் பண்ணி, `ஜி.வி லேட் பண்ணாம சீக்கிரம் போங்க’னு சொல்லுவேன். எவ்வளவு பிசியாக இருந்தாலும் தவறாமல் ஒரு வரு‌ஷம் முழுக்க கிளாஸுக்கு போனார் ஜி.வி’’ என்றார். #SarvamThaalamayam #GVPrakashKumar #RajivMenon

    கஜா புயலால் முற்றிலுமாக பாதிக்ப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்ளுக்கு உதவும் வகையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், விமல் உள்ளிட்டோர் களத்தில் இறங்கியுள்ளனர். #GajaCycloneRelief #GVPrakashKumar #Vemal
    கஜா புயல் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் உள்பட 8 மாவட்டங்களை புரட்டி போட்டது. அங்கு நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகலாம். அதனால் அதிக அளவில் நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றன.

    திரைத்துறையை சேர்ந்த நடிகர்களில் சிலர் நிவாரண நிதி அறிவித்தனர். சில நடிகர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கே சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.

    கமல்ஹாசன் 2 நாட்கள் பயணமாக தஞ்சை டெல்டா மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டார். இரவு பகல் பாராமல் பணியாற்றுபவர்களுக்கு நேரில் சந்தித்து பாராட்டுகள் தெரிவித்தார்.

    கஸ்தூரி வாட்டர் பில்டர்களோடு நேற்று இரவு தஞ்சை மாவட்டத்துக்கு சென்றார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களைத் தனது குழுவுடன் பார்வையிட்ட ஜி.வி பிரகாஷ், தென்னைப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு அணுகுமாறு இரண்டு எண்களை அறிவித்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மணலின் தரத்தை ஆய்வு செய்து, குறுகிய காலப் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்த்த பிறகு தான் உண்மையான நிலவரம் தெரிகிறது. பல லட்சக்கணக்கான மரங்கள் விழுந்து கிடக்கின்றன.



    மின்சாரம் வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஆகும். அரசு, சமூக ஆர்வலர்கள் எல்லாரும் வேலை செய்துவருகின்றனர். எவ்வளவு வேலை செய்தாலும் போதாது. நிலைமையை மீண்டும் பழையபடிக்கு கொண்டுவரப் பல மாதங்கள் ஆகும்.

    இங்கு லட்சக்கணக்கான தென்னை மரங்களும் தேங்காய்களும் விழுந்து கிடக்கின்றன. இதுதான் நேரம் எனப் பார்த்து, வியாபாரிகள் குறைவான விலைக்குப் பொருள்களை வாங்க முயன்று வருகின்றனர். இது தவறான வி‌ஷயம். வழக்கமான மார்க்கெட் விலைக்கு வியாபாரிகள் வாங்க வேண்டும்.

    அதற்கு நாம் உதவி செய்ய வேண்டும். உலகத்துக்கே சோறு போட்ட இடம் டெல்டா. இந்த மக்களுக்கு நம்மால் செய்ய முடிந்த வி‌ஷயம் நல்ல மார்க்கெட் விலையில் வாங்க உதவ வேண்டும்.

    இளநீரை மொத்தமாக ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்ய உள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து இளைஞர்களையும் மாணவர்களையும் கவனித்து வருகிறேன். தன்னார்வமாகப் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல், மக்களுக்கு நல்லது செய்ய அதிகமாகக் களத்துக்கு வருகிறார்கள். இதுபோன்ற தன்னார்வமுள்ள இளைஞர்கள், மாணவர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடிகர் விமல் பார்வையிட்டார். அவர் பயின்ற பன்னாங்கொம்பு கிராமத்தில் உள்ள பள்ளியில் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்த்ததுடன், அங்கு பணியாற்றி வரும் மின் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.



    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடும் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில் மீட்புப் பணிகளை விரைந்து செய்ய மற்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும். இங்கு எல்லோருமே ஆடு, மாடு, மரங்களை இழந்து நிற்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லாத நிலையில், கைவிட்டதுபோல் இருக்கிறார்கள். நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

    ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் போன்றோர் தங்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். விஜய்யும் சூர்யாவும் அடிக்கடி தங்களது ரசிக மன்ற நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கள விவரங்களை கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

    ரஜினி ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தின் போது தூத்துக்குடி சென்றதை போல டெல்டா மாவட்டங்களை பார்வையிட செல்ல இருக்கிறார் என்று நேற்று தகவல் பரவியது. ஆனால் அது உறுதியாகவில்லை. நடிகர்கள் அரசிடம் நிவாரண நிதியை வழங்கியதோடு நில்லாமல் களத்தில் நேரடியாக இறங்கி பணிபுரிவது அங்கு நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி உள்ளது. #GajaCycloneRelief #GVPrakashKumar #Vemal

    அநீதி குறும்பட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ், நீட் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று பேசினார். #Aneedhi #GVPrakash
    நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில் ’ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

    அநீதிக்கு தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கிறார். 

    இந்த படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், சமூகப்போராளி திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.



    ஜி.வி.பிரகாஷ் பேசும்போது, 

    அநீதி ரொம்ப முக்கியமான குறும்படம். இந்த படத்தைப் பாதிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் முடிவு பாசிட்டிவாக அமைத்தது சந்தோஷமாக இருந்தது. நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ, அவர்களே அதை வைத்துக்கொள்ளட்டும் தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை. நான் அனிதாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். மரணிக்கும் சமயத்தில் அனிதாவின் மனதில் என்ன ஓடியிருக்கும் என்பதை அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்த போது என்னால் அறிய முடிந்தது. அதனால் அந்த வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. அந்த கலக்கம் இன்னும் என்னை விட்டு போகவில்லை. இந்த படத்தின் கதையோட்டம் எப்படி இருந்தாலும் படத்தின் முடிவு மிக முக்கியமானது’ என்றார்.

    அநீதி குறும்படம் இதுவரை 7 விருதுகளை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Aneedhi #GVPrakash

    ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வம் தாள மயம்' படம் டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. #SarvamThalaMayam #GVPrakashKumar
    `மின்சார கனவு', `கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்'.

    ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.
    ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு இளைஞன், பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி, மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை நிறைவேறியதா என்பதே படத்தின் கதை.

    காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. #SarvamThalaMayam #GVPrakashKumar

    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் `ஜெயில்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஜி.வி. அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Jail #GVPrakashKumar
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபர்ணதி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    விறுவிறுப்பாக நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அருமையான கதையை கொடுத்த இயக்குநர் வசந்த பாலனுக்கு நன்றி. படத்தை திரையில் பார்க்க ஆவோலடு இருக்கிறேன்.

    ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Jail #GVPrakashKumar
     

    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு `ஜெயில்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #Jail #GVPrakashKumar
    `வெயில்', `அங்காடித் தெரு', `அரவாண்', `காவியத் தலைவன்' என யதார்த்தமான படங்களை கொடுத்தவர் வசந்த பாலன். இவரது `வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்.

    இந்த நிலையில், வசந்த பாலன் இயக்கி வரும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு `ஜெயில்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அபர்ணதி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Jail #GVPrakashKumar
     
    தமிழ் சினிமாவில் பிசியான நாயகர்களாக வலம் வரும் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் சசி இயக்கத்தில் மாமன், மச்சானாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Siddharth #GVPrakash
    சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான `பிச்சைக்காரன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், சசி அடுத்ததாக சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். குடும்ப பின்னணியில் அன்பு, கோபம், நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் உருவாக இருக்கிறது.

    இந்த படத்துக்கு ரெட்டைக்கொம்பு என்று பெயரிடப்பட்டிருப்பதாக செய்தி வருகிறது. குடும்பக்கதையாக உருவாகும் இதில் இருவரும் மாமன் மச்சானாக நடிக்கிறார்கள். சித்தார்த் டிராபிக் போலீசாகவும், ஜிவி.பிரகாஷ் பைக் ரேஸ் வீரராகவும் நடிக்கிறார்கள். முதலில் இந்த படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இப்போது வேறு ஒருவர் தயாரிக்க இருக்கிறார்.



    சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர். #Siddharth #GVPrakash

    ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன் என்றார். #PyaarPremaKaadhal
    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ப்ட் `பியார் பிரேமா காதல்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. 

    இதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசும் போது,

    எல்லா கலைஞனுக்குமே காதல் தான் ஒரு உந்துசக்தி, காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லை. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களின்போது நானும், செல்வராகவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது யுவன் இசை தான் எங்கள் படங்களுக்கு அடையாளமாக இருந்தது. நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், யுவன் என் குடும்பத்தில் ஒருவர். அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன் என்றார்.



    சிம்பு பேசும் போது, 

    இது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது என்றார்.

    ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும் போது,

    முதல் முறையாக யுவன் ஒரு படம் தயாரித்திருக்கிறார். நான் ஏற்கனவே படம் தயாரித்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் அவருக்கு ஆதரவாக இங்கு வந்திருக்கிறேன். அவரின் சர்வம் ஆல்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். பின்னணி இசையில் யுவன் ஒரு ராஜா. சமீபத்தில் கூட பேரன்பு பின்னணி இசை மிகச்சிறப்பாக இருந்தது என்றார். #PyaarPremaKaadhal #STR #Dhanush #GVPrakashKUmar

    ராஜுவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `சர்வம் தாள மயம்' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் நிலையில், `மெர்சல் அரசன்' படத்திற்கு பிறகு ரகுமான் இசையில் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். #SarvamThaalaMayam
    தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான செம படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக குப்பத்து ராஜா, 4ஜி, ஐங்கரன், அடங்காதே, 100% காதல், சர்வம் தாள மயம், ஆதிக்குடன் ஒரு படம், ரெட்ட கொம்பு, கருப்பர் நகரம், இயக்குநர் விஜய்யுடன் ஒரு படம் என பல படங்கள் உருவாகி வருகின்றன. 

    இதில் ராஜுவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் `சர்வம் தள மாயம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில், `மெர்சல் அரசன்' படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு குத்துப் பாடலை தான் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது, 

    ` சர்வம் தாள மயம் படத்தில் `மொசார்ட் ஆஃப் இந்தியா' ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அறிமுக பாடலை பாடியதில் அதீத மகிழ்ச்சி அடைகிறேன். `ஊர்வசி ஊர்வசி' பாடலுக்கு பிறகு ஒரு `தர லோக்கல்' பாடலாக இது இருக்கும். `மெர்சல் அரசன்' பாடலுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் `பீட்டர் ஃபீட்ட ஏத்து' என தொடங்கும் இந்த பாடலை பாடியிருக்கிறேன். இது இளைஞர்களின் அன்ந்தமாக இருக்கும் ' என்று கூறியிருக்கிறார். 



    இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளையும், அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். #SarvamThaalaMayam #GVPrakashKumar

    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் நிலையில், இந்த படம் இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று ஜி.வி. கூறியிருக்கிறார். #GV17 #GVPrakashKumar
    `வெயில்', `அங்காடித் தெரு', `அரவாண்', `காவியத் தலைவன்' என எதார்த்தமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபலமாகி இருக்கும் வசந்த பாலன் அடுத்தாக ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

    இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்ற அபர்ணதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியக் கதாபாத்திரத்தில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது,



    `ஜி.வி.17 படப்பிடிப்பு ஆரம்பம்... சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்கிறேன். இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்' என்று கூறியிருக்கிறார். 

    ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். ஜி.வி. நடிப்பில் `செம' படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. #GV17
     
    வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `செம' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ள அர்த்தனா, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். #Sema #Arthana
    பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `செம'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். இவர் `தொண்டன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அப்போது நாயகி அர்த்தனா மேடையில் அழுதார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. 

    விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது “இயக்குநர், தயாரிப்பாளர் தொல்லையால் அர்த்தனா அழுததாக சர்ச்சை கிளம்பினாலும் கிளம்பும். அதற்கு நாங்கள் காரணம் இல்லை. படப்பிடிப்பில் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. திருமணத்துக்கு பெண்பார்க்க செல்லும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகளை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் நகைச்சுவையாக படமாக்கி உள்ளோம்” என்றார்.



    பின்னர் மேடையில் அழுத காரணம் குறித்து நடிகை அர்த்தனா கூறியதாவது:-

    “படப்பிடிப்பில் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எனக்கு தொந்தரவு கொடுக்கவில்லை. நான் அழுததற்கு காரணம் வேறு. எளிதில் நான் உணர்ச்சிவசப்படுவேன். படப்பிடிப்பில் இயக்குனரும், நடிகர்களும் கஷ்டப்பட்டதை பார்த்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் இந்த படத்தில் உள்ளது. அதை நினைத்து படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அழுகை வந்தது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறேன்”

    இவ்வாறு அர்த்தனா கூறினார். #Sema #GVPrakash #Arthana

    ×